Verified Web

முஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்

2018-05-02 02:31:28 Administrator

குமாரி ஜெயவர்தனா எழுதிய "இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்தம் கருதி விடிவெள்ளி வாசகர்களுக்காக தருகின்றோம்.

இலங்­கையில் ஏற்­பட்ட மக்­க­ளுக்­கி­டை­யி­லான பிரச்­சி­னை­க­ளுக்கு வர்த்­த­கத்தில் நில­விய போட்டி ஒரு முக்­கிய அம்­ச­மாகும். 1875–1900 கால­கட்­டத்தில் பிரித்­தா­னிய, வட தென்­னிந்­திய முத­லீ­டுகள் இலங்­கையின் கால­னித்­துவப் பொரு­ளா­தா­ரத்தைக் கட்­டுப்­ப­டுத்­தின. இலங்­கையில் சிங்­கள, தமிழ், முஸ்லிம் மக்­க­ளி­டையே பூர்ஷ்வா வகுப்­பொன்றும் எழுச்­சி­யுற்­றது. முஸ்லிம் பூர்ஷ்­வாக்கள் வியா­பா­ரத்­தி­லேயே முதன்­மை­யாக ஈடு­பட்­டனர். தமிழ் பூர்ஷ்­வாக்கள் தோட்டச் செய்கை, உத்­தி­யோகம் என்­ப­வற்­றி­லி­ருந்து பணத்தைப் பெற்­றனர். சிங்­க­ள­வர்கள் சாராயக் குத்­தகை, சுரங்­கத்­தொழில், தோட்டச் செய்­கையில் செல்­வத்தைப் பெற்­றனர். எனினும் இலங்கைத் தமி­ழரும் சிங்­க­ள­வரும் பிரித்­தா­னியர், போரா, சிந்­திகள், பார்­சிகள், செட்­டிகள், முஸ்லிம் போன்­றோ­ருடன் ஏற்­று­மதி, இறக்­கு­மதி மொத்த வர்த்­த­கத்தில் போட்­டி­யி­டு­ம­ளவு பலம் வாய்ந்­தி­ருக்­க­வில்லை. எனவே, பொரு­ளா­தார ரீதி­யாகப் பல­வீ­ன­மா­யி­ருந்த இவ்­விரு பிரி­வி­னரும், அர­சாங்க சேவை­யையும் ஏனைய தொழில்­க­ளையும் பெற்­றுக்­கொள்­வ­தற்­காகப் போட்­டி­யிட்­டனர். எவ்­வா­றா­யினும் சிங்­கள சிறு வியா­பா­ரிகள் ‘அந்­நிய’ வியா­பா­ரி­க­ளுக்கு எதி­ராகத் தமது ஆத்­தி­ரத்தை வெளிக்­காட்டும் ஒரு குழு­வாக மாறினர்.

இலங்கைச் சிங்­கள, தமிழ் தொழிற்­றுறை உரி­மை­யா­ளர்­களின் பொரு­ளா­தார பல­வீ­னத்தை பேர்­குசன் வழி­காட்­டி­யி­லி­ருந்து பெறப்­பட்ட பின்­வரும் தர­வு­களால் அறி­யலாம். 1863 இல் 33 நபர் ஏற்­று­மதி, இறக்­கு­ம­தி­யா­ள­ரா­கவும் முதன்­மை­யான வர்த்­த­கர்­க­ளா­கவும் இருந்­தனர். இவர்­களில் 27 நபர் ஐரோப்­பியர், 4 நபர் பம்­பாயைச் சேர்ந்த இந்­தி­யர்கள், இலங்­கையர் பி.பி.பெர்னாண்டோ என்­ப­வரும் யாழ்ப்­பா­ணத்து ஈ.நன்­னித்­தம்பி ஆகிய இரு­வ­ருமே. 1880 இல் 54 நபரில் 50 பிரித்­தா­னியர், பம்­பாயைச் சேர்ந்த பார்­சிக்­காரர் இருவர், சார்ள்ஸ் டி.சொய்சா என்­ப­வரும் ஜேரோனிஸ் பீரிஸ் என்­ப­வ­ருமே இரு சிங்­க­ளவர். உள்­நாட்டு வர்த்­த­கத்தில் புறக்­கோட்டை அரிசி, புடைவை வியா­பா­ரத்தின் பெரும்­ப­குதி 73 நாட்டுக் கோட்டைச் செட்டிக் கம்­ப­னி­களில் தங்­கி­யி­ருந்­தது. பல சரக்கு விற்­ப­னையில் 35 முஸ்லிம் வர்த்­த­கர்கள் பங்­கு­பற்­றினர். இவ்­வ­ரு­டத்தில் தமிழ் அல்­லது சிங்­களக் கம்­ப­னிகள் ஒன்­றா­வது இல்லை. 1880 இல் புறக்­கோட்டை வர்த்­த­கத்தில் 86 செட்­டியார் கம்­ப­னி­களும், 64 முஸ்லிம் கம்­ப­னி­களும், முதன்­மை­பெற்­றன. எச்.டொன் கரோலிஸ் (தள­பா­டங்கள்), என்.எஸ்.பெர்­னாண்டோ (உப­க­ர­ணங்கள்) போன்ற விரல்­விட்டு எண்­ணக்­கூ­டிய சிங்­கள வியா­பா­ரி­களே காணப்­பட்­டனர். 1890 இல் குஜ­ராத்தைச் சேர்ந்த புதிய முஸ்லிம் வர்த்­தகக் குழு­வினர் போரா, கோஷா, மேமன் போன்றோர் ஏற்­று­மதி, இறக்­கு­மதி வர்த்­த­கத்தில் இடம்­பெற்­றனர். இவர்­களே புதிய வியா­பார முக்­கி­யஸ்­தர்­க­ளாக மாறி பிரித்­தா­னி­யரின் கூட்டுப் பங்­கு­தா­ரர்­க­ளா­கவும் அமைந்­தனர்.

