Verified Web

பலஸ்தீன் நக்பாவின் 70 ஆண்டுகள் நிறைவு

2018-05-15 04:32:23 Administrator

ரவூப் ஸெய்ன்

ஸைதூன் மரங்­களின் நிழலில்
துயில்­கின்ற ஷுஹ­தாக்­களே
உங்கள் ஜிஹா­திய உணர்வை
காவி வந்த காற்றும் எதி­ரி­களின்
இத­யங்­களில் இடியாய் இறங்­கின
உங்கள் போராட்டம் பற்­றிய
செய்­தியை எங்கள் முற்­றத்துப் பூச்­செ­டிகள்
சாள­ரங்­களை ஊடு­ருவும் தென்றல்
மெளனமாய் ஊர்ந்து வரும் அரு­விகள்
எங்கள் வானில் வளரும் நிலா
வைகறை மேகங்கள் - எல்­லாமேதமக்குள் பேசிக் கொள்­கின்­றன
வர­லாற்றை தியா­கத்­தாலும் வீரத்­தாலும்
எழு­திய உங்­க­ளுக்கு எழு­பதாம் ஆண்டில்
என் வார்த்­தைகள் சமர்ப்­பணம்
ஆனாலும் மன்­னிக்க வேண்டும் என்னை
எளிய சொற்களால் உங்களை எழுதியமைக்காக!

 

1948 மே 15 இல் உலக வரை­படத் தில் புற்­றுநோய் போல் ஒரு கறுப்புப் புள்ளி படிந்­தது. பென்­கூ­ரியன் தலைமை யில் அன்­றுதான் இஸ்ரேல் எனும் நாடு பலஸ்­தீனில் பிர­க­டனம் செய்­யப்பட் டது. ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட பலஸ்தீன் மக்கள் ஆயி­ரக்­க­ணக்கில் கொல்லப் பட்­டனர். மில்­லியன் கணக்கில் அகதி களாக்­கப்­பட்­டனர். இந்த வர­லாற்றுத் துய­ரத்தை அவர்கள் நக்பா என அழைக்­கின்­றனர்.

பலஸ்­தீ­னர்­களின் நாடு எங்­கி­ருந்தோ வந்த நாடோடி யூதர்­களால் அப­க­ரிக்கப் பட்டு, இவ்­வ­ருட மே மாதத்­துடன் 70 ஆண்­டுகள் நிறை­வ­டை­கின்­றது. இந்நூற் றாண்டின் மாபெரும் மனிதப் பேர­வல மாக நிலை­பெற்று விட்ட பலஸ்­தீனர் களின் நெருக்­கடி குருதி தோய்ந்த அன்­றாட சம்­ப­வங்­க­ளோடு தொடர்ந்த வண்ணம் உள்­ளது.

மனித இன வர­லாறு முழு­வ­திலும் இடம்­பெற்ற மிகப் பெரிய அநீ­தியின் மொத்த வடிவம் பலஸ்­தீனம் ஆக்­கிரமிக்­கப்­பட்­ட­மைதான். 20 ஆம் நூற்­றாண்டில் நிகழ்ந்த இந்தத் துய­ரத்தின் அலைகள் இன்னும் ஓய­வில்லை. உண்­மை­யான மண்ணின் மைந்­தர்கள் வேருடன் பிடுங்கி வீசப்­பட்டு, யூதர்களுக்கு ஒரு கால­னித்­துவ நாடு கள்ளத் தன­மாக உரு­வாக்­கப்­பட்டு 7 தசாப்தங்கள் கடந்து விட்­டன.

வெட்கம் கெட்ட, அரு­வ­ருப்­பான பிரிட்டிஷ் ஏகா­தி­பத்­தியம் இந்த அநீதிக் குப் பின்­ன­ணியில் இருந்­தது. 1948 மே 15 இல் மத்­திய கிழக்கில், அற­பு­களின் வாசற்­ப­டியில் புற்றுநோய் போல் முளைத்­தெ­ழுந்த இஸ்ரேல், பலஸ்­தீனர் களின் 20 வீத நிலத்தை விழுங்­கி­யிருந் தது. மூன்­றா­வது அற­பு-­– இஸ்ரேல் யுத்­தத்தின்போது மேற்­குக்­கரை, காஸா என முழுப் பலஸ்­தீ­னத்­தையும் விழுங்கி ஏப்­ப­மிட்­டது. மட்­டு­மல்ல, அரு­கி­லி­ருந்த சினாய், லெபானின் ஷிபா பண்ணை, சிரி­யாவின் கோலான் குன்­றுகள் வரை அப­க­ரித்துக்  கொண்­டது. இப்­போது இந்த சட்­ட­வி­ரோத நாட்­டுக்கு அமெ ரிக்கா உள்­ளிட்ட பிற நாடுகள் முண்டு கொடுக்­கின்­றன. ஒவ்­வொரு பொழுதி லும் பலஸ்­தீ­னர்­களின் நிலங்­க­ளையும் உயிர்­க­ளையும் உறிஞ்சி, வீங்கி வரும் இஸ்ரேல், முஸ்­லிம்­களின் ஆன்மா எனக் கரு­திப்­படும் அல் அக்ஸா பள்­ளி­வா­ச­லையும் தீ மூட்­டியும் அகழ்ந்தும் அழித்து வரு­கின்­றது.

