Verified Web

இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் வெட்கம்

2018-04-16 22:41:43 Administrator

ஜம்மு காஷ்­மீ­ரி­லுள்ள கது­வாவில் பாலியல் பலாத்­காரம் செய்­யப்­பட்டு, சித்­தி­ர­வ­தைக்­குள்­ளாக்­கப்­பட்டு,         எட்டு வயது சிறுமி ஆசிபா படு­கொலை செய்­யப்­பட்ட சம்­பவம் முழு உல­கை­யுமே பேர­திர்ச்­சியில் ஆழ்த்­தி­யுள்­ளது.

கிரா­மத்தின் மையத்தில் உள்ள ஒரு கோயிலில் அவளை ஒரு வாரம் அடைத்­து­வைத்து, தொடர்ந்து மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்­காரம் செய்­தி­ருக்­கி­றார்கள். அதில் ஒரு பொலிஸ் அதி­கா­ரியும் சம்­பந்­தப்­பட்­டி­ருக்­கிறார். வேலியே  பயிரை மேய்ந்த கதை­யாக இதில் காவல் துறை­யி­னரும் துணை நின்­றி­ருக்­கி­றார்கள் என்­பது மிகப் பெரிய சோகம்.

காஷ்­மீ­ரத்தின் குளிர்­காலத் தலை­ந­க­ரான ஜம்­மு­வி­லி­ருந்து 88 கி.மீ. தொலைவில் உள்ள கதுவா கிரா­மத்தைச் சேர்ந்­தவள் சிறுமி ஆசிபா. பக்­கர்வால் சமூ­கத்தைச் சேர்ந்­தவள். ஆடு, மாடு, குதிரை மேய்க்கும் சமூகம் இது. இந்தச் சமூ­கத்­தி­னரை அந்தப் பகு­தி­யி­லி­ருந்து வெளி­யேற்ற வேண்டும் என்ற நோக்கில், ஜம்­முவில் பெரும்­பான்­மை­யாக வசிப்­ப­வர்­களில் ஒரு தரப்­பினர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்­தி­ருக்­கி­றார்கள்.

இதில் தீவி­ர­மாக ஈடு­பட்­டு­வந்த சஞ்­சி­ராம்தான் பிர­தான குற்­ற­வாளி. அவ­னது கட்­டுப்­பாட்டில் இருக்கும் கோயிலில் வைத்­துதான் அச்­சி­றுமி கொல்­லப்­பட்­டி­ருக்­கிறாள்.

இச் சம்­பவம் நடந்து மூன்று மாதங்கள் கடந்­து­விட்ட பின்­னர்தான் அது­பற்றி உல­கத்தின் கவனம் ஈர்க்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

ஜன­வரி 10 அன்று, தங்கள் குதி­ரை­களைத் தேடிக்­கொண்டு அருகில் உள்ள காட்­டுக்குச் சென்ற சிறு­மியை, சஞ்­சிராம் தலை­மை­யி­லான கும்பல் கடத்­திச்­சென்று கோயிலில் அடைத்­து­வைத்­தது. மீரட்­டி­லி­ருக்கும் தன் நண்­பனை அழைத்து இந்தக் குற்­றத்தில் பங்­கேற்­க­வைத்­தி­ருக்­கிறான் சஞ்­சிராம். இறு­தியில், சிறு­மியைக் கொல்ல முடி­வெ­டுத்­த­வர்கள், உள்ளூர் பொலிஸ் அதி­காரி தீபக் கஜோ­ரி­யா­விடம் ஆலோ­சனை கேட்­டுள்­ளனர். அப்­போது தானும் அந்தச் சிறு­மியைப் பலாத்­கா­ரம்­செய்ய விரும்­பு­வ­தாகச் சொன்ன தீபக், அந்தப் பாத­கத்தைச் செய்தார் என்­கி­றது பொலிஸ் தரப்பு.

பின்னர், நாம் நினைத்­துப்­பார்க்க முடி­யாத அள­வுக்குக் கோர­மான முறையில் அச்­சி­றுமி கொல்­லப்­பட்டாள். சிறு­மியைக் காண­வில்லை என்று அவ­ளது குடும்­பத்­தினர் பொலிஸை அணு­கி­ய­போது, “யாரு­ட­னா­வது ஓடிப்­போ­யி­ருப்பாள்” என்று அங்­கி­ருந்த அதி­காரி ஒருவர் சொன்­னாராம். சஞ்­சிராம் கும்பல், உள்ளூர் பொலி­ஸுக்கு லஞ்சம் கொடுத்து விட­யத்தை மூடி மறைக்க முற்­பட்­டுள்­ளமை விசா­ர­ணையில் தெரி­ய­வந்­தி­ருக்­கி­றது.

