Verified Web

பலஸ்தீன மக்களுக்காகவும் ரமழானில் பிரார்த்திப்போம்

2018-05-14 23:55:10 Administrator

அல்­லாஹ்வின் உத­வியால்  நாம் அனை­வரும் புனித ரமழான் மாதத்தை எதிர்­பார்த்துக் காத்­தி­ருக்­கிறோம். இன்ஷா அல்லாஹ் நாளை இரவு இலங்­கையில் புனித ரமழான் மாத்­திற்­கான தலைப்­பிறை பார்க்­கப்­படும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதற்­க­மைய ரமழான் ஆரம்பம் தொடர்­பான தகவல்  நாளை இரவு உறு­திப்­ப­டுத்­தப்­படும்.

இலங்­கையைப் பொறுத்­த­வரை முஸ்­லிம்கள் கடந்த சில வரு­டங்­க­ளாக பல்­வேறு அச்­சு­றுத்­தல்­களை எதிர்­கொள்ள வேண்­டி­யுள்­ளது. அந்த வகையில் இவ்­வா­றான அச்­சு­றுத்­தல்கள் நீங்­கவும் இந்த நாட்டில் முஸ்­லிம்கள் நிம்­ம­தி­யா­கவும் சந்­தோ­ச­மா­கவும் வாழ்­வ­தற்குத் தேவை­யான இறை அருளைப் பெற்றுக் கொள்­வ­தற்­கான மாத­மாக இந்த வருட ரம­ழானை நாம் பயன்­ப­டுத்திக் கொள்ள வேண்டும்.

கடந்த மார்ச் மாதம் கண்­டியில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றைகள் கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்ட நிலை­யி­லேயே இந்த வருடம் நாம் ரம­ழானை எதிர்­கொள்­கிறோம். முஸ்­லிம்கள் இரவு நேரங்­களில் விழித்­தி­ருந்து பள்­ளி­வா­சல்­க­ளுக்குச் சுதந்­தி­ர­மாகச் சென்று அமல்­களில் ஈடு­ப­டு­வ­தற்­கான அச்­ச­மா­ன­தொரு சூழல் அப் பகு­தி­களில் நீடிக்­கவே செய்­கி­றது. அந்த வகையில் இப் பிர­தே­சங்­களில் வாழு­கின்ற முஸ்­லிம்கள் தமது பாது­காப்பு விட­யங்­களில் கரி­ச­னை­யாக இருக்க வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். அமல்­களை கூட்­டாக நிறை­வேற்­று­கின்ற விட­யத்தில் திட்­ட­மிட்ட வகையில் செயற்­ப­டு­வது பள்­ளி­வாசல் நிர்­வா­கிகள் மற்றும் பிர­தேச தலை­மை­களின் கடப்­பா­டாகும்.

அதே­போன்­றுதான் முஸ்­லிம்கள் ரமழான் மாதத்தின் கண்­ணி­யத்தைப் பேணு­கின்ற வகை­யிலும் நாட்டில் வாழு­கின்ற ஏனைய சமூ­கங்­க­ளுடன் முரண்­பா­டு­களைத் தோற்­று­வித்துக் கொள்­ளாத வகை­யிலும் கவ­ன­மா­கவும் நிதா­ன­மா­கவும் நடந்து கொள்ள வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

குறிப்­பாக ரம­ழானில் தோற்றம் பெறும் பிறை சர்ச்சை, தராவீஹ் சர்ச்சை, இஸ்­லா­மிய பிர­சார குழுக்­க­ளுக்­கி­டை­யி­லான தேவை­யற்ற முரண்­பா­டுகள் என்­ப­ன­வற்றை முற்­றாக தவிர்த்துக் கொள்ள வேண்­டி­யது காலத்தின் தேவை­யாகும்.

அதே­போன்று பள்­ளி­வாசல் நிர்­வா­கி­களும் தமது பொறுப்­புக்­களை உணர்ந்து செயற்­பட வேண்டும். ரம­ழானின் பெயரால் பள்­ளி­வாசல் சொத்­துக்­களை வீண் விரயம் செய்­யவோ அல்­லது பள்­ளி­வா­சல்­களை முரண்­பா­டு­களை வளர்க்கும் இட­மாக மாற்­றி­வி­டவோ கூடாது என்றும் ஆலோ­சனை கூற விரும்­பு­கிறோம்.

தற்­போது பலஸ்­தீன மண்ணில் இஸ்ரேல் மீண்டும் தனது காட்­டு­மி­ராண்­டித்­த­னத்தை அரங்­கேற்றத் தொடங்­கி­யுள்­ளது. நேற்று மாத்­திரம் சுமார் 40க்கும் அதி­க­மானோர் காஸாவில் ஷஹீ­தாக்­கப்­பட்­டுள்­ளனர். இந்த எண்­ணிக்கை மேலும் அதி­க­ரிக்­கலாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. சுமார் 2000 பேர் வரை காய­ம­டைந்­துள்­ளனர். 'நக்பா' தினத்தை முன்­னிட்டு இடம்­பெற்ற பேர­ணிகள் மீதே இஸ்ரேல் குண்­டு­வீச்சுத் தாக்­குதல் நடத்தி இந்தப் படு­கொ­லையை அரங்­கேற்­றி­யுள்­ளது.

புனித ரம­ழானை எதிர்­நோக்­கி­யி­ருக்­கின்ற நிலை­யி­லேயே பலஸ்­தீனில் நமது உற­வுகள் மீதான படு­கொலை கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்­டுள்­ளது. இந் நிலையில் பலஸ்­தீன மக்­க­ளுக்கு எதி­ராக கடந்த 70 ஆண்­டு­க­ளாகத் தொடரும் ஆக்­கி­ர­மிப்பு அவலம் நீங்­கவும் மீண்டும் பலஸ்­தீன சுதந்­திர தேசம் மல­ரவும் நாம் இந்த ரம­ழானில் அதி­க­ம­திகம் பிரார்த்­திக்க வேண்டும்.்டும் பலஸ்தீன சுதந்திர தேசம் மலரவும் நாம் இந்த ரமழானில் அதிகமதிகம் பிரார்த்திக்க வேண்டும். இதுவே பலஸ்தீன மக்களுக்கு நாம் செய்யும் மிகப் பெரிய உதவியாகும்.

அந்த வகையில் நம்மை எதிர்நோக்கியுள்ள புனித ரமழான் மாதம் நமக்கும் உலக முஸ்லிம் உம்மாவுக்கும் சுபீட்சத்தையும் இறை அருளையும் கொண்டுவரப் பிரார்த்திப்போமாக.
-Vidivelli