Verified Web

ஆட்டம் காணும் அடித்தளம்

A.J.M.Nilaam

சிரேஷ்ட முஸ்லிம் அரசியல் ஆய்வாளர், எழுத்தாளர்

 

2018-04-19 01:10:49 A.J.M.Nilaam

சிங்­கள மக்­க­ளுக்கு 7 மாகா­ணங்­களும் தமிழ் மக்­க­ளுக்கு 2 மாகா­ணங்­க­ளு­மாக 9 மாகா­ணங்கள் இருப்­பது போல் சிங்­கள மக்­க­ளுக்கு 18 மாவட்­டங்­களும் தமிழ் மக்­க­ளுக்கு 7 மாவட்­டங்­க­ளு­மாக தற்­போது இலங்­கையில் 25 மாவட்­டங்கள் இருக்­கின்­றன. மேல்­மா­காணம், தென் மாகாணம், வட மாகாணம், கிழக்கு மாகாணம், மத்­திய மாகாணம், வடமேல் மாகாணம், வட மத்­திய மாகாணம், சப்­ர­க­முவ மாகாணம், ஊவா மாகாணம் ஆகி­யவை 9 மாகா­ணங்­க­ளாகும். இவற்றில் வட­மா­கா­ணமும் கிழக்கு மாகா­ணமும் தமிழ் பிர­தே­ச­மாகும். ஏனைய 7 மாகா­ணங்­களும் சிங்­கள பிர­தே­சங்களாகும். வடக்கும் கிழக்கும் மட்­டுமே தமிழ் பிர­தே­ச­ங்களாகும் என்­ப­தா­லேயே பேரி­ன­வா­திகள் கிழக்கில் ஒரு மாவட்­டத்தை ஸ்தாபித்துக் கொண்டு முழுக் கிழக்­கிலும் வியா­பிக்க நினைக்­கின்­றார்கள் என்­பதைத் தமி­ழர்­களும் முஸ்­லிம்­களும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

 சிங்­க­ள­வரின் 7 மாகா­ணங்­களும் இலங்­கையின் அளவில் மூன்றில் இரண்டு பங்­கா­கவே இருக்­கின்­றன. எனினும் தமி­ழரின் இரண்டு மாகா­ணங்கள் மூன்றில் ஒரு பங்­காக இருக்­கி­றது. காரணம் தமிழ் மாகா­ணங்கள் பெரி­யவை என்­ப­தே­யாகும். கடல் பரப்­பிலும் கூட 100 க்கு 60 பகு­தி­யிலும் 40 சிங்­களப் பகு­தி­யி­லுமே இருக்­கின்­றது. காரணம் வடக்­கி­லுள்ள தீவுக் கூட்­டங்­களும் கிழக்கின் கடற்­ப­ரப்­பு­மே­யாகும்.

கொழும்பு, களுத்­துறை, கம்­பஹா, காலி, மாத்­தறை, திகா­ம­டுல்லை, ஹம்­பாந்­தோட்டை, கண்டி, மாத்­தளை, நுவ­ரெ­லியா, குரு­ணா­கலை, புத்­தளம், அநு­ரா­த­புரம், பொலன்­ன­றுவை, இரத்­தி­ன­புரி, கேகாலை, பதுளை, பண்­டா­ர­வளை ஆகிய 18 மாவட்­டங்­களும் சிங்­கள மாவட்­டங்­க­ளாகும். யாழ்ப்­பாணம், வவு­னியா, மன்னார், கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு, மட்­டக்­க­ளப்பு, திரு­கோ­ண­மலை ஆகிய 7 மாவட்­டங்­களும் தமிழ் மாவட்­டங்­களாகும். இலங்­கையில் பூர்­வீ­க­மாக வாழும் முஸ்­லிம்­க­ளுக்கு மட்டும் ஒரு மாவட்­டம் கூட இல்லை.

