Verified Web

500 கிறிஸ்தவ தேவாலயங்கள் பூட்டு 426 பள்ளிவாசல்கள் புதிதாக திறப்பு

2018-04-24 05:13:24 M.I.Abdul Nazar

ஆங்கிலத்தில் : பெக்ஸ்டர் திமித்ரி 
தமிழில் : எம்.ஐ.அப்துல் நஸார்

பிரித்தானியாவின் லண்டன் நகரில் நூற்றாண்டுகள் பழைமைவாய்ந்த பிரசித்திபெற்ற கிறிஸ்தவ தேவாலயங்கள் மூடப்பட்டுள்ளதோடு, தலைநகரில் பல பள்ளிவாசல்களும், ஷரீஆ நீதிமன்றங்களும் திறக்கப்பட்டுள்ளதன் மூலம் மெதுவாக நுழையும் இஸ்லாமிய மயமாக்கம் நிறைவுபெற்றுள்ளது. 

பல நூற்­றாண்­டுகள் பழை­மை­வாய்ந்த பிர­சித்­தி­பெற்ற கிறிஸ்­தவ தேவா­ல­யங்கள் மூடப்­பட்­டுள்­ள­தோடு, தலை­ந­கரில் பல பள்­ளி­வாசல்­களும்,  ஷரீஆ நீதி­மன்­றங்­களும் திறக்­கப்­பட்­டுள்­ளதன் மூலம் மெது­வாக நுழையும் இஸ்­லா­மிய மய­மாக்கம் நிறை­வு­பெற்­றுள்­ளது. 

'பல இஸ்­லா­மிய நாடு­களை ஒன்­றி­ணைத்து உரு­வாக்கும் இஸ்­லா­மியத் தன்­மை­யினை விட அதி­க­மான இஸ்­லா­மியத் தன்மை கொண்­ட­தாக லண்டன் காணப்­ப­டு­கின்­றது' என இஸ்­லா­மிய பிர­சா­ர­கர்­களுள் ஒரு­வ­ரான மௌலானா ஸெயிட் ரஸா றிஸ்வி குறிப்­பி­டு­கின்றார் எனினும் மௌலானா ஸெயிட் ரஸா றிஸ்வி 'லண்­ட­னிஸ்­தா­னுக்கு' தலைமை தாங்­கு­வ­தாக ஊட­க­வி­ய­லாளர் மெலானி பிலிப்ஸ் குறிப்­பி­டு­கின்றார். ஆனால் றிஸ்வி அவ்­வா­றான வல­து­சாரி தீவிரப் போக்குக் கொண்ட ஒரு நப­ரல்ல. 

'இஸ்­லா­மி­ய­வா­திகள் வந்து நிறையும் குப்­பைத்­தொட்­டி­யாக லண்டன் மாறி­யுள்­ளது' என இலக்­கி­யத்­திற்­கான நோபல் பரிசு பெற்ற வொலி சொயின்கா தெரி­விக்­கின்றார். 

பயங்­க­ர­வா­தி­களால் பன்­மைத்­துவக் கலா­சா­ரத்­தன்­மைக்கு ஆத­ர­வ­ளிக்க முடி­யாது என வெஸ்ட் மினிஸ்­டரில் கடந்த வருடம் இடம்­பெற்ற உயி­ரி­ழப்­புக்­களை ஏற்­ப­டுத்­திய பயங்­க­ர­வாதத் தாக்­கு­த­லை­ய­டுத்து கருத்துத் தெரி­வித்த லண்டன் மேயர் சாதிக் கான் தெரி­வித்­தி­ருந்தார். அதன் மறு­வ­டிவம் உண்­மை­யா­னது. ஏனெனில் பிரித்­தா­னிய பன்­மைத்­துவக் கலா­சா­ரத்­தன்மை இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்­திற்கு உர­மூட்­டு­கின்­றது. 

இவை­ய­னைத்­திற்கும் மேலாக, ஆங்­கிலக் கிறிஸ்­து­வத்தின் கவலை மிகுந்த சிதை­வு­கள்­மீது கட்­டி­யெ­ழுப்­பப்­பட்ட 423 பள்­ளி­வா­சல்­களைக் கொண்­ட­தாக 'லண்­ட­னிஸ்தான்' காணப்­ப­டு­கின்­றது. பல வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த கிறிஸ்­தவ தேவா­ல­யங்கள் பள்­ளி­வா­சல்­க­ளாக மாற்­றப்­பட்­டுள்­ளன. 