பிரிட்டிஷ் ஏகா­தி­பத்­தியம் உரு­வாக்கி விட்ட இஸ்ரேல் எனும் விஷ நாகத்தை இன்று பாலூட்டி வளர்க்கும் அமெ ரிக்கா, வரு­டாந்தம் இரண்டு பில்­லியன் டொலர்­களை உதவித் தொகை­யாக வழங்­கு­கின்­றது.

கடந்த 70 ஆண்டுகால வர­லாற்றில் இந்த ஆண்டு மிக மோச­மான திருப்பு முனை கொண்ட ஆண்­டா­கவே பலஸ் தீனர்­களால் பார்க்­கப்­ப­டு­கின்­றது. இதற்குப் பல கார­ணங்கள் உள்­ளன.  1967 எல்லைப் புறங்­க­ளுடன் கூடிய இரு நாட்டுத் தீர்வை குப்பைத் தொட்­டியில் வீசி­யுள்ள இஸ்ரேல், தனது தலை நக­ரத்தை முஸ்­லிம்­களின் புனித நக­ரான ஜெரூ­ச­லத்­திற்கு நேற்று இடமாறியுள்ளது. இன்­னொரு புறம் சவூதி அரேபியா புத்தி சுயா­தீ­ன­மற்ற ட்ரம்பின் தீய முடி­வுக்கு சாத­கமாய் தலை­ய­சைத்­துள்­ளது.

கொடூ­ரங்­களின் உலக அதிசயம் 70 ஆண்­டு­களாய் நிகழ்ந்து வரும் ஒரு மண்ணில், சியோ­னிஸம் கையாண்டு வரும் தந்­தி­ர­மிக்க ஆக்­கி­ர­மிப்பும் அநி­யா­யங்­களும் வார்த்­தை­களின் வர்­ணிப்­புக்கு அப்­பாற்­பட்­டவை. சியோ­னி­ஸத்­திற்கு முண்­டு­கொ­டுக்கும் அமெ­ரிக்­காவின் ஜன­நா­ய­கத்தின் மீது காறி உமிழ வைக்கும் அளவு அவை அரு­வ­ருப்­பா­னவை.

தனக்கு மேல் வீடு இடிந்து விழும். கண் முன்னால் கண­வரும் பிள்ளை களும் கைதாகி விடு­வார்கள். தாய்மார் களுக்கு முன்னால் இளம் பிஞ்­சுகள் துப்­பாக்கிச் சூட்டில் கருகிச் சாய்வார் கள். ஆனால், அம்­மக்கள் அசைய மாட் டார்கள். எங்கும் சோதனைச் சாவ­டிகள். எவரும் எந்த வேளை­யிலும் கைதுசெய் யப்­படும் அவ­ச­ர­கால நிலை. திடீர், திடீரென்ற சுற்­றி­வ­ளைப்பு மின்­சாரம், குடிநீர் முன்­ன­றி­வித்­த­லின்­றியே துண் டிப்பு. இடித்துத் தரை­மட்­ட­மாக்­கப்­பட்ட வீடுகள் கட்டி முடிக்­கப்­ப­டும்­போது மூன்றாம், நான்காம் முறை புல்­டோசர் களால் தாக்­கி­ய­ழிப்பு. சிறை­களில் 8000 சிறு­வர்கள். நூற்­றுக்­க­ணக்­கான பெண் கள். காஸா­வி­லி­ருந்து மருத்­து­வத்­திற்­காக தனது சொந்த மண்­ணான மேற்குக் கரைக்குச் செல்­வ­தற்கு எத்­த­னையோ சட்­ட­திட்­டங்கள். இவைதான் ஆக்­கி­ரமிக்கப்­பட்ட பலஸ்­தீனில் நடக்கும் அன்றாட நிகழ்­வுகள். கற்­பனை செய்யும் போது கூட நெஞ்சு கனக்­கின்­றது.

