Verified Web

அமெரிக்காவின் போர் குற்றங்களுக்கு தண்டனை வழங்குவது யார்

Rauf Zain

அஷ்ஷெய்க் ரவூப் ஸெய்ன் சர்வதேச பார்வை சஞ்சிகையின் ஆசிரியராக கடமையாற்றுகிறார். இதுவரை சுமார் 40 நூல்களை வெ ளியிட்டுள்ளதுடன் உள்நாட்டு மற்றும் சர்வதேச விவகாரங்கள் தொடர்பான ஆய்வாளராகவும் பேச்சாளராகவும் செயற்பட்டு வருகிறார். 

 

2018-04-20 05:10:21 Rauf Zain


உலகின் ஏக வல்­ல­ரசு என்ற எண்­ணத்­தோடு உரு­வெ­டுத்த அமெ­ரிக்கா சர்­வ­தேச சட்­டத்தின் ஆட்­சி­யி­லி­ருந்து தனக்கு விலக்­க­ளிக்­கப்­பட வேண்டும் என்­பது போலவே செயற்­ப­டு­கின்­றது. நேர­டி­யாக சர்­வ­தேச சட்ட ஆட்­சி­யி­லி­ருந்து விடு­ப­டு­வ­தற்கும் அது பலமுறை எத்­த­னித்­துள்­ளது. ஆனால், பிற நாடுகள் பொறுப்­புடன் நடந்துகொள்ள வேண்டும் என அழுத்தம் கொடுப்­ப­தற்கும் அமெ­ரிக்க அரசு பின் நின்­ற­தில்லை. கடந்த ஐம்­பது ஆண்டு கால சர்­வ­தேச அர­சி­ய­லிலி­ருந்து இவ்­வுண்மை புல­னா­கின்­றது.

சர்­வ­தேச குற்­ற­­வியல் நீதி­மன்­றத்தின் தோற்­றத்­திற்கு முதலில் எதிர்ப்பு தெரி­வித்த நாடு அமெ­ரிக்­காதான். சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்றம் உலகின் கொடூர­மான வன்­மு­றைகள், போர்க்­குற்­றங்கள் படு­கொ­லைகள், திட்­ட­மிட்­ட­மு­றை­யி­லான மனித உரிமை மீறல்கள் ஆகிவை தொடர்­பாக தனி­ம­னி­தர்­களை விசா­ரிப்­ப­தற்­காக உரு­வாக்­கப்­பட்­டது. சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்றம் உரு­வா­கி­வி­டாமல் தடுப்­ப­தற்கு தொடக்­கத்­தி­லி­ருந்தே அமெ­ரிக்கா முட்­டுக்­கட்­டை­களை விதித்து வந்­தது. காரணம் தெளி­வா­னது. உலகில் பல்­வேறு பகு­தி­க­ளிலும் அமெ­ரிக்கா இழைத்­து­வரும் போர்க்­குற்­றங்­க­ளுக்கும் பொறுப்­பு­கூ­ற­வேண்டி வரும் என அது உணர்­ந­த­மையே, இதற்­கான காரணம்.

