Verified Web

சிறுவர் உரிமைகளின் பாதுகாப்பும் பாடசாலைகளின் பங்களிப்பும்

2018-05-16 03:10:39 Administrator


எம்.எஸ் .எஸ். அஹமட்
MEd (SLPS)பிரதி அதிபர், பாலமுனை அலிகார் மகா வித்தியாலயம், ஆரையம்பதி

இன்­றைய சிறு­வர்கள் நாளைய  தலை­வர்கள். அவர்­களே எமது தேசி­ய­சொத்­துக்கள்.  அவ்­வா­றான சொத்­துக்கள் பாது­காக்­கப்­ப­டு­கின்­ற­னவா? என்­பது இன்னும் கேள்­விக்­கு­றி­யா­கவே உள்­ளது. இவர்­க­ளுக்­கு­ரிய பாது­காப்­பையும்,உரி­மை­க­ளையும் வழங்­கு­வதே இவற்­றிற்­கு­ரிய முற்­றுப்­புள்­ளி­யாகும். ஐ.நா.சபை பிர­க­ட­னத்­தின்­படி 18 வய­திற்­குட்­பட்ட அனை­வரும் சிறு­வர்­க­ளாக கணிக்­கப்­ப­டு­கின்­றனர். எமது நாட்டின் மொத்த சனத்­தொ­கையில் 30 வீத­மா­ன­வர்கள் சிறு­வர்­க­ளாவர் என ஆய்­வ­றிக்­கைகள் கூறு­கின்­றன.

இன்று பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் சிறு­வர்கள் உடல், உள, பாலியல் ரீதி­யாக பல்­வே­று­பட்ட துஷ்­பி­ர­யோ­கங்­க­ளுக்­குள்­ளா­கின்­றனர். அவர்கள் கல்வி அறி­வுள்ளோர், கல்வி அறி­வற்றோர் என்ற பார­பட்­ச­மின்றி அனை­வ­ரி­னாலும் துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு உள்­ளாக்­கப்­ப­டு­கின்­றனர். அவ்­வா­றான செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தனால் எதிர்­கால சந்­த­தி­யி­னரின் நிலைமை கேள்­விக்­கு­றி­யா­கி­விடும் என்­பதில் எவ்­வித ஐயப்­பா­டு­மில்லை. அத்­துடன் அவர்­க­ளது உரி­மை­களும் மறுக்­கப்­பட்டு பாது­காப்­பற்ற நிலை உரு­வா­கின்­றது.

ஒரு நாட்டின் அபி­வி­ருத்­தி­யில்தான் முழு உல­கத்­தி­னதும் அபி­வி­ருத்தி தங்­கி­யுள்­ளது. ஒரு நாடு அபி­வி­ருத்­தி­ய­டைய வேண்­டு­மாயின் அங்கு சிறு­வர்­களின் பாது­காப்பும் உரி­மை­களும் உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும். அவர்­க­ளது வளர்ச்சி, விருத்தி மட்­டங்கள் அபி­வி­ருத்தி செய்­யப்­ப­டு­வ­துடன் அவர்­க­ளது உடல், உளம், சமூகம் சார்ந்த, சுய­திறன் தேவைகள் நிறைவு செய்­யப்­ப­ட­வேண்டும். அத்­துடன் எதிர்­கால தன்­னம்­பிக்­கையும் வளர்க்­கப்­ப­ட­வேண்­டி­யதும் இன்­றி­ய­மை­யா­தது.

ஒரு நாடு பொரு­ளா­தார  ரீதி­யாக எவ்­வ­ள­வுதான் அபி­வி­ருத்தி அடைந்­தாலும் சிறு­வர்­களின் உரி­மைகள் மறுக்­கப்­பட்டு, ஒதுக்­கப்­ப­டு­மாயின் அந்­நாட்டின் அபி­வி­ருத்தி மற்றும் வளர்ச்­சி­வீ­தத்தில் பின்­ன­டைவு ஏற்­படும் என்­பதில் ஐய­மில்லை. எனவே, சிறு­வர்­களை பாது­காப்­ப­திலும் அவர்­க­ளது உரி­மை­களை பெற்றுக் கொடுப்­ப­திலும் நாம் அனை­வரும் இணைந்து செயற்­ப­ட­வேண்டும். இதற்­காக சர்­வ­தேச ரீதி­யிலும் தேசிய ரீதி­யிலும்  பிராந்­திய மட்­டங்­க­ளிலும் பல்­வேறு அமைப்­புக்கள் செயற்­பட்டு வரு­கின்­றன. உல­க­சி­றுவர் சாச­னத்தில் எம­து­நாடும் 1990 காலப்­ப­கு­தியில் கைச்­சாத்­திட்­டது