 முஸ்­லிம்­க­ளுக்­கான அந்த அடிப்­படை உரி­மையைத் தான் பேரி­ன­வா­திகள் திட்­ட­மிட்டு இல்­லாமல் செய்­தி­ருக்­கி­றார்கள். இலங்­கை­யிலே முஸ்­லிம்­களின் சனப் பரம்பல் கூடிய அந்த கிழக்குப் பிர­தே­சத்தில் பேரின குடி­யேற்­றத்தைப் பர­வ­லாக நிகழ்த்தி கப­ளீ­கரம் செய்து கொண்­டார்கள். அதை மீட்­கவே அஷ்ரப் கரை­யோர மாவட்டம் எனும் கோரிக்­கையை முன்­வைத்தார். அவர் வாழ்ந்­த­வரை அது கிட்­டா­தது போலவே இப்­போதும் கிடப்பில் இருக்­கி­றது. இப்­போது அதற்­கான தேவையை இல்­லா­ம­லாக்­கவே பேரி­ன­வா­திகள் கல்­முனை, பொத்­துவில், சம்­மாந்­துறை ஆகிய தேர்தல் தொகு­தி­களில் அதிக பகு­தி­களை அகற்றி ஒரு சிங்­கள ஆச­னத்­தோடு மேலும் 3 சிங்­கள ஆச­னங்­களை அமைக்­கப்­பார்க்­கி­றார்கள்.

1949 ஆம் ஆண்டு முதல் கிழக்கில் குடி­ய­மர்த்­தப்­பட்ட சிங்­கள சமூகம் ஓர­ளவு பெரு­கி­யதும் அப்­போது மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் ஒரு பகு­தி­யாக­வி­ருந்த அம்­பாறை நகரை முன்­னி­றுத்தி திகா­ம­டுல்லை எனும் மாவட்­ட­மாக ஆக்கிக் கொண்­டார்கள். 1961 ஆம் ஆண்டு இது நிகழ்ந்­தது. பின்னர் 1987 ஆம் ஆண்டு புதிய உள்­ளூ­ராட்சி மன்ற எல்­லைகள் வகுக்­கப்­பட்டு பரம்­ப­ரை­யாக சிறு­பான்­மைகள் வாழ்ந்த சில பகு­திகள் குடி­யே­றியோரின் பகு­தி­க­ளோடு இணைக்­கப்­பட்­டன. இதனால் பெரும்­பான்மைச் சமூ­கத்தின் பிர­தி­நி­தித்­துவம் அதி­க­ரிக்­கவும் சிறு­பான்­மை­களின் பிர­தி­நி­தித்­துவம் குறை­யவும் செய்­தன.

 தற்­போது இதே மாவட்­டத்தில் மீண்­டு­மொரு எல்லை நிர்­ண­யமும் நிகழ்ந்­துள்­ளது. சிறு­பான்­மைகள் அதி­க­மாக வாழும் கல்­முனை, பொத்­துவில், சம்­மாந்­துறை ஆகிய தேர்தல் தொகு­தி­களின் பெரும்­ப­கு­திகள் பிரிக்­கப்­பட்டு அதிக சிங்­க­ளவர் வாழும் அம்­பாறை தேர்தல் தொகு­தி­யோடு இணைக்­கப்­பட்­டுள்­ளன. சிங்­கள மக்­க­ளுக்கு இதனால் மூன்று பாரா­ளு­மன்ற ஆச­னங்கள் கிடைத்­து­விடும்.

ஆக, இந்த தொகுதி நிர்­ண­யத்­துக்­குமுன் தமது தொகு­தி­களில் பெரும்­பான்­மை­யாக வாழ்ந்த முஸ்­லிம்கள் இதனால் அப்­ப­கு­தி­களில் சிறு­பான்­மை­யாக வாழும் நிலையே ஏற்­பட்டு விடும். இலங்­கையில் கல்­முனை, பொத்­துவில், சம்­மாந்­துறை, மூதூர் ஆகிய நான்கு தேர்தல் தொகு­தி­யி­லேயே முஸ்­லிம்கள் அதி­க­மாக வாழ்­கி­றார்கள். கல்­முனை, பொத்­துவில், சம்­மாந்­துறை ஆகிய மூன்றும் திகா­ம­டுல்லை எனும் அம்­பாறை மாவட்­டத்தில் இருக்­கையில் மூதூர் மட்டும் திருக்­கோ­ண­மலை மாவட்­டத்தில் முஸ்­லிம்கள் வாழும் நிலத்தின் பரப்­ப­ள­வையும் குறைத்துத் தொகுதி ரீதியில் முஸ்­லிம்­களின் சனப் பரம்­ப­லையும் குறைக்கப் பார்க்­கி­றார்கள்.

