Verified Web

நல்லிணக்கம் என்பது மதக்கலப்பு அல்ல

A.J.M.Nilaam

சிரேஷ்ட முஸ்லிம் அரசியல் ஆய்வாளர், எழுத்தாளர்

 

2018-05-04 04:27:52 A.J.M.Nilaam

உலக மக்கள் வெவ்­வேறு சிருஷ்­டி­களை தெய்­வங்­க­ளாக வணங்­கி­ய­போதும் இணை துணை­யற்ற அல்­லாஹ்வே உலக மக்­களின் ஏக தெய்­வ­மாவான். ரப்புல் ஆலமீன் (உல­கோரின் இரட்­சகன்) எனும் குர்ஆன் வச­னமும் ரப்­பினாஸ் (மனி­தனின் இரட்­சகன்) எனும் வச­னமும் இதையே குறிப்­பி­டு­கி­றது.

இன்னீ ஜா இலுன் பில் அர்ழி கலீபா (நான் பூமியில் எனது பிர­தி­நி­தியைப் படைக்கப் போகிறேன்) எனக் கூறிய அல்லாஹ் ஆதம் நபியை சிருஷ்­டித்த பின் அவர்­களின் சந்­த­தி­களை வித்­தி­யா­சங்­க­ளாகப் பர­வ­விட்டு வக பாஇல லித ஆரபூ (நீங்கள் அடை­யாளம் தெரி­யவே வித்­தி­யா­சப்­பட்ட குழுக்­க­ளாக்­கினான்) என்­கிறான்.

அது போன்றே நபி (ஸல்) அவர்­களைப் பார்த்து இன்­னக லமினல் முர்­ஸலீன் அலா ஸிராதிம் முஸ்­தகீம் (நபியே! நிச்­ச­ய­மாக நீர் நேர்­வ­ழியில் இருக்கும் ஓர் தூத­ரே­யாவீர் என்­கிறான்.) வமா அர்­ஸல்­னாக இல்லா ரஹ்­மதன் லில் ஆலமீன் (நபியே! நாம் உம்மை உல­குக்கு ஒரு அருட் கொடை­யா­க­வே­யன்றி அனுப்­ப­வில்லை) எனவும் கூறு­கிறான்.

ஆக, உல­குக்­கான இறை­வ­னாக அல்­லாஹ்வும் உல­குக்­கான அவ­னது தூத­ராக நபி (ஸல்) அவர்­களும் திகழ்­கி­றார்கள். அந்த வகையில் லமஸ்­ஜித இல்­லல்லாஹ் (நிச்­ச­ய­மாக அல்­லாஹ்­வுக்கே பள்­ளி­வாசல் உரித்­தாகும்) என்றால் உலக மக்கள் அனை­வ­ருக்­குமே சொந்தம் என்றே அர்த்­த­மா­கி­வி­டு­கி­றது. அல்­லாஹ்வை இறை­வ­னா­கவும் அவ­னது நபியைத் தூத­ரா­கவும் ஏற்­றுக்­கொண்­டோ­ருக்கு மட்­டுமே சொந்­த­மாக இருக்க முடி­யாது.

என­வேதான் மேற்கு நாடு­க­ளிலும் மத்­திய கிழக்கு நாடு­க­ளிலும் முஸ்­லி­மல்­லா­தோ­ருக்கும் மஸ்­ஜி­து­களின் கத­வுகள் திறந்­து­வி­டப்­பட்­டுள்­ளன. இதன் மூலம் முஸ்­லி­மல்­லாதோர் தஃவத் பெற்று சந்­தேக நிவர்த்தி அடைந்து ஏரா­ள­மாக இஸ்­லாத்தில் இணை­கின்­றனர். மஸ்ஜித் எனும் அரபுச் சொல்­லுக்கு சாஷ்­டாங்கம் செய்யும் இடம் என மட்­டுமே சிலர் அர்த்தம் கற்­பிக்­கி­றார்கள். இத­னா­லேயே தொழா­தவர் வர­மு­டி­யாது என்­கி­றார்கள். ஸஜத என்றால் ஏற்றுக் கொண்டான் என்­பதே பொரு­ளாகும். பஸ­ஜதூ எனும் சொல்லின் மூலம் மலக்­குகள் ஆதம் நபிக்கு சாஷ்­டாங்கம் செய்­தார்கள் என்று கூற முடி­யாது. ஏற்­றுக்­கொண்­டார்கள் என்­பதே அர்த்­த­மாகும். இப்லீஸ் நிரா­க­ரித்தான் என்­ப­தி­லி­ருந்து இது தெளி­வா­கி­றது.

