Verified Web

சூத்திரதாரிகளை சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும்: ஆசிபா விவகாரம்

2018-04-16 22:20:05 M.I.Abdul Nazar

ஜம்மு காஷ்மீரின் கத்துனா மாவட்டத்தில் எட்டு வயது சிறுமியொருவர் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தை கொடூரமான செயல் என வர்ணித்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்ரெஸ் ஈவிரக்கமற்ற இக் குற்றச் செயலின் சூத்திரதாரிகளை அதிகாரிகள் சட்டத்தின் முன் நிறுத்துவார்கள் என தான் நம்புவதாகவும் தெரிவித்தார். 


ஜனவரி 10 ஆந் திகதி தனது வீட்டுக்கு அருகில் வைத்து காணாமல்போன நாடோடி பக்கீர்வால் முஸ்லிம் சமூ­கத்தைச் சேர்ந்த சிறுமி ஒரு வாரத்தின் பின்னர் அதே பிர­தே­சத்­தி­லி­லி­ருந்து சட­ல­மாக மீட்­கப்­பட்டார். 


கடந்த ஜன­வரி மாதம் ஒரு வாரம் முழு­வதும் கிரா­மத்து கோயில் ஒன்றில் அச்­சி­று­மியை அடைத்து வைத்­தி­ருந்த ஆறு­பே­ரினால் பாலியல் வன்­பு­ணர்­வுக்­குட்­ப­டுத்­தப்­பட்­ட­தாக குற்­றம்­சாட்­டப்­பட்­டுள்­ளது. 


குறித்த சிறுமி அடித்துக் கொல்­லப்­ப­டு­வ­தற்கு முன்­ன­தாக போதை மருந்து வழங்­கப்­பட்டு மயக்க நிலையில் வைக்­கப்­பட்டு மீண்டும் மீண்டும் பல தட­வைகள் பாலியல் வன்­பு­ணர்­வுக்­குட்­ப­டுத்­தப்­பட்­டுள்ளார். இந்த சம்­பவம் இந்­தி­யாவில் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.


சிறு­மி­யொ­ருவர் துஷ்­பி­ர­யோ­கத்­திற்­குட்­ப­டுத்­தப்­பட்டு கொல்­லப்­பட்­டமை தொடர்­பான அறிக்­கை­களை ஊட­கங்கள் வாயி­லாக அறிந்து கொண்டோம், சூத்­தி­ர­தா­ரி­களை சட்­டத்தின் முன் நிறுத்­து­வதன் மூலம் குறித்த சிறு­மியின் படு­கொ­லைக்கு அவர்­களை பொறுப்­புக்­கூறச் செய்­வ­தற்கு அதி­கா­ரிகள் நட­வ­டிக்கை எடுப்­பார்கள் என நாம் பெரிதும் நம்­பு­கின்றோம் எனவும் குட்ரெஸ் தெரி­வித்­த­தாக கடந்த வெள்­ளிக்­கி­ழமை நடை­பெற்ற நாளாந்த ஊடக மாநாட்­டின்­போது குட்­ரெஸ்ஸின் பேச்­சா­ள­ரான ஸ்ரீபேன் டுஜ்­ஜாரிக் தெரி­வித்தார். 


சிறுமி பாலியல் வன்­பு­ணர்­வுக்­குட்­ப­டுத்­தப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்ட விடயம் தொடர்பில் செய­லாளர் நாய­கத்தின் பதில் என்ன என்­பது தொடர்பில் எழுப்­பப்­பட்ட கேள்­வி­க­ளுக்கு டுஜ்­ஜாரிக் பதி­ல­ளித்தார். 


ஆதா­ரங்­கள் அழிக்­கப்­பட்­டமை தொடர்­பான குற்­றச்­சாட்டில் இரண்டு விசேட பிரிவு பொலிஸ் அதி­கா­ரிகள், தலைமைக் கான்ஸ்­டபிள் ஒருவர் மற்றும் உதவிப் பொலிஸ் பரி­சோ­தகர் ஆகியோர் உள்­ள­டங்­க­லாக எட்டுப் பேரை சம்­பவம் தொடர்பில் விசா­ர­ணை­யினை மேற்­கொள்­வ­தற்­காக அமைக்­கப்­பட்ட குற்­றப்­பி­ரிவின் விசேட விசா­ரணைக் குழு கைது செய்­துள்­ளது. 


இந்தச் சம்­பவம் தொடர்பில் தனது கவ­லை­யினை வெளி­யிட்­டுள்ள நரேந்­திர மோடி நாட்­டிற்கு 'தலை­கு­னிவை' ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தாகத் தெரி­வித்­த­தோடு, குற்­ற­வா­ளிகள் சுதந்­தி­ர­மாக விடு­விக்­கப்­ப­ட­மாட்­டார்கள் எனவும் அவர் தெரிவித்தார். எந்தக் குற்றவாளியும் சுதந்திரமாக விடுவிக்கப்படமாட்டார்கள், நீதி நிலைநாட்டப்படும், எமது பெண் பிள்ளைகள் நீதியைப் பெற்றுக் கொள்வார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.