 

முஸ்லிம் எதிர்ப்புப் பிர­சா­ரமும் 1915 கல­வ­ரமும்

வியா­பா­ரத்தில் காணப்­பட்ட இத்­த­கைய அந்­நிய ஆதிக்­கத்­திற்கு எதி­ரான வெறுப்பு சிங்­கள வியா­பா­ரி­க­ளிடம் வெளிப்­பட்­டது. இத்­த­கைய பகைமை அந­கா­ரிக தர்­ம­பா­ல­வினால் ‘பம்பாய் வணி­கர்கள்’, ‘தென்­னிந்­திய தெருப்­பொ­றுக்­கியர்’ என வர்­ணிக்­கப்­பட்ட சக­ல­ருக்கும் எதி­ராக இருந்­தது. ஆயினும் பகைமை குறிப்­பாக நகர, கிராமப் பகு­திகள் எங்கும் பரந்து காணப்­பட்ட, வியா­பா­ரி­க­ளுக்கு எதி­ரா­ன­தா­கவே அமைந்­தது. சிங்­கள, முஸ்லிம் வியா­பா­ரிகள், கடைக்­காரர் ஆகி­யோ­ருக்கு இடையில் தீவிரப் போட்டி நில­வி­யது மாத்­தி­ர­மன்றி, 1915 இல் நில­விய போர்க்­காலப் பற்­றாக்­குறை, பண­வீக்கம் ஆகி­ய­வற்றால் அத்­தி­யா­வ­சி­யப்­பொ­ருட்கள் விலை அதி­க­ரித்­த­போது முஸ்லிம் கடைக்­கா­ர­ருக்கு எதி­ராக நுகர்­வோரின் பகையும், தூண்டி விடப்­பட்­டது.

20 ஆம் நூற்­றாண்டின் முற்­ப­கு­தியில் ‘அந்­நிய வர்த்­த­கர்கள்’ “மண்ணின் மைந்­தர்­க­ளுக்கு” எதி­ரிகள் என்ற கருத்து சிங்­களப் பத்­தி­ரிகை உலகில் பிர­பல்­ய­மாக்­கப்­பட்­டது. இக்­க­ருத்தின் முக்­கிய பிர­சா­ர­கர்­களில் ஒருவர் அந­கா­ரிக தர்­ம­பால. அவ­ரது தகப்­ப­னா­ரா­கிய எச்.டொன் கரோலிஸ் புறக்­கோட்­டையில் கடை வைத்­தி­ருந்த மிகச் சில சிங்­க­ள­வர்­களுள் ஒருவர். பல சிங்­கள எழுத்­தாளர், நாட­கா­சி­ரியர், பத்­தி­ரி­கை­யாளர், பௌத்த பிக்­குகள் ஆகியோர் சிங்­கள அர­சர்­களின் வீர­தீரச் செயல்கள் பற்­றியும், அந்­நியப் படை­யெ­டுப்­பு­களை வெற்றி கொண்­ட­மையை நினைவு கூர்ந்தும், அத்­துடன் அந்­நிய வியா­பா­ரி­களைக் கண்­டித்தும், அவர்­க­ளது கடை­களைப் பகிஷ்­க­ரிக்கும் படியும் சிங்­க­ள­வரை வற்­பு­றுத்­தியும் எழு­தினர். 1900 ஆம் ஆண்டு தர்­ம­பாலா பின்­வ­ரு­மாறு எழு­தினார்.