கேட்ஸ்டோன் நிறு­வ­னத்தின் அறிக்­கையின் பிர­காரம், ஹையாட் யுனைட்டட் தேவா­லயம் எகிப்­திய சமூ­கத்­தி­னரால் கொள்­வ­னவு செய்­யப்­பட்டு பள்­ளி­வா­ச­லாக மாற்­றப்­பட்­டுள்­ளது. சென் பீட்டர்ஸ் தேவா­லயம் மதீனா பள்­ளி­வா­ச­லாக மாற்­றப்­பட்­டுள்­ளது. பிரிக் லேன் பள்­ளி­வாசல் முன்னர் இருந்த மெதடிஸ்ட் தேவா­ல­யத்தின் மீது கட்­டப்­பட்­டுள்­ளது. அங்கு கட்­டடம் மாத்­திரம் மத­மாற்றம் செய்­யப்­ப­ட­வில்லை, அங்­கி­ருந்த மக்­களும் மத­மாற்றம் செய்­யப்­பட்­டுள்­ளனர். இஸ்­லாத்தை தழு­வு­ப­வர்­களின் எண்­ணிக்கை இரட்­டிப்­பா­கி­யுள்­ளது. வெஸ்ட்­மி­னிஸ்­டரில் தாக்­குதல் நடத்­திய பயங்­க­ர­வா­தி­யான காலித் மசூட் போன்று கடும்­போக்கு இஸ்­லாத்தை அவர்கள் தழு­வு­கின்­றார்கள். 

லண்­டனில் மத்­திய பகு­தியில் சில மீற்றர் இடை­வெ­ளியில் காணப்­படும் ஒரு தேவா­ல­யத்­தி­னதும், ஒரு பள்­ளி­வா­ச­லி­னதும் புகைப்­ப­டங்­களை டெயிலி மெயில் பிர­சு­ரித்­தி­ருந்­தது. 1,230 பேர் கலந்து கொள்­ளக்­கூ­டி­ய­வாறு வடி­வ­மைக்­கப்­பட்­டுள்ள சென் ஜியோர்­ஜியோ தேவா­ல­யத்தில் திருப்­ப­லியில் கலந்­து­கொண்­டோரின் எண்­ணிக்கை வெறும் 12 மாத்­தி­ர­மாகும். சான்டா மரியா தேவா­ல­யத்தில் ஆரா­த­னையில் கலந்­து­கொண்­டோரின் எண்­ணிக்கை 20 ஆகும். 

அரு­கி­லி­ருந்த புரூனி வீதி எஸ்டேட் பள்­ளி­வா­சலில் வேறு பிரச்­சினை, அங்கு அப­ரி­மி­த­மான சனக்­கூட்டம். அந்த சிறிய அறையில் 100 பேர் மாத்­திமே தொழு­கையில் ஈடு­ப­ட­மு­டியும். வெள்­ளிக்­கி­ழ­மை­களில் விசு­வா­சிகள் வீதி­க­ளில்தான் தமது தொழு­கை­யினை நிறை­வேற்­று­கின்­றார்கள். தற்­போ­துள்ள நிலை­மை­யினைப் பொறுத்­த­வரை இங்­கி­லாந்தில் கிறிஸ்­தவம் பழங்­காலச் சின்­ன­மா­கி­யுள்ள அதே­வேளை இஸ்லாம் எதிர்­கா­லத்­திற்­கான மத­மாக மாறி­யுள்­ளது.

பிரித்­தா­னி­யாவின் இரண்­டா­வது பெரிய நக­ர­மான பேர்­மிங்­ஹாமில், பல ஜிஹா­தி­யர்கள் வாழ்­வ­தோடு தமது தாக்­கு­தல்­க­ளையும் அரங்­கேற்றி வரு­கின்­றனர். அங்கு இஸ்­ல­ாமிய மினரா ஒன்று வானத்தை ஆக்­கி­ர­மித்­தி­ருக்­கின்­றது. பிரித்­தா­னியப் பள்­ளி­வாசல்­களில் ஐந்­து­நேரத் தொழு­கையில் நாளொன்­றுக்கு மூன்று நேரத் தொழு­கைக்­கான அழைப்­புக்கு ஒலி­பெ­ருக்­கி­களைப் பயன்­ப­டுத்­து­வ­தற்கு அனு­மதி வழங்­கு­மாறு கோரிக்­கைகள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. 

