Verified Web

தேசிய அரசாங்கம் தொடருமா

2018-04-16 02:18:36 Administrator

எஸ். றிபான் 

மழை நின்ற போதிலும் தூறல் நிற்­க­வில்லை என்­பது போல் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ராக கூட்டு எதி­ர­ணி­யி­னரால் கொண்டு வரப்­பட்ட நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை தோற்­க­டிக்­கப்­பட்­டாலும், அதனைக் கொண்டுவந்த எதி­ர­ணி­யி­னரின் நட­வ­டிக்­கைகள் ஓய­வில்லை. அவர்கள் அர­சாங்­கத்தைக் கவிழ்க்க வேண்­டு­மென்று செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். நாட்டில் ஸ்திர­மற்ற அர­சியல் சூழலை ஏற்­ப­டுத்­து­வதற்­கு­ரிய அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் கூட்டு எதி­ர­ணி­யினர் மேற்­கொண்டு வரு­கின்­றார்கள். இந்­நி­லையை அர­சாங்கம் கட்­டுப்­ப­டுத்த நட­வ­டிக்­கை­களை எடுக்­காது போனால் அர­சாங்கம் பல பிரச்­சி­னை­களை எதிர்கொள்ள வேண்­டி­யேற்­படும்.

 

அர­சியல் ஸ்திரம்

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ராகக் கொண்டு வரப்­பட்ட நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை முழுக்க அர­சியல் நோக்­கத்தைக் கொண்­டது. ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லாத் தீர்­மா­னத்தை நிறை­வேற்றி தமது கட்­டுப்­பாட்டில் இருக்கக் கூடி­ய­தொரு அர­சாங்­கத்தை ஏற்­ப­டுத்­து­வதும், பின்னர் பொதுத் தேர்­தல் ஒன்றை நடத்­து­வ­தற்­கு­ரிய சூழலை உரு­வாக்­கு­வ­துமே முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த­ரா­ஜ­ப­க் ஷ­வி­னதும், கூட்டு எதி­ர­ணி­யி­ன­ரதும் திட்­ட­மாகும்.

இந்­நோக்­கத்தில் கொண்டுவரப்­பட்ட நம்­பிக்­கை­யில்லாத் தீர்­மா­னத்­திற்கு எதி­ராக 122 வாக்­குகள் அளிக்­கப்­பட்­டன. இதன் மூல­மாக குறிப்­பிட்ட பிரே­ரணை தோற்­க­டிக்­கப்­பட்­டுள்­ளது. பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக 76 வாக்­குகள் அளிக்­கப்­பட்­டுள்­ளன.

ஒரு நாடு சகல துறை­க­ளிலும் முன்­னேற வேண்­டு­மாயின் முதலில் ஸ்திர­மான அர­சியல் சூழலும், உறு­தி­யான அர­சாங்­கமும் இருக்க வேண்டும். கூட்டு எதி­ர­ணி­யி­னரின் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை தோற்­க­டிக்­கப்­பட்­டுள்­ளதன் மூலம் ரணில் விக்­கி­ர­ம­சிங்க வெற்றி பெற்­றி­ருந்­தாலும் கூட்டு எதி­ர­ணி­யி­ன­ருக்கு இத­னை­யொரு பின்­ன­டை­வா­கவே பார்க்க வேண்டும். மாறாக, நல்­லாட்சி அர­சாங்கம் நிம்­ம­தி­யாக இருக்க முடி­யாது. அர­சாங்­கத்­திற்கு எதி­ரான நட­வ­டிக்­கைகள் தொட­ரவே செய்யும் என்­பதில் ஐய­மில்லை. இதே வேளை இலங்­கையின் அர­சியல் சூழலை எடுத்துக் கொண்டால் நாளுக்கு நாள் நெருக்­க­டிகள் அதி­க­ரித்துக் கொண்டே செல்­கின்­றன. இதனால், நாட்டில் ஸ்திர­மற்­ற­தொரு சூழல் ஏற்­ப­டவே வாய்ப்­புக்கள் உள்­ளன. நாட்டின் பொரு­ளா­தா­ரத்­திலும், அபி­வி­ருத்­தி­யிலும், நிதி நட­வ­டிக்­கை­க­ளிலும், பங்குச் சந்­தை­யிலும் வீழ்ச்­சியை ஏற்­ப­டுத்தும் நிலையே காணப்­ப­டு­கின்­றது.

