Verified Web

பிரதி சபாநாயகர் பதவிக்கு முஜிபுர் ரஹ்மானை நியமிக்குக

2018-04-19 23:20:08 MM.Minhaj

பாரா­ளு­மன்­றத்தின் பிர­தி­ ச­பா­நா­யகர் பத­விக்கு கொழும்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்­மானை நிய­மிக்­கு­மாறு ஐக்­கிய தேசியக் கட்­சி­யினர் 24 பேர் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு கடிதம் மூலம் வலி­யு­றுத்­தி­யுள்­ளனர்.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை மீதான விவா­தத்தின் போது அப்­போது பிரதி சபா­நா­ய­க­ராக இருந்த திலங்க சும­தி­பால பக்­க­சார்­பான முறையில் நடந்­து ­கொண்­ட­தாக ஐக்­கிய தேசியக் கட்­சி­யினர் பாரா­ளு­மன்­றத்­திலும் அதற்கு வெளி­யிலும் குற்றம் சுமத்தி வந்­தனர்.

இத­னை­ய­டுத்து பிரதி சபா­நா­யகர் திலங்க சும­தி­பால தனது பத­வியை இரா­ஜி­னாமா செய்தார். இந்­நி­லையில் தற்­போது பிர­தி­ ச­பா­நா­யகர் எவரும் நிய­மிக்­கப்­ப­ட­வில்லை. எதிர்­வரும் 8 ஆம் திகதி பாரா­ளு­மன்றம் மீண்டும் கூடும் போது பிரதி சப­நா­யகர் ஒரு­வரை தெரிவு செய்­வ­தற்கு நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. இதன்­படி பாரா­ளு­மன்­றத்தின் 225 பேரின் விருப்பின் பிர­காரம் பிரதி சபா­நா­யகர் நிய­மிக்­கப்­ப­டுவார்.

இந்­நி­லையில் ஐக்­கிய தேசியக் கட்சி சார்பில் கொழும்பு மாவட்­டத்தில் இருந்து தெரி­வான முஜிபுர் ரஹ்­மானை பிரதி சபா­நா­ய­க­ராக பத­விக்கு பரிந்­துரை செய்­யு­மாறு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு ஐக்­கிய தேசியக் கட்­சியின் பின்­வ­ரிசை உறுப்­பி­னர்கள் உட்­பட ஒரு சில அமைச்­சர்கள் 24 பேர்  கையொப்­ப­மிட்டு கடி­த­மொன்றை கைய­ளித்­துள்­ளனர்.

இது தொடர்பில் கொழும்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்­மா­னிடம் வின­விய போது,
பிரதி சபாநாயகர் பதவி தன்னை நியமிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியினர் பிரதமர் கடிதம் கையளித்துள்ளனர். எனினும் பிரதமர்தான் தீர்மானிக்க வேண்டும் என்றார்.