Verified Web

பெண்களை நீதிபதிகளாய் நியமித்தல் தொடர் 2

Rauf Zain

அஷ்ஷெய்க் ரவூப் ஸெய்ன் சர்வதேச பார்வை சஞ்சிகையின் ஆசிரியராக கடமையாற்றுகிறார். இதுவரை சுமார் 40 நூல்களை வெ ளியிட்டுள்ளதுடன் உள்நாட்டு மற்றும் சர்வதேச விவகாரங்கள் தொடர்பான ஆய்வாளராகவும் பேச்சாளராகவும் செயற்பட்டு வருகிறார். 

 

2018-05-10 23:59:03 Rauf Zain

(தொடர்ச்சி)

பொது­வாகப் பெண்­களின் எந்தத் தலை­மை­யையும் (முழுத் தலை­மைத்­துவம் மற்றும் பகுதித் தலை­மைத்­துவம்) ஏற்க முடி­யா­தெனக் கரு­து­கின்­ற­வர்­களே பெண்கள் நீதி­ப­தி­களாய் அமர்­வதை ஆட்­சே­பிக்­கின்­றனர். இதற்கு அவர்கள் ஸூறதுந் நிஸாவின் 34 ஆம் வச­னத்தைப் பிர­தான ஆதா­ர­மாகக் காட்­டு­கின்­றனர். ஆயினும் இந்த வசனம் பெண்­களின் நீதி­பதிப் பத­வியை ஆட்­சே­பிக்­கின்ற அல்­லது அதற்கு எதி­ரான கருத்தைத் தர­வில்லை என்­பதே சம­கால சட்ட அறி­ஞர்­களின் நிலைப்­பா­டாகும். இத்­த­கைய அறி­ஞர்கள் தமது வாதங்­களை மிக வலு­வாக முன்­வைத்­துள்­ளனர்.

இவ்­வ­ச­னத்தை ஆதா­ர­மாகக் கொள்­வோ­ரையும் அதனைப் பல­மாக மறுப்­போரின் வாதங்­க­ளையும் பகுப்­பாய்வு செய்­வது பொருத்­த­மா­ன­தாகும். ஸூறதுந் நிஸா 34 ஆம் வச­னத்தில் வரும் “கவ்வாம்” எனும் சொல் பொறுப்­பாளன், நிரு­வாகி, பாது­கா­வலன் எனும் கருத்­தையே பிர­தி­ப­லிக்­கின்­றது. “காஇமுல் ஹாஜாத்” என்­பது தேவை­களை நிறை­வேற்­று­பவன் எனப் பொருள்­ப­டு­கின்­றது. இந்த வச­னத்­தையும் அதன் முடி­வு­றுத்தும் வச­னங்­க­ளையும் உன்­னிப்­பாக அவ­தா­னித்தால் அது ஆணின் குடும்பப் பொறுப்பையும் குடும்பத் தலை­மைத்­து­வத்­தையும் குறிக்­கின்­றது என்­பது தெளி­வாகும்.

குடும்ப விவ­கா­ரங்­களைக் கையாள்­வதில் ஆணுக்­குள்ள ஆற்­ற­லையும் தகை­மை­யை­யுமே இவ்­வ­சனம் குறிப்­பி­டு­கின்­றது. குடும்­பத்­துக்­காக உழைப்­பது மட்­டு­மன்றி அதன் நலன்­களைக் காப்­ப­தற்கும் ஓர் ஆண்தான் அதிகம் சிர­மப்­ப­டு­கின்றான். இறைத் தூதர் (ஸல்) அவர்­களின் இன்­னொரு ஹதீஸில் “கணவன் தன் குடும்­பத்­திற்குப் பொறுப்­பு­தா­ரி­யாவான். அவ­னது பொறுப்­புக்கள் குறித்து விசா­ரிக்­கப்­ப­டுவான்” என வந்­துள்­ளது.

