Verified Web

ரோஹிங்ய நெருக்கடி தொடர்பில் யுத்தக் குற்ற விசாரணைக்கான நீதிபதிகள் பேச்சுவார்த்தை

8 days ago M.I.Abdul Nazar

மியன்மாரிலிருந்து ரோஹிங்ய முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமை தொடர்பில் விசாரணையை ஆரம்பிப்பதற்கு அனுமதிப்பதா இல்லையா என்பது தொடர்பில் அடுத்த மாதம் யுத்தக் குற்ற விசாரணைக்கான நீதிபதிகள் மூடிய கதவின் பின்னால் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ள விசாரணையின்போது மூன்று நீதிபதிகள் கொண்ட குழுவின் முன்னால் தலைமைச் சட்டவாதியான பட்டோஉ பென்சௌடா மாத்திரமே பிரசன்னமாக முடியும் என தலைமை நீதிபதி பீட்டர் கொவாக்ஸ் கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தார்.

ரோஹிங்ய மக்கள் வெளியேற்றப் பட்டமையை மனிதாபிமானத்திற் கெதிரான குற்றமாகக் கருதி தன்னால் விசாரணை யொன்றை மேற்கொள்ள முடியுமா இல்லையா என்பது தொடர்பில் தீர்ப்பொன்றினை வழங்குமாறு கடந்த மாதம் முதன்முறையான பட்டோஉ பென்சௌடா என்ற பெண் சட்டவாதியினால் உலகின் ஒரேயொரு நிரந்தர யுத்தக்குற்ற விசாரணை நீதிமன்ற நீதிபதிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தார். அது உண்மையிலேயே ஒரு சிக்கலான வேண்டுகோளாகும். ஏனெனில் மியன்மார் ரோம் நியதிச்சட்டத்தின் கீழான சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் கையொப்பமிட்ட அங்கத்துவ நாடல்ல.  
-Vidivelli