நல்­லாட்­சியில் சு.க. நிலைக்­குமா?

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ராகக் கொண்டுவரப்­பட்­ட நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை தோற்­க­டிக்­கப்­பட்­டதன் பின்னர் அர­சாங்­கத்தின் பிர­தான பங்­கா­ளி­யாக உள்ள ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி நல்­லாட்சி அர­சாங்­கத்தில் நிலைத்­தி­ருக்­குமா என்­பதில் பலத்த சந்­தே­கங்கள் காணப்­ப­டு­கின்­றன.

கூட்டு எதி­ர­ணி­யி­னரால் முன் வைக்­கப்­பட்ட நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரா­ன­தாக இருந்­தாலும், அது அர­சாங்­கத்­திற்கு எதி­ரா­னது. ஆயினும் அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யினர் இரு குழுக்­களாகச் செயற்­பட்­டுள்­ளார்கள். இதன் மூல­மாக ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் இப்­பி­ரே­ர­ணையில் ஒரு தீர்க்­க­மான முடி­வினை எடுக்­க­வில்லை என்று தெரி­கின்­றது. மேலும், அக்­கட்சி ஒரு கட்­டுப்­பாட்டில் இருப்­ப­தா­கவும் தெரி­ய­வில்லை.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியைச் சேர்ந்த அமைச்­சர்கள் உட்­பட 16 பேர் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரான பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­துள்­ளார்கள். அதே வேளை, இக்­கட்­சியைச் சேர்ந்த 23 பேர் வாக்­க­ளிப்பில் கலந்து கொள்­ள­வில்லை. இது ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்குள் காணப்­படும் முரண்­பாட்டைக் காண்­பிக்­கின்­றது.

மேலும், கடந்த வாரம் நடை­பெற்ற அமைச்­ச­ரவைக் கூட்­டத்­திற்கு ஜனா­தி­ப­தி, பிர­தமர் ஆகி­யோர்கள் கலந்து கொண்­டாலும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் அமைச்­சர்கள் எவரும் கலந்து கொள்­ள­வில்லை.

இதே வேளை, ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி எதிர்க்கட்­சிக்குச் செல்ல வேண்­டு­மென்ற கோரிக்­கைகள் அதி­க­ரித்துக் கொண்­டி­ருக்­கின்­றன. எதிர்­வரும் 19ஆம் திகதி பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­த­வர்கள் எதிர்க் கட்சி ஆச­னத்தில் இருப்­போ­மென்று இரா­ஜாங்க அமைச்சர் லக் ஷ்மன் யாப்பா தெரி­வித்­துள்ளார்.

