Verified Web

சிங்களவர்களின் குற்றச்சாட்டை இனவாதமாக பார்க்கலாமா

2018-04-16 03:09:21 Administrator

லரீப் சுலைமான் 

இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு பெரும் துன்­பத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்கும் அம்­பா­றை-­, தி­கன வன்­முறை சிங்­கள சகோ­த­ரர்­களின் கீழ்­ம­னதில் ஊறிக் கிடக்கும் வஞ்­ச­கத்தை, குரோ­தத்தை வெளிக்­காட்டி நின்­றாலும் இந்த வன்­முறைச் சம்­ப­வத்தின் பின்னர் சிங்­கள படித்த, படி­யாத பாமர மக்­க­ளி­ட­மி­ருந்து வெளிப்பட்டுள்ள குற்­றச்­சாட்­டு­களை மீளாய்வு செய்து பார்க்­கின்­ற­போது, தேசாபி­மா­ன­மற்ற சில குழுக்கள் ‘இன­வாத’ செயற்­பா­டாக இப்­பா­த­கத்தைத் தொடங்கி விட்­டி­ருந்­தாலும், சிங்­கள அப்­பாவி மக்­களும் இன்று முஸ்­லிம்­களை சந்­தே­கப்­படும், அச்­சப்­ப­டு­ம­ள­வுக்கு நிலைமை மாறி­யுள்­ளதால், இவ்­வி­ட­யத்தை இன­வாத சிந்­த­னைக்­கப்பால் அவர்­களின் ‘அடி­மட்டப் பிரச்­சினை’ யாகவே (The bottomline Problam) நோக்க வேண்­டி­யுள்­ளது.

சிங்­கள மக்­களின் குற்­றச்­சாட்­டுக்கு ‘தெளிவு போதாமை’ ஒரு­பக்­க­மி­ருந்­தாலும் குறிப்­பாக, முஸ்­லிம்கள் கவனம் செலுத்த வேண்­டிய கரு­மங்­களும் இவற்றில் இல்­லா­ம­லில்லை. இஸ்­லா­மிய சட்டம், இந்த நாட்­டி­னு­டைய சட்டம் இரண்டும் எங்­க­ளுக்கு முக்­கி­ய­மா­னவை. நாட்டுச் சட்­டத்­திற்­காக மார்க்­கத்தை அமிழ்ந்து போகச் செய்ய முடி­யாது. ஆனால், பெரும்­பான்­மைக்குள் சிறு­பான்­மை­யாக வாழும் முஸ்­லிம்கள் நாட்டுச் சட்­டத்­திற்குள் தங்­க­ளது வாழ்வை, பண்­பாட்டு முறை­களை எவ்­வாறு அமைத்துக் கொள்ள வேண்­டு­மென்­ப­தற்கும் ஷரீஆ சட்­டத்தில் இட­மி­ருக்­கி­றது. ஷரீஆ சட்டம் ஒரு துரு­வத்­திலும் நாங்கள் வேறொரு துரு­வத்­திலுமாகப் பயணிக்க முடி­யாது.

கடுகைப் பார்த்து மிளகை இழப்­ப­து­போன்று, இன்று எங்­களை அறி­யா­ம­லேயே சிறிய சிறிய நன்­மை­க­ளுக்­காக பெரிய பெரிய நன்­மை­களை இழந்து கொண்­டி­ருக்­கிறோம் அல்­லது தீங்­கு­க­ளுக்கு பணம் செலுத்­து­கிறோம். இரண்டு தீமை­க­ளில் ஒன்றைச் செய்­து­தா­னாக வேண்­டு­மென்ற நிர்ப்­பந்­தத்­திற்கு மத்­தியில், இரண்­டிலும் தரத்தில் குறைந்த தீமையைச் செய்­வ­தற்கு இஸ்­லாத்தில் இட­மி­ருக்­கி­றது.

