Verified Web

எவரது பசப்பு வார்த்தைகளுக்கும் மயங்கவேண்டிய தேவை எமக்கில்லை

2018-04-16 01:20:51 Administrator

சிங்களத்தில்: ஆஷிகா பிரஹ்மான 
தமிழாக்கம்: நஜீப் பின் கபூர்

பல்லின மக்களுக்கு மத்தியில் நிலவும் ஐக்கியம் என்பது அசைக்கமுடியாத மக்கள் சக்தியாகும். இந்த ஐக்கியமே ஒருவரையொருவர் மதிக்கும் பண்புக்கு வழி கோலுகிறது. ஆனால் இந்தப் பண்பை சிதைக்கும் வகையில் இனங்களுக்கிடையே பிளவை விதைத்து, இருண்ட யுகமொன்றுக்குள் தள்ளும் காரியம் அடிக்கடி அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. இன, மத ரீதியாக மக்களைப் பிரித்து குளிர்காயவே பலர் முயன்று கொண்டிருக்கிறார்கள். அவரவர் கலாசாரப் பண்பாடுகளை சரியாகப் புரிந்துகொள்ளாத வரையில் இன நல்லிணக்கத்திற்கு அடி விழுவது தவிர்க்க முடியாமல் போகிறது.

பெரும்பாலானோர் பிரிவினையை விரும்புவதில்லை. ஆனால் விதைக்கப்பட்டுள்ள பிரிவினைச் சிந்தனையால் ஓர் இனத்தை மற்றோர் இனம் எதிரியாகவும் சந்தேகக் கண்களுடனும் நோக்கும் துரதிஷ்ட நிலையை நாம் அடிக்கடி அனுபவித்து வருகிறோம். இதில் எப்போதும் எவரும் வெற்றி பெற்றதில்லை. ஆனால் மொத்தத்தில் அழிக்கமுடியாத கரும்புள்ளியொன்றைத்தான் கண்டு வருகிறோம். இந்த அவல நிலை தொடருவதை யாரும் விரும்புவதில்லை. இந்நிலையில் ஒவ்வொருவரும் பிற இனங்களை, அடுத்த மதங்களை மதித்து நடக்கும் நிலைக்கு மிகவும் துரிதமாகச் செல்ல வேண்டியுள்ளது. எனவே நாம் ஒருவரையொருவர் புரிந்துணர்வோடு அணுகவேண்டும். மனம்விட்டு உரையாடவேண்டும். அனைவரும் ஒரு தாய் மக்களாக கைகோர்க்க வேண்டும். இவை எமக்காக மட்டுமல்ல. இந்நாட்டின் எதிர்கால சுபீட்சத்தை கருத்திற்கொண்டே இந்த நல்லிணக்க நல்லுறவுக்கு வழிவகுக்க வேண்டும். இந்நிலையில் தேசிய ஐக்கியத்துக்கான பாக்கிர் மாக்கார் மத்திய நிலையத் தலைவர் இம்தியாஸ் பாக்கிர் மாக்காருடன் மேற்கொண்ட நேர்காணல் இங்கு தரப்படுகிறது.

நிறத்தால், மதத்தால், மொழியால் வேறு­பட்­டுள்ள நாம் ஒரே குடும்பப் பிள்­ளைகள். ஆனால் நாம் பல்­வகை கலா­சார பண்­பு­களைப் புரிந்து நடக்­கி­றோமா?

