Verified Web

பலஸ்தீனத்தில் ஊடகவியலாளர் கொல்லப்பட்டமைக்கு இலங்கை ஊடகவியலாளர்கள் அமைப்பு கண்டனம்

2018-04-16 02:29:34 M.I.Abdul Nazar

பலஸ்­தீ­னத்தில் ஊட­க­வி­ய­லாளர் ஒருவர் கொல்­லப்­பட்­ட­மைக்கு உல­க­ளா­விய நீதிக்­கான இலங்கை ஊட­க­வி­ய­லா­ளர்கள் அமைப்பு கண்­டனம் தெரி­வித்­துள்­ள­தோடு சுதந்­தி­ர­மான சர்­வ­தேச விசா­ர­ணைக்­கான ஐ.நா.வின் கோரிக்­கைக்கும் ஆத­ரவு தெரி­வித்­துள்­ளது.

உல­க­ளா­விய நீதிக்­கான இலங்கை ஊட­க­வி­ய­லா­ளர்கள் அமைப்பின் தலைவர் ஜய­தி­லக சில்வா மற்றும் செய­லாளர் மஹிந்த ஹத்­தக ஆகியோர் இணைந்து நேற்று முன்­தினம் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யி­லேயே இக் கண்­டனம் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

பலஸ்­தீன ஊட­க­வி­ய­லாளர் யாஸீர் முர்­தஜா கட­மை­யி­லி­ருந்­த­போது கொல்­லப்­பட்­ட­மை­யினை கண்­டிப்­ப­தற்கு உலகம் முழு­வ­தி­லு­முள்ள ஊட­க­வி­ய­லா­ளர்­களும் சமா­தா­னத்தை விரும்பும் மக்­களும் ஒன்­றி­ணைய வேண்டும் என  உல­க­ளா­விய நீதிக்­கான இலங்கை ஊட­க­வி­ய­லா­ளர்கள் அமைப்பு அழைப்பு விடுக்­கின்­றது.

அக் கொலை­யினை நியா­யப்­ப­டுத்தி இஸ்­ரே­லிய பாது­காப்பு அமைச்சர் தெரி­வித்த கருத்­தையும் கண்­டிக்கும் உல­க­ளா­விய நீதிக்­கான இலங்கை ஊட­க­வி­ய­லா­ளர்கள் அமைப்பு, முர்­த­ஜாவை சுட்டுக் கொன்­ற­வர்­க­ளையும் அவர்­க­ளுக்கு உத்­த­ரவு பிறப்­பித்­த­வர்­க­ளையும் பொறுப்புக் கூறச் செய்­வ­தற்கு இஸ்­ரே­லிய அதி­கா­ரிகள் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்­டுகோள் விடுக்­கின்­றது.

பலஸ்­தீன செய்திக் குழு­ம­மான 'அயின் மெடாய்' இல் கட­மை­யாற்றும் முர்­தஜா, பலஸ்­தீன நில தினப் போராட்­டத்தில் செய்தி சேக­ரித்­துக்­கொண்­டி­ருந்­த­போது இஸ்­ரே­லியப் படை­யி­னரால் சுடப்­பட்டு ஒரு நாளின் பின்னர் ஏப்ரல் மாதம் 07 ஆம் திகதி உயி­ரி­ழந்தார். இந்த துப்­பாக்கிச் சூட்டு சம்­ப­வத்தில் மேலும் ஐந்து ஊட­க­வி­ய­லா­ளர்கள் காய­ம­டைந்­தனர்.

ஊட­க­வி­ய­லா­ளர்­களின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­து­வதும், தக­வல்­களை வழங்­கு­ப­வர்­க­ளா­கவும், கண்­கா­ணிப்பில் ஈடு­ப­டு­ப­வர்­க­ளா­கவும் செயற்­படும் அவர்­க­ளது வகி­பா­கத்தை அங்­கீ­க­ரிப்­பதும் ஒவ்­வொரு நாக­ரி­க­ம­டைந்த நாடு­க­ளி­னதும் கட­மை­யாகும். பலஸ்­தீன மக்­க­ளுக்கு எதி­ராக இஸ்­ரே­லியப் படை­யி­னரால் மேற்­கொள்­ளப்­படும் குற்­றங்கள் தொடர்பில் இஸ்­ரேலில் நில­வு­கின்ற தண்­ட­னை­க­ளி­லி­ருந்து தப்­பிக்கச் செய்யும் கலா­சா­ரத்தை உறு­திப்­­ப­டுத்­து­வ­தற்கு முர்­த­ஜாவின் கொலை­யொன்றே போது­மான சான்­றாகும்.

கடந்த சில நாட்­களில் முர்­தஜா மற்றும் அமை­தி­யான எதிர்ப்புப் போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்த பலர் கொல்­லப்­பட்­டி­ருப்­பது ஜன­நா­யக நாடு என இஸ்ரேல் தன்னை அழைத்துக் கொள்­வதின் முரண் நிலை­யி­னையும், அந்­நாடு தற்­போதும் இன ஒதுக்கல் தன்­மை­யி­னையும், கால­னித்­துவ மனப்­பாங்­கிலும் இருப்­ப­த­னையும் வெளிப்­ப­டுத்­து­கின்­றது.

பொது­மக்­க­ளுக்கோ அல்­லது படை­யி­ன­ருக்கோ அச்­சு­றுத்­த­லாக இல்­லா­தி­ருந்­தாலும் கூட பலஸ்­தீன ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­க­ளுக்கு எதி­ராக உண்­மை­யான துப்­பாக்கி ரவை­களைப் பயன்­ப­டுத்­து­மாறு சிரேஷ்ட இஸ்­ரே­லிய அதி­கா­ரி­களால் இஸ்­ரே­லியப் படை­யி­ன­ருக்கு உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டி­ருந்­த­தாக மனித உரிமைக் குழுக்கள் தெரி­வித்­துள்­ளன.

பிறந்த மண்­ணி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்ட பலஸ்­தீ­னர்கள் மீள தமது இடங்­களில் குடி­யே­று­வ­தற்கு ஏது­வாக பலஸ்­தீன நிலத்­தி­லி­ருந்து இஸ்ரேல் வெளி­யேற வேண்­டு­மெனக் கோரிய நிரா­யு­த­பா­ணி­க­ளான பலஸ்­தீ­னர்கள் கொல்­லப்­பட்­டமை தொடர்பில் சுதந்­தி­ர­மான சர்­வ­தேச விசா­ரணை மேற்­கொள்­ளப்­பட வேண்­டு­மென ஐக்­கிய நாடுகள் சபை­யினால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைக்கும் நாம் ஆதரவளிக்கின்றோம்.

1992 ஆம் ஆண்டு தொடக்கம் இஸ்ரேலிலும், ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பிரதேசத்திலும் 16 ஊடகவியலாளர்கள் கொல்லப் பட்டிருந்தாலும் கூட, அந்த ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டமைக்கு எவரும் பொறுப்புக் கூறலுக்கு உள்ளாக்கப்படவில்லை என ஊடகவியலா ளர்களுக்கான பாதுகாப்புக் குழுவின் கருத்தினை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.