இமாம்­க­ளுக்கு மத்­தியில் கருத்து வேறு­பா­டுள்ள, முகத்தை மறைப்­பது (நிகாப்), மறைக்­காமல் விடு­வது (ஹிஜாப்) ஆகிய இரண்டு விட­யங்­க­ளுக்கும் ஆதா­ரங்கள் உண்டு. முகத்தை திறந்து விடு­ப­வர்கள் ‘காபிர்கள்’ என்­றி­ருந்தால், இன்று எமது பெண்­களில் அதி­க­மானோர் காபிர்­க­ளா­கவே இருக்க வேண்­டுமே! துருக்கி, பலஸ்­தீனைப் போன்று ஏன் இலங்­கையைப் பார்க்க முயற்­சிக்­கிறோம்? நாங்கள் ஷரீ­ஆவை முழு­மை­யாகப் பின்­பற்­று­வ­தாக இருந்தால் கள­வெ­டுத்­த­வனின் கை துண்­டிக்­கப்­பட வேண்டும், கொலை செய்­த­வ­னுக்கு மரண தண்­டனை வழங்­கப்­பட வேண்டும், திரு­மணம் செய்­தவன் விப­சாரம் செய்தால் கல்­லெ­றிந்து கொல்­லப்­பட வேண்டும். இவற்றை ஏன் செய்­கி­றோ­மில்லை? ஆக, நமது ஷரீஆ சட்­டத்தை நிறை­வேற்ற இந்­நாட்டுச் சட்டம் இடம்­கொ­டுக்­காது, அவ்­வ­ள­வுதான்! எனவே, இவ்­வ­ளவு பெரிய பாவத்தைச் செய்­த­வ­னுக்கே இஸ்­லா­மிய தண்­டனை வழங்க நாட்டுச் சட்­டத்­திற்கு நாங்கள் கட்­டுப்­பட வேண்­டி­யுள்­ள­தென்றால், அதற்கு மார்க்­கத்தில் அனு­ம­தி­யுண்­டென்றால், ஹிஜாப் அணி­வதைப் பற்றி நாங்கள் பெரி­தாக தூக்­கிப்­பி­டிக்கத் தேவை­யில்­லையே?

“பேய், பிசா­சுபோல் முகத்தை மூடிக்­கொண்டு ஏன் எங்­க­ளது பிள்­ளை­களை அச்­சப்­ப­டுத்­து­கி­றீர்கள்?” என்­ப­தெல்லாம் சிங்­கள மக்கள் மத்­தி­யி­லுள்ள மிக மோச­மான குற்­றச்­சாட்­டு­க­ளாகும். நாங்கள் தூய எண்­ணத்­தில்தான் நிகாப் அணி­கிறோம். ஆனால், இந்த சந்­தர்ப்­பத்தை எமது எதி­ரிகள் சாத­க­மாக்கி, எங்கள் மீது பழி தீர்ப்­ப­திலே குறி­யா­யி­ருக்­கி­றார்­களே! இதைப் பற்றி யார், ஹிஜாப் அணி­ப­வர்­களா சிந்­திப்­பது? இது, குளிக்கச் சென்று சேற்றைப் பூசிக் கொண்டு வரு­வது போலில்­லையா? ஆள்­மா­றாட்டம், விப­சாரம், பாலியல் தீண்டல், போதைப்­பொருள் கடத்தல், கொலை, களவு, உளவு பார்த்தல் முத­லான பாதக செயல்­களில் நம் எதிரிக் கும்­பல்கள் ஈடு­ப­டு­வ­தற்கு இந்த நிகாப் துணை புரிந்து, ஒட்­டு­மொத்த முஸ்லிம் சமூ­கத்­தையே பாதிப்­ப­டையச் செய்யும் வாய்ப்­புள்­ள­தாக எங்கள் புத்­திக்கு தென்­பட்டால், இதைப் பற்­றிய எங்கள் கவ­லைகள் எவ்­வ­ளவு தூரத்தில் இருக்க வேண்டும்!

நாங்கள் ஏன் கறுப்பு நிறத்தில் அபா­யாவைத் தெரிவு செய்­கிறோம்? என்று கேட்டால், இந்த நிறத்தில் அணி­ப­வர்­க­ளுக்குக் கூட பதில் சொல்லத் தெரி­ய­வில்லை. இந்தக் கறுப்பு நிறமும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டு­களில் ஒன்று.