 இணைந்த வடக்கு கிழக்கில் நிலத் தொடர்­பற்ற முஸ்லிம் அதி­கார அலகு என முதலில் கோரிய அஷ்ரப் பின்னர் வடக்கு கிழக்கின் இணைப்­போடு கிழக்கில் மட்டும் நிலத்­தொ­டர்­பற்ற முஸ்லிம் அதி­கார அலகு என்றார். இறு­தி­யாக அம்­பாறை மாவட்­டத்­துக்குள் கல்­முனை, பொத்­துவில், சம்­மாந்­துறை ஆகிய தேர்தல் தொகு­தி­களை உள்­ள­டக்­கியே முஸ்லிம் அதி­கார அலகு என்றார். இதுவே அவர் முன்வைத்த கரை­யோர மாவட்­ட­மா­கவும் இருந்­தது. புதிய தொகுதி நிர்­ண­யப்­படி அஷ்­ரபின் கோரிக்­கை­க­ளுக்கு ஆப்பு வைக்கும் சூழ்ச்சி நடை­பெ­று­வ­தா­கவே தெரி­கி­றது. எனவே அஷ்­ர­பிடம் முஸ்லிம் சமூக தனித்­துவ அர­சி­யலில் அரிச்­சு­வடி படித்­த­வர்கள் இதில் விட்டுக் கொடுத்­து­வி­டக்­கூ­டாது. கல்­முனை, பொத்­துவில், சம்­மாந்­து­றையும் கொண்ட ஒரு மாவட்­டத்தைக் கோர வேண்டும். சிறு­பான்மை எனும் ரீதியில் தமிழ் சமூ­கமும் இதில் முஸ்­லிம்­க­ளோடு ஒத்­தி­ணைய வேண்டும்.

 யாழ். மாவட்­டத்தில் கிளி­நொச்­சியைப் போன்றும் வன்னி மாவட்­டத்தில் மன்னார் மற்றும் முல்­லைத்­தீவு போன்றும் அம்­பாறை மாவட்­டத்தில் கல்­முனை தேர்தல் மாவட்­ட­மொன்று தமிழ் பேசும் மக்­க­ளுக்கு அவ­சி­ய­மாகும். இதில் முஸ்­லிம்­களும் தமிழ் மக்­களும் கட்சி பேதங்­களை மறந்து ஈடு­ப­ட­வேண்டும். 

ஏனெனில், முஸ்­லிம்­களும் தமி­ழர்­களும் முழு­மை­யான இணக்­கப்­பாட்டைக் காணும் வரை முதலில் தமிழ்­பி­ர­தேச அடித்­த­ளத்தை காத்துக் கொள்ள வேண்டும். இன்றேல் நமது அபி­லா­சை­க­ளையும் உரி­மை­க­ளையும் முதன்­மைப்­ப­டுத்தி நாம் எடுக்கும் தீர்­மா­னங்கள் பேரினக் குடி­யே­றி­களின் வாக்குப் பெருக்­கத்தால் வலு­வி­ழந்து அவர்­களின் ஆதிக்­கத்­துக்கு உள்­ளாக வேண்­டி­வரும். இது முதலில் அம்­பாறை மாவட்­டத்தில் பேரி­ன­வா­திகள் காலூன்றி, பின்னர் கட்டம் கட்­ட­மாக முழுக்­கி­ழக்­கையும் எதிர்­கா­லத்தில் தம் கைவ­ச­மாக்கும் முன்­னேற்­பாடு என்­பதைத் தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