பலஸ்­தீனில் ஒடுக்­கப்­பட்ட மக்­களின் நேர்­மை­யான வர­லாற்றை யூதர்கள் இரத்­தத்­தாலும் துப்­பாக்­கி­க­ளாலும் எழு­து­கின்­றனர். இன்று பலஸ்­தீன மண்ணில் இஸ்­ரேலின் மிரு­கத்­தனம் முன்­னொ­ரு­போதும் இல்­லாத அளவு உச்­சத்­திற்கு வந்து விட்­டது. அரக்கன் போல் எழுந்து நிற்கும் யூத ஆக்­கி­ரமிப்பாள­னுக்கு பெண்கள், குழந்­தைகள் என்ற வேறு­பாடு தெரி­வ­தில்லை. ஈவி­ரக்­க­மின்றி, கண்ணில் படு­கின்­றவர்களை எல்லாம் வேட்­டை­யாடி வரு­கின்­றது இஸ்ரேல்.

ஒரு மக்கள் திரள், ஆயுத முனையில் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்டு, அவர்­க­ளது பிறந்த மண்­ணி­லேயே கூட்டம் கூட்­ட­மாகக் கொல்­லப்­ப­டு­கின்­றனர். இரத்தம் சிந்தி, கண்ணீர் சிந்தி அவர்கள் கட்டி முடித்த வீடு­களை அவர்­களின் கண்­க­ளுக்கு முன்­னா­லேயே யூதர்கள் தரை­மட்ட மாக்­கு­கின்­றனர். சுதந்­தி­ரமாய் நட­மாட முடி­யா­த­வாறு சோதனைச் சாவ­டி­களில் பிச்சி எடுக்­கப்­ப­டு­கின்­றனர். கைதுசெய் யப்­படும் அப்­பா­விகள் அடைத்து வைக்­கப்­ப­டு­கின்­றனர். சித்­தி­ர­வதை செய்ய அவர்­களின் மண்­ணி­லேயே வதை முகாம்கள் வேறு.

பலஸ்­தீனில் கடந்த ஏழு தசாப்­தங்க ளாக இஸ்ரேல் நிகழ்த்தி வரும் அரு வருக்­கத்­தக்க ஆக்­கி­ர­மிப்­பையும் அட்டூ ழியங்­க­ளையும் நோக்­கும்­போது நாம் எல்­லோரும் நாக­ரி­க­ம­டைந்த, பண்­பட்ட ஓர் உல­கில்தான் வாழ்­கி­ன்றோமா என்ற ஐயம் நம்மை ஆட்­கொள்­கின்­றது. மெல் கெம் எக்ஸ் சொன்­ன­துபோல், அநி­யா­யக்­கா­ரர்கள் அநி­யா­யங்­களைக் கட்­ட­விழ்ப்­பது ஆச்­ச­ரி­யத்­திற்­கு­ரி­ய­தல்ல. அவற்றை வாய்­பொத்தி மௌன­மாக இருந்து வேடிக்கை பார்க்கும் ஒரு மக்கள் கூட்டம் இருக்­கி­ன்றது என்­ப­துதான் ஆச்­ச­ரி­யத்­திற்­கு­ரி­யது.

எக்ஸின் இந்தக் கருத்து பலஸ்தீனுக்கு முற்­றிலும் பொருந்தி வருகின்றது. பலஸ்­தீ­னர்­க­ளுக்கு எதி­ராக இஸ்ரேல் இழைத்து வரும் அநி­யா­யங்க ளுக்கு எதிராய் “நாக­ரிக உலகம் இன் னும் உரிய முறையில் குரல் கொடுக்கவில்லை. இஸ்­ரேலின் போர்க் குற்றங்கள் எதற்கும் விசா­ர­ணைகள் இல்லை. ஊட­க­வி­ய­லா­ளர்கள் யாரும் அதன் இரும்புத் திரையை விலக்கிப் பார்க்க முடி­யாது. ஐ.நா. கூட வாய்­வழிக் கண்­ட­னத்­தோடு அமை­தி­ய­டை­கின்­றது.

