Verified Web

அஷ்ரப் சேற்றில் கால் வைத்ததால்தான் இவர்கள் சோற்றில் கை வைக்கிறார்கள்

A.J.M.Nilaam

சிரேஷ்ட முஸ்லிம் அரசியல் ஆய்வாளர், எழுத்தாளர்

 

8 days ago A.J.M.Nilaam


1984 ஆம் ஆண்டு ஜே.ஆர். வடக்கு, கிழக்கு தமி­ழர்­களின் மக்­க­ளா­ணையைப் பெற்ற தமிழ் எம்.பிக்­களை பாரா­ளு­மன்­றத்­தி­லி­ருந்து வெளி­யேற்­றி­விட்டு தமிழ் ஆயு­தப் ­போ­ரா­ளி­க­ளோ­டுதான் திம்­புவில் பேச்­சு­வார்த்தை நடத்­தினார். அவர் மக்­க­ளாணை பெற்ற பாரா­ளு­மன்­றத்தின் முழு ஆளு­மை­யையும் தனி­ம­னித நிறை­வேற்று அதி­கா­ரத்­துக்­காக சுவீ­க­ரித்துக் கொண்­டவர் அல்­லவா? எனவே ஜே.ஆர். அவ்­வாறு செய்­தி­ருந்­ததில் வியப்­பில்லை. 

உண்­மையில் மக்­க­ளா­ணையை மீறி செயற்­ப­டு­வது ஜன­நா­யக விரோ­த­மே­யாகும். மக்­க­ளாணை பெற்ற வடக்கு, கிழக்கு தமிழ்த்­த­லை­வர்­களை அவர் திம்­புவில் புறக்­க­ணித்­தது மட்­டு­மல்ல முஸ்­லிம்­க­ளையும் சேர்க்­கவே இல்லை. ஜே.ஆரின் இந்த செய்கை முஸ்­லிம்­க­ளோடு இணக்­கப்­பாட்­டுடன் வாழ்ந்த தமிழ்த் தலை­வர்­களை ஆயுதம் தரித்த தமிழ்ப்­போ­ரா­ளி­க­ளிடம் தாரை வார்ப்­ப­தா­கவே அமைந்­தி­ருந்­தது. 

அத்­தோடு இது வடக்கு, கிழக்கு முஸ்­லிம்­களின் தனித்­துவ அர­சியல் உரி­மையை மறுக்கும் தமிழ் ஆயுதப் போரா­ளி­க­ளிடம் முஸ்­லிம்­களை ஒப்­ப­டைக்கும் செயற்­பா­டா­கவும் அமைந்­தி­ருந்­தது. இதை எதிர்த்­துத்தான் அஷ்ரப் வீறு­கொண்டு எழுந்தார். அவர் இலங்கை அர­சோடும் தமிழ் ஆயுதப் போரா­ளி­க­ளோடும் பேசிப் பார்த்தார். ஜன­நா­யகத் தமிழ்த் தலை­வர்­க­ளாலும் ஒன்றும் செய்ய முடி­ய­வில்லை. இலங்­கையின் பாது­காப்­புத்­துறை 100 வீதம் சிங்­க­ள­ம­ய­மாக இருந்­ததால் அதை எதிர்­கொள்­வ­தற்கு தமிழ் ஆயு­தப்­போ­ரா­ளி­களே முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்­டார்கள். 

இலங்கை, ஜன­நா­யக தமிழ்த் தலை­மை­களை முன்­னி­லைப்­ப­டுத்­தா­விட்டால் இந்­தியா என்ன செய்யும்? தமிழ் ஆயுதப் போரா­ளி­களை வலி­மைப்­ப­டுத்­து­வதைத் தவிர அதற்கு வேறு வழி இல்லை அல்­லவா? இதனால் வடக்கு, கிழக்கு முஸ்­லிம்கள் இரு பக்­கத்­தாலும் அநா­த­ர­வாக்­கப்­பட்­டார்கள். பின்னர் 1987 ஆம் ஆண்டு இந்­தியா இலங்­கை­யோடு ஒப்­பந்தம் செய்­து­கொண்டு தமிழ் ஆயுதப் போரா­ளி­களைக் கைவிட்­டது. 

