Verified Web

செப்டெம்பரில் மாகாண தேர்தலை நடத்துவது நிச்சயமில்லை

2018-04-16 23:25:11 ARA.Fareel

மாகா­ண­சபை தேர்தல் எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம்  நடை­பெறும்  என என்னால் உறுதி  செய்ய முடி­யாது.  மாகாண சபை தேர்தல் தொகுதி எல்லை  நிர்­ணய  அறிக்கை பாரா­ளு­மன்­றத்தில்  சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.  அந்த அறிக்கை பாரா­ளு­மன்­றத்தில்  2/3 பெரும்­பான்­மை­யினால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்டால் குறிப்­பிட்ட  காலத்தில் தேர்­தலை
 நடாத்­து­வதில்  எந்தப் பிரச்­சி­னை­யு­மில்லை என மாகாண சபைகள்  மற்றும்  உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைசர் முஸ்­தபா  தெரி­வித்தார்.


நடை­பெ­ற­வுள்ள மாகாண சபைத்­தேர்தல் தொடர்பில்  கருத்து தெரி­விக்­கை­யிலே  அவர் இவ்­வாறு  கூறினார்.  அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரி­விக்­கையில் எல்லை நிர்­ணய அறிக்கை  2/3 பெரும்­பான்­மை­யினால்  அங்­கீ­க­ரிக்­கப்­ப­டா­விட்டால்  பிர­த­மரின் தலை­மை­யி­லான  கமிட்­டி­யினால்  தீர்­மானம்  மேற்­கொள்­ளப்­பட வேண்டும்.  எல்லை  நிர்­ண­யத்தில்  சில பிரச்­சி­னைகள் உள்­ளன.  எல்லை  நிர்­ண­யத்தில் ஏதும் திருத்­தங்கள்  செய்­யப்­பட வேண்­டு­மென்றால்  கட்­சித்­த­லை­வர்கள்  அது  பற்றி ஆராய்ந்து  திருத்­தங்­களை  முன்­வைக்­கலாம்.


 உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­த­லை­ய­டுத்து  அர­சியல்  கட்­சிகள்  ஒழுக்­க­முடன்  செயற்­ப­டா­மையே  பல பிரச்­சி­னை­க­ளுக்குக்  கார­ண­மா­கி­யுள்­ளன.  பணத்­துக்­காக  உறுப்­பி­னர்கள்  வேறோர்  கட்­சிக்கு ஆத­ர­வ­ளிக்­கின்­றனர்.  இலஞ்சம்  பெற்றுக் கொண்டு ஆத­ரவு வழங்­கு­கிறார். அர­சியல் கட்­சிகள் தமது உறுப்­பி­னர்கள் பணம் பெற்­றுக்­கொண்டு அடுத்த கட்­சிக்குப் பாய்­வதை  நிறுத்திக் கொள்ள  வேண்டும். இத­னா­லேயே  பெரும்­பான்­மை­யுள்­ள­வர்­க­ளுக்கு  தலைவர் பதவி  கிடைக்­காமல் போகி­றது.


உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் உறுப்­பினர் எண்­ணிக்கை  அதி­க­ரித்­துள்­ளது.  இந்த எண்­ணிக்­கையைக்  குறைத்துக்  கொள்ள வேண்டும் என  ஜனா­தி­பதி கூறி­யி­ருக்­கிறார்.  அவ்­வாறு குறைத்துக் கொள்­ள­மு­டியும்.  வட்­டா­ரங்­களின் எண்­ணிக்­கையை குறைப்­பதன் மூலம்  எண்­ணிக்­கையை  குறைக்­கலாம்.


மாகா­ண­சபை தேர்தல் தொகுதி எல்லை நிர்­ணய அறிக்கை பாரா­ளு­மன்­றத்தில்  சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள  நிலையில்  இந்த அறிக்­கையை  அங்­கீ­க­ரித்­துக்­கொள்ளும்  முயற்­சியில்  கட்சித் தலை­வர்கள்  மும்­மு­ர­மாக செயற்­ப­ட­வேண்டும்.  மாகாண சபைத்­தேர்­தலை புதிய தேர்தல்  முறை­யி­லன்றி   பழைய  தேர்தல் முறை­யிலே நடத்த வேண்டும் என அர­சியல்  கட்­சிகள்  கோரி­வ­ரு­கின்­றன.


 எந்­த­வொரு  புதிய  முறையை  அமுல்­ப­டுத்­தும்­போதும்  குறைகள்  ஏற்படலாம், பிரச்சினைகள்  உருவாகலாம். அவ்வாறான பிரச்சினைகள் குறைகள்  மீண்டும்  ஏற்படாதவகையில்  மாற்றங்களை  செய்ய வேண்டும்.  எந்தவொரு  முறையிலும் முதன் முதல்  சிக்கல்கள்  ஏற்படுவது  வழமையாகும் என்றார்.