“நாட்டின் செல்வ வளத்தை அந்­நி­யர்கள் எடுத்துச் செல்­லும்­போது எமது ‘மண்ணின் மைந்­தர்­க­ளுக்கு’ போக்­கிடம் எங்கே? இந்­நாட்டில் வந்து குடி­யே­றியோர் திரும்பிச் செல்­வ­தற்கு அவர்­க­ளுக்கு நாடு உண்டு. ஆனால், சிங்­க­ளவர் செல்­வ­தற்கு எந்த நாடும் இல்லை. அந்­நி­யர்கள் குதூ­க­லிக்கும் போது மண்ணின் மைந்­தர்கள் இழப்­புக்கு ஆளா­வது என்ன நியாயம்? இங்­கி­லாந்­துக்கு இர­வலர் வரு­வதை தடுப்­ப­தற்கு அந்­நியர் தடைச்­சட்டம் ஒன்று அந்­நாட்டில் உள்­ளது. ஆனால் உத­வி­யற்ற, அப்­பாவிச் சிங்­களக் கிரா­ம­வாசி அவ­ரது மூதா­தை­ய­ரது நாட்டின் செல்­வத்தைத் திருடும் அந்­நிய மோச­டி­யா­ள­ருக்கு இரை­யா­கின்றான்”

இக்­கா­லத்தில் தர்­ம­பா­லவின் கண்­ட­னங்கள் குறிப்­பாக முஸ்லிம் வியா­பா­ரி­க­ளுக்கு எதி­ரா­கவே அமைந்­தன. 1915 இல் அவர் எழு­தினார்.

“அந்­நி­ய­ரான முக­ம­தியர் ஷைலொக்­கிய வழி­மு­றை­களால் யூதர்கள் போன்று செல்­வந்­தராய் மாறினர். 2358 வரு­டங்­க­ளாக அந்­நிய முற்­று­கை­களில் இருந்து நாட்டைக் காப்­ப­தற்­காக இரத்­தத்தை ஆறுபோல் பெருக்­கிய மூதா­தை­யரைக் கொண்ட மண்ணின் மைந்­த­ரான சிங்­க­ளவர்  பிரித்­தா­னி­யரின் கண்­களில் நாடோ­டி­களாய்த் தெரி­கின்­றனர். தென்­னிந்­திய முக­ம­தியர் இலங்­கைக்கு வந்து, வியா­பா­ரத்தில் எத்­த­கைய அனு­ப­வ­மு­மற்ற, உதா­சீனம் செய்­யப்­பட்ட கிரா­ம­வா­சியைக் காண்­கிறான். இதன் விளைவு முக­ம­தியன் முன்­னே­று­கிறான். ‘மண்ணின் மைந்தன்’ பின்­தள்­ளப்­ப­டு­கிறான்.

சிங்­கள குட்டி பூர்ஷ்­வாக்­களின் வேறு எழுத்­துக்­களும் சிங்­க­ள­வரைத் தூண்­டி­வி­டு­வ­ன­வாக அமைந்­தன. ‘சிங்­கள ஜாதிய’ என்ற பத்­தி­ரிகை ஆசி­ரி­ய­ராக இருந்த பிய­தாச சிறி­சேன எனும் நாவ­லா­சி­ரியர் “கரை­யோர முஸ்­லிம்­க­ளி­டமும் கொச்­சிக்­கா­ர­ரி­டமும் அந்­நி­ய­ரி­டமும் கொடுக்கல், வாங்கல் வைத்­தி­ருக்க வேண்டாம்” எனச் சிங்­க­ள­வரை வற்­பு­றுத்­தினார். சிங்­கள தின­ச­ரி­யான ‘லக்­மின’ கரை­யோர முஸ்­லிம்­களைப் பற்றிப் பின்­வ­ரு­மாறு கூறி­யது, “வெறுக்­கத்­தக்க இக்­கும்­பலை நாட்­டி­லி­ருந்து வெளி­யேற்­று­வ­தற்குத் தகுந்த திட்டம் தீட்­டப்­ப­டுதல் வேண்டும். ‘தின­மின’ “முஸ்­லிம்கள் இங்கு வேரூன்­றிய எம் பகை­வர்கள்” எனக் கண்­டித்­தது. இத்­த­கைய கருத்­துக்­களை வெளி­யிட்ட  பத்­தி­ரி­கை­களின் ஆசி­ரி­யர்கள் சிலர் மேல் வழக்குத் தொட­ரப்­பட்­ட­துடன் ‘சிங்­கள– ஜாதிய’ என்ற பத்­தி­ரி­கையும் தர்­ம­பா­லவின் ‘சிங்­கள– பௌத்­த­ய’வும் தடை செய்­யப்­பட்­டன.