மிக மிக அப்­பா­வி­க­ளான எத்­தனையோ பேர் கொல்­லப்­ப­டு­கி­றார்கள். கன­வு­க­ளு­டனும் நம்­பிக்­கை­யு­டனும் வாழ்ந்த எத்­த­னையோ பேர் கொல்லப்பட்டு விட்டனர். பள்­ளிக்குச் செல்லும் வழியில் எத்­த­னையோ குழந்­தைகள் உலங்கு வானூர்­திகள் போடும் குண்டுகளில் கருகிப் போனார்கள். பாலில்­லாத குழந்­தைகள், செல­வுக்கு வழி­யில்­லாத மனை­விகள், பல பிள்­ளை­க­ளுடன் மனை­வியைப் பறி­கொ­டுத்த கணவன்மார், இருள் கவ்­விய வாழி­டங்கள் என ஏழு தசாப்­தங்­களை ஒரு சமூகம் கடத்­து­வ­தென்றால் இந்த வன்­கொடுமையை நாம் நினைத்துக் கூட பார்க்க முடி­யுமா?

பலஸ்தீன் நிகழ்­வுகள் யாரது மனச்­சாட்­சி­யையும் உறுத்­த­வில்­லையா? ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட அந்த மண்ணின் ஓலங்­களை இந்த உலகம் கேட்­காமலேயே செவி­டாகி விட்­டதா? எல்­லாமே பலஸ்­தீ­னர்­க­ளுக்கு எதி­ரா­கவே நிகழ்கின்­றன. தற்­காப்­புக்­காக தாக்­குதல் நடத்­தும்­போது அதை பயங்­க­ர­வாதம் என்று அமெ­ரிக்கா உள்­ளிட்ட மேற்கத்தைய ஊட­கங்கள் முத்­திரை குத்­துகின்றன. ஐரோப்­பாவோ அதன் ராஜ­தந்­திரப் பண்­பா­டு­களை இழந்­து­விட்­டது. இருந்­தி­ருந்­த­வாறு இஸ்ரேல் மீது ஒரு கண்­டனத்தைத் தெரி­விக்­கின்­றது. அதற்கு எந்த அர­சியல் பெறு­மா­னமும் இல்லை.

மத்­திய கிழக்கின் அர­சி­யலை ஆட்­டு­விக்கும் அமெ­ரிக்கா, இஸ்­ரேலின் பக்கம் நிற்­பது நெருக்­க­டியை இன்னும் கூர்­மைப்­ப­டுத்திவிட்­டது. ட்ரம்ப் குருட்டுத் தன­மாக அறிக்கை விடு­கிறார். பலஸ்­தீ­னர்­களைக் கொல்­வ­தற்­கென்றே இஸ்­ரே­லுக்கு இரண்டு பில்­லியன் டொலர்­களை வழங்கும் வொஷிங்டன், பலஸ்­தீ­னர்­களே நீங்கள் தாரா­ள­மாகச்     சாகுங்கள் என்­கி­றது.

உலக நாடு­களை சமத்­து­வ­மா­கவும் சமா­தா­ன­மா­கவும் நடத்தும் நோக்கில் உரு­வாக்­கப்­பட்ட ஐ.நா.வும் சியோனி ஸத்தின் காவல் நாய் போலவே செயற்படக் காரணம் என்ன? 1948 இல் யூத வழக்­க­றிஞர் ஹென்றி க்லீன் எழு­திய Zionism rules the World எனும் நூலில் ஐ.நா. சபை யூதர்­களின் வேதத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­வாறு உலகை யூதர்கள் ஆள்­வ­தற்கு உரு­வாக்­கப்­பட்ட மேல்­நிலை அர­சாங்கம் என்­கிறார். இதுதான் இன்று உலகம் முழு­வதும் நடக்­கின்­றது.

இன்­றுள்ள மிக ஆபத்­தான நிலை என்­ன­வெனில், சியோ­னிஸ அமெ­ரிக்க அணி­யோடு அறபு ஆட்­சி­யா­ளர்­களும் இணைந்து கொண்­ட­மைதான். இந்நூற் றாண்டின் மோசடி எனப்­படும் கேடு கெட்ட கள்ள ஒப்­பந்­த­மொன்றில் சவூதி உள்­ளிட்ட அறபு நாடுகள் கைச்­சாத்திட் டுள்­ளன. அதன்­படி இடம்­பெ­யர்ந்து வாழும் மில்­லியன் கணக்­கான பலஸ் தீன் அக­தி­களின் மீள்­வரும் உரிமை மறுக்­கப்­ப­டு­கி­றது. பலஸ்­தீ­னர்­க­ளுக்கு எகிப்தின் சினாய்ப் பிர­தே­சத்தில் மாற்று நில­மொன்றை பிச்சை போடும் சியோனிஸத் திட்­டத்­திற்கு சவூதி இள­வ­ரசர் சல்மான் வெளிப்­படையாகவே ஆத­ரவு தெரி­விக்­கின்றார்.