இவர் இவ்­வாறு தெரி­வித்­தாலும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியில் ஒரு குழு­வினர் தொடர்ந்தும் அர­சாங்­கத்தில் இருப்­ப­தற்கு வாய்ப்­புக்கள் உள்­ளன. ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலை­வரும், ஜனா­தி­ப­தி­யு­மான மைத்­தி­ரிபால சிறி­சே­னவை பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாத் தீர்­மா­னத்­திற்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­த­வர்­களும், வாக்­க­ளிப்பில் கலந்து கொள்­ளா­த­வர்­களும் தனித் தனி குழுக்­க­ளாக சந்­தித்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும், முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்­க­வுக்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. சந்­தி­ரிகா குமா­ர­துங்க ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி தொடர்ந்து அர­சாங்­கத்தில் இருக்க வேண்­டு­மென்ற நிலைப்­பாட்டைக் கொண்­டுள்ளார். இதனை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன விரும்­ப­வில்லை என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இதே வேளை, ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி வெளி­யிட்­டுள்ள உத்­தி­யோ­க­பூர்வ அறிக்­கையில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி தொடர்ந்தும் நல்­லாட்சி அர­சாங்­கத்தில் நீடிக்­கவே விரும்­பு­கின்­ற­தென்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதே வேளை, எல்லா அர­சியல் கட்­சி­க­ளையும் உள்­ள­டக்­கி­ய­தொரு அர­சாங்­கத்தை ஏற்­ப­டுத்த வேண்­டு­மென்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தேசிய பத்­தி­ரி­கை­களின் பிர­தம ஆசி­ரி­யர்­களைச் சந்­தித்து உரை­யா­டிய போது தெரி­வித்­துள்ளார்.

இவ்­வாறு ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் நிலைப்­பா­டுள்­ளது. இதன் மூல­மாக அக்­கட்­சிக்குள் பிளவு ஏற்­பட்­டுள்­ளமை தெரி­கின்­றது.

ஐ.தே.க.வின் நிலைப்­பாடு

பிர­தமர் ரணில் விக்­கி­ரம­சிங்­க­வுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை ஐக்­கிய தேசியக் கட்­சிக்­குள்ளும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் ஐக்­கிய தேசியக் கட்சி பின்­ன­டை­வு­களைக் கண்­டுள்­ளது. இதற்கு கட்­சியின் தலை­வரின் செயற்­பா­டு­களே கார­ண­மென்று கட்­சியின் சகல மட்­டங்­க­ளிலும் விமர்­ச­னங்கள் உள்­ளன. இந்­நி­லையில் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையும் இணைந்து கட்­சியின் தலைவர் பதவி மாற்­றப்­பட வேண்­டு­மென்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றன. ஆயினும், தலைவர் பத­வியை ரணில் விக்­கி­ர­ம­சிங்க விட்டுக் கொடுக்­க­மாட்டார்.

இதே வேளை, ஐக்­கிய தேசிய கட்­சியின் பிரதித் தலைவர் பத­வியை சுகா­தார அமைச்சர் ராஜித சேனா­ரத்­ன­வுக்கு வழங்க வேண்­டு­மென்று கட்­சியின் மறு­சீ­ர­மைப்புக் குழுக் கூட்­டத்தில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சாகல ரத்­நா­யக்க தெரி­வித்­துள்ளார். இதற்கு அமைச்சர் சஜித் பிரே­ம­தாஸ எதிர்ப்பைத் தெரி­வித்­துள்ளார். இதற்கு முன்­னாக செய­லாளர் பத­வியை அமைச்சர் கபீர் ஹாஷிம் இரா­ஜி­னாமாச் செய்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

இவ்­வாறு ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யினைப் போன்று ஐக்­கிய தேசியக் கட்­சிக்­குள்ளும் உள்­ளக முரண்­பா­டுகள் காணப்­ப­டு­கின்­றன.

 இதே வேளை, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ராக முன் வைக்­கப்­பட்ட நம்­பிக்­கை­யில்லாத் தீர்­மா­னத்­திற்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­த­வர்கள் அமைச்சர் பத­வி­களை உட­ன­டி­யாக இரா­ஜி­னாமாச் செய்ய வேண்­டு­மென்று பிர­தமர் உட்­பட ஐக்­கிய தேசிய கட்­சி­யினர் தெரி­வித்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். அவர்கள் தொடர்ந்தும் அர­சாங்­கத்தில் இருக்க வேண்­டு­மாயின் ஒப்­புதல் வாக்கு மூலம் தரப்­பட வேண்­டு­மென்று அமைச்சர் ராஜித சேனா­ரத்­ன தெரி­வித்­துள்ளார்.