 வடக்கும் கிழக்கும் தமிழ்ப் பிர­தேசம். இங்கு வாழும் தமி­ழரும் முஸ்­லிம்­களும் தத்­த­மது சுய­நிர்­ணய உரி­மை­க­ளையும் தனித்­து­வங்­க­ளையும் பேண வேண்­டு­மாயின் இங்கு தத்­த­மது அர­சியல் அதி­கா­ரங்­களை உறு­திப்­ப­டுத்திக் கொள்­வது அவ­சி­ய­மாகும். உருப்­ப­டி­யான பேச்­சு­வார்த்­தையும் பொருத்­த­மான உடன்­பாடும் இன்றேல் கிழக்கு பறி­போ­கலாம். இணைக்­கப்­ப­டுமுன் தத்­த­மது தேர்தல் தொகு­தி­களில் பெரும்­பான்மை அங்­க­மாக வாழ்ந்த முஸ்­லிம்கள் இதனால் சிங்­கள தொகு­தி­களில் சிறு­பான்­மை­க­ளாக வாழும் நிலை ஏற்­பட்டு விடும். இலங்­கையில் முஸ்­லிம்­களின் தொகை கூடிய 4 தேர்தல் தொகு­திகள் இருக்­கின்­றன. கல்­முனை, பொத்­துவில், சம்­மாந்­துறை, மூதூர் இவற்றில் மூன்று அம்­பாறை மாவட்­டத்­திலும் ஒன்று திரு­கோ­ண­மலை மாவட்­டத்­திலும் இருக்­கின்­றன. ஆக அம்­பாறை மாவட்­டத்­தி­லேயே முஸ்­லிம்கள் வாழும் நிலப்­ப­ரப்­ப­ள­வையும் குறைத்து முஸ்­லிம்­களின் இணை­வையும் நீக்­கப்­பார்க்­கி­றார்கள்.

 இணைந்த வடக்கு கிழக்கில் நிலத்­தொ­டர்­பற்ற முஸ்லிம் அதி­கார அலகு என முதலில் கோரிய அஷ்ரப் பின்னர் வடக்கு கிழக்கில் இணைப்­போடு கிழக்கில் மட்­டுமே நிலத் தொடர்­பற்ற முஸ்லிம் அதி­கார அலகு என்றார். இறு­தி­யாக அம்­பாறை மாவட்­டத்­துக்குள் கல்­முனை, பொத்­துவில், சம்­மாந்­துறை ஆகிய தேர்தல் தொகு­தி­களை உள்­ள­டக்­கியே முஸ்லிம் அதி­கார அலகு என்றார். இதுவே அவர் முன்­வைத்த கரை­யோர மாவட்­ட­மா­கவும் இருந்­தது.

 வடக்கும் கிழக்கும் பிரிந்தே இருக்க வேண்டும் எனப் பேரி­ன­வா­திகள் ஏன் அடம்­பி­டிக்­கி­றார்கள். அப்­படி இருந்தால் தான் கிழக்கை சிறிது சிறி­தாகக் காலப்­போக்கில் விழுங்­கி­வி­டலாம் என்­ப­தற்­கா­க­வே­யாகும். பூர்­வீக சரித்­திரம் என்­கி­றார்கள். பூமி புத்­தி­ரர்கள் என்­கிறார்கள், புர­ாதன சின்­னங்கள் என்­கி­றார்கள், அகழ்­வா­ராய்ச்சி செய்­கி­றார்கள், தமது மத சாசன இன­மொழி ஆகி­ய­வற்­றுக்கே முன்­னு­ரிமை கொடுக்­கி­றார்கள். கண்ட இட­மெல்லாம் சிலை வைக்­கி­றார்கள். சில பிக்­குகள் அதி­கா­ரத்தைக் கையில் எடுத்து முஸ்­லிம்கள் மீது அடா­வ­டித்­தனம் புரி­கி­றார்கள். அர­சியல் தலை­மை­களும் பாது­காப்­புத்­து­றை­களும் அவர்­களின் முன்னால் செய­லி­ழந்­தி­ருக்­கின்­றன.