தமிழ் ஜன­நா­யகத் தலை­வர்­க­ளி­னதோ தமிழ் ஆயுதப் போரா­ளி­க­ளி­னதோ கருத்­துக்கள் உள்­வாங்­கப்­ப­ட­வில்லை. இந்­தியா, தானே ஒரு தீர்வைத் திணித்­தது. இலங்கை அதை ஏற்று வலிமை இழக்­கச்­செய்­தது. அது­பற்றி இந்­தியா இது­வரை அலட்­டிக்­கொள்­ளவே இல்லை. தமிழ் ஜன­நா­யகத் தலை­வர்­களை தமிழ் ஆயு­தப்­போ­ரா­ளிகள் முடக்­கி­யதும் தமிழ் ஆயுதப் போரா­ளி­களை இலங்கை ஒடுக்­கி­ய­துமே மிஞ்­சின. வடக்கு, கிழக்கின் தனித்­து­வத்­துக்கு தமிழர், முஸ்லிம்கள் ஒற்­றுமை அவ­சியம் என்­ப­தையே  தந்தை செல்வா வலி­யு­றுத்­தி­யி­ருந்தார். எனினும் தமிழ் ஆயு­தப்­போ­ரா­ளிகள் சிங்­களப் பேரி­ன­வா­தத்தைப் போன்றே தமிழ் பேரி­ன­வா­தத்தைப் பேசி­னார்கள். முஸ்­லிம்­களை கொன்­ற­தோடு தமக்­குள்ளும் மோதி அழிவை ஏற்­ப­டுத்­திக்­கொண்­டார்கள். ஆயுதம் தூக்­கி­னாலும் நிதானம் இழந்­தி­ருக்கக் கூடாது. ஒருசேர இந்­தி­யா­வையும் இலங்­கை­யையும் கடும் எதி­ரி­க­ளாக்கிக் கொண்­டார்கள். 

இதற்குக் காரணம் இந்­தி­யா­வி­னதும் இலங்­கை­யி­னதும் செயற்­பா­டு­களில் அவர்கள் நம்­பிக்கை இழந்­ததே என நினைக்­கிறேன். பேச்­சு­வார்த்­தைகள் மூல­மா­க­வேனும் எதையும் கட்டம்  கட்­ட­மாக நிறை­வேற்றிக் கொள்­வ­தற்கும் கூட பரஸ்­பரம், நம்­பிக்கை இருக்­க­வேண்டும் அல்­லவா? ஒவ்­வொரு தரப்பும் தனித்­தனி நிகழ்ச்சி நிரல்­களை வைத்­துக்­கொண்டு இயங்­கி­ய­தால்தான் ஒரு­மு­கப்­பட்டு ஒரு இணக்­கப்­பாட்­டுக்கு வர­மு­டி­யாது போயிற்று என்­பதில் சந்­தே­க­மில்லை. இந்­நி­லை­யில்தான் 1988 ஆம் ஆண்டின் ஜனா­தி­பதித் தேர்­தல்­களில் ஸ்ரீமாவோ, முதலில் ஒப்­பந்தம் அப்­புறம் மற்­றவை எனப் பிடி­போட்டார். அதற்கு அஷ்ரப் இணங்­க­வில்லை. எனினும் அஷ்­ர­புக்கு கிழக்கில் தனித்­துவத் தெரிவு பெறு­வ­தற்­காக 12 ½ % வீத வெட்­டுப்­புள்­ளியை 5% வீத­மாக்கி பிரே­ம­தாச இணக்கம் கண்­டி­ருந்தார். 
உண்­மையில் அந்த தேர்­தலில் அனுர பண்­டாரா நாயக்­காதான் ஸ்ரீமா­வுக்கும் அஷ்­ர­புக்­கு­மான அர­சியல் இணக்­கப்­பாட்டைக் குழப்­பி­விட்­டி­ருந்தார். அவர் தன்­மா­ன­மற்ற முறையில் முஸ்லிம் சமூ­கத்தை எடை போட்­ட­தா­லேயே அது கைகூ­டாமற் போயிற்று. அதைப் பயன்­ப­டுத்தி கிழக்கின் முஸ்லிம் தனித்­து­வத்­துக்­காக பிரே­ம­தாச வழி­விட்ட போதும் புலி­க­ளோடும் ஒப்­பந்­தம்­செய்து பணத்­தையும் ஆயு­தங்­க­ளையும் வழங்­கி­யி­ருந்தார். 