எங்­களை அமைச்சர் பத­வி­களை இரா­ஜி­னாமாச் செய்­யு­மாறு கேட்டுக் கொள்­வ­தற்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு அதி­கா­ர­மில்லை என்று அமைச்­சர்கள் டிலான் பெரேரா, தயா­சிறி ஜய­சே­கர, திலங்க சும­தி­பால ஆகி­யோர்கள் தெரி­வித்­துள்­ளார்கள்.

வலுக்கும் முரண்­பா­டுகள்

நல்­லாட்சி அர­சாங்­கத்தின் ஒப்­பந்த காலம் கடந்த 2017 டிசம்பர் 31ஆம் திக­தி­யுடன் முடி­வ­டைந்து விட்­டது. இதற்கு முன்­ன­தா­கவே நல்­லாட்சி அர­சாங்­கத்தின் பிர­தான பங்­கா­ளி­க­ளாக உள்ள ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கும், ஐக்­கிய தேசிய கட்­சிக்கும் இடையே முரண்­பா­டுகள் ஏற்­பட்­டன. இந்த முரண்­பா­டுகள் தற்­போது வலுத்துக் காணப்­ப­டு­கின்­றன. இரண்டு கட்­சி­யி­னரும் பாரா­ளு­மன்­றத்தில் தங்­க­ளுக்கு பெரும்­பான்­மை­யுள்­ள­தாகத் தெரி­வித்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

ஐக்­கிய தேசிய கட்­சி­யினர் தனித்து ஆட்சி அமைக்க வேண்டும். அவ்­வாறு ஆட்சி அமைப்­ப­தற்கு தங்­க­ளுக்கு 148 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் ஆத­ரவு இருப்­ப­தாகத் தெரி­வித்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். மறு­பு­றத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் தனித்து ஆட்சி அமைக்க முடியும். ஐக்­கிய தேசிய கட்­சியைச் சேர்ந்த 15 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் எம்­மோடு இணைந்து செயற்­ப­டு­வ­தற்குத் தயா­ராக உள்­ளார்கள் என்று தயா­சிறி ஜய­சே­கர போன்­ற­வர்கள் தெரி­வித்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

இவ்­வாறு இரண்டு கட்­சி­யி­னரும் முரண்­பா­டு­களை மேலும் வளர்க்கும் வகையில் கருத்­துக்­களை வெளி­யிட்டுக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இவர்­களின் கருத்­துக்கள் தொடர்பில் ஜனா­தி­ப­தியும், பிர­தமரும் எக்­க­ருத்­துக்­க­ளையும் வெளி­யி­ட­வில்லை.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியில் ஒரு பிரி­வினர் கூட்டு எதிர்க்கட்­சி­யி­ன­ரையும், ஐக்­கிய தேசிய கட்­சி­யி­லி­ருந்து ஒரு சில­ரையும், சிறு­பான்­மை­யின பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களில் சில­ரையும் இணைத்துக் கொண்டு ஆட்சி அமைப்­ப­தற்கு திட்­டங்­களை வகுத்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இதற்கு முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த­ரா­ஜ­ப­க் ஷவின் ஆத­ரவும் இருந்து கொண்­டி­ருக்­கின்­றது.

இரு கட்­சி­யி­னரும் ஆட்சி அதி­கா­ரத்தை தனித்துப் பெற வேண்­டு­மென்று காய்­களை நகர்த்திக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இவர்­க­ளி­டையே காணப்­படும் இப்­போட்டி சில வேளை பாரா­ளு­மன்ற தேர்­த­லுக்கு வித்­திட்­டுவிடுமோ என்று எண்­ணவும் தோன்­று­கின்­றது. இப்­போ­தைக்கு பாரா­ளு­மன்றத் தேர்தல் ஒன்று வரு­வ­தற்கு சாத்­தி­யங்­க­ளில்­லாத போதிலும், இரண்டு கட்­சி­க­ளுக்கும் இடையே முரண்­பா­டுகள் வலுப் பெற்று இன்று காணப்­படும் அர­சியல் குழப்ப நிலை இன்னும் அதி­க­ரிக்­கு­மாயின் பாரா­ளு­மன்ற தேர்தல் வரு­வ­தற்கே சாத்­தி­யங்கள் ஏற்­படும்.