இந்த நீதி­மன்­றத்­திற்­காக உடன்­பாடு எட்­டப்­பட்­ட­போது, அமெ­ரிக்­காவின் தனி நபர்­களும் தனது குற்­றங்­க­ளுக்­காக அதன் பால் இழு­படக் கூடுமென அமெ­ரிக்கா தனது கவ­லையை வெளி­யிட்­டது. அமெ­ரிக்­காவின் இந்த கவ­லையும் பதிவு செய்­யப்­பட்டு உடன்பாட்டுக் குறிப்பில் இணைக்­கப்­பட்­டுள்­ளது. இவ்­வா­றாக ஒரு கடைசி வழி­யா­கத்தான். சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்றம் ஸ்­தா­பிக்­கப்­பட்­டது. பெரும் திர­ளான மக்­களை கொலை செய்­த­வர்­களை அல்­லது பிற திட்­ட­மிட்ட மீறல்­களில் ஈடு­பட்­ட­வர்­களை விசா­ரிக்க உரிய நாடுகள் இணங்­க­வில்லை அல்­லது விரும்­ப­மில்லை என்ற நிலையில் மட்­டுமே ஒரு­நாட்டின் உள் விவ­கா­ரத்தில் சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்றம் தலை­யிட முடியும். இருந்த போதிலும் அந்த நீதி­மன்­றத்தின் விசா­ரணை அதி­கா­ரத்­தி­லி­ருந்து அமெ­ரிக்­கா­வுக்கு முழுக்க முழுக்க கால வரை­ய­றை­யின்றி விதி­வி­லக்கு அளிக்­கப்­படும் என்­பதை அங்­கீ­க­ரிக்க வேண்­டு­மென வொஷிங்டன் பாது­காப்பு சபையை தொடர்ந்தும் வற்பு­றுத்­தி­யது. இதை ஏற்க மறுத்தால் பொஸ்­னி­யா­விலும் ஏனைய இடங்­க­ளிலும் ஐ.நா. சமா­தான நட­வ­டிக்­கை­களை தொடர்­வ­தற்­கான தீர்­மா­னங்­க­ளுக்­கெ­தி­ராக தனது ரத்து அதி­கா­ரத்தை பயன்­ப­டுத்தப் போவ­தாக மிரட்­டி­யது அமெ­ரிக்கா.

இரண்டு வாரங்­க­ளாக நடந்த கசப்­பான பேரங்­க­ளுக்கு பின்னர் ஐரோப்­பிய ஒன்­றி­யமும் ஏனைய நாடு­களும் கடும் எதிர்ப்பு தெரி­வித்த சூழ்­நி­லையில் ஒரு சம­ரச ஏற்­பாடு எட்­டப்­பட்­டது. அதன்­படி உடன்­பாட்டை அங்­கீ­க­ரிக்­காத நாடு­களைச் சேர்ந்த தனி மனி­தர்கள் அனை­வ­ருக்கும் விதி­வி­லக்­க­ளிக்க ஐ.நா. பாது­காப்பு சபை ஒப்புக் கொண்­டது. ஆனால், அந்த விதி­வி­லக்கு ஒரு வரு­டத்­திற்கு மட்­டுமே என அறித்­தது ஐ.நா. கனடா இதனைக் கடு­மை­யாக கண்­டித்­தது. அமெ­ரிக்­கா­வுக்கு வழங்­கப்­படும் இச்­ச­லுகை சட்­ட­வி­ரோ­த­மானது என்று சாடி­யது. சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்றம் நடை­மு­றைக்கு வரு­வதை தடுக்க முடி­யாமல் தடு­மா­றிய அமெ­ரிக்க அரசு ஒரு புதிய யுக்­தியை வகுத்­தது. ஏனைய நாடு­க­ளுடன் இரு­த­ரப்பு ஒப்­பந்­தங்­களை மேற்­கொள்­வது, ஒப்­பந்­தத்தில் கையெ­ழுத்­திட்ட இரு நாடு­க­ளுமே மனி­த­நே­யத்­துக்கு எதி­ரான குற்­றச்­செ­யல்­களில் ஈடு­ப­டுத்­தப்­பட்­ட­வர்­களை சர்­வ­தேச குற்­ற­வியல் விசா­ர­ணைக்கு ஒப்­ப­டைப்­ப­தில்லை என உறு­தி­யேற்­பது என்­பதே அந்த யுக்தி.

சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்றம் உரு­வாக்­கப்­ப­டு­வதை கடு­மை­யாக எதிர்த்து நின்ற அமெ­ரிக்க அரசு ருவனடா, பொஸ்­னியா, கம்­போ­டியா போன்ற சில குறிப்­பிட்ட சூழல்­களில் பன்னாட்டு நடுவர் மன்­றங்­களை அமைக்க வேண்டும் என ஒற்றைக் காலில் நின்­றது. குறிப்­பாக, கம்­போ­டிய விவ­காரம் அமெ­ரிக்கா மீதான சுய­நலம் சார்ந்த கொள்­கையை பளிச்­சென வெளிச்­ச­மிட்டு காட்­டு­கின்­றது. இந்­தோ­சீ­னாவில் போர் முடி­வுக்கு வந்­த­போது அப்­பி­ராந்­தி­யத்தில் நடத்­தப்­பட்ட போர்க்­குற்­றங்கள் தொடர்­பாக அமெ­ரிக்­கா­வுக்கு ஒரு தனி­யான திட்ட வட்­ட­மான அணு­கு­முறை என எதுவும் இருந்­த­தில்லை. வியட்னாம், லாவோஸ் நாடு­களில் அமெரிக்கா நிகழ்த்­திய பாரிய போர்க்­குற்­றங்­களை விசா­ரிக்­க­வென எந்­த­வொரு பன்னாட்டு நீதி­மன்­றத்­திற்கு அதி­காரம் வழங்­கப்­ப­ட­வில்லை. ஆனால், கமரூஜ் தலை­வர்­களை விசா­ரிக்க ஒரு சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்றம் அமைக்க வேண்டும் என்ற வேண்­டு­கோளை அமெ­ரிக்கா திடீ­ரென ஆத­ரித்­தது. அந்த நடுவர் மன்ற விசா­ரணை வரம்­புகள் இறு­தி­செய்­யப்­பட்ட போது, 1975முதல் 1979வரை­யி­லான கால அள­வோடு அதன் அதி­காரம் மட்­டு­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும் என்று வொஷிங்டன் கூறி­யது. அதற்கு முந்­தைய ஆண்­டு­களோ பிந்தைய ஆண்­டு­களோ நடுவர் மன்­றதின் அதி­கா­ரத்­திற்­குட்­ப­டு­வதை அமெ­ரிக்கா ஆட்­சே­பித்­தது. ஏனெனில், அவ்­வாறு முந்­தைய, பிந்­தைய ஆண்­டுகள் கருத்தில் கொள்­ளப்­பட்டால் அமெ­ரிக்­காவும் போர்­க்குற்ற விசா­ர­ணை­க­ளுக்கு உட்­பட்­டி­ருக்கும். 1975க்கு முந்­திய கால கட்டம் பற்­றிய எந்­த­வொரு ஆய்வும் இந்­தோ­சீ­னாவில் ஒரு விரி­வான நிலப்­ப­ரப்பில் அமெ­ரிக்கா குண்டு மழை­பொ­ழிந்த விவ­கா­ரத்தை சர்­வ­தேச நடுவர் மன்­றத்தின் கவ­னத்­திற்கு கொண்டு வந்­தி­ருக்கும். 1979 பிந்­திய கால கட்டம் குறித்த எந்­த­வொரு விசா­ர­ணையும் 1978இல் கம்­போ­டி­யாவை ஆக்­கி­ர­மித்த கமரூஜ்  இயக்­கத்­திற்கு ஐ.நா. சபை­யிலும் உலக அளவில் வியட்னாம் அள­விற்கும் அமெ­ரிக்கா அர­சியல் ஆத­ர­வ­ளித்த விவ­கா­ரத்­தையும் வெளிச்­சத்­திற்கு கொண்­டு­வந்­தி­ருக்கும். இதி­லி­ருந்து தன்னை பாது­காத்து கொள்­வ­தற்­கா­கவே அமெ­ரிக்கா சர்­வ­தேச நடுவர் மன்­றத்தின் அதி­கா­ரத்தை கால அளவில் வரை­ய­றுத்­தது.