பிரே­ம­தா­சா­வுக்கு சிங்­கள வாக்கு வங்கி சற்றுக் குறைவு என்­ப­தற்­கா­கவே முஸ்லிம் வாக்­கு­களைப் பெற அஷ்­ர­பையும், தமிழ் வாக்­கு­களைப் பெற பிர­பா­க­ர­னையும் நெருங்­கினார் என்­பது பின்­னால்தான் தெரியவந்­தது. இதனால் வடக்கு, கிழக்கு முஸ்­லிம்கள் கடும் சோத­னைக்கு உள்­ளா­னார்கள். அர­சியல் ரீதியில் புலி­களை அப்­பு­றப்­ப­டுத்­தவே முஸ்லிம் சமூகம் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்­ட­தோடு, பின்னர் இந்­திய சமா­தா­னப்­ப­டையை அப்­பு­றப்­ப­டுத்­தவே புலிகள் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்­டனர். புலிகள் முஸ்­லிம்­களின் அர­சியல் சுயா­தீ­னத்தை முழு­மை­யா­கவே ஏற்­காது முடக்­கி­ய­வர்கள். முஸ்­லிம்­களும் தமது தனித்­துவ சுயா­தீ­னத்­துக்­காக புலி­களை எதிர்த்­தார்கள். 
இந்­நி­லையில் வடக்கு, கிழக்கில் அரசு தனது அர­சியல் ஸ்திரப்­பாட்டை நிலை­நி­றுத்த வேண்­டு­மாயின் முஸ்­லிம்­களை பலப்­ப­டுத்த வேண்டும். எனவே, முஸ்­லிம்கள் அரசு பக்கம் சார்ந்தே நிற்க வேண்­டி­யி­ருக்­கி­றது. இலங்கை பாது­காப்­புத்­துறை 100 வீதம் சிங்­க­ள­மயம், தமிழ் ஆயு­தப்­போ­ரா­ளிகள் 100 வீதம் தமிழர் மயம். எனினும் முஸ்லிம் கிரா­மங்­க­ளுக்­கென அரசு குறிப்­பிட்ட அளவு முஸ்லிம் ஊர் காவற்­ப­டை­யையே ஏற்­பாடு செய்­தி­ருந்­தது. அதுவும் இந்­திய சமா­தா­னப்­படை வந்­ததும் கலைக்­கப்­பட்­டதால் முஸ்லிம் ஊர் காவற்­படை கலைக்­கப்­பட்­டது. இந்­நி­லையில் முஸ்­லிம்­களின் அர­சியல் தனித்­து­வத்தை அங்­கீ­க­ரித்த பிரே­ம­தாச புலி­க­ளுக்கு ஆயு­தமும் பணமும் வழங்­கி­யி­ருக்­கக்­கூ­டாது. தமிழ், முஸ்லிம் வாக்­கு­க­ளுக்­காக அவர் இதைச் செய்­தி­ருந்­த­போதும் பூனைக்கு விளை­யாட்டு எலிக்கு சாவு என்­பது போன்றே இச்­செய்கை அமைந்­தி­ருந்­தது. 1991 ஆம் ஆண்டு வடக்கின் 5 மாவட்­டங்­க­ளி­லி­ருந்தும் புலி­களால் பூர்­வீக முஸ்­லிம்கள் விரட்­டி­ய­டிக்­கப்­பட்­டார்கள். கிழக்கில் காத்­தான்­கு­டியில் தொழு­கையில் ஈடு­பட்­டுக்­கொண்­டி­ருந்த முஸ்­லிம்கள் படு­கொலை செய்­யப்­பட்­டார்கள். ஏறா­வூ­ரிலும் முஸ்­லிம்கள் கொல்­லப்­பட்­டார்கள். அழிஞ்சிப் பொத்­தா­னை­யிலும் முஸ்­லிம்கள் கொல்­லப்­பட்­டார்கள். ஹஜ்­ஜா­ஜி­களும் வழியில் மறிக்­கப்­பட்டுக் கொல்­லப்­பட்­டார்கள். 
இவற்றை எதிர்த்து அஷ்ரப் பாரா­ளு­மன்­றத்தில் பல­முறை ஆட்­சே­பித்து முஸ்லிம் இரா­ணு­வப்­பி­ரிவு வேண்டும் அல்­லது முஸ்­லிம்­க­ளுக்கு ஆயு­தங்கள் வழங்­கப்­ப­ட­வேண்டும். முஸ்­லிம்­க­ளா­கிய நாம் எமது மார்க்­கத்­தையும், உயிர்­க­ளையும், உடை­மை­க­ளையும், இருப்­பி­டங்­க­ளையும், குடும்­பத்­தி­ன­ரையும், வாழ்­வா­தா­ரங்­க­ளையும், இறை­மை­யையும், சுய­நிர்­ண­யத்­தையும் பாது­காக்க ஜிஹாத் செய்யக் கட­மைப்­பட்­டுள்ளோம் என்றார். 