தமிழ், முஸ்லிம் தரப்­பினர்

தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பு இன்­றைய நல்­லாட்சி அர­சாங்கம் எங்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­ற­வில்லை. அர­சாங்கம் இன்னும் தமிழ் மக்­களை ஏமாற்றிக் கொண்­டி­ருக்­கின்­ற­தென்று அக்­கட்­சி­யினர் தெரி­வித்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். நல்­லாட்சி அர­சாங்­கத்தில் தமிழர் தரப்­பினர் தங்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட உறு­தி­மொ­ழிகள் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை என்று தெரி­வித்துக் கொண்­டாலும் இந்த அர­சாங்­கத்தில் பல நன்­மை­களை அவர்கள் பெற்­றுள்­ளார்கள்.

அர­சாங்­கத்தின் மீது பல குற்­றச்­சாட்­டுக்­களை முன்வைத்­தாலும் இன்­றைய அர­சாங்­கத்தை குறிப்­பாக ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை காப்­பாற்ற வேண்­டி­ய­தொரு நிலைப்­பாட்­டி­லேயே தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பு உள்­ளது. இந்­நி­லைப்­பாடு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் கொண்­டுள்ள அன்பு என்று சொல்ல முடி­யாது. தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பைப் பொறுத்தவரை இரண்டு கட்­சி­களும் ஒன்­றுதான். தமிழர் விட­யத்தில் இரண்டு கட்­சி­களின் கொள்­கைகளும் ஒன்­றா­கவே உள்­ளன. ஆயினும், ஒப்­பீட்­ட­ளவில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சற்று பரவா­யில்லை என்­பதே அக்­கட்­சி­யி­னரின் முடி­வாகும். இத­னால்தான் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ராகக் கொண்டு வந்த நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை தோற்­க­டித்­தார்கள்.

ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரான பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பு வாக்­க­ளிக்க வேண்­டு­மென்று அத்­து­ரலிய ரதன தேரர் தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பைக் கேட்டுக் கொண்ட போதிலும் அதனை அக்­கட்சி ஏற்றுக் கொள்­ள­வில்லை. கடந்த காலங்­களில் தமி­ழர்­களை எவ்­வாறு நடத்­தி­னார்கள் என்­ப­தனை தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பு மறக்­க­வில்லை. இதே வேளை, சிறு­பான்­மை­யி­னரை பௌத்த பேரி­ன­வா­திகள் தங்­களின் தேவைக்கு ஏற்ப பயன்­ப­டுத்­து­வ­தற்கு வெட்­க­மில்­லாது செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றார்கள் என்­ப­தற்கு அத்­து­ரலிய ரதன தேரரின் வேண்­டுகோள் நல்­ல­தொரு எடுத்துக் காட்­டாகும். கடந்த அர­சாங்­கத்தில் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எதி­ராக பல கருத்­துக்­களை பௌத்த இன­வா­திகள் முன் வைத்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. அவர்கள் தற்­போது ஆட்­சியை மாற்ற வேண்­டு­மென்று செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இதற்கு தமி­ழர்­களின் ஆத­ரவைப் பெற்றுக் கொண்­டாலும் தமி­ழர்­க­ளுக்கு எந்த நன்­மை­களும் கிடைக்­காது என்­பதில் தமிழர் தரப்­பினர் உறு­தி­யா­கவே உள்­ளார்கள்.