1915 ஆம் ஆண்டில் இத்­த­கைய ஒரு பின்­ன­ணி­யி­லேயே சிங்­க­ள­வ­ருக்கும் முஸ்­லிம்­க­ளுக்கும் இடையே முத­லா­வது கல­வரம் நாட்டின் பல பகு­தி­க­ளிலும் நடை­பெற்­றது. சமய எதிர்ப்­பு­ணர்வு இக்­க­ல­வ­ரத்­திற்கு வெளிப்­படைக் கார­ணமாய் அமைந்­த­போதும் யதார்த்­தத்தில் இக்­கா­ல­கட்­டத்தின் பொரு­ளா­தார, அர­சியல் நெருக்­க­டி­யையே இது பிர­தி­ப­லித்­தது. இரா­ணுவச் சட்­டத்தின் கீழ், பிரித்­தா­னிய துருப்­புகள் எடுத்த நட­வ­டிக்­கை­யிலும் கல­கத்­திலும் நூற்­றுக்­க­ணக்­கானோர் இறந்­தனர். மத்­தி­ய­தர வர்க்­கத்தைச் சார்ந்த பல மது­வி­லக்கு இயக்கத் தலை­வர்கள் கைது செய்­யப்­பட்­டனர். இவர்­களில் புறக்­கோட்டைச் சிங்­கள  வியா­பா­ரி­களின் குடும்ப உற­வி­னரும் அடங்­குவர். புறக்­கோட்டைப் பணக்­கார வியா­பா­ரி­யான டி.டி.பீரிஸ் என்­பவர் முஸ்லிம் கடை­களைத் தாக்­கு­வ­தற்­காக மக்கள் கூட்­டத்தைத் தூண்­டினார் என நீதி­மன்­றத்தில் விசா­ரிக்­கப்­பட்டு சுடப்­பட்டார். எச்.டொன் கரோ­லி­ஸின் மக­னா­கிய எட்மண்ட் ஹேவ­வி­தா­ர­ண­வுக்கு விதிக்­கப்­பட்ட மரண தண்­டனை குறைக்­கப்­பட்டு, பின் சிறைச்­சா­லையில் மர­ண­மானார். புறக்­கோட்­டையில் உப­க­ரண வியா­பா­ரி­யாக இருந்த என்.எஸ்.பெர்னாண்டோ என்­ப­வ­ரு­டைய மகன் என்.எஸ்.பெர்­னாண்டோ விஜ­ய­சே­க­ர­வுக்கு மரண தண்­ட­னையே விதிக்­கப்­பட்டுப் பின்னர் அதுவும் மாற்­றப்­பட்­டது.

இத்­த­கைய கல­வ­ரங்­களைப் பற்றி அந­கா­ரிக தர்­ம­பால என்ன கருத்துக் கொண்­டி­ருந்தார்? இக்­க­ல­வரம்  நடந்து ஒரு மாதத்தின் பின்னர் அவர் எழு­தினார்.

