Verified Web

அருள்மிகு ரமழானை அழகாக திட்டமிடுவோம்

T.M.Mufaris Rashadi

விரி­­வு­ரை­யா­ளர், பாதி­ஹ் கல்வி நிறு­வ­னம்

2018-05-14 21:22:53 T.M.Mufaris Rashadi

ரம­ழானின் முதல் இரவு வந்து விடு­மானால் ஷைத்­தான்­களும், அட்­டூ­ழியம் புரியும் ஜின்­களும் விலங்­கி­டப்­ப­டு­கின்­றனர். நர­கத்தின் அனைத்து வாயில்­களும் மூடப்­படும் அதில் ஏதும் திறக்­கப்­ப­ட­மாட்­டாது, சுவர்க்­கத்தின் அனைத்து வாயில்­களும் திறக்­கப்­படும், அதில் ஏதும் மூடப்­ப­ட­மாட்­டாது. ஓர் அழைப்­பாளர், ''நன்­மையை விரும்­பு­ப­வர்­களே அதிகம் நன்மை செய்­யுங்கள், பாவங்­களை விரும்­பு­ப­வர்­களே பாவங்­களை நிறுத்­திக்­கொள்­ளுங்கள் என்று அழைப்பு விடுப்பார். ஒவ்­வொரு இரவும் நர­கத்­திற்­கு­ரி­ய­வர்கள் விடு­தலை செய்­யப்­ப­டு­கின்­றனர்.'' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி­னார்கள் (அறி­விப்­பவர்: அபூ­ஹு­ரைரா (ரலி), ஆதாரம்: திர்­மிதி, இப்­னு­மாஜா).

மண்ணில் படைக்­கப்­பட்ட மனி­தனில் தக்­வாவை ஏற்­ப­டுத்தும் அளப்­பெரும் அரு­ளாக ரமழான் மாதம் ஒவ்­வொரு வரு­டமும் எம்மை கடந்து போய்க் கொண்­டு­தா­னி­ருக்­கி­றது. ஸஹர் முடிந்­த­தி­லி­ருந்து மஃரி­பிற்கு அதான் சொல்லும் அந்த நிமிடம் வரை வெறு­மனே உடலை வருத்தி பசித்­தி­ருப்­ப­தையும், தாகித்­தி­ருப்­ப­தையும் மட்டும் இந்த நோன்பு எம்­மிடம் எதிர்­பார்க்­க­வில்லை.

பொய், புறம் பேசு­வதை கைவி­டாமல்  பசித்­தி­ருப்­ப­திலும் தாகித்­தி­ருப்­ப­திலும் அல்லாஹ் தேவை­யற்­றவன் என்று புஹா­ரியில் பதி­வா­கி­யி­ருக்கும் நபி­மொழி நோன்­பி­ருக்கும் நிலையில் மட்டும் அந்த பாவங்கள் தவிர்க்கப் பட வேண்­டு­மென அர்த்தம் சொல்­ல­வில்லை. மிகவும் பல­வீ­ன­மான நிலையில் அல்­லாஹ்வின் மீது ஏற்­படும் இறை­யச்­சத்தின் விளைவால் பாவத்­தி­லி­ருந்து தவிர்ந்து கொள்ளும் மன­நி­லையை,மன­வ­லி­மையை எம்முள் விதைக்க முயற்சி செய்ய வேண்டும் என்­பதே அதன் அர்த்­த­மாகும்.

நோன்பு பாவங்­க­ளி­லி­ருந்து பாது­காக்கும் கேட­ய­மென்றால் அதை ரம­ழானில் பயன்­ப­டுத்­தி­விட்டு மற்ற நாட்­களில் தூர வைப்­பது மிகப் பெரும் கைசே­­த­மாகும்.

நோன்­பி­ருப்­பவர் கெட்ட பேச்­சுக்­களைப் பேச வேண்டாம், யாரும் ஏசி­னாலோ சண்­டை­யிட்­டாலோ விட்டுக் கொடுத்து விடுங்கள் என்றால், அந்தப் பண்பை எம்முள் விதைப்­பதே நோன்பின் உயர் இலட்­சி­ய­மாகும். எந்த ஒரு பழக்­கமும் இரு­பத்­தொரு நாட்கள் தொடர் பழக்­க­மானால் நிரந்­தர பழக்­க­மாக மாறி­விடும் என்­பது உள­வியல் சொல்லும் உண்­மை­யாகும்.