2020 ஆம் ஆண்டு தொழு­கையில் ஈடு­படும் முஸ்­லிம்­களின் எண்­ணிக்கை 683,000 ஆக அதி­க­ரிக்கும் அதே­வேளை வாராந்த ஆரா­த­னை­களில் பங்­கேற்கும் கிறிஸ்­த­வர்­களின் எண்­ணிக்கை 679,000 ஆக வீழ்ச்­சி­ய­டயும் என மதிப்­பீ­டுகள் தெரி­விக்­கின்­றன. ஆங்­கி­லேய நக­ரங்­களின் புதிய கலா­சாரக் கட்­ட­மைப்பு தற்­போது வெளி­யி­டப்­பட்­டுள்­ளது, அதன் பிர­காரம் 'மாநில மட்­டத்­தி­லான ஒழுங்­க­மைக்­கப்­பட்ட கிறிஸ்­தவ கலாச்­சாரக் கட்­ட­மைப்பு தற்­போது பின்­ன­டைவைச் சந்­தித்­துள்­ளது' என ஒக்ஸ்போர்ட் பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த செரி பீச் தெரி­வித்­துள்ளார். அதே­வேளை 'பிரித்­தா­னிய முஸ்­லிம்­களில் சுமார் அரை­வா­சிப்பேர் 25 வய­திற்கும் குறைந்­த­வர்­க­ளாகக் காணப்­படும் நிலையில் கிறிஸ்­த­வர்­களில் கால்­வா­சிப்பேர் 65 வய­திற்கும் மேற்­பட்­ட­வர்­க­ளாகக் காணப்­ப­டு­கின்­றனர். இன்னும் 20 வரு­டங்­களில் தேவா­லயங்­க­ளுக்குச் செல்லும் கிறிஸ்­த­வர்­களின் எண்­ணிக்­கை­யி­னை­விட துடிப்­புள்ள முஸ்­லிம்­களின் எண்­ணிக்கை அதி­க­மாக இருக்கும்' என தேசிய மதச்­சார்­பற்ற சமூ­கத்தின் பணிப்­பாளர் கீத் போட்­டியெஸ் வூட் குறிப்­பி­டு­கின்றார்.

2001 ஆம் ஆண்டு தொடக்கம் அனைத்துப் பிரி­வு­க­ளையும் சேர்ந்த 500 லண்டன் தேவா­ல­யங்கள் தனிப்­பட்ட வீடு­க­ளாக மாற்­றப்­பட்­டுள்­ளன. அதே காலப் பகு­தியில் பிரித்­தா­னியப் பள்­ளி­வா­சல்கள் பன்­ம­டங்­காக அதி­க­ரித்­துள்­ளன. 2012 மற்றும் 2014 ஆம் ஆண்­டு­க­ளுக்கு இடைப்­பட்ட காலப்­ப­கு­தியில் அங்­கி­லிக்கன் பிரி­வினர் என தம்மை அடை­யா­ளப்­ப­டுத்­திக்­கொண்­ட­வர்­களின் வீதம் 21 வீதத்தில் இருந்து 17 வீத­மாகக் குறை­வ­டைந்­துள்­ளது. குறை­வ­டந்த மக்­களின் எண்­ணிக்கை 1.7 மில்­லி­ய­னாகும். அதே­வேளை பல­ராலும் மதிக்­கப்­படும் நட்சென் சமூக ஆய்வு நிறு­வ­கத்­தினால் மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்வின் பிர­காரம், முஸ்­லிம்­களின் எண்­ணிக்கை ஒரு மில்­லி­யனால் அதி­க­ரித்­துள்­ளது. தொட­ராக வெள்­ளிக்­கி­ழ­மை­களில் பள்­ளி­வா­ச­லுக்குச் செல்லும் முஸ்­லி­ம்­களின் எண்­ணிக்கை வீழ்ச்­சி­யினை விட மும்­ம­டங்­காக தேவா­ல­யங்­க­ளுக்குச் செல்­வோரின் எண்­ணிக்கை வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ளது.

 சனத்­தொகை அடிப்­ப­டையில், பிரித்­தா­னி­யாவில் குறிப்­பாக, பேர்­மிங்ஹாம், பிராண்ட்போர்ட், டேர்பி, டியுஸ்­பெரி, வீட்ஸ், லிசெஸ்டர், லிவர்பூல், லூடன், மன்­செஸ்டர், செப்பீல்ட், வொல்தம் பொரெஸ்ட் மற்றும் டவர் ஹெம்லெட்ஸ் ஆகிய பகு­தி­களில் இஸ்­லா­மியத் தோற்றம் அதி­க­ரித்து வரு­கின்­றது. 2015 ஆம் ஆண்டில் இங்­கி­லாந்தில் மிகவும் பொது­வாகக் காணப்­பட்ட பெயர் எது­வென மேற்­கொள்­ளப்­பட்ட பகுப்­பாய்வில் மொஹம்மட் என்ற பெயரே காணப்­பட்­ட­தாக கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. இந்தப் பெயர் மொஹம்மட், முஹம்மட் மற்றும் மொஹம்மாட் என சில எழுத்து வித்­தி­யா­சங்­க­ளோடு பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. 

