Verified Web

கண்டி இன­வாத வன்­மு­றைகள்: திலும் அமு­னு­கம எம்பி யின் தொலை­பேசி ரிஐடி வசம்

2018-05-16 22:28:05 MFM.Fazeer


கண்டி மாவட்­டத்தின் பல பகு­தி­க­ளிலும் அண்­மையில் பர­விய இன­வாத வன்­மு­றைகள் தொடர்பில்  கண்டி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் திலும் அமு­னு­கம நேற்று  முன்­தினம் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வி­னரால் சுமார் 12 மணி நேரம் தொடர்ச்­சி­யாக விசா­ர­ணை­க­ளுக்­குட்­ப­டுத்­தப்­பட்ட நிலையில், அவ­ரது கைய­டக்­கத்­தொ­லை­பேசி மேல­திக ஆய்­வு­க­ளுக்­காக ரி.ஐ.டி. கட்­டுப்­பாட்டில் எடுக்­கப்­பட்­டுள்­ளது.

கொழும்பு, -கோட்­டையில் உள்ள பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவில் நேற்று முன்தினம் முற்­பகல் 10.50 மணிக்கு ஆஜ­ரான திலும் அமு­னு­க­ம­விடம் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வினர் இரவு 11.30 மணி­வரை 12 மணி நேரத்­துக்கும் அதி­க­மாக விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­தனர்.

  தெல்­தெ­னிய, - திகன, கட்­டு­கஸ்­தோட்டை, பூஜா­பிட்­டிய, கல­கெ­தர, மெனிக்­ஹின்ன, பல்­லே­கலை, பகு­தி­களில் கடந்த மார்ச் 4 ஆம் திகதி இரவு முதல் நான்கு நாட்கள் தொடர்ச்­சி­யாக இடம்­பெற்ற இன­வாத வன்­மு­றைகள் தொடர்­பி­லேயே அவ­ரிடம் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. இதன்­போது வன்­முறை தொடர்பில் கைதான பொது­ஜன பெர­முன கட்­சியின் பிர­தேச சபை உறுப்­பி­னர்கள் தொடர்­பிலும் கைது செய்­யப்­படத் தேடப்­படும் பிர­தேச சபை உறுப்­பி­னர்கள் தொடர்­பிலும்  துரு­வித்­து­ருவி ரி.ஐ.டி. யினர் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­த­தாக அறிய முடி­கின்­றது.

இதன்­போது சமாளிக்கும் வித­மான பதில்­களை திலும் அமு­னு­கம வழங்­கி­ய­தா­கவும் உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.  இந்­நி­லையில் அவ­ரது கைய­டக்கத் தொலை­பே­சியை மேல­திக ஆய்­வுக்­காக பயங்­க­ர­வாத பொலிஸார் தமது கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வந்த நிலையில் அவ­சியம் ஏற்­படின் மீள விசா­ர­ணைக்கு அழைப்­ப­தா­கக்­கூறி விடு­வித்­துள்­ளனர். ஏற்­க­னவே திலும் அமு­னு­க­மவை கடந்த 10 ஆம் திகதி ஆஜ­ராக அழைப்பு விடுக்­கப்­பட்­டி­ருந்­தது.

அதன்­போது அவர் ஆஜ­ரா­க­வில்லை. இந்­நி­லை­யி­லேயே  நேற்று  முன்­தினம்  அவர் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வுக்கு அழைக்­கப்­பட்­டுள்ளார்.

பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவின் பிர­தானி பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்­வாவின் மேற்­பார்­வையில் அதன் பதில் பணிப்­பாளர், உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் ஜகத் விஷாந்த தலை­மை­யி­லான பொலிஸ்­குழு  இந்த இன­வாத வன்­மு­றைகள் தொடர்பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்ள நிலையில், இரு பிர­தேச சபை உறுப்­பி­னர்கள், மஹ­சொஹொன் பல­காய தலைவர் அமித் வீர­சிங்க உள்­ளிட்ட முக்­கிய சந்­தேக நபர்கள் பலர் கைது­செய்­யப்­பட்­டுள்­ள­துடன் மேலும் இரு பிரதேச சபை உறுப்பினர்கள் கைதுசெய்யப்பட தேடப்பட்டு வருகின்றனர். இந் நிலையிலேயே இதுவரையிலான விசாரணைகளில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்றுள்ள சான்றுகள் மற்றும் தகவல்களுக்கு அமைய திலும் அமுனுகமவிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
-Vidivelli