எனினும் அவ­ரது வேண்­டுகோள் ஜனா­தி­பதி பிரே­ம­தா­ச­வாலும் பாது­காப்பு அமைச்சர் ரஞ்சன் விஜே­ரத்­ன­வாலும் ஏற்­றுக்­கொள்­ளப்­ப­ட­வில்லை. முஸ்லிம் ஊர்­கா­வற்­ப­டை­யினர் உயி­ருக்கு அஞ்சி கிழக்­கை­விட்டும் தப்­பிப்போய் பல்­வேறு மாவட்­டங்­க­ளிலும் தஞ்­ச­ம­டைந்­தார்கள். அவர்­க­ளி­ட­மி­ருந்து ஆயு­தங்கள் களை­யப்­பட்­ட­தோடு இறு­தி­வரை இன்­ற­ளவும் கொடுப்­ப­ன­வு­களும் வழங்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை. 
இந்­நி­லை­யில்தான் போலி தேசியப் பேரினக் கட்­சி­க­ளி­லி­ருந்து முஸ்லிம் சமூ­கத்தை விடு­வித்து இலங்கை முஸ்லிம் சமூ­கத்தின் தனித்­து­வத்­தையும் வர­லாற்­றையும், வாழ்­வா­தா­ரங்­க­ளையும், இறை­மை­யையும், சுய­நிர்­ண­யத்­தையும் காப்­ப­தற்­கான ஒரே வழி முஸ்லிம் தனித்­துவ அர­சியல் கட்­சியே எனும் நிலைப்­பாட்­டுக்கு அஷ்ரப் வந்தார். 