அதன்­படி அல்­லாஹ்­வையும் ரசூ­லையும் ஏற்­றுக்­கொள்ளும் தல­மா­கவே பள்­ளி­வாசல் கரு­தப்­பட வேண்டும். இது தஃவத்­துக்­கான பணி­ம­னை­யாகக் கரு­தப்­பட வேண்டும். சாஷ்­டாங்கம் செய்­வதும் கூட தாழ்ந்து ஏற்றுக் கொள்ளும் செய்­கையே ஆகும். நபி (ஸல்) மதீ­னாவை அண்­மித்­ததும் குபாவில் ஒரு பள்­ளி­வா­சலைக் கட்­டி­யது எதற்­காக கூட்டுத் தொழு­கைக்கு மட்­டுமா? இல்லை தஃவத்­துக்­கா­கவும், மக்கள் தொடர்­புக்­கா­க­வும்தான் என்­பதை நாம் புரிந்­து­கொள்ள வேண்டும்.

அந்த வகையில் முஸ்­லி­மல்­லா­தோரின் தொடர்­பு­க­ளின்றி பள்­ளி­வா­சல்கள் இருக்­கு­மாயின் பள்­ளி­வா­சலின் நோக்கம் முழு­மை­யா­கவே நிறை­வே­றாது தாமே தமக்குள் தொழு­து­கொண்டு தாமே தமக்குள் தஃவத் செய்து கொண்டு மட்­டுமே தற்­போது முஸ்­லிம்கள் இருக்­கி­றார்கள்.

முஸ்­லி­மல்­லா­தோ­ரிடம் அல்­லாஹ்வை ஏக இறை­வ­னாக ஏற்கச் செய்­வதும் அவ­னது தூதரை வழி­காட்­டி­யாக ஏற்கச் செய்­வ­துமே முஸ்­லிம்­களின் அடிப்­படைக் கட­மை­யாகும். இதை முன்­னி­லைப்­ப­டுத்­தியே பள்­ளி­வா­சல்கள் யாவும் இயங்க வேண்டும்.

எனவே, முஸ்­லி­மல்­லா­தோ­ர் பள்­ளி­வாசல்களுக்கு வருது பற்றி உலமா சபை அண்­மையில் வழங்­கி­யுள்ள பத்வா மிகவும் வர­வேற்­கத்­தக்க ஒன்­றாகும்.

1) பள்­ளி­வா­சலின் வளா­கத்தில் முஸ்­லி­மல்­லா­தோ­ருக்குப் பிரத்­தி­யேக இடம் ஒதுக்­கப்­பட வேண்டும்.

2) பள்­ளி­வா­ச­லுக்குள் ஷிர்க் நிக­ழா­மையை உத்­த­ர­வா­தப்­ப­டுத்த வேண்டும்.

3) ஆரம்­பத்­தி­லேயே பள்­ளி­வா­சலின் மகத்­து­வத்­தையும் ஒழுங்­கையும் தெளி­வு­ப­டுத்த வேண்டும்.

4) ஆண்/ பெண் ஆடைகள் ஒழுங்­காக இருக்க வேண்டும்.

5) பெண்­ணுக்குப் பிரத்­தி­யேக ஆடை வேண்டும்.

6) பாத­ணி­யோடு பள்­ளிக்குள் நுழை­வது தடை­செய்­யப்­பட வேண்டும்.

7) போதை­யோடு வரு­வது தடுக்­கப்­பட வேண்டும்.

8) தொழு­கைக்கோ ஜும்­ஆ­வுக்கோ இடை­யூ­றாக அமை­யக்­கூ­டாது.

9) இப்­தாரின் போதான வருகை தடுக்­கப்­ப­ட­வேண்டும்.

என 9 தீர்­மா­னங்கள் எடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

ரம­ழா­னற்ற நாட்­க­ளிலும் முஸ்லிம் பெண்­களை பள்­ளி­வா­ச­லுக்குள் அனு­ம­திக்க வேண்டும். முஸ்­லி­மல்­லாத ஆண்/ பெண் இரு­பா­லா­ருக்கும் கூட தடை இருக்கக் கூடாது என்றும் கூட உலமா சபை குறிப்­பிட்­டி­ருக்­கி­றது.