கறுப்பு நிறத்­துக்கு தனிக் கவர்ச்­சி­யுண்டு. இரண்டு பெண்­களில் ஒருவர் கறுப்பு நிறத்­திலும் மற்­றை­யவர், வேறொரு நிறத்­திலும் அணிந்­தி­ருந்தால் பார்­வைக்கு கறுப்பு நிற அபா­யாவே முதலில் தென்­படும். ஆக, பாது­காப்பு என்ற பேரில் எங்­களை அறி­யா­ம­லேயே ஆபத்­துக்கு விலை­கொ­டுத்துக் கொண்­டி­ருக்­கிறோம். அரே­பியப் பெண்­களின் கறுப்பு நிற ஹபாயா முழு அரே­பி­யா­வுக்­கு­மு­ரிய கலா­சா­ர­மா­யி­ருக்­கலாம், அது எங்­க­ளுக்குப் பிரச்­சி­னை­யல்ல. ஆனால், சிங்­கள மக்கள் அதை அரே­பியக் கலா­சா­ர­மாகப் பார்க்­கி­றார்­களே! இலங்­கையில் அரே­பியக் கலா­சாரம் மிகைத்து விடுமோ என்ற பீதி அவர்­க­ளுக்­குண்டே! சோகத்தை, துக்­கத்தை வெளிப்­ப­டுத்த கறுப்பு நிறமே தொங்க விடப்­படும். எனவே, துக்­கத்தை (முஸீபத்) சுமந்து கொண்டு இந்­நாட்டில் திரி­வ­தாக அவர்கள் எங்­களைப் பார்க்­கி­றார்கள். கறுப்பு நிற அபாயா அணிந்த பெண்­ணொ­ருவர், கர்ப்­பிணித் தாய் ஒரு­வரை அழைத்துக் கொண்டு வைத்­தி­ய­சாலை சென்ற சம­ய­மொன்றில் அங்­குள்ள தாதியர், “நல்ல நேரத்தில் கெட்­ட­தையும்” உடன் கொண்டு வரு­வ­தாகக் கூறி, அழைத்துச் சென்­றி­ருந்த அப்­பெண்ணை திருப்பி அனுப்பி வைத்த சம்­வ­ப­வ­மொன்றும் இலங்­கையில் நடந்­தே­றி­யுள்­ளது.

நாங்கள் எங்­கி­ருக்­கிறோம்? எங்­களைச் சுற்­றி­யுள்ள சவால்கள், பிரச்­சி­னைகள், கழுத்­த­றுப்­பு­களின் பின்­னணி கண்­ணுக்குத் தெரிய வேண்டும். திகன வன்­மு­றை­யின்­போது சாதா­ரண கற்­களை விடவும் கைக்கு அடக்­க­மான (உருளை) ஆற்றுக் கற்­களும், இல­குவில் உடை­யாத கித்துள் பொல்லு­களும் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. எனவே, அம்­பாறை, திகன அதற்கு முந்­திய அளுத்­கமை, கிந்­தோட்டை வன்­மு­றை­க­ளை­யெல்லாம் நாங்கள் சுனா­மியைப் போன்று, மண்­ச­ரிவு அல்­லது வெள்­ள அ­ழிவு போன்று தற்­செ­ய­லான நிகழ்­வாக நோக்க முடி­யுமா? என்ற கேள்­விக்குரி­ய­ விடை தெரிந்­தி­ருந்­தாலும், பிரச்­சி­னைக்­கு­ரிய கார­ணங்­களை முதலில் விளங்­கவும் அதற்­கேற்ப எங்­க­ளது வெள்­ளோட்ட சிந்­தனை வேலை செய்­யவும் வேண்டும்.

நடந்­துள்ள பிரச்­சி­னை­க­ளையும் குற்­றச்­சாட்­டு­க­ளையும் நோக்­கு­மி­டத்து வழ­மை­யான ‘இன­வா­த­மாக’ இப்­போ­தைய சூழ­லுக்கு இதனைப் பார்க்க முடி­யாது. ஒட்­டு­மொத்த சிங்­கள மக்­க­ளுக்­கு­மு­ரிய பிரச்­சினை என்ற கண்­ணோட்­டத்தில் பார்க்­கும்­போ­துதான் நிலை­யான தீர்­மா­னத்­திற்கு வர­மு­டி­யுமே தவிர, குறிப்­பிட்ட இன­வா­தக்­கு­ழு­வுக்­கு­ரிய பிரச்­சி­னை­யாக மட்டும் இவ்­வி­ட­யத்தைப் பார்ப்­போ­மாயின், தலை­வ­லிக்கு பனடோல் போன்று தீர்க்­க­மான முடி­வு­களை எங்­களால் பெற முடி­யாது போய்­விடும். மீண்டும் மீண்டும் எங்­களை நோக்கி வீசப்­படும் பந்­தாக இவ்­வி­டயம் கையா­ளப்­ப­டலாம். ஆனாலும், இதற்­கு­ரிய தீர்வை அவ­ர­வரே சிந்­தித்து அணுக வேண்­டி­யுள்­ளது.