மொரோக்­கோவில் கடந்த சில ஆண்­டு­க­ளுக்கு முன்னர் கொண்­டு­வ­ரப்­பட்ட முஸ்லிம் தனியார் சட்ட சீர்­தி­ருத்­தத்தில் பெண்கள் நீதி­ப­தி­க­ளாக நிய­மிக்­கப்­ப­டு­வதும் உள்­ள­டங்­கு­கின்­றது. சீர்­தி­ருத்தக் குழுவில் முக்­கிய பங்கு வகித்த, மொரோக்­கோவின் தேசிய அங்­கீ­காரம் பெற்ற பிர­பல அறி­ஞர்­களுள் ஒரு­வ­ரான கலா­நிதி முஸ்­தபா பின் ஹம்ஸா மேற்­போந்த வச­னத்­திற்கு விளக்­க­ம­ளிக்கும் போது குடும்ப வாழ்வில் ஆண்கள், பெண்­களின் பாது­கா­வ­லர்கள் எனும் கருத்­தையே இவ்­வ­சனம் தரு­வ­தாகக் குறிப்­பிட்டார். இலங்கைச் சூழலில் இவ்­வி­டயம் விவா­திக்­கப்­ப­டு­வது குறித்து அவ­ரிடம் விளக்கம் கோரியபோதே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார்.

இமாம் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் தனது தப்­ஸீருல் குர்­ஆனில் அழீம் எனும் பிர­பல விளக்­க­வு­ரையில் இவ்­வ­சனம் இறக்­கப்­பட்ட பின்­ன­ணியை ஆராய்­கின்றார். ஸஃத் பின் ரபீ என்­பவர் தனது மனை­விக்கு ஒரு­முறை ஆத்­தி­ரத்தால் அடித்­து­விட்டார். அவ­ரது மனை­வியோ இவ்­வி­ட­யத்தை இறைத்­தூதர் (ஸல்) அவர்­க­ளிடம் முறை­யிட்டார். நபி­ய­வர்­களோ கண­வனைப் பழி­தீர்க்­கு­மாறு அப்­பெண்­ணுக்குக் கட்­ட­ளை­யிட்டார். இறைத்­தூ­தரின் இந்த நிலைப்­பாடு குறித்து ஸூறதுத் தாஹாவின் 114 ஆவது வசனம் இறங்­கி­யது.

“நபியே ! உமக்கு வஹி மூலம் தீர்ப்­ப­ளிக்­கப்­பட முன்னர் நீர் குர்­ஆனைக் கொண்டு தீர்ப்­ப­ளிப்­ப­தற்கு அவ­ச­ரப்­பட வேண்டாம்” (ஸூறதுத் தாஹா : 114)

இவ்­வ­சனம் இறங்­கி­யதைத் தொடர்ந்து நபி (ஸல்) அவர்கள் அல்­லாஹ்வின் தீர்ப்பு இறங்கும் வரை காத்­தி­ருந்­தார்கள். அப்­போது, “ஆண்கள் பெண்­களின் நிரு­வா­கிகள்” எனும் வச­னத்தை அல்லாஹ் இறக்கி வைத்தான். ஸூறதுந் நிஸாவின் 34 ஆம் வச­னத்தை முழு­மை­யாகப் படிக்கும்போது, அது முழுக்க முழுக்கக் குடும்ப விவ­கா­ரங்­க­ளையும் சட்­டங்­க­ளையும் பேசு­வதைக் கூர்ந்து அவ­தா­னிக்­கலாம்.

