Verified Web

250 மெற்றிக் தொன் பேரீச்சம்பழம் சதொச ஊடாக கொள்வனவு

8 days ago ARA.Fareel

முஸ்­லிம்­களின்  நோன்­பு­கால பாவ­னைக்­காக  250 மெற்றிக் தொன் பேரீச்­சம்­ப­ழங்­களை  சதொச  ஊடாக மத்­தியகிழக்­கி­லி­ருந்து உட­ன­டி­யாகக்  கொள்­வ­னவு செய்து  விநி­யோ­கிப்­ப­தற்கு நேற்று அமைச்­ச­ரவை அங்­கீ­காரம்  வழங்­கி­யுள்­ளது.

இறக்­கு­மதி  செய்­யப்­படும் பேரீச்­சம்­பழம் வழமை போன்று நாடெங்­கு­முள்ள  பதி­வு­செய்­யப்­பட்­டுள்ள பள்­ளி­வா­சல்கள்  ஊடாக  முஸ்­லிம்­க­ளுக்கு இல­வ­ச­மாக  விநி­யோ­கிக்­கப்­படும் என அஞ்சல், அஞ்சல்  சேவைகள் மற்றும்  முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் ‘விடி­வெள்­ளி’க்குத்  தெரி­வித்தார்.

சவூதி  அரே­பிய அரசு  வரு­டாந்தம் இலங்­கைக்கு அன்­ப­ளிப்­பாக வழங்கி  வரும் பேரீச்­சம்­பழம்  இவ்­வ­ருடம்  இது­வரை வழங்­கா­மை­யி­னை­ய­டுத்து அரச செலவில்  பேரீச்­சம்­ப­ழத்தை  கொள்­வ­னவு  செய்து விநி­யோ­கிப்­பதற் கான  அமைச்­ச­ர­வையின்  அனு­ம­தியைக் கோரி நேற்று  அமைச்சர்  அவைக்கு  சமர்ப்­பித்த அமைச்­ச­ரவைப் பத்­திரம்  ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. 

அமைச்சர்  ஹலீம்  இது தொடர்பில் மேலும்  கருத்து  தெரி­விக்­கையில்; சவூதி அரே­பி­யாவின்  நன்­கொ­டை­யான பேரீச்­சம்­ப­ழத்தை காலம் தாழ்த்­தாமல்  வழங்­கு­மாறு கடந்த 6 மாதங்­க­ளுக்கு முன்பே கோரிக்கை  விடுக்­கப்­பட்­டி­ருந்­தது என்­றாலும்  சவூதி அரே­பி­யாவில்  பேரீச்­சம்­பழ  உற்­பத்­தியில்  குறைவு ஏற்­பட்­டுள்­ள­மையே  வழங்­கப்­ப­டா­மைக்குக்  காரணம்  எனக் கரு­து­கிறோம் என்றார்.

கடந்த  வருடம்  சவூதி  அரே­பியா  அரசு   இலங்­கைக்கு  150 மெட்­ரிக்தொன்  பேரீச்­சம்­ப­ழத்தை நன்­கொ­டை­யாக வழங்­கி­யி­ருந்­தது. அந்தக் தொகை  பற்­றாக்­குறை கார­ண­மாக   சதொச  ஊடாக  150 மெட்­ரிக்தொன் இறக்­கு­மதி  செய்­யப்­பட்டு  விநி­யோ­கிக்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

அஞ்சல், அஞ்சல்  சேவைகள்  மற்றும்  முஸ்லிம்  சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம்  மற்றும்  தேசிய ஒரு­மைப்­பாடு,  நல்­லி­ணக்கம் தொடர்­பான  இரா­ஜாங்க  அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி ஆகியோர் முஸ்­லிம்­க­ளுக்கு நோன்பு காலத்தில்  பேரீச்­சம்­ப­ழத்தின் அவ­சியம்  மற்றும்  சவூதி  நன்­கொடை  கிடைக்­காமை  பற்றி  தெளி­வு­ப­டுத்தி யிருந்­தனர். இத­னை­ய­டுத்து  பிர­தமர் ரணில்  விக்­கி­ர­ம­சிங்­கவும் சதொச ஊடாக  பேரீச்­சம்­ப­ழத்தை கொள்­வ­னவு  செய்­வ­தற்கு அனுமதி  வழங்கியிருந்தமை  குறிப்பிடத்தக்கது.

பேரீச்சம்பழம் உடனடியாக இறக்குமதி செய்யப்பட்டு ஒருவார  காலத்துக்குள்  பள்ளிவாசல்கள் ஊடாக  மக்களுக்கு விநியோகிக்கப்படும்  என  அமைச்சர் ஹலீம் தெரிவித்தார்.
-Vidivelli