இதே வேளை, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாத் தீர்­மா­னத்தை தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பு மிகச் சரி­யாகப் பயன்­ப­டுத்­தி­யுள்­ளது. நம்­பிக்கையில்லாத் தீர்­மா­னத்தை தோற்­க­டிக்க வேண்­டு­மாயின் எங்­களின் இந்த 10 ­கோ­ரிக்­கை­க­ளையும் நிறை­வேற்ற வேண்­டு­மென்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை அதற்கு சம்­ம­திக்க வைத்­துள்­ள­துடன், எழுத்து மூல­மான ஒப்­பு­த­லையும் பெற்­றுள்­ளார்கள்.

அர­சியல் என்­பது சாத்­தி­ய­மா­னதை சாதிக்கக் கூடி­ய­தொன்­றாகும். இதனை முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும், அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் அடிக்­கடி கூறுவார். இது போன்று சரி­யான நேரத்தில் சரி­யான முடி­வினை எடுக்க வேண்­டு­மென்றும் கூறி­யுள்ளார். ஆனால், முஸ்லிம் காங்­கிரஸ் பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை சரி­யாகப் பயன்­ப­டுத்திக் கொள்­ள­வில்லை. எந்த நிபந்­த­னை­யு­மின்றி முஸ்லிம் காங்­கி­ரஸும், அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸும் ஆத­ரித்­துள்­ளன. இவ்­விரு கட்­சி­களின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை காப்­பாற்­று­வ­தற்கே முன்­னு­ரிமை அளித்­துள்­ளனர். நல்­லாட்சி அர­சாங்­கத்தின் உரு­வாக்­கத்தில் முஸ்­லிம்­களின் பங்­க­ளிப்பு அதி­க­மாகும். முஸ்­லிம்­க­ளுக்குப் பல வாக்­குறு­திகள் அளிக்­கப்­பட்­டன. முஸ்­லிம்­களின் காணி­களை மீள வழங்கல், மீள்­கு­டி­யேற்றம், அபி­வி­ருத்­திகள் தொடர்பில் வழங்­கப்­பட்ட எந்த வாக்­கு­று­தி­களும் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. அவற்றை நிறை­வேற்றித் தரு­மாறு முஸ்லிம் கட்­சி­களின் தலை­வர்­களும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் கேட்டுக் கொள்­ள­வு­மில்லை.

இந்­நி­லையில் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை முஸ்லிம் கட்­சிகள் தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பு போன்று பயன்­ப­டுத்­தி­யி­ருக்க வேண்டும். பாரா­ளு­மன்­றத்தில் பிரே­ர­ணைக்கு வாக்­க­ளிப்பு நடை­பெ­று­வ­தற்கு முன்­ன­தாக சில நாட்­க­ளாக முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஐக்­கிய தேசிய கட்­சிக்கு அர­சியல் ரீதி­யாக தகுந்த பாடம் படிப்­பிப்போம் என்று தெரி­வித்­தி­ருந்தார். ஆனால், எந்த பாடத்­தையும் கற்­பிக்­காது வழக்கம் போன்று கைகளை உயர்த்­தி­யுள்­ளார்கள்.

இன்று முஸ்­லிம்­க­ளுக்கு பல பிரச்­சி­னைகள் உள்­ளன. முஸ்­லிம்­களின் மீது பௌத்த இன­வாதக் குழுக்கள் அம்­பாறை, திகன போன்ற பல இடங்­களில் தாக்­கு­தல்­களை மேற்­கொண்­டார்கள். அர­சாங்கம் அவற்றைக் கட்­டுப்­ப­டுத்த போதிய நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வில்லை. ஒரு சில இடங்­களில் பாது­காப்பு தரப்­பி­னரும் முஸ்லிம்­களின் மீது தாக்­கு­தல்­களை மேற்­கொண்­ட­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றன.

