Verified Web

இஸ்ரேலின் கொடூர செயலை வன்மையாக கண்டிப்போம்

2018-05-16 04:15:05 Administrator


ஜெரூ­ச­லத்தில் நேற்று முன்­தினம் அமெ­ரிக்க தூத­ரக அலு­வ­லகம் திறக்­கப்­பட்ட சமயம் அதற்­கெ­தி­ராக காஸா எல்­லையில் ஆயிரக் கணக்­கான பலஸ்­தீ­னர்கள் திரண்டு வந்த தமது எதிர்ப்பை வெளிப்­ப­டுத்­தினர். இந் நிலையில் குறித்த ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் மீது இஸ்ரேல் மிகக் கொடூ­ர­மான வகையில் தாக்­கு­தல்­களை நடாத்­தி­யது.

தரை வழி­யாக இஸ்ரேல் இரா­ணு­வத்­தினர் துப்­பாக்கிச் சூடு நடாத்­தி­ய­துடன் வான் வழி­யாக குண்டுத் தாக்­கு­தல்­களும் நடத்­தப்­பட்­டன. இந்த காட்­டு­மி­ராண்­டித்­த­ன­மான தாக்­கு­தல்­களில் சிக்கி நேற்று வரை உயி­ரி­ழந்­த­வர்­களின் எண்­ணிக்கை 58 ஆக அதி­க­ரித்­துள்­ளது. மேலும் 2000 பேர் வரை காய­ம­டைந்­துள்­ளனர். இதில் சுமார் 100 பேரின் நிலை கவ­லைக்­கி­ட­மாக உள்­ள­தாக பலஸ்­தீன சுகா­தார அமைச்சின் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

இதற்கு மேல­தி­க­மாக 'நக்பா' தினத்தைக் குறிக்கும் வகையில் கடந்த 7 வார கால­மாக காஸா எல்­லையில் நடை­பெற்று வரும் போராட்­டங்­களில் மேலும் 49 பேர் கொல்­லப்­பட்­டுள்­ளனர்.  2014 ஆம் ஆண்­டுக்குப் பின்னர் காஸா மீது இஸ்ரேல் மேற்­கொள்ளும் பாரிய தாக்­கு­தல்­க­ளாக இந்த சம்­ப­வங்கள் கரு­தப்­ப­டு­கின்­றன.

இந்தப் போராட்­டங்கள் உக்­கி­ர­ம­டை­வ­தற்கு அமெ­ரிக்க தூத­ர­கத்தை டெல் அவி­வி­லி­ருந்து ஜெரூ­ச­லத்­திற்கு மாற்றும் நிகழ்வே பிர­தான கார­ண­மாகும். 1948 மே மாதம் இஸ்­ரே­லுக்கும் எகிப்து, ஜோர்தான், சிரியா உள்­ளிட்ட அரபு நாடு­க­ளுக்கும் இடையே நடந்த போரில் மேற்கு ஜெரூ­சலம் பகுதி இஸ்ரேல் வசமும் கிழக்கு ஜெரூ­சலம் ஜோர்தான் கட்­டுப்­பாட்டின் கீழும் வந்­தன. அதன்­பி­றகு 1967 இல் நடந்த அரபு போரில் கிழக்கு ஜெரூ­ச­ல­மையும் இஸ்ரேல் கைப்­பற்­றி­யது.

பின்னர் ஒட்­டு­மொத்த ஜெரூ­ச­லமை இஸ்ரேல் தலை­ந­க­ராக அந்த நாட்டு அரசு அறி­வித்­தது. ஆனால், இதனை உலக நாடுகள் அங்­கீ­க­ரிக்­க­வில்லை. அமெ­ரிக்கா உட்­பட பெரும்­பா­லான நாடு­களின் தூத­ர­கங்கள் இஸ்­ரேலின் டெல் அவிவ் நக­ரி­லேயே செயல்­பட்­டன. இந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அமெ­ரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இஸ்ரேல் தலை­ந­க­ராக ஜெரூ­ச­லத்தை அங்­கீ­க­ரிப்­ப­தாக அறி­வித்தார்.