மிகவும் முக்­கி­ய­மான நக­ரங்கள் அதிக முஸ்லிம் சனத்­தொ­கை­யினைக் கொண்­ட­வை­யாகக் காணப்­ப­டு­கின்­றன. மன்­செஸ்டர் (15.8 வீதம்), பேர்­மிங்ஹாம் (21.8 வீதம்) மற்றும் பிரேன்ட்போர்ட் (24.7 வீதம்). பேர்­மிங்­ஹாமில் பொலிஸார் பயங்­க­ர­வா­தி­யொ­ருவர் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள சிறைக்­கூ­ட­மொறில் இருக்கும் ஒருவர் கிறிஸ்­தவ குடும்­பத்தைச் சேர்ந்த ஒரு­வ­ராக இருப்­ப­தை ­விட முஸ்லிம் குடும்­ப­மொன்றை சேர்ந்­த­வ­ராக இருப்­ப­தற்­கான சாத்­தி­யமே அதி­க­மாகக் காணப்­ப­டு­கின்­றது. பிராண்ட்போர்ட் மற்றும் லிசெஸ்­டரில் காணப்­படும் பிள்­ளை­களில் அரை­வா­சிப்பேர் முஸ்லிம் பிள்­ளை­க­ளாவர். ஐக்­கிய இராச்­சி­யத்தில் முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யி­ன­ராக மாற­வேண்­டிய அவ­சியம் இல்லை, அவர்கள் படிப்­ப­டி­யாக முக்­கி­ய­மான நக­ரங்­களை இஸ்­லா­மி­ய­ம­யப்­ப­டுத்தி வரு­கின்­றனர். அந்த மாற்றம் ஏற்­க­னவே ஏற்­பட்­டு­விட்­டது. 'லண்­ட­னிஸ்தான்' என்­பது முஸ்லிம் பெரும்­பான்மை என்ற பயங்­கரக் கன­வல்ல, கிறிஸ்­தவம் பின்­ன­டைந்து செல்ல இஸ்லாம் முன்­னேறிச் செல்லும் கலா­சார, சனத்­தெகை மற்றும் சமயக் கல­வை­யாகும். 
அமெ­ரிக்­காவின் 56 வீதத்­தோடு ஒப்­பிடும் போது தற்­போது பிரித்­தா­னி­யா­வி­லுள்ள 1,700 பள்­ளி­வா­சல்­களில் இரண்டு பள்­ளி­வா­சல்கள் மாத்­தி­ரமே இஸ்­லாத்தின் நவீன இஸ்­லாத்தைப் பின்­பற்­று­கின்­றன.  பிரித்­தா­னி­யாவில் 6 வீத­மான பள்­ளி­வாசல்கள் வஹா­பி­களின் கட்­டுப்­பாட்டில் உள்­ளது, அதே­வேளை அடிப்­ப­டை­வாத டீயோ­பந்தி 45 வீதம் வரை­யான பள்­ளி­வா­சல்­களை தமது கட்­டுப்­பாட்டில் வைத்­துள்­ளது என த ஸ்பெக்­டேட்ரில் இன்னஸ் பொவென் எழு­தி­யுள்ளார். பிரித்­தா­னிய முஸ்­லிம்­களுள் மூவருள் ஒருவர் தான் பிரித்­தா­னிய கலா­சா­ரத்தின் ஒரு­ப­கு­தி­யாக இருப்­பதை உண­ர­வில்லை என நொலேட்ஜ் சென்டர் என்ற அமைப்பு மேற்­கொண்ட ஆய்வில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 

லண்­ட­னி­லுள்ள ஷரீஆ நீதி­மன்­றங்கள் 
லண்­டனில் ஷரீஆ நீதி­மன்­றங்­கள் நிறைந்து காணப்­ப­டு­கின்­றன. உத்­தி­யோ­க­பூர்­வ­மாக 100 காணப்­ப­டு­கின்­றன. பிரித்­தா­னிய சம­ரச சட்டம் மற்றும் பிரச்­சி­னை­க­ளுக்­கான மாற்­று­முறைத் தீர்வு முறைமை ஆகி­ய­வற்றின் கார­ண­மாக சமாந்­த­ர­மாக நியா­யா­திக்க முறை சாத்­தி­யமாகி­யுள்­ளது. மதிக்­கப்­படும் மனித உரி­மை­களின் நிரா­க­ரிப்பே இந்த புதிய நீதி­மன்­றங்­களின் அடிப்­ப­டை­யாகும். ஆங்­கிலப் பொதுச் சட்­டத்தின் அடிப்­படை சுதந்­திரம் மற்றும் சமத்­துவ விழு­மி­யங்­க­ளாகும். 