பள்­ளி­வ­ளா­கத்தில் பிரத்­தி­யேக இடம் என்றால் என்ன? நிரந்­த­ர­மான இட­மா? வந்து போவ­தற்கு மட்­டு­மான இட­மா­கவே இருக்க வேண்டும். பள்­ளி­வா­ச­லுக்குள் ஷிர்க் நிக­ழா­மையை எப்­படி உத்­த­ர­வா­தப்­ப­டுத்­து­வது? சிலை வணக்கம் மட்­டுமே ஷிர்க் அல்­லவே. வாயால் அல்­லது எண்­ணத்தால் நிகழும் ஷிர்க்கும் ஷிர்க்­கு­தானே? வாயால் கூறப்­ப­டு­வதைத் தடுக்­கப்­போனால் குழப்­பம் எண்­ணத்தில் ஏற்­படும் ஷிர்க்­கைத்­த­டுக்க முடி­யாதே. ஆரம்­பத்­தி­லேயே மகத்­து­வத்­தையும் ஒழுங்­கையும் தெளி­வு­ப­டுத்­தினால் விஷயம் சரியா? அவை பேணப்­படும் என்­ப­தற்கு என்ன உத்­த­ர­வாதம்.

ஆண்/ பெண் ஆடைகள் ஒழுங்­காக அமைய வேண்டும் என்­பதும் பெண்­ணுக்குப் பிரத்­தி­யேக ஆடை வேண்டும் என்­பதும் பாத­ணி­யோடு பள்­ளி­வா­ச­லுக்குள் நுழைக்­கூ­டா­தென்­பதும் போதை­யோடு வரு­வது தடுக்­கப்­பட வேண்டும் என்­பதும் முஸ்­லி­மான ஆண்/ பெண்­ணுக்கும் முஸ்­லி­மற்ற ஆண்/ பெண்­ணுக்கும் பொது­வா­ன­வையே ஆகும்.

தொழு­கைக்கோ ஜும்­ஆ­வுக்கோ முஸ்­லி­மல்­லா­தோரின் வருகை இடை­யூ­றாக அமை­யக்­கூ­டாது என்­பது சரிதான். இப்­தாரின் போதான முஸ்­லி­மல்­லா­தோரின் வருகை தடுக்­கப்­பட வேண்டும் எனும் அணு­கு­முறை இல்­லாமல் அப்­போது வரும் முஸ்­லி­மல்­லா­தோரை உப­ச­ரிக்க வேண்டும்.

ஆக, முஸ்லிம் ஆண்­களைப் போல் பெண்­களும் அனு­தி­னமும் பள்­ளி­வா­ச­லுக்கு வரலாம் என மட்­டு­மல்ல முஸ்­லி­மல்­லாத ஆணும் பெண்ணும் கூட பள்­ளி­வா­ச­லுக்குள் வரலாம் என்றே உலமா சபை கூறு­கி­றது. முஸ்­லி­மல்லா தோருக்கும் போல் முஸ்லிம் பெண்­க­ளுக்கும் பிரத்­தி­யேக இடம் ஒதுக்­கப்­ப­டுமா?

பள்­ளி­வா­சல்­க­ளுக்குள் பெண்கள் வரு­வது தடை­யில்லை என்­பதால் தான் ரமழான் இரவு தொழு­கையில் அனு­ம­திக்­கப்­பட்டு வரு­கி­றார்கள். தராவீஹ் எனும் சுன்­னத்­தான தொழு­கைக்கே அனு­மதி என்றால் பர்­ழான தொழு­கை­க­ளுக்கு அனு­மதி அளித்­துத்­தானே ஆக வேண்டும். நபி (ஸல்) காலத்தில் பெண்கள் பள்­ளி­வா­சல்­க­ளுக்கு வரத் தடை­யி­ருக்­க­வில்லை. கலீபா உமர் (ரழி) அவர்­களே ஆண்/ பெண் கலப்பு நேரா­த­வாறு பெண்ணின் வரு­கையைத்  தடுத்­தி­ருக்­கி­றார்கள். ஆக பர்­ழான தொழு­கைக்கே பெண்கள் பள்­ளி­வா­சல்­க­ளுக்கு வரு­வது தடுக்­கப்­பட்­டி­ருக்­கையில் பின்­னாளில் வந்த ஆலிம்கள் ரம­ழானில் மட்டும் இரவில் சுன்­னத்­தான தொழு­கையைப் பள்­ளி­வா­ச­லுக்கு வந்து தொழ பெண்­களை அனு­ம­தித்­தி­ருக்­கி­றார்கள்.