நல்­லாட்சி அர­சாங்­கத்தில் முஸ்­லிம்­கள்தான் அதிகம் பாதிக்­கப்­பட்­டுள்­ளார்கள். ஆயினும், முஸ்லிம் கட்­சிகள் அர­சாங்­கத்தின் பக்­கமே சார்ந்­துள்­ளன. முஸ்­லிம்­களின் தேவை­களை நிறை­வேற்றித் தரு­மாறு கோரிக்­கைகளை முன் வைக்­காது கண்­களை மூடிக் கொண்டு ஆத­ரவு அளித்­துள்­ளமை முஸ்­லிம்­க­ளி­டையே விமர்­ச­னங்­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன.

மஹிந்­த­ரா­ஜ­பக்ஷ

மஹிந்­த­ரா­ஜ­ப­க் ஷவைப் பொறுத்த வரை இன்­றைய அர­சாங்கம் மாற்­றப்­பட வேண்டும். அப்­போ­துதான் தங்கள் மீதான வழக்­குகள், குற்­றச்­சாட்­டு­க­ளி­லி­ருந்து விடு­பட முடியும். இதற்­கா­கவே அவர் தீவி­ர­மாக செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்றார். அவர் இன்னும் பௌத்த இன­வா­தி­க­ளுடன் நெருக்­க­மான உறவைக் கொண்­டுள்ளார். இது போன்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் நெருக்­கத்தைக் கொண்­டுள்­ளார்கள். தென்­னி­லங்கை அர­சி­யலில் பௌத்த இன­வா­திகள் தவிர்க்க முடி­யா­த­தொரு அங்­க­மா­கவே உள்­ளார்கள். இந்த வளர்ச்சி மஹிந்­த­ரா­ஜ­ப­க் ஷவின் காலத்­தில்தான் காலூன்­றி­யமை குறிப்­பி­டத்­தக்­கது. நாட்டில் பல பாகங்­க­ளிலும் பௌத்த இன­வா­திகள் உள்­ளார்கள். இவர்­களின் வாக்­கு­களைப் பெற்றுக் கொள்­வ­தற்கு தென்­னி­லங்கை பேரி­ன­வாத அர­சி­யல்­வா­திகள் தயார் நிலையில் உள்­ளார்கள்.

பௌத்த இன­வா­தி­களின் ஆத­ரவு மஹிந்­த­ரா­ஜ­ப­க் ஷ­வுக்கே அதிகம் உள்­ளது. இவர்­களின் ஆத­ர­வுடன் மஹிந்­த­ரா­ஜ­பக் ஷ அர­சாங்­கத்­திற்கு நெருக்­க­டியை கொடுத்துக் கொண்­டி­ருக்­கின்றார். இதே வேளை, ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ராகக் கொண்டு வரப்­பட்ட நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்த ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை சேர்ந்த அமைச்­சர்கள் 06 பேர் தங்­களின் அமைச்சர் பத­வியை இரா­ஜி­னாமாச் செய்து விட்டு எதிர்க்­கட்சி வரி­சையில் அமர இருப்­ப­தாக மஹிந்­த­ரா­ஜ­பக் ஷ தெரி­வித்­துள்ளார். மேலும், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வு­டான சந்­திப்பின் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி சார்பு அமைச்­சர்கள் 16 பேரும் தமது அமைச்சர் பத­வி­களை இரா­ஜி­னாமாச் செய்­வ­தற்கு தீர்­மா­னித்­துள்­ள­தாக இரா­ஜாங்க அமைச்சர் லக் ஷ்மன் யாப்பா புதன் இரவு தெரி­வித்­துள்ளார். இவரின் இக்­கூற்று இலங்கை அர­சி­யலில் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இதேவேளை, இரா­ஜி­னாமாச் செய்­யப்­படும் அமைச்சர் பத­விகள் அர­சாங்­கத்­துடன் இணைந்து செயற்­படும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு வழங்­கப்­ப­டு­மென்று அமைச்சர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்­துள்ளார். இவரின் இக்­கூற்று ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியில் அமைச்சர் பத­வி­களைப் பெற்றுக் கொள்­ளா­துள்­ள­வர்­களை கவர்­வ­தற்­கா­கவே என்று தெரி­கின்­றது. அமைச்சர் பத­விகள் மூல­மாக அர­சாங்­கத்­திற்­கான ஆத­ரவைப் பெற்றுக் கொள்­வ­தற்கு ஐக்­கிய தேசிய கட்சி திட்­ட­மிட்­டுள்­ளது.