“பிரித்­தா­னி­ய­ருக்கு ஜேர்­ம­னியர் எவ்­வாறோ சிங்­க­ள­வ­ருக்கு முஸ்­லிம்கள் அவ்­வாறே. முக­ம­தியர் சிங்­க­ள­வ­ருக்கு சம­யத்­தாலும், இனத்­தாலும், மொழி­யாலும் அந்­நி­யர்கள். பௌத்த சமயம் இல்­லா­விடின் மர­ணமே சிங்­க­ளவர் வேண்­டுவர். பிரித்­தா­னிய உத்­தி­யோ­கத்தர் சிங்­க­ள­வரைச் சுடலாம், தூக்­கிலி­டலாம், சிறைப்­பி­டிக்­கலாம். ஆனால், எப்­போதும் சிங்­க­ள­வ­ருக்கும் முஸ்­லிம்­க­ளுக்­கு­மி­டையில் பகைமை உறவே உள்­ளது. அந்­நி­யரால் தமக்கு இழைக்­கப்­படும் அவ­மா­னங்­களை இனிமேலும் பொறுக்­க­மு­டி­யாது என்­பதை அமை­தி­மிக்க சிங்­க­ளவர் இறு­தியில் உணர்ந்து விட்­டனர். முழுத்­தே­சமும் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ராக எழுச்­சி­யுற்­று­விட்­டது. இதற்குப் பொரு­ளா­தார, ஆன்­மீக ரீதி­யான கார­ணங்கள் இருந்­தன”

அடுத்­த­டுத்த வரு­டங்­களில் சிங்­க­ள­வ­ருக்கும் முஸ்­லிம்­க­ளுக்கும் இடை­யி­லான வெளிப்­ப­டை­யான பகை­மைகள் குறைந்­தன. ஆயினும், சிங்­கள வியா­பா­ரிகள் மத்­தியில் நில­விய சிறு­பான்­மை­யினர் எதிர்ப்­பு­ணர்வு சிங்­கள பௌத்­தரின் பிரக்­ஞையில் ஆழப்­ப­திந்­தி­ருந்­தது. இது 1982 இல் காலி, புத்­தளம் போன்ற இடங்­களில் நிகழ்ந்­தது போன்று முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான குழப்­பங்­களால் வெளிப்­பட்­டது. மேலும் சமீப காலத்துச் சிங்­கள மேலா­திக்கம் வெளிப் பிர­சா­ரத்தின் பொரு­ள­டக்­கத்­தாலும் வெளிப்­பட்­டது. எவ்­வா­றா­யினும் இம்­மு­ரண்­பாடு மத ரீதி­யாகக் குறைந்­த­போதும் வியா­பாரப் போட்­டி­களின் அடிப்­ப­டையில் தொடர்ந்து நில­வு­கி­றது என்­பது கவ­னிக்­கத்­தக்­கது.

1970 களிலும் 1980 களிலும் தமிழர் எதிர்ப்­பி­யக்கப் பிர­சாரம் கிறிஸ்தவருக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக முன்னைய காலகட்டத்தில் காணப்பட்ட உணர்விலிருந்து தோன்றியனவாகும். இவற்றில் அடிப்படையாகக் காணப்படுபவை: சிங்கள இனத்தின் மேன்மை பற்றிய உணர்வு, பௌத்தத்தைப் பாதுகாக்கும் விசேட பங்கு, ‘அந்நிய வியாபாரிகள்’ மேல் பகைமை, ‘மண்ணின் மைந்தர்’கள் மேலுள்ள அக்கறை என்பனவாகும். இவற்றுடன் இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் மீண்டும் மீண்டும் குரலெழுப்பப்பட்ட (Ceylon Nation என்ற பத்திரிகையிலும் கூறியபடி) “சிங்களவர் தனித்து ஒதுக்கப்பட்டு ஆழ்கடலுக்கும் பிசாசுக்கும் இடையில் உள்ளனர். அவர்கள் செல்வதற்கு வேறு ஒரு நாடும் இல்லை. வேறு எந்த நாட்டுடனோ இனத்துடனோ இனரீதியான தொடர்பும் சிங்களவருக்கில்லை” என்ற கருத்தும் முக்கியமானது.  கிறிஸ்தவருக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான கருத்தியல் குட்டி பூர்ஷ்வா நலன்களுக்குச் சேவை செய்வதாய் வளர்க்கப்பட்டிருந்தது. ஆயினும் இத்தகைய கருத்தியல் குறிப்பிட்ட சில சூழலில் முதன்மைப்பட்டு ஏனைய வர்க்கங்களையும் கவர்வதாய் அமைந்தன.

இலங்கையில் வளர்ந்து வந்த தொழிலாளர் வர்க்கம் ஏனைய பல இனத்தைச் சார்ந்தவருடன் தோழமையுடன் இணைந்து கூட்டாகச் செயற்படுவதற்குப் பதிலாகச் சில சமயங்களில் சிங்கள, பௌத்த கருத்தியலுக்குப் பலியாகியது.

-Vidivelli