போலி தேசியப் பேரி­னக்­கட்­சியும் ஆபத்து. அவற்றில் முஸ்­லிம்கள் பிள­வுண்டு செயற்­ப­டு­வதும் ஆபத்து. அவற்றின் மூலம் கிடைக்கும் வரப்­பி­ர­சா­தங்­க­ளுக்­காக அலை­வதும் ஆபத்து. எனும் உண்­மை­களை அவர் கண்­ட­றிந்தார். இலங்கை முஸ்­லிம்­களை ஓர­ணியில் திரட்­டு­வதன் மூலமே  தனித்­து­வத்தை நிலை­நி­றுத்த முடியும் எனும் முடி­வுக்கும் அவர் வந்து சேர்ந்தார். எனினும் அமைச்சுப் பத­வி­யி­லேயே தற்­போது இலங்கை தனித்­துவ முஸ்­லிம்­களின் சமூ­கத்­த­லைமை காணப்­ப­டு­கி­றது. அதா­வது, முஸ்லிம் அமைச்­சரின் பின்­னால்தான் முஸ்லிம் சமூகம் அணி திர­ளு­கி­றது. சமூக அடிப்­படை உரி­மை­களை முதன்­மைப்­ப­டுத்­தாத பொரு­ளியல் தேட்­டமே இதற்குக் கார­ண­மாகும். இந்த தன்மை இலங்கை முஸ்­லிம்­க­ளிடம் இன்று வந்­த­தல்ல. பிஸ்னஸ் மைன்ட் பீப்பல் (வர்த்­தக நோக்­குள்ள மக்கள்), டிரேடர்ஸ் கம்­யு­னிடி (வியா­பார சமூகம்), மணி மைண்டர் (பண சிந்­த­னை­யாளர்), கொமர்ஷல் சொஷைட்டி (வர்த்­தகக் குழு) என்­றெல்லாம் முன்பே ஆங்­கி­லேயர் அடை­யா­ளப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார்கள். அந்த வகை­யில்தான் இப்­போதும் இலங்கை முஸ்லிம் சமூகம் அமைச்­சர்­களின் தலை­மையில் இயங்­கு­கி­றது. 

இத்­த­கைய நிலை அடிப்­படை உரி­மை­க­ளுக்குத் தடை­யாக இருக்­கு­மாயின் முஸ்லிம் அமைச்­ச­ர்களுக்குப் பின்னால் அணி திரள்­வதை முஸ்லிம் சமூகம் கைவிட்­டு­வி­ட­வேண்டும். பல­மான சமூ­கத்­த­லை­மையை அர­சி­யலில் உரு­வாக்கி அதற்கு முஸ்லிம் அமைச்சர் கட்­டுப்­படும் நிலையை உரு­வாக்க வேண்டும். இது சாத்­தி­ய­மா­காத வரை, அமைச்­ச­ர்களுக்குப் பின்­னா­லேயே முஸ்லிம் சமூகம் அணி திர­ளு­வதைத் தடுக்­க­மு­டி­யாது. 

இத­னால்தான் இரு பெருங்­கட்­சி­களும் முஸ்­லிம்­களை கிள்­ளுக்­கீ­ரை­யாக நினைக்­கின்­றன. தற்­போது வகித்துக் கொண்­டி­ருக்கும் அமைச்­சுக்­களை விடவும் உயர்ந்த அமைச்சைப் பெறவே இவர்கள் முயன்­றார்கள். இருந்த அமைச்சே மீண்டும் கிடைத்­ததால் ஓர­ளவு பெரு­மூச்சு விட்­டி­ருப்­பார்கள். இருந்த அமைச்­சா­வது தக்க வைக்கக் கிடைக்­கா­தி­ருக்­கு­மாயின் இவர்­களின் இமேஜே போயி­ருக்கும். அதனால் ஒரு­வரை விடவும் மற்­றவர் ரணி­லுக்கு நல்­ல­வ­ரா­கவே இருக்­கப்­பார்ப்­பார்கள்.
பாடாலி சம்­பிக்க ரண­வக்க, விஜே­தாச ராஜபக் ஷ, தயா­க­மகே ஆகி­யோரும் இருக்கும் அமைச்­ச­ர­வை­யில்தான் இவர்­களும் இருக்­கி­றார்கள். எனினும் அவர்­களின் முஸ்லிம் விரோத செயற்­பா­டு­களை இவர்­களால் தடுக்க முடி­யாது. 