 இவற்­றை­யெல்லாம் கிழக்கில் பெரும்­பான்­மை­யாக உள்ள தமிழ், முஸ்லிம் சமூ­கங்கள் எண்ணிப் பாராது தொடர்ந்தும் தமக்குள் போராடிக் கொண்­டி­ருப்­பார்­க­ளாயின் பேரி­ன­வா­தத்தின் பிடி­யி­லி­ருந்து கிழக்கை விடு­விக்கும் நிலைப்­பாட்டைக் கைவிட்டு விட வேண்டும். ஏனெனில், தமி­ழர்­களும் முஸ்­லிம்கள் தனித்­த­னி­யாகப் போராடி அதை சாதிக்­க­மு­டி­யாது.

 அஷ்ரப் இதனால்தான் இணைந்த வடக்கு கிழக்கில் முஸ்லிம் அதி­கார அலகு எனும் ஒரு தீர்வை முன்­வைத்­தி­ருந்தார். இதை தமிழ் ஆயுதப் பேரா­ளிகள் நிரா­க­ரித்­தி­ருத்­தி­ருந்த போதும் தற்­போ­தைய ஜன­நா­யகத் தமிழ் தலை­வர்கள் ஏற்றுக் கொண்­டி­ருக்­கி­றார்கள். 

வடக்கும் கிழக்கும் இணைக்­கப்­பட்டால் தமி­ழரின் ஆதிக்கம் வலுத்து விடும் எனப் பல முஸ்­லிம்கள் வாதா­டு­கி­றார்கள். நாம் போராடிப் பல தியா­கங்கள் செய்து பெற்ற உரி­மையில் எம்மை ஆத­ரிக்­கா­மலும் ஒத்­து­ழைக்­கா­மலும் எதிர்­பக்கம் சார்ந்தும் நின்ற முஸ்­லிம்­க­ளுக்கு பங்கு வழங்­கு­வதா எனப் பல தமி­ழர்கள் வாதா­டு­கி­றார்கள். முஸ்­லிம்­களால் சிங்­களப் பெரும்­பான்­மைக்­குட்­பட்டு வாழ முடி­யு­மாயின் ஏன் தமிழ் பெரும்­பான்­மைக்­குட்­பட்டு வாழ முடி­யாது எனக்­கேட்­கிறேன்.

தமிழ் ஆயுதப் போரா­ளி­களின் மனோ­நி­லையைப் போன்றே ஜன­நா­யகத் தமிழ்த்­த­லை­வர்­களின் மனோ­நி­லையும் இருக்கும் எனும் எண்­ணத்­தி­லி­ருந்தும் முஸ்­லிம்கள் விடு­ப­ட­வேண்டும். தம்மை விடவும் பெரிய சமூ­கத்­திடம் உரி­மை­கோரும் தமிழ்த் தலை­வர்கள் முஸ்­லிம்­க­ளுக்கு எப்­படி அதை மறுப்­பது என்­ப­தையும் கூற வேண்டும்.

அஷ்ரப் கிழக்கில் முஸ்லிம் அலகைக் கோரி­யது பிரி­வி­னையோ தனி­நாடோ அல்ல. முஸ்­லிம்கள் தனித்­துவப் பாது­காப்­போடு வாழ்­வ­தற்­கான ஏற்­பா­டாகும். இதை செல்­வாவே ஏற்­றுக்­கொண்­டது சிறந்த ஆதா­ர­மாகும். காரணம் தமி­ழர்­களின் தனித்­து­வத்தை சிங்­கள மக்­க­ளிடம் கோரிய அவர் முஸ்­லிம்­களின் தனித்­து­வத்­தையும் ஏற்றுக் கொண்­ட­தே­யாகும். சிங்­களப் பேரி­ன­வா­தத்தைப் போல் தமிழ் பேரி­ன­வா­த­மாக தனது நிலைப்­பாடு ஆக­லா­காது என்றே அவர் கரு­தினார்.

