Verified Web

மியன்­மாரில் மீளக் குடி­யே­றி­யது முத­லா­வது ரோஹிங்ய குடும்பம்

2018-04-17 00:36:13 Administrator

ரோஹிங்ய மக்கள் மியன்­மா­ருக்கு மீளத் திரும்­பு­வ­தற்­கான பாது­காப்பு போதிய அளவில் இல்லை என ஐக்­கிய நாடுகள் சபை அறி­வித்­துள்ள நிலையில், கொடூ­ர­மான இரா­ணுவ நட­வ­டிக்­கை­க­ளி­லி­ருந்து தப்­பித்துக் கொள்­வ­தற்­காக பங்­க­ளா­தே­ஷுக்கு தப்பிச் சென்ற சுமார் ஏழு இலட்சம் அக­தி­களுள் முத­லா­வது குடும்பம் மியன்­மா­ருக்கு வந்து சேர்ந்­துள்­ள­தாக மியன்மார் அர­சாங்கம் அறி­வித்­துள்­ளது.


கடந்த ஆகஸ்ட் மாதம் வடக்கு ரக்கைன் மாநி­லத்தில் மியன்மார் இரா­ணுவம் மேற்­கொண்ட கொடூரத் தாக்­குதல் கார­ண­மாக நாடற்ற முஸ்லிம் சிறு­பான்­மை­யினர் அழுக்கு நிறைந்த மிக மோச­மான சூழ­லுள்ள பங்­க­ளாதேஷ் முகாம்­களில் வாழ்ந்து வரு­கின்­றனர். 


மியன்­மாரில் இனச்­சுத்­தி­க­ரிப்பு மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தாக ஐக்­கிய நாடு­கள் சபை தெரி­வித்­துள்ள போதிலும், அதனை மறுத்­துள்ள மியன்மார் அர­சாங்கம் ரோஹிங்ய ஆயு­த­தா­ரி­க­ளுக்கு எதி­ரா­கவே நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­வ­தாகத் தெரி­வித்­தள்­ளது. 


பங்­க­ளா­தே­ஷுக்கும் மியன்­மா­ருக்கும் இடையே மீள திருப்­பி­ய­னுப்­பு­த­லுக்­கான உடன்­பாடு கடந்த ஜன­வ­ரியில் எட்­டப்­பட்ட போதிலும் அதற்­கான ஆயத்­தங்­களில் ஈடு­ப­ட­வில்லை என இரு நாடு­களும் பரஸ்­பரம் முற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்­துள்­ளன. 


ரோஹிங்ய அக­திகள் குடும்­ப­மொன்று மீளத் திரும்­பி­யுள்­ள­தாக கடந்த சனிக்­கி­ழ­மை­யன்று மியன்மார் தெரி­வித்­தது. 


இன்று காலை ரக்கைன் மாநி­லத்­தி­லுள்ள ஐந்து அங்­கத்­த­வர்­களைக் கொண்ட ரோஹிங்ய குடும்­ப­மொன்று ரக்கைன் மாநிலத்தின் தௌங்­பி­யோ­லே­ட­வெயி நக­ரத்தில் அமைந்­துள்ள அகதி முகா­முக்கு வந்து சேர்ந்­தாக மியன்மார் அசாங்க தகவல் குழுவின் உத்­தி­யோ­க­பூர்வ முகநூல் பக்­கத்தில் வெளி­யிட்ட அறிக்­கை­யொன்றில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 


ரோஹிங்ய இனம் என்­பதை அர­சாங்கம் அங்­கீ­க­ரிக்­காத கார­ணத்­தினால் ரோஹிங்யா என்ற சொற்­பி­ர­யோ­கத்தைத் தவிர்த்து 'முஸ்லிம்' குடும்பம் என்ற சொற்­ப­தமே அப் பதிவில் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. 


முன்னர் அவர்கள் இங்கு வசித்­த­­வர்­களா என்­பதை உறு­திப்­ப­டுத்­தி­யதன் பின்னர் தேசிய அடை­யாள அட்­டை­யினை வழங்­கினர். குறித்த அட்டை அவர்­களை பிரஜை அங்­கீ­க­ாரத்­திற்கு சற்றுக் குறை­வான தன்­மை­யினைக் கொண்­டுள்­ள­தோடு தமக்கு முழு­மை­யான உரிமை வழங்­கப்­பட வேண்டும் என்­ப­தற்­காக முன்னர் ரோஹிங்­கிய தலை­வர்கள் அதனை ஏற்க மறுத்­தி­ருந்­தனர். அர­சாங்க அறிக்­கைக்கு அரு­கிலில் பிர­சு­ரிக்­கப்­பட்­டி­ருந்த புகைப்­ப­டத்தில் ஒரு ஆணும், இரண்டு பெண்­களும், ஒரு இளம் பெண்ணும், ஒரு பையனும் தேசிய அடை­யாள அட்­டை­யி­னை­யினைப் பெற்றுக் கொள்­வதும், ஆரோக்­கிய நிலை­தொ­டர்பில் அவர்கள் பரி­சோ­திக்­கப்­ப­டு­வது போன்ற புகைப்­ப­டங்களும் பிர­சு­ரிக்­கப்­பட்­ட­டுள்­ளன. 
மங்டௌ நகரில் வசிக்கும் அவர்­க­ளது உற­வி­னர்­க­ளுடன் 'தற்­கா­லி­க­மாக' தங்­கு­வ­தற்­காக அக்குடும்பம் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ள­தாகத்  தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. 


இதற்குப் பின்னர் மீண்டும் மியன்­மா­ருக்கு வரு­வோ­ருக்கு என்ன ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளன என்­பது போன்ற திட்­டங்கள் எதுவும் அந்தப் பதிவில் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­க­வில்லை. 


பல தசாப்­தங்­க­ளாக சிறுபான்மையினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சட்டரீதியான பாகுபாடு மற்றும் அநீதிகள் தொடர்பில் மியன்மார் முறையான எதனையும் மேற்கொள்ளாத நிலையில், ரோஹிங்ய மக்கள் மீளத் திரும்புவது உசிதமானதல்ல என ஐக்கிய நாடுகள் சபையும், ஏனைய உரிமைக் குழுக்களும் எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையிலேயே இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.