எதிர்­வி­ளைவு

  இவ்­வாறு அர­சாங்­கத்தில் உள்ள இரண்டு கட்­சி­க­ளுக்கும் இடையே பலத்த முரண்­பா­டுகள் வலுத்துக் கொண்­டி­ருக்கும் பின்­ன­ணியில் அர­சாங்­கத்தை கவிழ்க்க வேண்­டு­மென்று கூட்டு எதிரணி­யினர் காய்­களை நகர்த்திக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். நாட்டில் அர­சியல் குழப்ப நிலை நீடித்துக் கொண்டே இருக்கின்றது. இதனால், வெளிநாட்டு முதலீடுகளில் வீழ்ச்சி ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளன. அண்மையில் முஸ்லிம்களுக்கு எதிராக கண்டி மாவட்டத்தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் உல்லாசப் பிரயாணிகளின் வருகையில் வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் நிதி நிலைமைகள் கூட சிறப்பாகக் காணப்படவில்லை. கடந்த இரண்டு மாதங்களில் எரிபொருள் விலையை பேணுவதில் அரசாங்கத்திற்கு ரூபா 989 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

 இவற்றை அவதானிக்கும் போது இலங்கை அரசியல் எதிர்காலத்தில் இன்னும் மோசமான, குழப்பமான நிலையை அடையுமென்றே எதிர்பார்க்கப்படுகின்றது. அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையானது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விதைத்ததையே அறுவடை செய்து கொண்டிருக்கின்றார். அதிக சூழ்ச்சி கையைச் சுடும் என்பதற்கு ரணில் விக்கிரமசிங்கவுக்கு இன்று ஏற்பட்டுள்ள அரசியல் நிலை நல்ல உதாரணமாகும். ரணில் விக்கிரமசிங்க கடந்த பொதுத் தேர்தல் முடிந்த கையுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து நல்லாட்சியை ஏற்படுத்தினாலும், அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலவீனப்படுத்த வேண்டுமென்று திட்டமிட்டார். இதற்காக அவர் மஹிந்தராஜபக் ஷவின் முரண்பாட்டைப் பயன்படுத்திக் கொண்டார். மஹிந்தராஜபக் ஷவின் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் பல குற்றச்சாட்டுக்களும், வழக்குகளும் உள்ளன. ஆயினும், இவற்றை தீவிரப்படுத்தாது மஹிந்தவையும், அவரது குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ளும் தந்திரோபாயத்தை ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்டார். மஹிந்தவை வைத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்த எண்ணினார்.

 ரணில் விக்கிரமசிங்க எண்ணியது போல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவுபட்டாலும், மஹிந்தராஜபக் ஷவின் தலை­மையில் பொதுப் பெரமுன எனும் கட்சி உருவாகி எல்லா அரசியல் கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளிவிடுமென்று அவர் நினைக்கவில்லை. இன்று அவரது ஆட்சிக்கே ஆப்பு வைக்கும் அள­விற்கு மஹிந்தராஜபக் ஷ உறுதியாக உள்ளார். மஹிந்தவை கட்டுப்படுத்த எடுக்கப்படும் எந்த­வொரு நடவடிக்கையும் நாட்டில் இருக்கும் அரசியல் குழப்பத்தை அதிகரிக்கவே செய்யும். இத­னால், ரணில் விக்கிரமசிங்க நெருக்கடிக்குள் மாட்டியுள்ளார். இதி­லிருந்து அவர் விடுபட எத்தகைய அரசியல் நகர்வுகளை மேற்கொள்வார் என்பதனை அவதானிக்க வேண்டியுள்ளது.