 எனினும், அதி­காரம் கிடைத்­ததும் சிங்­களப் பேரி­ன­வாதம் உரு­வா­கி­யதைப் போல் ஆயுதம் கிடைத்­ததும் தமிழ்ப்­பே­ரி­ன­வாதம் உரு­வா­கி­யது துர­திஷ்­ட­வ­ச­மே­யாகும். முஸ்­லிம்­க­ளா­யினும் கூட தாம் சனப்­ப­ரம்­பலில் மிகைத்து வாழும் பிர­தே­சங்­களில் முஸ்லிம் பேரி­ன­வா­தத்தைக் கையாளக் கூடாது. ஏனெனில் பல்­லின நாட்டில் நிலவும் நிலைப்­பாடும் மனித உரிமை மீற­லுக்கே வழி­வ­குக்கும்.

 போர் வீரர்­களில் 100 வீதம் சிங்­க­ள­வரும் தமிழ் ஆயுதப் போரா­ளி­களில் 100 வீதம் தமி­ழரும் இருந்து கொண்டு நேர­டி­யாக இன­ரீ­தியில் மோதிக் கொண்டால் என்­னாகும். ஆயுத இன மோதல் அல்­லவா? இரண்டும் நில மீட்­புக்­கா­கவே கொடிய பேர­ழி­வு­க­ளுக்கு உள்­ளா­கின.

யுத்த வெற்­றியே தீர்வு என இப்­போது சிங்­களப் பேரி­ன­வாதம் நினைக்­கின்­றது. இந்­நி­லையில் முஸ்­லிம்­க­ளுக்கு எதுவும் தேவை­யில்லை என தமிழ் தரப்பு நினைப்­பது தமிழ்ப் பேரி­ன­வாதம் அல்­லவா? சற்று சிந்­திக்க வேண்டும். பேரி­ன­வா­தி­களால் 1976 ஆம் ஆண்டு வட்­டுக்­கோட்டை மகா­நாடு தாக்­கப்­பட்­டது. 1981 ஆம் ஆண்டு யாழ்ப்­பாண மாவட்­ட­சபைத் தேர்தல் குழப்­பப்­பட்­ட­தோடு நூல் நிலை­யமும் எரிக்­கப்­பட்­டது. 1983ஆம் ஆண்டு கொழும்பில் அப்­பாவித் தமி­ழர்கள் கொடூ­ர­மாகத் தாக்­கப்­பட்டு வாழ்­வா­தா­ரங்கள் அழிக்­கப்­பட்­டன. அப்­போது யாழ்ப்­பா­ணத்­துக்குப் போ என்றே தமி­ழர்கள் விரட்­டப்­பட்­டனர். 

அது ஏன் யாழ்ப்­பா­ணத்­துக்குப் போகு­மாறு சிங்­களப் பேரி­ன­வா­திகள், அப்­பாவித் தமி­ழர்­களை விரட்­டி­னார்கள். அங்­கு­தானே ஒல்­லாந்தர் காலத்தில் தனி இனப்­பி­ர­தேச காப்­பீட்டுச் சட்­டத்தை தேச வழமை எனும் பெயரால் வழங்­கி­யி­ருந்­தார்கள். இது­போன்றே ஒல்­லாந்தர் தமது படையில் இருந்த மலாய் வீரர்­க­ளுக்கும் ஒரே சமூ­க­மா­கத்­தி­ரண்டு வாழும் கம்­பொங் எனும் இடங்­க­ளையும் வழங்­கி­யி­ருந்­தார்கள். 

அஷ்­ரபால் பிர­தமர் பிரே­ம­தாச ஜனா­தி­பதித் தேர்­தலில் வென்­றபின் அவர் தமிழ் ஆயுதப் போரா­ளி­க­ளிடம் ஆயு­தங்­க­ளையும் உத­வி­க­ளையும் வழங்­கி­யதால் வடக்கு முஸ்­லிம்கள் விரட்­டப்­பட்­டார்கள். கிழக்கு முஸ்­லிம்கள் கொடூ­ர­மா­கத்­தாக்­கப்­பட்­டார்கள். இந்­நி­லையில் அரசின் மீதும் ஆயு­தப்­போ­ரா­ளி­களின் மீதும் முஸ்­லிம்­களின் பாது­காப்பு விட­யத்தில் அதி­ருப்­தியும் அச்­சமும் கொண்டார். இக்­கால கட்­டத்­தி­லேயே இவ்­வாறு நிகழும் என முன்­கூட்­டியே எண்­ணி­யி­ருந்த அஷ்ரப் கரை­யோர மாவட்­டத்­தையும் முஸ்லிம் அதி­கார அல­கையும் முன்­வைத்­தி­ருந்தார். 