 “ஆண்கள், பெண்­களின் நிரு­வா­கிகள் ஏனெனில், அவர்­களில் சில­ரை­விட சிலரை மேன்­மை­யாக்கி வைத்­துள்ளான். ஆண்­கள் ­தங்கள் செல்­வங்­க­ளி­லி­ருந்து பெண்­க­ளுக்­காகச் செலவு செய்­வ­த­னா­லாகும். ஆகவே, நல்­லொ­ழுக்­க­முள்ள பெண்கள் அல்­லாஹ்­வுக்குப் பயந்து, தங்கள் கண­வ­னுக்குப் பணிந்து நடப்­பார்கள். மறை­வா­ன­வற்றைப் பேணிக் காத்துக் கொள்வர். எவ­ரேனும் தமது கண­வ­னுக்கு மாறு செய்வார் என அஞ்­சினால் அவர்­க­ளுக்கு நீங்கள் நல்­லு­ப­தேசம் செய்­யுங்கள். அவர்கள் திருந்­தா­விடில் படுக்­கை­களில் ஒதுக்கி வையுங்கள். அதுவும் பலிக்­கா­விட்டால் இல­கு­வாக அடி­யுங்கள். அவர்கள் உங்­க­ளுக்குக் கீழ்ப்­ப­டி­யா­விட்டால் அவர்­கள்­மீது குற்றம் பிடிக்க எந்த வழி­மு­றை­யையும் தேடா­தீர்கள். நிச்­ச­ய­மாக அல்லாஹ் மிகப் பெரி­ய­வ­னாக இருக்­கின்றான்.” (நிஸ் : 34)

“ஆண்கள் தமது செல்­வங்­க­ளி­லி­ருந்து செலவு செய்­வதன் கார­ண­மாக” என்ற பிர­யோகம் குடும்பத் தலை­மை­யையே குறிக்­கின்­றது. இதுவே ஆண்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட மேல­தி­க­மான படித்­த­ர­மாகும். பெண்ணின் மீதுள்ள பொறுப்­புக்­களைப் போன்றே நல்ல முறையில் அவர்­க­ளுக்குச் சேர வேண்­டி­ய­வை­களும் உள்­ளன. பெண்­களை விட ஆண்­க­ளுக்கு ஒரு படித்­தரம் கூடு­த­லாக உள்­ளது. (பகரா : 228)

குடும்­பத்தின் நிரு­வாகம் ஆணுக்­கு­ரி­யது என்­பதைப் பொது நிரு­வாகம், அர­சியல் தலைமை என்­பன பெண்­க­ளுக்குத் தடை­செய்­யப்­பட்­டுள்­ள­மைக்­கான ஆதா­ர­மாகக் கொள்ள முடி­யாது. அது போன்றே பெண்கள் நீதி­ப­தி­யாக வர­மு­டி­யாது என்­ப­தற்­கான ஆதா­ர­மா­கவோ கொள்ள முடி­யாது. ஏனெனில், மேலே விளக்­கிய வசனம் குடும்ப வாழ்­வுக்கு மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­ட­தாகும்.

இங்கு குடும்ப அமைப்பின் நிரு­வாகம் ஆணுக்கு வழங்­கப்­பட்­டி­ருப்­பினும் பெண்­க­ளுக்கும் குடும்ப விவ­கா­ரங்­களில் பங்­குள்­ளது என்­பதை இஸ்லாம் பல இடங்­களில் வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

குடும்ப நிரு­வாக விவ­கா­ரங்­களில் மனை­வியின் கருத்தும் ஆலோ­ச­னையும் பெறப்­பட வேண்டும். இக்­க­ருத்தைக் குர்ஆன் குழந்­தைக்குப் பால்­குடி மறக்க வைத்தல் தொடர்பில் பின்­வ­ரு­மாறு சுட்­டிக்­காட்­டு­கின்­றது.

“அவர்கள் இரு­வரும் உடன்­பாட்­டுடன் தமக்­கி­டையே செய்த ஆலோ­ச­னை­யின்­படி பிள்­ளைக்குப் பால்­குடி மறக்க வைக்கத் தீர்­மா­னித்தால் அது அவர்கள் மீது குற்­ற­மா­காது.” (பகரா : 233)

பெண் மக்கள் விட­யத்தில் அவர்­க­ளது தாய்­மார்­க­ளிடம் ஆலோ­சனை கேளுங்கள் என்­பது இறைத்­தூ­தரின் கட்­ட­ளை­யாகும். (முஸ்னத் அஹ்மத்)

அதா­வது, பெண் பிள்­ளை­களின் திரு­மண விட­யத்தில் அவர்­களின் தாய்­மார்­க­ளிடம் ஆலோ­சனை கேளுங்கள் என்­பதே இதன் அர்த்­த­மாகும்.
(தொடரும்)
-Vidivelli