சிறுவர் உரி­மைகள் பற்­றிய ஐக்­கிய நாடுகள் சம­வா­யத்தில் எல்­லாப்­பிள்­ளை­களும், எல்­லா­ உ­ரி­மை­க­ளையும் பெறத் தகு­தி­யு­டை­ய­வர்கள் எனக் கூறப்­ப­டு­கி­றது. சிறுவர் உரிமை சம­வா­யத்தில் அடங்­கி­யுள்ள உரி­மைகள் 4 பெருந்­தொ­கு­தி­க­ளாக வகுக்­கப்­பட்­டுள்­ளன. அவை­யா­வன:

1. உய்வு தொடர்­பான உரி­மைகள் (உயிர் வாழ்தல்)

2. வளர்ச்­சியும் விருத்­தியும் தொடர்­பான உரி­மைகள் (மேம்­பாடு)

3. சகல வகை­யான துஷ்­பி­ர­யோகம், சுரண்டல் என்­ப­வற்­றி­லி­ருந்து பாது­காப்பு பெறுதல் தொடர்­பான உரி­மைகள் (பாது­காப்பு)

4. பங்­கு­பெறும் உரிமை அல்­லது தனது சொந்த வாழ்க்கை சம்­பந்­த­மான விட­யங்­களில் தமது கருத்­துக்­க­ளுக்கு இட­ம­ளிக்கும் உரிமை (பங்­கு­கொள்ளல்)

மேலும் சிறுவர் உரி­மை­களின் அடிப்­படை கோட்­பா­டு­க­ளா­வன:

1) உரி­மைகள் உடை­யவர் என்­ற­வ­கையில் பிள்­ளையின் தனித்­துவம்.

2) பாகு­பாடு காட்­டாமை என்ற கோட்­பாடு.

3) பிள்­ளையின் மேம்­பட்ட நலன் என்ற கோட்­பாடு.

ஒரு­மா­ணவன் தமது வாழ்­நாளில் 13 வரு­டங்கள் தமது வாழ்க்­கையை பாட­சாலைக் கல்­விக்­காக கழிக்­கின்றான். எம­து­நாட்டில் 6 தொடக்கம் 16 வயது வரை கட்­டா­யக்­கல்வி அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. எமது அர­சினால் நாட்டில் இல­வ­சக்­கல்வி, சுகா­தாரம், சமூ­கப்­பா­து­காப்பு என்­ற­வ­கையில் பெரு­ம­ளவு பணம் ஒதுக்­கப்­ப­டு­வதை நாம் அறிவோம். இவ்­வ­ருடம் பட்­ஜட்டில் 48,680 மில்­லியன் ரூபா கல்­விக்­காக ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. காலம் தோறும் மாண­வர்­க­ளுக்கு இல­வச பாடப் புத்­தகம்,  இல­வச சீருடை, இல­வச மதி­ய­உ­ணவு, இல­வச டெப் கணி­னிகள், சப்­பாத்­துக்கள், கற்றல் கற்­பித்தல் உப­க­ர­ணங்கள் போன்­ற­வற்­றிற்கு பெரு­ம­ளவு பணம்  ஒதுக்­கப்­பட்டு வரு­கின்­றது. மேலும் ஒவ்­வொரு பாட­சா­லை­க­ளிலும் உள­ரீ­தி­யாகப் பாதிப்­ப­டைந்த மாண­வர்­களை மீண்டும் கற்றல் நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டுத்தும் நோக்கில் வழி­காட்டல் ஆலோ­சனை நிலை­யங்கள் நிறு­வப்­ப­டு­கின்­றன. எமது  ஜனா­தி­ப­தி­யினால் “சிறு­வர்­க­ளை­ப்பா­து­காப்போம்” எனும் தேசிய வேலைத்­திட்டம்  2017 இல் கண்­டியில் ஆரம்­பிக்­கப்­பட்­டு. கடந்த நவம்பர் மாதம் 11ஆம் திகதி பொல­ன­்னறு­வையில் நடாத்­தப்­பட்­டது. எமது நாட்டின் எதிர்­கால சந்­த­தி­யி­னரை கருத்­திற்­கொண்டு இவ்­வா­றான நிகழ்ச்­சித்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வது காலத்தின் தேவை­யாக உள்­ளதை நாம் அறிவோம்.

