Verified Web

இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான அமைப்பின் கூட்டம் உடனடியாகக் கூட்டப்பட வேண்டும்

2018-05-16 02:47:15 M.I.Abdul Nazar

இஸ்­லா­மிய ஒத்­து­ழைப்­புக்­கான அமைப்பின் கூட்டம் உட­ன­டி­யாகக் கூட்­டப்­பட வேண்டும் என துருக்கி கோரிக்கை விடுத்­துள்­ளது. 57 உறுப்பு நாடு­க­ளைக்­கொண்ட அமைப்பின் கூட்டம் வெள்­ளிக்­கி­ழமை கூட்­டப்­பட வேண்டும் என அங்­காரா விரும்­பு­வ­தாக பேச்­சாளர் பிகிர் பொஸ்டெக் தெரி­வித்தார்.

அமெ­ரிக்கத் தூத­ரகம் ஜெரூ­ச­லத்­திற்கு மாற்­றப்­பட்­டமை மற்றும் காஸா வன்­மு­றைகள் தொடர்பில் வெளிப்­ப­டை­யாக விமர்­சித்து வரும் துருக்கி அர­சாங்கம் கொல்­லப்­பட்ட பலஸ்­தீ­னர்­க­ளுக்­காக மூன்று நாள் துக்க தினத்தை பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யுள்­ளது.

இஸ்­ரேலின் செயற்­பா­டுகள் மனி­தப்­ப­டு­கொ­லை­களை மேற்­கொள்­வ­தாகும் எனவும் இஸ்ரேல் ஒரு பயங்­க­ர­வாத நாடு எனவும் துருக்­கிய ஜனா­தி­பதி தைய்யிப் அர்­துகான் தெரி­வித்­துள்ளார்.

அமெ­ரிக்கா தரப்­பி­லி­ருந்தோ அல்­லது இஸ்ரேல் தரப்­பி­லி­ருந்தோ என்ன நடந்­தாலும் பர­வா­யில்லை, நான் இவ்­வா­றான மனி­தா­பி­மான அவ­லங்­களை சபிக்­கின்றேன், இது மனிதப் படு­கொ­லை­யாகும் எனவும் அவர் தெரி­வித்தார்.

மனி­தா­பி­மா­னத்­திற்கு எதி­ரான அநீ­தி­க­ளுக்கு அமெ­ரிக்கா துணை புரி­கின்­றது என பிர­தமர் பினாலி இல்­டிரிம் தெரி­வித்தார்.

துர­திஷ்­ட­வ­ச­மாக, சிவி­லி­யன்­களைக் கொன்று குவிக்கும் இஸ்ரேல் நிரு­வா­கத்தின் பக்கம் விடாப்­பி­டி­யாக அமெ­ரிக்கா நிற்­ப­தோடு மனி­தா­பி­மா­னத்­திற்­கெ­தி­ரான குற்­றங்­க­ளுக்கு பங்­கா­ளி­யாகி இருக்­கின்­றது எனவும் அங்­கா­ராவில் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளிடம் தெரி­வித்தார்.

வெளி­யிலே நெருப்பை மூட்­டி­விட்டு உள்ளே எரிந்­து­கொண்­டி­ருப்­பதை மறைப்­பது போல உள்­நாட்டுப் பிரச்­சி­னை­க­ளி­லி­ருந்து கவ­னத்தை திசை திருப்­பு­வ­தற்­கா­கவே தூத­ர­கத்தை மாற்றும் முயற்­சியில் அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால் ட்ரம்ப் ஈடு­பட்­டுள்ளார் என அவர் தெரி­வித்தார்.

இஸ்­தான்­பூ­லி­லுள்ள பிர­தான இஸ்­திக்லால் வீதியில் சுமார் 2000 பொது­மக்கள் ''ஜெரூ­சலம் முஸ்­லிம்­க­ளுக்­கு­ரி­யது கொலை­கார இஸ்­ரேலே பலஸ்­தீ­னத்­தி­லி­ருந்து வெளி­யேறு'' என்­பது போன்ற கோஷங்­க­ள­டங்­கிய பதா­தை­களை ஏந்­தி­ய­வாறு ஊர்­வ­ல­மாகச் சென்­றனர்.

எதிர்­வரும் வெள்­ளிக்­கி­ழமை இஸ்­லா­மிய ஒத்­து­ழைப்­புக்­கான அமைப்பின் கூட்­டத்­தினைத் தொடர்ந்து பலஸ்­தீன மக்­க­ளுக்கு ஆத­ர­வாக ஊர்­வ­ல­மொன்று இடம்­பெறும் என அர்­துகான் உறு­தி­ய­ளித்­துள்ளார்.

அமெ­ரிக்கா தனது தூத­ர­கத்தை ஜெரூ­ச­லத்­திற்கு மாற்றும் தீர்­மானம் டசின் கணக்­கான பலஸ்­தீன ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­களைக் கொல்­வ­தற்கு இஸ்ரேல் படை­யி­ன­ருக்கு ஊக்­க­ம­ளிப்­ப­தாக அமையும் என கடந்த திங்­கட்­கி­ழமை துருக்­கியின் வெளிநாட்டமைச்சர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அமெரிக்க தூதரகம் ஜெரூசலத்திற்கு மாற்றப்படுவதால் உற்சாகமடைந்துள்ள இஸ்ரேல் படையினரால் அமைதியான எதிர்ப்பில் ஈடுபட்டிருந்த பலஸ்தீனர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளைக் கண்டிக்கின்றோம் என அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.