எமது நோன்­புகள் 29/30 நாட்­களில் குறித்த பழக்­கங்­களை எமக்குள் விதைக்­க­வில்­லை­யென்றால் எங்­க­ளது ஆன்­மாக்கள் நிச்­சயம் மீள்­ப­ரிசீ­ல­னைக்­குட்­ப­டுத்­தப்­பட வேண்­டிய கட்­டாய நிலைக்கு தள்­ளப்­ப­டு­கி­ன்றன.

நோன்பு என்­பது உட­லுக்­கு­ரிய பயிற்சிக் களம் மட்­டு­மல்ல, ஆன்­மீக ரீதியில் எம்மை பயிற்­று­விக்கும் ஒரு கள­மென்­பது உண­ரப்­ப­டாத வரையில் கடந்து போகும் பதி­னொரு மாதங்கள் போல ரம­ழானும் ஒன்­றா­கவே இருக்கும்.

ரம­ழானில் மிகவும் சிறப்­பா­னது இரவு வணக்­க­மாகும்.ஏனெனில் பூரண விசு­வா­சத்­து­டனும்,நன்­மையை நாடியும் ஒருவன் நின்று வணங்­கினால் அவ­னது முன் செய்த பாவங்கள் மன்­னிக்­கப்­ப­டு­கின்­றன. (புஹாரி)

 எனவே, அதன் உச்சபட்ச பயனை அடைய முயற்­சிக்க வேண்டும். சாதா­ரண நாட்­களை போலன்றி ரம­ழா­னு­டைய இர­வு­களை உயிர்ப்­பாக்­கு­வதில் ஈடு­படல் வேண்டும். எத்­தனை ரக்அத் தொழு­வது ,எங்கே தொழு­வது என்ற சர்ச்­சை­களை தவிர்த்து நபி­களார் காட்­டித்­தந்த வழி முறைப்­படி நீண்ட நேரம் நின்று வணங்­கு­வது பற்றி சிந்­திக்க வேண்டும்.

இரவின் மூன்றாம் பகு­தியில் கீழ்­வா­னத்­திற்கு இறங்கி வரும் ரப்பின் கரு­ணையை பரி­பூ­ர­ணமாய் பயன்­ப­டுத்தும் முக­மாக அந்த நேரத்தில் இஸ்­திஃபார் செய்து உச்ச பயனைப் பெற முயல வேண்டும்.

ரமழான் குர்ஆன் அரு­ளப்­பட்ட உன்­னத மாத­மாகும்.குர்­ஆ­னு­ட­னான தொடர்­பு­களை பலப்­ப­டுத்திக் கொள்ள முனைய வேண்டும். எத்­தனை முறை ஓதினோம்,ஒரு நாளில் எவ்­வ­ளவு ஓதினோம் என்ற வீணான சாத­னை­களை விடுத்து பொரு­ளு­ணர்ந்து, படிப்­பினை பெறும் நோக்கில் குர்ஆன் ஓதப்­படல் வேண்டும்.ஏனோ தானோ­வென்று ஓது­வதை விடுத்து தஜ்வீத் முறை­களைப் பேணி ஓது­வ­தற்கு எம்­மா­லான முயற்­சி­களை எடுத்தல் வேண்டும். தஜ்வீத் தெரி­யா­த­வர்கள் அதை தேடிப் படித்து அந்த முறையில் கொஞ்­ச­மேனும் ஆனால், திருத்­த­மாக ஓது­வ­தற்­கு­ரிய ஏற்­பா­டு­களை செய்ய வேண்டும். ஆகக் குறைந்­தது வழ­மை­யாக தொழு­கையில் ஓதும் பத்து, பதி­னைந்து சூராக்­க­ளை­யா­வது பூர­ண­மாகப் பொரு­ள­றிந்து, உணர்ந்து கற்­ப­தற்கும், ஓது­வ­தற்கும் முயற்சி செய்தல் வேண்டும்.