போட்­டி­யா­ளர்கள், கருத்­து­வே­று­பாடு கொண்­ட­வர்கள், சார்ந்­தி­ருப்­ப­வர்கள் என யாராக இருந்­தாலும் சட்­ட­வி­தி­களை அடிப்­ப­டை­யாகக் கொண்­ட­தொரு சர்­வ­தேச ஓழுங்­க­மைப்பின் அடிப்­ப­டையில் அவர்­க­ளோடு ஒருங்­கி­ணைந்து செய­லாற்­று­வ­தி­லி­ருந்து தன்னை விலக்கி கொள்­வதில் அமெ­ரிக்க அரசு எப்­போதும் பிடி­வா­த­மா­கவே இருந்து வரு­கின்­றது. 
1990ஆம் ஆண்டின் தொடக்க காலத்தில் சோவியத் யூனியன் சரிந்து விழுந்­த­தி­லி­ருந்து முழு­மை­யான இரா­ணுவ மேலாண்­மையின் மூலம் தன்­னிச்­சை­யாக ஆதிக்கம் செலுத்­த­வேண்டும் என்ற திட்­டத்தை அமெ­ரிக்கா பின்­பற்றி வரு­கின்­றது. இதனால், போர்க்­கால குற்­றங்கள், கொடூ­ர­மான வன்­மு­றைகள், அத்­து­மீ­றல்கள் என்­ப­வற்­றி­லி­ருந்து அமெ­ரிக்­கா­வுக்கு விதி­வி­லக்­க­ளிக்­கப்­ப­டு­கின்­றது. இது இன்று உல­க­ளா­விய அர­சியல் நெருக்­க­டி­யொன்றை தோற்­று­வித்­துள்­ளது. 

நவீன மேற்­கத்­தைய ஏகா­தி­பத்­தி­யங்கள் அமெ­ரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், நிர­வெ­றி­தென்­னா­பி­ரிக்கா மிகக் கொடூ­ர­மான அர­சுகள் கூட தம்மை சட்­டத்தின் ஆட்­சியை உயர்­த்திப்­பி­டிக்கும் அர­சு­க­ளா­கவே காட்­டி­வந்­துள்­ளன. சர்­வ­தேச விதிகள், ஒப்­பந்­தங்கள், உடன்­பா­டுகள், வரன்­மு­றைகள் அனைத்­தையும் ஜன­நா­ய­கத்தை பரப்­புதல் என்ற பெயரில் அமெ­ரிக்கா மீறி­வ­ரு­கின்­றது. பிற­நா­டு­களில் சட்­டத்தின் ஆட்­சியை வலி­யு­றுத்தி வரும் அமெ­ரிக்கா தான் சட்­டத்தின் ஆட்சியை உதா­சீனம் செய்­வதை ஏற்க மறுக்­கின்­றது. 

1990களில் ஈரான் மீது அமெ­ரிக்கா விதித்த பொரு­ளா­தாரத் தடை மற்றும் அதன் குக்­கி­ரா­மங்கள் மீது அமெ­ரிக்கா நடாத்­திய இர­சா­யன ஆயுத தாக்­கு­தல்­களில் மாத­மொன்­றிற்கு 5000 ஈராக்­கிய குழந்­தைகள் மரணத்தை தழு­வினர்.
2000ஆம் ஆண்டில் ஐந்து வய­துக்­குட்­பட்ட மூன்று இலட்சம் ஈராக்­கிய குழந்­தைகள் கொல்­லப்­பட்­டி­ருந்­ததை யுனிசொப் ஆய்­வ­றிக்கை உறு­தி­செய்­தது. இர­சா­யன ஆயுதப் பயன்­பாட்­டினால் ஏற்­பட்ட தாக்­கமும் நெறி­மு­றை­களை மீறிய வகையில் ஈராக் மீது 55 தட­வைகள் விதிக்­கப்­பட்ட பொரு­ளா­தார தடை­யுமே பாரிய மனித படு­கொ­லைக்கு இட்டு சென்­றது. அமெ­ரிக்­காவின் அப்­போ­தைய இரா­ஜாங்க செய­லாளர் மெடலின் அல்பிறைட் பீ.பீ.சீக்கு வழங்­கிய பேட்­டியில் சதாம் ஹுசைன் அடி­ப­ணி­யா­மைக்கு அப்­பாவி ஈராக்­கிய மக்கள் கொடுத்த இப்பெரிய விலையை நியா­யப்­ப­டுத்­தினார். 2003இல் ஈராக் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்டு 2013இல் அமெ­ரிக்க படை வெளி­யே­றிச்­சென்­ற­போது 1.5 மில்­லியன் ஈராக்­கி­யர்­களை அமெ­ரிக்கா கொன்று குவித்­தி­ருந்­தது. வியட்னாம், லாவோஸ், இந்­தோ­சீன நாடு­களில் அமெ­ரிக்க படை­யினர் பொழிந்த குண்டு மழை­யினால் இலட்­சக்­க­ணக்­கான ஏழை மக்கள் மாண்டு மடிந்­தனர். 