அடுத்த கட்டம் மாகாண சபைத்­தேர்தல் அதிலும் முக­வர்­க­ளாக இவர்கள் இறக்­கி­வி­டப்­ப­டு­வார்கள். நேர­டி­யாக முஸ்லிம் சமூ­கத்தை எதிர்க்­காமல் வியூ­க­மா­கவே பேரி­ன­வாதம் தனது காரி­யங்­களை சாதித்துக் கொண்­டி­ருக்­கி­றது. பணம், பதவி, பட்டம் ஆகி­ய­வற்றால் கெடு­பிடி இன்­றியே பேரி­ன­வாதம் முஸ்­லிம்­களை மடக்­கி­விட்­டது. அஷ்ரப் மட்­டுமே பேரி­ன­வா­தத்தை மடக்­கி­யவர் அவ­ருக்குப் பின் அந்தத் திறமை வெற்­றி­ட­மா­கவே இருக்­கி­றது. 

ஹக்­கீமும் ரிஷாதும் முஸ்லிம் அமைச்­சர்கள். இவர்கள் இரு­வ­ருக்கும் அமைச்சுப் பத­வி­களை ரணில் வழங்­கா­தி­ருந்தால் முஸ்லிம் தலைமை எங்கே? இவர்கள் முஸ்லிம் சமூ­கத்தின் தனித்­து­வத்தைப் பேசி அடம் பிடித்தால் ரணில் அமைச்சுப் பத­வியை வழங்­கி­யி­ருக்­க­மாட்டார். அவ­ரது அன்பை சிறி­த­ளவு இழந்­தாலும் கூட இரா­ஜாங்க அமைச்­சையோ துணை அமைச்­சையோ தான் வழங்­கி­யி­ருப்பார். 
அந்த வகையில் இவர்­களின் கட்­சிகள் உண்­மை­யான தனித்­துவக் கட்­சி­யாக இயங்­க­மு­டி­யாது. பேரின முகவர் கட்­சி­யா­கவே இயங்க வேண்­டி­யி­ருக்­கி­றது. தமக்குள் முஸ்லிம் வாக்­கு­களைப் பிரித்து முஸ்லிம் சமூகம் தனித்­து­வத்­தோடு ஓர­ணியில் திர­ளு­வதை பல­வீ­ன­மாக்­கு­கி­றார்கள். எனினும் பேரினக் கட்­சிக்கு முஸ்லிம் வாக்­கு­களைப் பெற்­றுக்­கொ­டுக்கும் முக­வர்­க­ளாகி அமைச்சுப் பத­வி­களை ஸ்திரப்­ப­டுத்தி கொள்­கி­றார்கள். 

யாருக்கு உயர் அமைச்­சுப்­ப­தவி எனும் போட்­டியும் நில­வு­கி­றது. ஹக்­கீமின் நீர் வழங்கல் நகர திட்­ட­மிடல் அமைச்சை விடவும் ரிஷாதீன் வர்த்­தக வாணிப அமைச்சு வளம்­மிக்­கது என்­பதால் இரு முனைப்­போட்டி பல­மாக இருக்­கி­றது. இன்னும் 1 ½ வருட ஆயுளே இந்த அர­சுக்கு இருப்­பதால் இப்­ப­த­விகள் நிலை­யா­னவை அல்ல. தற்­போது பாரா­ளு­மன்­றத்தில் இருக்கும் 21 முஸ்லிம் எம்.பி.க்களும் அரசு சார்­பா­கவே இருக்­கி­றார்கள். எனினும் ஞான­சா­ரரின் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான அட்­டூ­ழி­யத்தை எதிர்த்து கட்சி பேதங்­களை மறந்து ஒன்­று­பட்டு அர­சிடம் கூறி­னார்கள். எனினும் கூட ஞான­சாரர் இப்­போதும் திரி­கிறார். அவர் மீது எந்த நட­வ­டிக்­கையும் இது­வரை இல்லை. பாதிக்­கப்­பட்ட முஸ்­லிம்­க­ளுக்கு நஷ்­ட­ஈடும் இல்லை. 