இது தொடர்­பாக, எட்டு பேர் கைது­செய்­யப்­பட்­டி­ருக்­கி­றார்கள். அவர்­களில் நான்கு பேர் பொலிஸ் அதி­கா­ரிகள், ஒருவன் சிறுவன். முதன்மைக் குற்­ற­வா­ளி­யான சஞ்­சிராம் ஓய்­வு­பெற்ற அரசு ஊழி­யராம்.

மர­ணத்­துக்குப் பின்னும் அந்தச் சிறு­மிக்கு கொடுமை நேர்ந்­தி­ருக்­கி­றது. தங்­க­ளது நிலத்தில் அவ­ளது சட­லத்தை அடக்­கம்­செய்ய உற­வி­னர்கள் சென்­ற­போது இந்­துத்­துவ அமைப்­பினர் தக­ராறு செய்­தி­ருக்­கி­றார்கள். இதை­ய­டுத்து, ஏழு மைல்கள் நடந்து சென்று இன்­னொரு கிரா­மத்தில் இறு­திச்­ச­டங்கை நடத்­தி­யி­ருக்­கி­றார்கள். இதுவும் மிகப் பெரிய உரிமை மறுப்­பாகும்.

சம்­பவம் நடந்து மூன்று மாதங்­க­ளுக்குப் பின் பொலிசார் குற்­றப்­பத்­தி­ரி­கையைத் தாக்­கல்­செய்த பிற­குதான் இது தேசியச் செய்­தி­யா­கி­யி­ருக்­கி­றது. அதிர்ச்­சி­ய­ளிக்கும் இன்­னொரு விஷயம், காஷ்­மீரில் கூட்­டணி அரசில் அங்கம் வகிக்கும் பாஜக இந்தப் பிரச்­சி­னையில் குற்­ற­வா­ளி­க­ளுக்கு ஆத­ர­வா­கவே செயல்­ப­டு­வ­துதான். குற்­ற­வா­ளி­க­ளுக்கு ஆத­ர­வாக இந்­துத்­துவ அமைப்­பினர் பேரணி நடத்­தி­யி­ருக்­கி­றார்கள். பேர­ணியில் கலந்­து­கொண்­ட­வர்கள் தேசியக் கொடி ஏந்திச் சென்­றி­ருக்­கி­றார்கள்.

இந்த வழக்கில் பொலிஸ் துறை அதி­கா­ரிகள் ஏப்ரல் 9 அன்று குற்­றப்­பத்­தி­ரிகை தாக்­கல்­செய்யச் சென்­ற­போது நீதி­மன்­றத்தில் சில வழக்­க­றி­ஞர்கள் அதனைத் தடுக்க முயன்­றி­ருக்­கின்­றனர். அவர்­களில் காங்­கிரஸ் உறுப்­பி­னர்கள் சிலரும் அடங்­குவர்.

குற்­றங்­களில் ஈடு­பட்­ட­வர்கள் எல்லாக் கட்­சி­க­ளிலும் உண்டு என்­றாலும், மத்­தி­யிலும் பெரும்­பான்மை மாநி­லங்­க­ளிலும் ஆட்­சியைத் தன் கையில் வைத்­தி­ருக்கும் பாஜக, இந்தப் பிரச்­சி­னைக்கு முகங்­கொ­டுக்க வேண்­டி­யது அவ­சியம்.  இந்தப் படு­கொ­லைக்கும் சம்­பி­ர­தாய வார்த்­தை­களை உதிர்த்­து­வ­ரு­கி­றது பாஜக தலை­மை­யி­லான மத்­திய அரசு. மத்­திய அரசின் அமைச்­சர்கள் சிலர் இதனை வழக்­க­மான சம்­ப­வங்கள் போல் தட்டிக் கழித்­து­வ­ரு­கி­றார்கள். இதற்­கான முழுப் பொறுப்­பையும் மோடி தலை­மை­யி­லான பாஜக அர­சுதான் ஏற்க வேண்டும்.

இது மிகவும் திட்­ட­மிட்டு மேற்­கொள்­ளப்­பட்ட குற்­ற­மாகும். ஆசி­பாவின் கிரா­மத்­தையும் மக்­க­ளையும் வெளி­யேற்ற பாலியல் பலாத்­காரம் ஒரு கரு­வி­யாகப் பயன்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது. அதனைச் செய்­வ­தற்­கான இட­மாக கோயில் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. குற்றவாளிகளை காப்பாற்ற அரசாங்கமும் பொலிஸ் அதிகாரிகளும் சட்டத்துறையினரும் துணைபோயுள்ளனர். அவர்களை விடுவிக்க கோரி இந்து மதத்தின் பெயரால் ஆயிரக்கணக்கானோர் ஊர்வலம் செல்கின்றனர். இதுவே இந்த நூற்றாண்டின் மிகப் பெரும் வெட்கமாகும்.

மொத்தத்தில் பாஜக ஆட்சியின் கீழ் இந்திய தேசம் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் பாதுகாப்பற்ற தேசமாகவும் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பான தேசமாகவும் மாற்றப்பட்டிருக்கிறது. இதுவே மோடியின் சாதனையாகும்.