Verified Web

2500 மில்­லியன் டொலர் கடன் ஓராண்­டுக்கு செலுத்த வேண்டும்

2018-05-16 21:52:27 MM.Minhaj


ஒரு வரு­டத்­திற்கு நாம் 2500 மில்­லியன் டொலர் கடன் செலுத்த வேண்­டி­யுள்­ளது. இவ்­வா­றான பொரு­ளா­தார சூழ­லுக்கு மத்­தி­யி­லேயே நாம் பய­ணித்துக் கொண்­டுள்ளோம் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

கிரா­மத்தின் அபி­வி­ருத்­தியை கட்­டி­யெ­ழுப்­பினால் மாத்­தி­ரமே நாட்டை கட்­டி­யெ­ழுப்ப முடியும். தற்­போது கிராம பொரு­ளா­தாரம் வீழ்ச்சி அடைந்­துள்­ளது.

விவ­சா­யத்தை நவீ­ன­ம­யப்­ப­டுத்­து­வ­தற்கு நாம் திட்­ட­மிட்­டுள்ளோம் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

விவ­சா­யத்­து­றையை நவீ­ன­ம­யப்­ப­டுத்­து­வ­தற்கு உலக வங்­கியின் ஒத்­து­ழைப்­புடன் உள்­நாட்டு தொழில் முயற்­சி­யா­ளர்­க­ளுடன் நேற்று முன்தினம் ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­பட்­டது. இந்­நி­கழ்வு நேற்று முன் தினம் பத்­த­ர­முல்லை வோர்டர்ஸ் ஹெஜ் ஹோட்­டலில் நடை­பெற்ற போது பிர­தம அதி­தி­யாக வந்து உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அங்கு அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

கிராம  அபி­வி­ருத்­தியை கட்­டி­யெ­ழுப்­பினால் மாத்­தி­ரமே நாட்டை கட்­டி­யெ­ழுப்ப முடியும். தற்­போது கிராம பொரு­ளா­தாரம் வீழ்ச்சி அடைந்­துள்­ளது. விவ­சா­யத்தை நவீ­ன­ம­யப்­ப­டுத்­து­வ­தற்கு நாம் திட்­ட­மிட்­டுள்ளோம். தற்­போது விவ­சா­யத்­து­றையில் இளை­ஞர்கள் தூர­மாகி வரு­கின்­றனர். ஆகையால் விவ­சா­யத்­து­றையை நவீ­ன­ம­யப்­ப­டுத்த வேண்டும்.

விவ­சா­யத்தை நவீ­ன­ம­யப்­ப­டுத்­து­வ­தற்கு 102 மில்­லியன் டொலரை உலக வங்கி அன்­ப­ளிப்பு செய்­துள்­ளது. அமெ­ரிக்கா, சீனா, தாய்­லாந்து ஆகிய நாடு­களில் விவ­சா­யத்­துறை நவீ­ன­ம­யப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. நவீ­ன­ம­யப்­ப­டுத்­து­வதின் ஊடாக விவ­சா­யத்­து­றையின் உற்­பத்தி அதி­க­ரிப்­ப­துடன் தரமும் அதி­க­ரிக்கும். எனினும் தென்­ஆ­சி­யாவில் இந்த நிலைமை இன்னும் ஏற்­ப­ட­வில்லை.

இலங்­கையின் வரு­மா­னத்தை அதி­க­ரிக்கும் வேலைத்­திட்­டத்தின் பிர­காரம் விவ­சா­யத்­துறையை நவீ­ன­ம­யப்­ப­டுத்த திட்­ட­மிட்­டுள்ளோம். மீன்­பிடி மற்றும் விவ­சா­யத்­து­றை­யினால் கிடைக்கும் வரு­மா­னத்தை நாம் அதி­க­ரிக்க வேண்டும். விவ­சாய உற்­பத்தி தரம் அதி­க­ரிக்கும் போது கிராம பொரு­ளா­தா­ரமும் பலம்­பெரும். ஆகவே கிராம பொரு­ளா­தா­ரத்தை பலப்­ப­டுத்தி நாட்டை கட்­டி­யெ­ழுப்பும் திட்­டத்தை நாம் ஆரம்­பித்­துள்ளோம்.

 கடந்த வரு­டத்தில் நாட்டின் ஏற்­று­மதி வரு­மானம் அதி­க­ரித்­தது. அது­மாத்­தி­ர­மின்றி வர­லாற்றில் முதற்­த­ட­வை­யாக வெளி­நாட்டு முத­லீடும் கடந்த வருடம் அதி­க­மாக பதி­வா­னது. இந்­நி­லையில் நாம் கடன் செலுத்தும் நிலை­மைக்கு பொரு­ளா­தா­ரத்தை கொண்டு வந்துள்ளோம்.

இதன்படி ஒரு வருடத்திற்கு நாம் 2500 மில்லியன் டொலர் கடன் செலுத்த வேண்டியுள்ளது. இவ்வாறான பொருளாதார சூழலுக்கு மத்தியிலேயே நாம் பயணித்துக் கொண்டுள்ளோம். ஆகவே விவசாயத்துறையை நவீனமயப்படுத்தி நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்
-Vidivelli