ட்ரம்பின் இந்த முடிவை பலஸ்­தீனம் மற்றும் அரபு நாடுகள் கடு­மை­யாக எதிர்த்­தன. எதிர்ப்பை சற்றும் பொருட்­ப­டுத்­தாமல் அமெ­ரிக்கா தனது முடி­வி­லி­ருந்து பின்­வாங்க மறுத்­தது. திட்­ட­மிட்­டது போன்று அமெ­ரிக்க தூத­ரகம் ஜெரூ­ச­லத்தில் நேற்று முன்­தினம் திறக்­கப்­பட்­டது.

தூத­ர­கத்தை அமெ­ரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மகள் இவன்கா ட்ரம்ப் திறந்­து­கொண்­டி­ருந்த நிலையில் காஸா எல்­லையில் பலஸ்­தீன இளை­ஞர்கள் இரத்த வௌ்ளத்தில் மூழ்­க­டிக்­கப்­பட்­டனர். 8 மாத குழந்தை முதல் அங்­க­வீ­ன­முற்ற இளைஞர் வரை ஈவி­ரக்­க­மின்றி சுட்டும் நச்­சு­வா­யுவைச் செலுத்­தியும் கொல்­லப்­பட்­டனர். அந்த வகையில் உலக வர­லாற்­றிலும் அமெ­ரிக்க வர­லாற்­றிலும் மிகவும் மோச­மான மனி­தா­பி­மா­ன­மற்ற ஜனா­தி­பதி எனும் பெயரை டொனால்ட் ட்ரம்ப் நேற்று முன்­தினம் பெற்றுக் கொண்­டுள்ளார்.

இஸ்ரேல் இரா­ணு­வத்தின் இந்தத் தாக்­கு­தலை சர்­வ­தேச சமூகம் வன்­மை­யாக கண்­டித்­துள்­ளது. இது குறித்து காட்­ட­மாகக் கருத்து வெளி­யிட்­டுள்ள துருக்கி பிர­தமர் பினாலி யல்­திரிம் , "துர­திர்ஷ்­ட­வ­ச­மாக, அமெ­ரிக்கா அப்­பாவி மக்­களை கொன்று குவிக்கும் இஸ்­ரே­லுக்கு ஆத­ரவு அளித்து மனித குலத்­திற்கு எதி­ரான இந்தக் குற்­றத்தில் பங்­கெ­டுத்துக் கொண்­டது. அமெ­ரிக்­காவும், இஸ்­ரேலும் மனித குலத்­திற்கு எதி­ரான குற்­றங்­க­ளுக்கு கூட்­டா­ளி­க­ளாக உள்­ளனர்” எனத் தெரி­வித்­துள்ளார். 

ஐக்­கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவை இந்தத் தாக்­கு­தல்­களை யுத்தக் குற்­ற­மாக வர்­ணித்­துள்ள நிலையில் நேற்­றைய தினம் இந்த விவ­காரம் ஐ.நா பாது­காப்புச் சபை­யிலும் ஆரா­யப்­பட்­டுள்­ளது. இஸ்­ரேலின் இந்த மனித குலத்­துக்கு எதி­ரான குற்­றங்­க­ளுக்கு எதி­ராக மிகவும் காட்­ட­மான நட­வ­டிக்­கை­களை எடுக்க சகல நாடு­களும் முன்­வர வேண்டும்.

இலங்கை அர­சாங்கம் இதுவரை இது தொடர்பில் தனது கண்டனத்தை வெளியிடவில்லை. வெளிநாடுகளில் நடக்கும் சிறு சிறு குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்கு கண்டன அறிக்கைவிடும் ஜனாதிபதியும் பிரதமரும் மௌனம் காக்கின்றனர். வெளிவிவகார அமைச்சும் இதுவரை வாய்திறக்கவில்லை. இது தொடர்பில் பலஸ்தீனுக்காக குரல் கொடுக்கும் அனைவரும் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
-Vidivelli