கடந்த 30 வரு­டங்­க­ளுக்கு முன்­னி­ராத புதிது புதி­தான கலா­சார மாற்­றங்­களை முஸ்­லிம்கள் பின்­பற்­று­வ­தா­கவும் குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன, உண்­மைதான்! 30 வரு­டங்­க­ளுக்கு முன்னர் சிங்­கள, தமிழ், முஸ்லிம் சமூ­கங்­களைச் சேர்ந்த பெண்கள் உடல் முழு­வ­தையும் மறைக்­கக்­கூ­டிய ஆடை­க­ளையே அணிந்­தார்கள். மேலைத்­தேய கலா­சார மோகம் இப்­போ­தெல்லாம் சிங்­கள, தமிழ் பெண்­களின் ஆடை­களில் நிறை­யவே மாற்­றங்­களைத் தோற்­று­வித்­துள்­ளன. அவர்கள் அணிந்த நீள­மான ஆடைகள் இப்­போது அரை­வா­சிக்கும் குறைவு. ஆனால், முஸ்லிம் பெண்­களின் ஆடைகள் இருந்­ததை விடவும் இன்னும் சற்று நீள­மா­கி­யுள்­ளது, அவ்­வ­ள­வுதான்! உணவு முறைகள், பண்­பா­டுகள் எல்­லா­வற்­றிலும் இன்று மேலைத்­தேய கலா­சா­ரத்­தையே சிங்­கள மக்கள் பின்­பற்­று­கி­றார்கள். கௌதம புத்­தரின் வழி­பாடு எங்­கோ­யி­ருக்க, இன்­றைய பெரும்­பா­லான சிங்­கள மக்­களின் வழி­பாடு வேறோரு திசை­வ­ழியில் பய­ணிக்­கி­றது. ஆடை­ய­ணி­வது முதல் வாழ்க்கைக் களி­யாட்டம் வரைக்கும் மேலைத்­தேய கலா­சா­ரத்தில் இருந்து கொண்டு, அரே­பியர் கலா­சா­ரத்தை இலங்­கையில் பின்­பற்­று­வ­தாக அடுத்­தவர் மீது விரல் நீட்­டு­வது நியா­ய­மா­னதா? சிங்­கள மக்கள் இவ்­வி­ட­யத்தை மீள்­ப­ரி­சீ­ல­னைக்கு உட்­ப­டுத்திப் பார்க்க வேண்டும்.

 ஆண்­மையை இழக்கச் செய்யும் மாத்­தி­ரை­களை முஸ்லிம் கடை­களில் உண­வ­கத்தில் கலந்து சிங்­க­ள­வர்­க­ளுக்கு விற்­பனை செய்­கி­றார்கள் என்றும் 2050 ஆம் ஆண்­ட­ளவில் இலங்கை ஓர் இஸ்­லா­மிய நாடாக மாறு­வ­தற்கு வாய்ப்­புள்­ளது என்றும் சுமார் பத்து வரு­டங்­க­ளாக அப்­பாவி சிங்­கள மக்­களை ஏமாற்றிக் கொண்­டி­ருந்த சில­ருக்கு, அவர்­க­ளா­லேயே விளை­விக்­கப்­பட்ட அம்­பாறை காசிம் ஹோட்டல் கடை எரிப்பு தக்க பதி­லடி கொடுத்­தது. அவர்கள் தோற்­று­வித்த வதந்­தி­க­ளுக்கு உறைப்­பான பதி­லையும் விளக்­கத்­தையும் அவர்­க­ளது இனத்தைச் சேர்ந்த சிங்­கள டாக்­டர்கள் வாயி­லா­கவும் அரச மருத்­துவ அறிக்­கைகள் ஊடா­கவும், “ஆண்­க­ளுக்கு மாத்­தி­ரைகள் மூல­மாக மலட்­டுத்­தன்­மையை ஏற்­ப­டுத்த முடி­யாது” என்ற தீர்க்­க­மான செய்­தியை அறி­வித்து, இலங்கை முஸ்­லிம்கள் மீதி­ருந்த பாரிய கறை­யொன்றைப் போக்­கி­யுள்­ள­தோடு, நீண்­ட­காலப் பிரச்­சி­னைக்கு முற்­றுப்­புள்­ளி­யையும் வைத்­தது. அப்­போ­தைய சூழ்­நி­லையில் மிகுந்த துன்­பமும் வேத­னையும் எமக்கு ஏற்­பட்­டி­ருந்­தாலும், அம்­பாறை வன்­முறை மூலம் முஸ்லிம் சமூ­கத்தின் மீதி­ருந்த பாரிய பழி­யொன்று நீங்­கி­யுள்­ளதை நினைக்­கும்­போது சற்று ஆறு­த­லாக உள்­ளது.