திக­னயில் நிகழ்ந்த அழி­வின்­போதும் இதே 21 முஸ்லிம் எம்.பி.க்களும்தான் கூடி அர­சுக்கு 30 நாள் காலக்­கெடு கொடுத்­தார்கள். என்ன நிபந்­த­னை­களை முன்­வைத்துக் கொடுத்­தார்கள் என்­பது தெரி­ய­வில்லை. 30 நாட்கள் கழிந்தும் விட்­டன. கைது செய்­யப்­பட்டோர் விளக்­க­ம­றி­யலில் இருக்­கி­றார்கள். அவர்கள் தண்­டிக்­கப்­ப­டு­வார்­களா? முறைப்­படி நஷ்­ட­ஈடு வழங்­கப்­ப­டுமா என்­பது இனி­மேல்தான் தெரிய வரும். அடிக்­கடி அறி­விப்பு மட்­டுமே வரு­கி­றது. 2013 ஆம் ஆண்டு முதல் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இது­வரை நிகழ்ந்த அத்­தனை அட்­டூ­ழி­யங்­க­ளுக்கும் தண்­ட­னைகள் வழங்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை. முறைப்­படி நஷ்­ட­ஈ­டு­களும் வழங்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை. அதே நிலை இப்போதும் ஏற்படாது என்பது என்ன நிச்சயம்?

முஸ்லிம் சமூகத்தின் வலிமை ஒரு முகப்படுத்தப்பட்ட நிலைப்பாடு மீண்டும் தலை தூக்காதிருக்கத்தான் அவரது அமைப்பை பல கூறுகளாக்கி பணத்துக்கும் பதவிகளுக்கும் பேரினவாதம் பலியாக்கிவிட்டிருக்கின்றது. கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் நிகழ்ந்ததென்ன? பேரினவாதம் முஸ்லிம் சமூகம் அதிகரித்த அம்பாறை மாவட்டத்தைக் கைப்பற்றியது. பல பிரிவுகளாகிப் பேரினவாதிகளிடம் மண்டியிட்டுக் கிடக்கும் அஷ்ரபின் சீடர்கள் ஒருங்கிணைந்து நின்றிருந்தால் இது நிகழ்ந்திருக்குமா? இது பற்றி ஹக்கீமுக்கும் கவலையில்லை. ரிஷாதுக்கும் கவலையில்லை. அதாவுல்லாவுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இதே நிலைதான். இன்று அஷ்ரப் உயிரோடு இருந்திருந்தால் துடிதுடித்திருப்பாரே! மாயக்கல்லி மலையில் சிலை அப்படியே இருக்கிறது. அம்பாறை மாவட்டத்துக்கு ஒரு தமிழ் பேசும் அரசாங்க அதிபர் இல்லை. சம்மாந்துறை, பொத்துவில், கல்முனை ஆகிய தேர்தல் தொகுதிகளிலிருந்து பல பகுதிகளை பிரித்தெடுத்து மூன்று பெரும்பான்மைச் சமூக ஆசனங்களுக்குத் திட்டமிடப்படுகின்றன. தீகவாபிக்குரிய 12000 ஹெக்டயர் காணி இருக்கிறது என தயாகமகே கூறியிருந்தார். இவற்றைப் பற்றி ஹக்கீமுக்கோ, ரிஷாதுக்கோ, அதாவுல்லாவுக்கோ, ஹிஸ்புல்லாவுக்கோ எந்த அக்கறையும் இருந்ததாகத் தெரியவில்லை. பெயருக்கு மட்டும் அஷ்ரபும் அவரது கட்சியும் எல்லோருக்கும் பயன்படுகின்றன. மாகாண சபைத் தேர்தலுக்கும் உதவும்.
-Vidivelli