Verified Web

பலஸ்தீனத்தில் கைதிகள் தினத்தில் கைதிகளுக்கு ஆதரவாக ஊர்வலம்

2018-04-19 01:32:40 Administrator

இஸ்­ரே­லிய சிறை­க­ளிலும், தடுப்பு நிலை­யங்­க­ளிலும் சிறை­வாசம் அனு­ப­வித்­து­வரும் பலஸ்­தீன கைதி­க­ளுக்கு தமது ஆத­ர­வினைக் காண்­பிக்கும் வகையில் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்ள மேற்­குக்­கரை மற்றும் முற்­று­கைக்­குள்­ளா­கி­யி­ருக்கும் காஸா பள்­ளத்­தாக்­கிலும் ஆயி­ரக்­க­ணக்­கான பலஸ்­தீன மக்கள் ஊர்­வ­லங்­களை நடத்­தினர். 

பலஸ்­தீன கொடி­களை அசைத்­த­வாறும், நீண்­ட­கா­ல­மாக சிறை­வாசம் அனு­ப­வித்­து­வரும் கைதி­களின் புகைப்­ப­டங்­களை ஏந்­தி­ய­வாறும் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை ஜெரூ­சலம் அல்-­குத்­ஸுக்கு தெற்கே 10 கிலோ­மீற்றர் தொலைவில் அமைந்­துள்ள மத்­திய மேற்குக் கரையின் பெத்­லஹேம் நகரில் தேசிய மற்றும் மனித உரிமை அமைப்­புக்­களின் செயற்­பாட்­டா­ளர்கள் மற்றும் பாட­சாலை மாண­வர்­களும் அந்த ஊர்­வ­லத்தில் கலந்து கொண்­டனர். கைதிகள் அனை­வரும் உட­ன­டி­யாக விடு­விக்­கப்­பட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்­தனர். 

ஜெரூ­சலம் அல்-­குத்­ஸுக்கு தெற்கே சுமார் 49 கிலோ­மீற்றர் தொலைவில் அமைந்­துள்ள வட­ப­குதி மேற்குக் கரையின் நப்லஸ் நக­ரெங்­கிலும் அதே­போன்ற ஊர்­வ­லத்தில் மக்கள் கலந்து கொண்­டனர்.

கைதிகள் தினத்தை அனுஷ்­டிப்­ப­தற்­கா­கவும், இஸ்­ரே­லிய சிறை­களில் அடைக்­கப்­பட்­டுள்ள கைதி­க­ளுக்கு ஆத­ரவு தெரி­விப்­ப­தற்­கா­கவும் ஜெனின் வீதி­களில் மக்கள் குழு­மினர். 

காஸா பள்­ளத்­தாக்கில் எதிர்ப்பு இயக்­கங்­களும், கைதி­க­ளுக்­கான நிறு­வ­னமும் அல்-­கையாம் பிர­தே­சத்தில் அமர்ந்­தி­ருந்து மேற்­கொள்ளும் போராட்­டத்தில் பங்­கேற்­கு­மாறு அமைப்பு விடுத்­தி­ருந்­தன. 

இஸ்­ரே­லிய சிறை­களில் 7,000 இற்கும் அதி­க­மான பலஸ்­தீ­னர்கள் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­தோடு, மேலும் நூற்­றுக்­க­ணக்­கான பலஸ்­தீ­னர்கள் அர­சியல் கைதி­க­ளாக தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர். அர­சியல் கைதி­களை குற்­றச்­சாட்­டுக்­களோ விசா­ர­ணையோ இன்றி தடுத்து வைத்­தி­ருக்கும் கொள்­கை­யினை இஸ்ரேல் பின்­பற்றி வரு­கின்­றது. 
சில பலஸ்­தீன அர­சியல் கைதிகள் பதி­னொரு ஆண்­டு­க­ளுக்கும் அதி­க­மான காலம் அர­சியல் கைதி­க­ளாக குற்­றச்­சாட்­டுக்­களோ விசா­ர­ணையோ இன்றி தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர். 

இஸ்ரேல் பின்­பற்­றி­வரும் அர­சியல் கைதிகள் கொள்­கை­யினை எதிர்த்தும், இஸ்ரேல் சிறை­களில் கைதிகள் கடு­மை­யாக நடத்­தப்­ப­டு­வ­தற்கு எதி­ரா­கவும் இஸ்ரேல் சிறை­க­ளி­லுள்ள பலஸ்­தீன கைதிகள் அடிக்­கடி உணவுத் தவிர்ப்புப் போராட்­டங்­களில் ஈடுபட்டு வருகின்றனர். 

அறிக்கைகளின் படி 13 பலஸ்தீன சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போது இஸ்ரேல் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு, அவர்களுள் ஒன்பது பேர் விசாரணைகளின்றி அரசியல் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.