பாட­சா­லை­களில், சிறுவர் உரி­மை­களை பாது­காப்­பதில் கவனம் செலுத்­த­வேண்­டி­யது கட்­டாய தேவை­யாக உள்­ளது. கிரா­மப்­புறப் பாட­சா­லை­களை விட நகர்ப்­புறப் பாட­சா­லை­களில் மாண­வர்­க­ளுக்கு எதி­ரா­ன­செ­யற்­பா­டுகள் இடம்­பெ­று­வதைக் காணலாம். இதனை சீர்­செய்­வது பாட­சாலை சமூ­கத்­தி­னது பாரிய பொறுப்பும் கட­மை­யுமாகும். இச்­சி­று­வர்­க­ளுக்கு ஏற்­ப­டு­கின்ற உடல்,  உள பாதிப்­புக்கள் அவர்­களின் ஆழ்­ம­னதில் ஒடுக்­கப்­பட்டு அவை வன்­மு­றை­யா­கவோ போரா­கவோ எதிர்­கா­லத்தில் வெளிக்­கொ­ண­ரப்­ப­டு­வது அந்­நாட்­டிற்கு சவா­லாக அமை­கின்­றது.

* பாட­சா­லை­அ­னு­ம­தி­ம­றுப்பு.

* விரும்­பிய பாட­சா­லைக்­கு­செல்ல அனு­மதி மறுப்பு, கட்­டாய பாட­சாலை இட­மாற்றம்.

* உடல், உள ரீதி­யான தண்­டனை வழங்­குதல், புறக்­க­ணிப்பு.

* மாண­வர்­க­ளோடு மாண­வனை ஒப்­பி­டுதல்.

* விசேட தனிப்­பட்­ட­வே­லைக்கு அமர்த்­துதல்.

* தீண்­டுதல்.

* ஆசி­ரி­யர்­களின் பக்­கச்­சார்­பான நடத்­தைகள்.

* குறிப்­பிட்ட சில மாண­வர்கள் மாத்­திரம் போட்டி நிகழ்­வு­களில் பங்­கு­பற்றல்.

* ஆசி­ரிய உற­வி­னர்­க­ளுக்கு முன்­னு­ரிமை.

* இணைப்­பா­ட­வி­தா­னத்தில் ஈடு­ப­டு­வ­தற்கு மறுப்புத் தெரி­வித்தல்.

* அண்­மைக்­கா­ல­மாக பெருகி வரு­கின்ற சிறுவர் துஷ்­பி­ர­யோகம் .

* சம­வு­ரிமை வழங்­கப்­ப­டாமை, தேர்வுப் பரீட்­சை­யின்றி போட்­டிக்குத் தெரி­வு­செய்தல்.

* சம­யத்தைக் காரணம் காட்டி போட்­டி­களில் ஈடு­ப­டுத்­தாமை.

* மாண­வர்கள் மத்­தியில் அர­சியல் ஊடாட்டம்.

*பாது­காப்பு நட­வ­டிக்­கை­க­ளுக்­காக மல­ச­ல­கூ­டத்­திற்கு அண்­மித்த பகு­தி­களில்  சி.சி.ரி.கமெ­ராக்­களை பொருத்­துதல்.

* கல்­வியில் பின்­தங்­கிய மாண­வர்­க­ளுக்கு பொதுப் பரீட்­சை­களில் அனு­மதி அட்­டை­வ­ழங்க மறுத்தல்.

* சமூக அந்­தஸ்தை கவ­னித்து ஏனைய மாண­வர்கள் புறக்­க­ணிக்­கப்­படல்.

* வகுப்­ப­றை­களில் பார­பட்சம் காட்­டுதல்.

* பெற்­றோரின் கல்­வி­நிலை அறிந்து கற்றல் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ளல்.

* பாட­சாலை சுற்­றுப்­புற சூழலில் போதை­வஸ்து விற்­பனை.

* பிரத்­தி­யேக வகுப்­புக்­களில் கலந்­து­கொள்­வோ­ருக்கு முன்­னு­ரிமை.

* அர­சியல் சார்­பான மாண­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை.

* திற­மை­மிக்க மாண­வரின் மீது பாட­சாலை சமூகம் அதிக கவனம் செலுத்­துதல்.

* உயர்­த­ரக்­கல்வி பாடத்­தெ­ரிவில் கட்­டா­யப்­ப­டுத்தல்.

* கற்றல் நட­வ­டிக்­கை­களை மாத்­திரம் மேற்­கொள்ளல்.

* விடு­முறை  காலங்­களில் வகுப்­புக்கள் நடாத்தல்.

* குண­நல உள்­ளீட்டுப் பொருட்கள் பகிர்ந்­த­ளிக்­கப்­ப­டாமை.

* ஆய்­வு­கூ­டங்கள் மாண­வர்கள் செயற்­பாட்­டிற்கு வழங்­கப்­ப­டாமை.