பிரித்­தா­னிய ஆளு­மைகள்  ஷரீ­ஆ­வினை அறி­முகம் செய்­வ­தற்கு தமது கத­வு­களை திறந்தே வைத்­துள்­ளனர். தற்­போது கிறிஸ்­தவம் நீதி­மன்­றத்தில் செல்­வாக்குச் செலுத்­து­வ­தில்லை என்­ப­தோடு அவை பன்­மைத்­துவக் கலா­சா­ரத்தைக் கொண்­டி­ருக்க வேண்டும் - அதா­வது இஸ்­லாத்­தைப்­போன்று இருக்க வேண்டும் என முன்­னணி பிரித்­தா­னிய நீதி­ப­தி­களுள் ஒரு­வ­ரான சேர் ஜேம்ஸ் மன்பி தெரி­வித்­துள்ளார். பிரித்­தா­னிய சட்டம் ஷரீஆ சட்­டத்தின் அடிப்­ப­டை­களைக் 'கூட்­டி­ணைக்க' வேண்டும் என கன்­ட­பே­ரியின் முன்னாள் ஆர்ச்­பிஷப் றோவன் வில்­லியம்ஸ் மற்றும் பிர­தம நீத­ய­ரசர் லோட் பிலிப்ஸ் ஆகியோர் ஆலோ­சனை தெரி­வித்­துள்­ளனர். பிரித்­தா­னிய கலா­சார நிறு­வனம் இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தி­களின் கோரிக்­கை­களை ஏற்­றுக்­கொள்­வதன் மூலம் தொடர்ச்­சி­யாக சர­ணா­க­தி­ய­டைந்து வரு­கின்­றது. 

பிரித்­தா­னியப் பல்­க­லைக்­க­ழ­கங்கள் இஸ்லாமிய சட்டத்தினை முன்னிலைப்படுத்தி வருகின்றன. ஐக்கிய இராச்சிய பல்கலைக்கழகங்களினால் பிரசுரிக்கப்பட்ட உத்தியோகபூர்வ பல்கலைக்கழக வழிகாட்டல் 'பாரம்பரிய சமயக் குழுக்களுக்கு' நிகழ்வுகளின்போது ஆண், பெண் கலப்பின்றி பங்குபற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. லண்டனிலுள்ள குயின் மேரி பல்கலைக்கழகத்தில், றியாத் அல்லது தெஹ்ரானில் இருப்பது போன்று, பெண்கள் தனியான நுழைவாயிலைப் பயன்படுத்தவேண்டியிருந்ததோடு கேள்விகேட்க முடியாமலும், கைகளை உயர்த்த முடியாமலும் அறையொன்றில் இருக்குமாறு பணிக்கப்பட்டனர். லண்டன் பொருளியல் கல்லூரியின் இஸ்லாமிய சங்கம் நடத்திய கலை நிகழ்வில் ஏழு மீற்றர் இடைவெளியில் ஆண்களும் பெண்களும் வேறுபடுத்தப்பட்டிருந்தனர். 
கேலி செய்யும் பிரான்ஸ் சஞ்சிகையான சாலி ஹெப்டோ தாக்கப்பட்டதன் பின்னர் எம்.ஐ.6 இன் தலைவர் சேர் ஜோன் சேவ்வர்ஸ் சுய தணிக்கையைப் பின்பற்றுமாறும் இஸ்லாம் பற்றி கலந்துரையாடுவதில் சில மட்டுப்பாடுகளை கைக்கொள்ளுமாறும் ஆலோசனை வழங்கியுள்ளார். 

சவூதி அரேபியாவுக்கான பிரித்தானிய தூதுவர் சைமன் கொல்லிஸ் இஸ்லாத்தைத் தழுவியுள்ளதோடு மக்காவுக்குச் சென்று தனது ஹஜ் கடமையினையும் நிறைவேற்றியுள்ளார். அவர் தற்போது தன்னை ஹாஜி கொல்லிஸ் என அழைத்துக்கொள்கின்றார். 

-Vidivelli