Verified Web

இலங்கையின் ஊடக சுதந்திரம் அர்த்தமுள்ளதாகுமா

2018-05-03 01:15:19 Administrator

 

உலக ஊடக சுதந்­திர தினம் இன்று கொண்­டா­டப்­ப­டு­கி­றது. அத்­துடன் ஊடக சுதந்­திர தினத்தின் 25 ஆவது வருட பூர்த்­தியும் இன்­றாகும். இவற்றை முன்­னிட்டு யுனெஸ்கோ நிறு­வனம் கானா நாட்­டுடன் இணைந்து ஏற்­பாடு செய்­துள்ள விசேட நிகழ்­வுகள் இன்று அந்­நாட்டில் இடம்­பெ­று­கின்­றன.

இம்­முறை ஊடக சுதந்­திர தின நிகழ்­வுகள்  'ஊடகம், நீதி மற்றும் சட்டம் ஒழுங்கைப் பாது­காத்தல்' எனும் கருப்­பொ­ருளில் இடம்­பெ­று­கின்­றன.

இலங்­கை­யா­னது ஊடக சுதந்­தி­ரத்தில் முன்­ன­ரை­விட சற்று முன்­னே­றி­யுள்­ள­தாக சர்­வ­தேச தரப்­ப­டுத்­தல்கள் கூறு­கின்­றன. 2018 ஆம் ஆண்­டுக்­கான சர்­வ­தேச ஊடக சுதந்­திரம் தொடர்­பான சுட்டெண் கடந்த வாரம் எல்­லை­யற்ற ஊட­க­வி­ய­லா­ளர்கள் அமைப்­பினால் வெளி­யி­டப்­பட்­டது. இதற்­க­மைய 2017 ஆம் ஆண்­டிலும் பார்க்க 2018 ஆம் ஆண்டில் இலங்கை முன்­னேற்றம் கண்­டுள்­ளது.

2017 ஆம் இலங்கை இந்த சுட்டெண் பட்­டி­யலில் 141 ஆவது இடத்தில் இடம்­பெற்­றி­ருந்­தது. தற்­போது இலங்கை இதில் 131 ஆவது இடத்­திற்கு முன்­னே­றி­யுள்­ளது.

இந்த பட்­டி­யலில் முத­லா­வது இடத்தில் நோர்­வேயும் இரண்டாம் இடத்தில் சுவிட்­ஸர்­லாந்தும் இடம் பெற்­றுள்­ளன.  அந்­தந்த நாடு­களில் நிலவும் ஊடக சுதந்­திர நிலை­மைக்கு அமைய நாடுகள் வெள்ளை, மஞ்சள், செம்­மஞ்சள், சிவப்பு, கறுப்பு என்ற 5 பிரி­வு­களில் உள்­ள­டக்­கப்­ப­டு­கின்­றன.

சிறந்த ஊடக சுதந்­திரம் உள்ள நாடுகள் வெள்ளை நிற வல­யத்­திற்குள் உள்­வாங்­கப்­ப­டு­கின்­றன. இதில் 17 நாடுகள் இடம்­பி­டித்­துள்­ளன.

ஊடக சுதந்­திரம் ஓர­ள­வுக்கு சிறப்­பா­க­வுள்ள நாடுகள் மஞ்சள் நிற வல­யத்­திற்குள் உள்­வாங்­கப்­ப­டு­கின்­றன. இம்­முறை இந்தப் பட்­டி­யலில் அமெ­ரிக்கா மற்றும் பிரிட்டன் உள்­ளிட்ட 30 நாடுகள் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன.

செம்­மஞ்சள் நிறத்­திற்­குட்­பட்ட வல­யத்தில் இடம்­பெற்ற நாடுகள் ஊடக சுதந்­திரம் தொடர்­பான பிரச்­சினை நில­வு­கின்ற நாடு­க­ளாகும். இதில் ஜப்பான், பிரேசில், இஸ்ரேல், பூட்டான், நேபாளம் உள்­ளிட்ட 64 நாடுகள் இடம்­பெற்­றுள்­ளன.​

சிவப்பு வல­யத்­திற்­குட்­பட்ட நாடுகள் என்­பது ஊடக சுதந்­திரம் மிகச் சிறப்­பாக இல்லை என்­பதைக் குறிக்­கின்­றன. ரஷ்யா, இந்­தியா, மாலை­தீவு உள்­ளிட்ட நாடுகள் இதில் இடம் பெற்­றுள்­ளன.

ஊடக சுதந்­திரம் மிகவும் மோச­மாக காணப்­படும் நாடுகள் கறுப்பு வல­யத்­திற்­குட்­பட்­ட­தாகும்.இதில் வட­கொ­ரியா இடம் பெற்­றுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

இலங்­கை­யான ஊடக சுதந்­திர சுட்­டெண்ணில் முன்­னே­றி­யுள்­ளதை வர­வேற்­ப­தாக ஐரோப்­பிய ஒன்­றியம் தெரி­வித்­துள்­ளது. எனினும், கடந்த காலங்­களில் ஊடக அடக்­கு­முறை நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­ட­வர்கள் தண்­ட­னை­களில் இருந்து தப்பிக் கொள்ளும் நிலைமை தொடர்­வது, தடுக்­கப்­பட வேண்டும் என்றும் ஐரோப்­பிய ஒன்­றியம் வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் இந்த வலி­யு­றுத்தல் இலங்கை அர­சாங்­கத்­தினால் நிச்­சயம் கருத்திற் கொள்­ளப்­பட வேண்­டி­ய­தாகும். 2015 ஆட்சி மாற்­றத்­திற்குப் பின்னர் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு எதி­ரான தாக்­கு­தல்கள், அச்­சு­றுத்­தல்கள் கடு­மை­யாகக் குறை­வ­டைந்­துள்ள போதிலும் கடந்த ஆட்சிக் காலத்தில் கொல்­லப்­பட்ட, காணா­ம­லாக்­கப்­பட்ட, தாக்­கப்­பட்ட ஊட­க­வி­ய­லா­ளர்கள் தொடர்­பான விசா­ர­ணைகள் இது­வரை பூர்த்தி செய்­யப்­ப­ட­வில்லை. இது விட­யத்தில் இந்த அர­சாங்கம் அளித்த வாக்­கு­று­திகள் காப்­பாற்­றப்­பட வேண்டும். இன்றேல் ஊடக சுதந்திரம் என்பதன் அர்த்தம் தொடர்ந்தும் இலங்கையில் கேள்விக்குறியாகவே அமைந்துவிடும்.

இது தொடர்பில் நல்லாட்சி அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தி ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுடன் தொடர்புடைய அனைவருக்கும் விரைந்து தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.

-Vidivelli