மத்­திய அமெ­ரிக்­காவில் செயற்­பட்ட பயங்­க­ர­வாத அமைப்­புக்­க­ளுடன், தென் அமெ­ரிக்­காவின் சர்­வ­தி­கா­ரி­க­ளாக விளங்­கிய ஆட்­சி­பீ­டங்­க­ளுடன், தென்­னா­பி­ரிக்க நிற­வெறி அர­சாங்­கத்­துடன் அமெ­ரிக்கா வைத்­தி­ருந்த உற­வு­களை உலகம் அறியும். கொங்­கோவில் கூலிப்­ப­டை­களை நிறுத்தி சிவில் சமூ­கத்­திற்கு எதி­ரான ஏவல் போர்­களை தூண்­டி­விட்ட காட்­சிகள் 80களில் அரங்­கே­றின. அங்­கோ­லாவில் அமெ­ரிக்க அரா­ஜகம் நிகழ்த்­திய கொடூர கொலை­களை உலகம் வெகு­வாக மறந்து விடாது. இன்று யெமனில் 500 குழந்­தைகள் உள்­ளிட்ட 2500 பேரை கொண்று குவிப்­ப­தற்கு அமெ­ரிக்கா வழங்­கிய ஆயு­தங்­களே காரணமாகும். சிரியாவிலும் ஈராக்கிலும் லிபியாவிலும் உலகின் 70க்கு மேற்பட்ட நாடுகளில் உள்ளூரில் அமெரிக்காவினால் தூண்டப்பட்ட சிவில் யுத்தங்களுக்கு அமெரிக்காதான் ஆயுதம் வழங்குகின்றது. சட்ட ஆட்சிக்கு எதிராக நிற்கும் அமெரிக்கா எப்படி பிறநாடுகளை தண்டிக்க முடியும் என்பதே இப்போது எழும் கேள்வியாகும். 

அமெரிக்க மயமாக்கலை அமெரிக்கா கைவிடவேண்டும். சர்வதேச சட்டங்களுக்கு முதலில் அமெரிக்கா மதிப்பளிக்க வேண்டும். ஜனநாயகத்தில் ஒரே அக்கறை கொண்ட நாடு அமெரிக்கா என்ற போலி வேஷத்தை களைய முன்வரவேண்டும். உலகம் மாறிவிட்டது உலகத்தை தொடர்ந்தும் ஏமாற்றுவதற்கு அமெரிக்கா வரையும் திட்டங்கள் இதற்கு மேல் பலிக்கப்போவதில்லை. மத்திய கிழக்கு நாடுகளின் குட்டுவெளிப்பட்டுவிட்டது. அமெரிக்கா உலகத்தின் பொலிஸ்காரனாக செயற்படுவதும் இனி எந்த இறைமையுள்ள தேசமும் அங்கீகரிக்கப்போவதில்லை. அமெரிக்கா தொடர்ந்தும் ஜனநாயக நாடாக நீடிக்க வேண்டுமாயின் அதற்கு முன்னாள் உள்ள ஒரே தெரிவு. பிற நாடுகள் போன்று சர்வதேச சட்டத்திற்கு உட்படும் நாடாக தன்னை மாற்றிக்கொள்வதுதான்.