வடக்­கையும் கிழக்­கையும் பிரித்து விட்­டதால் முஸ்லிம் அலகும் இல்லை என்­றா­கி­விட்­டது. இப்­போது எல்லை நிர்­ணயக் கமிஷன் மூலம் கல்­முனை, பொத்­துவில், சம்­மாந்­துறை ஆகிய தேர்தல் தொகு­தி­களின் பெரும் பகுதி அகற்­றப்­பட்டு மூன்று சிங்­களத் தொகு­திகள் உரு­வாக்­கப்­ப­டு­மாயின் அஷ்­ரபின் கரை­யோர மாவட்­டக்­கோ­ரிக்­கையும் கரைந்தே போய்­விடும். 

தற்­போது நாடு முழுக்க முஸ்­லிம்கள் தாக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள். அர­சி­னதும் உரிய அதி­கா­ரி­க­ளி­னதும் பல்­லின உணர்வு திருப்­தி­யா­ன­தாக இல்லை. காவல்­து­றையும் உத­வ­வில்லை. பெரும்­பான்மைச் சமூகம் 74% வீத­மாக வாழு­கையில் காவல்­து­றை­களில் அவர்­களே 100% வீத­மாக இருக்­கி­றார்கள். முஸ்­லிம்கள் நாடு முழுக்க சிதறி சிங்கள மக்கள் மத்தியில் சிறு சிறு தொகையினராக வாழுகின்றார்கள். ஆக அஷ்ரப் வாழ்ந்த காலத்தைவிடவும் இப்போது முழு இலங்கையிலுமே முஸ்லிம் சனப் பரம்பல் அதிகமாக வாழும் கிழக்கில் முஸ்லிம் அதிகார அலகு தேவைப்படவே செய்கிறது. காரணம் இலங்கையில் உரிய பாதுகாப்புக்கு உத்தரவாதமோ ஏற்பாடோ இன்றி சிதறிவாழும் முஸ்லிம்களுக்குக் கண்டிப்பாக ஒரு பாதுகாப்புத் தளம் தேவையாகும். வடக்கு கிழக்கு தமிழ் மக்களோடு பேசி இதற்கு வகை செய்ய முயற்சிக்காமல் வடக்கு, கிழக்கு இணைப்புக்கு எதிராக நிற்பது பேரினவாதிகளுக்கு வழங்கும் ஒத்துழைப்பேயாகும். 

அஷ்ரபின் இழப்புக்குப்பின் எம்.டி.ஹஸன் அலியே அடிக்கடி முஸ்லிம் அதிகார அலகையும் கரையோர மாவட்டத்தையும் வலியுறுத்திக் கொண்டிருக்கிறார். அதிர்ஷ்டவசமாக பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் தொகுதி நிர்ணயக் குழுவில் இடம் பெற்றிருந்தார். அதனால் தான் கரையோர மாவட்டம் கரையப்போகும் விடயம் அம்பலத்துக்கு வந்தது. இன்றேல் யாருக்கும் தெரியாது. ரவூப் ஹக்கீம் மட்டுமன்றி இது பற்றி அஷ்ரப்பின் அரசியல் சீடர்களான அதாவுல்லாஹ், ஹிஸ்புல்லாஹ், ரிஷாத் பதியுதீன், பஷீர் ஷேகு தாவூத் ஆகியோரும் முக்கிய கவனத்தைச் செலுத்துவார்கள் என நினைக்கிறேன். ஏனெனில் இலங்கை முஸ்லிம்களின் தனித்துவத்துக்கான ஆட்புல வலிமை அம்பாறை மாவட்டத்திலேயே இருக்கிறது. இலங்கை முஸ்லிம்கள் அதைப் பறிகொடுப்பார்களாயின் தமது அடையாளத்தையே இழந்து விடுவார்கள்.