ரமழான் மாதத்தில் ரஸுல் (ஸல்) அவர்கள் மழைக் காற்றை விட வேக­மாக ஸதக்­காக்­களை செய்யக் கூடி­ய­வ­ராக இருந்­தார்கள். (புஹாரி) நாங்­களோ பெரு­நா­ளைக்கு சேமிக்கக் கூடி­ய­வர்­க­ளாக இருக்­கிறோம். இன்னும் சிலர் தமது சொத்தின், வியா­பார நிலை­யங்­களின் வரு­டாந்த ஸக­்காத்தை கணக்கிட்டு அதை ரம­ழானில் வழங்­கு­ப­வர்­க­ளாக இருக்­கி­றார்கள். அது தவ­றல்ல. ஆனால் ஸகாத்தை கொடுப்­பது மட்டும் ரம­ழா­னுக்­கு­ரிய சதக்­கா­வாக ஆகாது. ஸகா­த்தையும் தாண்டி அந்த கணக்கில் சேராத தொகை­யையும் சதக்­கா­வாக சேர்த்துக் கொள்­ளப்­படல் வேண்டும். எப்­படி எமக்­கு­ரிய பெருநாள் ஆடைகள்,செல­வுகள் பற்றி சிரத்­தை­யெ­டுக்­கி­றோமோ அதை ஏழை­களின் நிலை­யி­லி­ருந்தும் சிந்­தித்துப் பார்க்க வேண்டும். ஸகாத் பெறத் தகு­தி­யா­ன­வர்­களை விண்­ணப்­பங்கள் வாயி­லாக அறிந்து அவர்­க­ளுக்­கான நிதி­களும், பொருட்­களும் இந்தக் காலப்­ப­கு­தியில் விநி­யோ­கிப்­பதில் ஈடு­ப­டு­ப­வர்கள், கேட்க வெட்­கப்­படும்,கேட்கத் தயங்கும், உழைப்­பது போதாமல் உள்­ள­வர்கள்,கடன் பட்­ட­வர்கள் பற்றி கவ­னத்தில் கொள்ளல் வேண்டும்.

ஒரு நோன்­பா­ளியை நோன்பு துறக்கச் செய்­வது நோன்­பா­ளிக்­கு­ரிய கூலியை பெற்­றுத்­தரும் என்­பதில் அக்­க­றை­யெ­டுக்கும் நாம், அவர்கள் நோன்பு நோற்­ப­தற்­கான ஏற்­பா­டு­களைப் பற்றி கவ­ன­மெ­டுக்க வேண்டும். முதல் நாள் பள்­ளியில் கிடைத்த கஞ்­சியை சுட வைத்து  ஸஹ­ருக்கு குடிப்­ப­வர்­களும், சோறும் தேங்காய்ப் பூவையும் உண்டு நோன்பு நோற்­ப­வர்­களும் பெரும் இப்தார் அம­ளி­து­ம­ளியில் கண்­டு­கொள்­ளப்­ப­டு­வ­தில்லை.

இப்தார் என்று வியா­பாரப் பங்­கா­ளிகள்,  படித்­த­வர்கள், ஹாஜி­யார்­மா­ரென பட்­டி­ய­லிடும் நாம், சஊதி பேரீச்சம் பழத்­தையும் பள்ளி கஞ்­சி­யையும் எதிர்­பார்த்­தி­ருக்கும் அடுத்த வீட்டு  ஏழை­களை பட்­டி­யலில் சேர்த்துக் கொள்­வ­தில்லை. எனவே அவ்­வி­ட­யத்­திலும் நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

தர்மம் செய்­வதில் குடும்ப உற­வு­களை முற்­ப­டுத்­து­மாறு சொல்லும் மார்க்கம், சகோ­த­ரனை பகைத்­தி­ருப்­ப­வனின் துஆக்­களை நிரா­க­ரிக்கும் மார்க்­கத்தின் இன்­னு­மொரு இலக்கு குடும்­பங்­க­ளுக்­கி­டை­யி­லான உற­வு­களை பலப்­ப­டுத்­து­வ­தாகும். அதற்கு இந்த ரம­ழானை மிகவும் சிறப்­பாகப் பயன்­ப­டுத்­தலாம். வேலைப் பளு­வில்­லாத ஓய்வு கால­மாக இருப்­பதால் உற­வு­களை தரி­சித்தல், குடும்ப ஒன்று கூடல்­க­ளாக இப்­தா­ரு­டைய நேரங்­களை அமைத்துக் கொள்ளல், குர்­ஆ­னிய, மார்க்க விளக்க அமர்­வு­களை குடும்­பங்­க­ளி­டையே ஒழுங்கு படுத்­துதல் மூலம் குடும்ப உற­வு­களை ரம­ழானில் பலப்­ப­டுத்திக் கொள்­ளலாம்.