ஆண்/ பெண் கலப்பு பெண்ணின் மஹ­ர­மற்ற வருகை, பெண்­ணுக்­கான சுய பாது­காப்பு, வீட்டுப் பொறுப்­புகள், மாத­விடாய், பிர­சவ ருது ஆகி­ய­வற்­றா­லேயே உமர் (ரழி) பெண்கள் பள்­ளி­வா­ச­லுக்கு வரு­வதைத் தடுத்­தி­ருக்­கலாம். இது அவர்­களின் பத்வா எனும் மார்க்கத் தீர்ப்பு ஆகும். அத்­தோடு இது குர்ஆன், ஹதீஸின் அடிப்­ப­டை­யி­லான இஜ்­தி­ஹா­தாகவும் இருக்­கி­றது.

ஆக, கால சூழ­லுக்கும் தன்­மை­க­ளுக்கும் ஏற்ப முடி­வு­களை எடுக்கும் அணு­கு­மு­றையை இஸ்லாம் அங்­கீ­க­ரித்­தி­ருக்­கி­றது என்­பது இதி­லி­ருந்து தெளி­வா­கி­றது. கற்ற கிதா­பு­க­ளிலும் எழு­திய அறி­ஞர்­க­ளி­டமும் மட்­டுமே தங்­கி­யி­ருந்தால் கால­சூழல் மாற்­றத்­துக்கும் தன்­மை­க­ளுக்கும் ஏற்­ற­படி முடி­வு­களை எடுக்கும் திற­னாய்வை இஸ்­லா­மிய அறி­ஞர்­களால் பெற்றுக் கொள்­ள­மு­டி­யாது போய்­விடும். அல்­லாஹ்வின் பள்­ளி­வா­ச­லி­லி­ருந்து பெண்­களை ஒதுக்­கு­வது அல்­லாஹ்­வி­ட­மி­ருந்து ஒதுக்­கு­வது போன்­ற­தே­யாகும். அத­னால்தான் நபி (ஸல்) அவர்­களின் காலத்­திலும் அபூ­பக்கர் (ரழி) அவர்­களின் காலத்­திலும் பெண்­களும் பள்­ளி­வா­ச­லுக்­கு­வந்து போனார்கள். உமர் (ரழி) தக்க கார­ணத்­துக்­காகத் தான் அதைத் ­த­டுத்­தி­ருக்­கி­றார்கள்.

தற்­போ­தைய நமது நாட்டின் அசா­தா­ரண சூழ­லின்­படி ரமழான் இர­வு­க­ளி­லும்­கூட பெண்கள் பள்­ளி­வா­சல்­க­ளுக்கு வர­வேண்­டுமா? எனும் நிலையே காணப்­ப­டு­கி­றது. முஸ்­லிம்கள் சிதறி வாழு­கி­றார்கள். அதுவும் பெரும்­பான்மைச் சமூகம் சூழ அடைந்­து­வ­ளைந்த நிலையில் வாழ்­கி­றார்கள். இந்­நி­லையில் பள்­ளி­வா­ச­லுக்­கா­யினும் பெண்­களின் நட­மாட்டம் பாது­காப்­பற்­ற­தே­யாகும்.

பெண்­ணுக்கு பாது­காப்பும் சுய­பா­து­காப்பும் இருக்கும் பட்­சத்தில் அவ­ளுக்­கு­ரிய சுகா­தாரக் காப்­புடன் பள்­ளி­வா­சலில் பெண்­க­ளுக்கு மட்­டு­மான இடத்தில் தொழுது கொள்­ளலாம். அவை கைகூ­டாத நிலை நீடிக்கும் வரை கலீபா உமர் (ரழி) அவர்­களின் தீர்­மா­னத்தை ஏற்று அமுல்­ப­டுத்­து­வதே உசி­த­மாகும். இதை பெண்­க­ளுக்கு காட்­டப்­படும் பாகு­பாடு என யாரும் கரு­தத்­தே­வை­யில்லை. ஏனெனில், இஸ்லாம் பிரச்­சி­னைக்குத் தீர்வு கண்­டுள்­ளது.