* பொதுப் போட்­டி­க­ளுக்கு அழைத்­துச்­செல்ல மறுத்தல்.

போன்ற  இவ்­வா­றான நட­வ­டிக்­கைகள் ஏற்­ப­டா­வண்ணம் பாட­சா­லைகள் கண்­ணுங்­க­ருத்­து­மாக இருத்தல் வேண்டும். பாட­சாலை காலப்­ப­கு­தியில் மாண­வர்­களின் பாது­காப்பு உறு­திப்­ப­டுத்­தப்­ப­டு­வ­துடன் எவ்­வ­கை­யிலும் சிறு­வர்கள் பாதிப்­ப­டை­யாமல் பாது­காப்­பது பாட­சாலை சமூ­கத்­தி­னது கட­மை­யாகும்.

மாணவர் மையக்­கல்­வியில், மாண­வர்­களின் பலம், பல­வீனம் அறிந்து கற்­றலை மேற்­கொள்­ளும்­போது வெற்றி பெறு­வது நிச்­சயம். அத­னா­லேதான்  தேர்ச்சி மட்­டங்­களும் நவீன கற்­பித்தல் முறை­களும், மகிழ்ச்­சி­க­ர­மான கற்றல் முறை­களும் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்டு செயற்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன. தமது 13 வருட கால­கட்­டத்தை மாண­வர்கள் பாட­சாலை சூழ­லி­லேயே கழிக்­க­வேண்­டிய நிலை இருப்­பதால் உயி­ரோட்­ட­முள்ள வகுப்­பறை, மகிழ்ச்­சி­க­ர­மான கற்றல் செயற்­பா­டுகள் போன்­றவை முன்­னெ­டுக்­கப்­படு­கின்­றன. பாட­சா­லைகள், சிறுவர் உரி­மை­களை பேணு­வதில் பாரிய பங்­க­ளிப்பை செலுத்த வேண்­டி­ய­நிலை உள்­ளது.

இன்­றைய கால­கட்­டத்தில் பல்­வே­று­பட்ட நிலை­யங்­க­ளிலும் சிறுவர் துஷ்­பி­ர­யோ­கங்கள் நடை­பெ­று­கின்­றன. இவை பாலியல் ரீதி­யான தாக்­கங்­க­ளையும் ஏற்­ப­டுத்தி எதிர்­கால மாணவர் வாழ்க்­கையை சீர­ழிப்­பதை காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது. மேலும் பாட­சா­லை­களில் நடை­பெ­று­கின்ற சிறுவர் உரிமை மறுப்­புக்கள் இடை­வி­ல­க­லையும், எதிர்­காலக் கல்வியை பாதிப்­ப­தையும் நடை­முறை ரீதி­யாகக் காண்­கின்றோம்.

மாணவர்கள் இல்லையென்றால் பாடசாலை இல்லை, பாடசாலை இல்லையென்றால் பாடசாலை சமூகமூம் இல்லை. எனவே. பாடசாலைகள் தத்தமது சூழலுக்கேற்ற விதத்தில் பாடசாலை வேலைத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதுடன் மாணவர்களின் உரிமைகள் எவ்விதத்திலும் பாதிப்படையா வண்ணம் அவர்களது தேவைகள் நிறைவு பெறக்கூடிய செயற்றிட்டங்களை முன்னெடுக்க வேண்டிய பாரிய பொறுப்பு பாடசாலை சமூகத்திற்கு உள்ளது.

பாடசாலைக்கும் மாணவர்களுக்குமிடையிலான இடைத்தொடர்பு, அணுகுமுறை சிறந்த முறையில் முன்னெடுக்கப்படவேண்டும். பாடசாலையை பற்றிய நம்பிக்கையை மாணவர்கள் தங்களது மனதில் வளர்த்துக்கொள்வதுடன் தன்னம்பிக்கையை வளர்க்கக்கூடிய இடமாக பாடசாலை மாற்றப்படவேண்டும். சிறந்த சமநிலை, ஆளுமைப் பண்புள்ள, இலக்குகளை அடைந்த சிறுவர்களாக சமூகத்திற்கும், நாட்டிற்கும் பயன்தரக்கூடிய வகையில் நற்பிரஜைகளாக மாணவர்கள் பாடசாலைகளிலிருந்து வெளியேற்றப்படவேண்டும். அப்போதுதான் சமூகம் எதிர்பார்க்கின்ற ஒழுக்க விழுமியங்கள் நிலைநாட்டப்படும் என்பதில் சந்தேகமில்லை. தனிமனித உரிமைகளை பாதுகாப்பதும் அதனை உறுதிப்படுத்துவதும் பாடசாலைகளின் பாரிய பொறுப்பாகும்.
-Vidivelli