பலஸ்தீன் அதி­கார சபையின் தலைவர் மஹ்மூத் அப்பாஸ் ட்ரம்பும் நெடன்­யா­ஹுவும் முன்­மொ­ழியும் தீர்வை ஏற்றுக் கொள்ள வேண்டும். இல்­லை­யென்றால் பத­வி­லி­யி­ருந்து விலக வேண்டும் என்று மிரட்­டு­கிறார் இள­வ­ரசர் கல்மான். அறபு ஆட்­சியாளர்கள் அறபு சியோ­னிஸ்­டு­க­ளாக உரு­மாறி வரு­கி­றார்கள். பலஸ்­தீ­னர்கள் மீதான நெருக்­கு­தல்கள் தீவி­ர­ம­டைந்து வரு­கின்­றன. இரு நாட்டுத் தீர்வுத் திட்­டத்தில் பலஸ்­தீ­னர்­களின் தலை­நகர் என ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட புனித ஜெரூ­சலம், ஆக்­கி­ர­மிப்பின் 70 ஆண்டு நிறைவில் இஸ்­ரே­லுக்குத் தாரைவார்க்கப்­ப­டு­கி­றது. இத்­த­கைய கொடுமைகளுக்கு சவூதி துணை­போ­கின்­றது. அறபு ஆட்­சி­யாளர் இழைக்கும் மிகப் பெரிய வர­லாற்றுத் துரோகம் இது.

இந்தத் துரோ­கத்தின் விலையை என்றோ ஒரு நாள் அவர்கள் செலுத் தியே ஆக வேண்டும். இரு புனிதஸ் தங்­களின் காவ­லர்கள் என்று தம்­பட்டம் அடிப்­ப­வர்கள் சூதாட்ட மையங்­களை யும் சினிமாக் கொட்­ட­கை­க­ளையும் தாரா­ள­மாக்கி வரு­கின்­றனர். இஸ்­லா­மிய அடை­யா­ளங்கள் சிறிது சிறி­தாக அழிந்து வரு­கின்­றன. இஸ்­லாத்தின் பரம எதிரி களான சியோ­னிஸ்­டு­க­ளோடு கைகோர்த் துச் செயற்­படும் அறபு ஆட்­சி­யா­ளர்கள் பலஸ்­தீ­னர்­களை நடுத்­தெ­ருவில் கைவிட்டு பல தசாப்­தங்கள் கடந்­து­விட்­டன.

பலஸ்­தீ­னர்­களோ இத்­தனை சோத னைக­ளையும் கண்டு துவண்டு விட வில்லை. வீர தீர­மிக்க போராட்­டத்தை பொறு­மை­யோடும் விவேகத்தோடும் நடத்தி வருகின்றனர். இறுதித் தோல்வி யூதர்களுக்குத்தான் என்பதை அவர்கள் ஆழ்ந்து நம்புகிறனர். உண்மையில் பலஸ்தீன் போராட்டம் ஓர் அறப் போராட்டம் மட்டுமன்றி, மிக அற்புத மான போராட்டம் என்பதையும் அவர்கள் நிறுவி வருகின்றனர். மனித இன வரலாறு நெடுகிலும் இதுபோன்ற தொரு போராட்டத்தை நாம் எங்குமே கண்டதில்லை. போராட்டத்தில் இரு தரப்பையும் பாருங்கள். அமெரிக்க வல்லூறின் துணையுடன் நவீன ரக ஆயுதங்களைத் தாங்கிய சியோனிஸம். அடுத்த பக்கம் கற்களைக் கையில் ஏந்தி துப்பாக்கி அரக்கர்களை நேருக்கு நேர் சந்திக்கும் அப்பாவிச் சிறுவர்கள். இந்தக் கற்கள் சாதாரணமானவை அல்ல. யூதர் களுக்கு குலைநடுக்கத்தைத் தருபவை. அமெரிக்காவோ அறபு நாடுகளோ யார் எது செய்தாலும் இறுதியில் பலஸ்தீனர் கள் வெற்றி பெறுவார்கள் என்பது எமது அகீதா சார்ந்த எதிர்பார்ப்பு.

70 ஆண்டுகள் நிறைவிலும் இந்த நம்பிக் கையைத்தான் நாம் உறுதிப்படுத்த வேண்டியுள்ளது.
-Vidivelli