இஸ்­லாத்­தின்­மீது நல்­லெண்ணம் கொண்­டோரும் இஸ்­லாத்தை அறிய விரும்­பு­வோரும் நற்­குணம் படைத்­தோ­ரு­மாக முஸ்­லி­மல்­லாத சிலர் இப்­போதும் கூட குறிப்­பிட்ட சில பள்­ளி­வா­சல்­க­ளுக்கு வருகை தரத்தான் செய்­கி­றார்கள். இவர்­க­ளைப்போல் முஸ்­லி­மல்­லாத எல்­லோ­ருமே இருக்­கப்­போ­வ­தில்லை.

இஸ்­லாத்­தின்­மீது காழ்ப்­பு­ணர்ச்­சியும் முஸ்­லிம்­க­ளின்­மீது வைராக்­கி­யமும் கொண்ட முஸ்­லி­மல்­லாத சில­ரும்­கூட அவர்­க­ளைப்போல் வந்து அழிவு செய்­ய­மாட்­டார்கள் என்­ப­தற்கு என்ன உத்­த­ர­வாதம்? பள்­ளி­வா­சல்­களை உடைப்­ப­வர்கள், நெருப்பு வைத்து எரிப்­ப­வர்கள், பள்­ளி­வா­சல்­க­ளுக்குள் இருக்­கு­மிடம் கிடைத்தால் என்ன செய்­வார்கள்.

கிரா­மங்­கள்­தோறும் சிறு சிறு குடி­யாட்­டங்­க­ளாக முஸ்­லிம்கள் வாழு­கையில் சிறிய பள்­ளி­வா­சல்­க­ளுக்­குள்ளும் பேரி­ன­வா­திகள் திர­ளா­கப்­பு­குந்து கொண்டு இன,மத நல்­லி­ணக்கம் எனும் பெயரால் அவர்­களின் மதத்தை தஃவா செய்தால் என்­னாகும். கருத்துப் பரி­மாற்றம், விவாதம் என்­றெல்லாம் நிகழ்ந்தால் என்­னாகும். விதிக்­கப்­பட்ட நிபந்­த­னை­க­ளுக்கு அவர்கள் உட்­ப­டு­வார்கள் என்­பது என்ன நிச்­சயம் எனக் கேட்­கிறேன்.

தென்­னக்­கும்­ப­ுரை­யிலும் தஸ்­க­ரை­யிலும் நிகழ்ந்­த­வற்றை ஆதா­ரங்­க­ளாக எடுத்துக்கொண்டிருக்க வேண்டும்.

மத நல்லிணக்கம் என்றால் என்ன? அவரவர் மதத்தை அதனதன் முறைப்படி நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்வதேயாகும். இதையே உங்களுக்கு உங்கள் மார்க்கம். எனக்கு எனது மார்க்கம். எனக் குர்ஆன் குறிப்பிடுகிறது. எனினும் பேரினவாதிகள் எங்கள் மார்க்கமே உங்களுக்கும் என்கிறார்கள். மார்க்கத்தில் பலவந்தம் இல்லை எனக் குர்ஆன் கூறுகிறது. சில முஸ்லிம்கள் மது அருந்தி பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த ஒருவரைத் தாக்கியதால் அவர் இறந்ததாலேயே திகன அழிவு ஏற்பட்டதாம். அண்மையில் மூன்று முஸ்லிம் இளைஞர்கள் திருடப்போய் அவர்களில் ஒருவர் பெரும்பான்மைச் சமூகத்தினரிடம் பிடிபட்டு வாக்குமூலம் வழங்குவது கைப்பேசியில் காட்சிப்படுத்தப்பட்டது.

அண்மையில் வெள்ளவத்தைப் பகுதியில் தனியார் கல்லூரியில் நடத்தப்பட்ட சித்திரைப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது சில முஸ்லிம் பெண்கள் பலூன் நடனமாடிய விவகாரம் வெளியாகியிருக்கிறது. கடத்தலிலும் போதைப்பொருள் விற்பனையிலும்கூட முஸ்லிம்களின் பெயர்கள் பிரஸ்தாபிக்கப்படுகின்றன முஸ்லிம் கைதிகளின் தொகை அதிகரிக்கிறது. இந்நிலையில் ஆலிம்களின் பொறுப்புகள் அதிகமாகும். 
-Vidivelli