இது­போன்ற ஒரு சாதக நிலைமை திகன வன்­மு­றையின் பின்­னாலும் மறைந்­தி­ருக்­கலாம். நாங்கள் முஸ்­லிம்கள். எமது மார்க்­கத்தின் சட்­ட­திட்­டங்­களை, சந்­தே­கங்­களை மாற்­று­ம­தத்­த­வர்­க­ளுக்கு சொல்­லிக்குக் கொடுக்க வேண்­டிய, தெளி­வு­ப­டுத்த வேண்­டிய பொறுப்பைச் சுமந்­த­வர்கள். நடை­பெற்­றுள்ள இத்­தனை அழிப்­புக்கும் துன்­பத்­திற்கும் குற்­றச்­சாட்­டுக்கும் நாங்கள் கூறும் ‘தெளி­வின்­மை’தான் கார­ண­மென்றால், அந்த சந்­தே­கங்­களை (இஸ்­லாத்தின் சந்­தே­கங்­களை) தீர்த்து வைப்­ப­தற்கு கிடைத்த சந்­தர்ப்­ப­மா­கவும் இவ்­வி­ட­யத்தை எடுத்துக் கொள்ள முடியும். இதன் மூலம் தெளிவு பெறும் சிலர் இஸ்­லாத்தை விளங்கிக் கொள்ள நாட்­ட­மு­மி­ருக்­கலாம். கல்­வியில், அர­சி­யலில், வியா­பா­ரத்தில், மார்க்க விட­யத்தில்... என்று எல்லாத் துறை­க­ளி­லுமே இன்று நாங்கள் வேறுபட்டு நிற்கிறோம். எம்மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளைக் களைவதில் இங்குள்ள எல்லாத் துறையினரின் உழைப்பும் தேவையென்பதால், தலைமைத்துவங்கள் ஒன்றுசேரும் ஆரோக்கிய சந்தர்ப்பமாகவும் இது அமையக்கூடும்!

இலங்கை ஒரு பன்மைத்துவ நாடு. இந்நாட்டில் வசிக்கின்ற சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங்களின் வரலாறுகளைப் பார்த்தால் எல்லோரும் வந்தேறு குடிகள்தான். இந்த வரலாறுகளை யாரும் மறந்து பேச முடியாது. இந்நாட்டின் இனங்களுக்கிடையிலான சகவாழ்வு என்பது பிரிக்க முடியாத ஒரு பொருளாயிருந்தது. துரதிஷ்டவசமாக ஏற்பட்ட இனமுரண்பாடு இனங்களுக்கிடையில் பாரிய விரிசலையும் குரோதத்தையும் ஏற்படுத்தியதை மூவினத்தாரும் மானசீக ரீதியில் ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.

இந்நாட்டில் பெரும்பான்மை சிங்கள மக்களுக்குரித்தான உரிமைதான் ஏனைய சிறுபான்மை மக்களுக்கும் இருக்கிறது. பெரும்பான்மை இனத்தவர்கள் அந்நாட்டு சிறுபான்மை மக்களுக்கு சட்டத்திலும் சட்டத்திற்கு வெளியிலும் சலுகைகள் வழங்குவது சர்வதேசளவில் இலங்கைக்குத்தான் பெருமையென்பதை உணர்ந்து செயற்பட முன்வர வேண்டும்.