பொது­வா­கவே ரம­ழானை அடுத்­து­வரும் நாட்­களில் வைத்­தி­ய­சா­லைகள் முஸ்­லிம்­களால் நிரம்பி வழி­வதை அவ­தா­னிக்க முடி­கி­றது. நீரி­ழிவு அதி­க­ரித்தல், இரத்த அழுத்தம் உயர்­வ­டைதல், வயிறு சம்­பந்­தப்­பட்ட நோய்கள் உக்­கி­ர­ம­டைதல் போன்­றன இதற்கு பெரு­ம­ளவு கார­ண­மாக இருக்­கின்­றது.

நோன்பு துறந்­ததும் எண்­ணெயில் பொரித்த உண­வு­களை உட்­கொள்­ளுதல், அதி­கப்­ப­டி­யான பழச்­சா­றுகள், மென்­பானப் பாவனை, வித­வி­த­மான உண­வு­களை உட்­கொள்ளல் என்­ப­னவே இவற்­றுக்கு முக்­கிய கார­ணங்­க­ளாகும். கிட்டத்தட்ட பன்­னி­ரண்டு மணி நேரங்­க­ளாக ஓய்­வி­லி­ருந்த சிறு­நீ­ரகம், இரைப்பை, குடல் போன்ற உறுப்­பு­க­ளுக்கு திடீ­ரென அதி­கப்­ப­டி­யான வேலை­களை வழங்­கு­வதை தவிர்க்க வேண்டும். ஆரோக்­கி­ய­மான உண­வு­களைக் கொண்ட இப்­தா­ரையும், ஸஹ­ரையும் பழக்­கப்­ப­டுத்திக் கொள்ள வேண்டும். நோன்பு நோற்­கிறோம் எனும் பெயரில் இறை­வனின் அருட்­கொ­டை­யான ஆரோக்­கி­யத்­திற்கு தீங்கு செய்து கொள்­வதைப்  பற்றி அதிக கரி­சனை கொள்ள வேண்டும்.

இப்­தாரின் போது அதி­கப்­ப­டி­யான உணவு உட்­கொள்­வது இரவு வணக்­கத்தில் சோம்­ப­லையும் அலுப்­பையும் ஏற்­ப­டுத்தக் கூடி­யது. அதே போல ஸஹரின் போது அதிகம் உட்­கொள்­வது பகலில் மந்த நிலை­யையும் ஏற்­ப­டுத்தும். அதி­கப்­ப­டி­யான நன்­மை­களை அறு­வடை செய்து கொள்­வதில் சோம்­பலும், மந்த நிலையும் தடை­க­ளாக ஆகு­வ­தி­லி­ருந்து தவிர்ந்து கொள்ளல் வேண்டும்.

சமையல் எனும் பெயரில் முழு நேரத்­தையும் வீட்டுப் பெண்கள் செல­வி­டு­வதை தவிர்த்து குர்ஆன் திலாவத், திக்ர் செய்தல், பாவ­மன்­னிப்பில் ஈடு­ப­டுதல் என நேரத்தை வினைத்­திறன் மிக்­க­தாக பயன்­ப­டுத்­து­வதில் ஆர்வம் காட்ட வேண்டும்.ஏனெனில் ரமழான் என்­பது உண்பதற்கான மாதமல்ல, ஆன்மாவை பலப்படுத்தும் மாதமாகும்.

நோன்பு வந்தது, போனது. ஷவ்வாலுடன் கியாமுல் லைலும் இல்லை, குர்ஆனும் இல்லை என்பது நோன்பு எதிர்பார்க்கும் பயிற்றுவிப்பு அல்ல. குறித்த அந்த பழக்கங்கள் எமக்குள் வேரூன்றப்படல் வேண்டும். பிறை பார்ப்பதில் இருக்கும் ஆர்வம் ரமழான் கடக்கும் போது அதனை முஹாசபா (மீள்பரிசீலனை) செய்வதில் இருத்தல் வேண்டும். இந்த ரமழான் என்னில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தியது? தக்வாவை ஏற்படுத்தியதா? என்னை இறைவனிடம் நெருங்கச் செய்திருக்கிறதா? சுவனத்தை நோக்கி என்னை நகரச் செய்திருக்கிறதா? என சுயபரிசோதனை செய்துவிட்டு ரமழானை வழியனுப்ப முனைவோம்.குறிப்பிட்ட மாற்றங்களை ஏற்படுத்தாமல் எம்மை கடந்து போகும் ரமழானை கையசைத்து வழியனுப்ப வெட்கித்து பாவமன்னிப்பு கோருபவர்களாய் எம்மை நாங்கள் ஆக்கிக் கொள்ள முயற்சிப்போம்.
-Vidivelli