இலங்கை வர­லாற்றை எடுத்­துக்­கொண்­டாலும் சரி, உலக வர­லாற்றை உற்று நோக்­கி­னாலும் சரி, அங்­குள்ள சமூ­கங்கள் மத்­தியில் பல்­வகைத் தன்மை காணப்­ப­டலாம். அவை மதம், இனம், நிறம் என்று பல வகை­க­ளிலும் அமை­யலாம். ஆனால் அத்­த­கைய பல்­வகைத் தன்­மையைப் புரிந்­து­கொண்டு அவற்­றுக்கு மதிப்­ப­ளித்து, நல்ல புரிந்­து­ணர்­வோடு வாழத் தவறும் எந்த நாடும் விமோ­சனம் அடை­யப்­போ­வ­தில்லை. இப்­போது ஆபி­ரிக்க நாடு­களைப் பாருங்கள். அங்­கெல்லாம் நல்ல வளங்கள் இருக்­கின்­றன. ஆனால் அந்­நாட்டு மக்­களால் தலை நிமிர்ந்து வாழ­மு­டி­யாத நிலைதான் உள்­ளது. இனப்­பி­ரச்­சினை, கோத்­திர மோதல் போன்ற அவ­லங்­களால் அந்­நா­டு­க­ளுக்கு தலை­தூக்­கவே முடி­யா­துள்­ளது. எமது வல­யத்­திற்­குட்­பட்ட நாடு­களை நோக்­குங்கள். எமது சிறு­ப­ரா­யத்தில் நாம் இந்­தி­யாவை மகா­பா­ரதம் என்று பெரு­மை­யாக அழைத்தோம். ஆனால் ஏகா­தி­பத்­தி­ய­வா­தி­களின் பிடி­யி­லி­ருந்த அந்­நாட்­டுக்கு அவர்கள் சுதந்­திரம் வழங்­கும்­போது என்ன நடந்­தது? அங்­கி­ருந்த முஸ்லிம் – இந்­துக்­களின் புரிந்­து­ண­ரா­மையை ஓர் ஆயு­த­மாகப் பயன்­ப­டுத்­திய பிரித்­தா­னியர் மகா­பா­ர­தத்தை இரண்­டாகப் பிரித்­தனர். அந்த இடத்தில் பாகிஸ்தான் நாடு உத­ய­மா­கி­யது. அதன் பின்னர் பாகிஸ்­தா­னி­லி­ருந்து வங்­கா­ள­தேசம் என்ற நாடு பிரிந்து சென்­றது. இத­னால்தான் ஒன்­று­பட்டு இருந்­தால்தான் நல்­ல­தொரு எதிர்­கா­லத்தைக் காணலாம் என்று நான் எப்­போதும் கூறி வரு­கிறேன். பிரித்து நோக்­கினால் தேசத்­துக்­குத்தான் நாசம். கவிஞர் கரு­ணா­ரத்ன அபே­சே­கர இயற்றி, லதா­வல்­பொல பாடிய ஒற்­றுமை கீதம் எல்­லோ­ருக்கும் நினை­வி­ருக்­கலாம். எனவே ஒன்­று­பட்டு வாழ்­வ­தற்­காக பல்­வகைத் தன்­மையை மதித்து வாழ­வேண்டும். இதனைக் கைவிட்டு அச்சம், சந்­தேகம், நம்­பிக்­கை­யீ­னத்­துடன் யாராலும் வெற்­றி­க­ர­மா­கவே வாழ­மு­டி­யாது.

 

பிரிந்து வாழ­வேண்­டிய தேவை பொது­மக்­க­ளிடம் இல்­லை­தானே?

குறு­கிய நோக்கம் கொண்­டோ­ரால்தான் பெரும்­பா­லான பிரச்­சி­னைகள் உரு­வாக்­கப்­ப­டு­கின்­றன. வர­லாற்று நெடு­கிலும் இதனைக் கண்டு வரு­கிறோம். நாம் சிறு­வ­யதில் எமது ஊர்­களில் சுருட்­டுக்­க­டை­க­ளைத்தான் பார்த்து வந்தோம். இப்­போது சுப்பர் மார்க்­கட்­டு­களைத் தான் காண்­கிறோம். அன்று பேரு­வ­ளையில் சின்­னய்­யாவின் கடை­யென்று தமி­ழரின் கடை­யொன்­றி­ருந்­தது. எல்­லோரும் அந்தக் கடையில் கொள்­முதல் செய்­தனர். எத்­த­கைய வேற்­று­மையும் பாராட்­டப்­ப­டு­வ­தில்லை. இலங்கை என்­ற­வுடன் அங்கு பொட்டு இருக்கும், பிக்­கு­களின் காவி­யு­டை­யி­ருக்கும், முஸ்லிம் பெண்கள் அணியும் ஹிஜாப் இருக்கும், கன்­னி­யாஸ்­தி­ரி­க­ளது உடைகள் இருக்கும், தேசிய ஆடைகள் இருக்கும், பௌத்த பெண்­க­ளது ஒசரி சாரிகள் இருக்கும். இத்­த­கைய பல்­வகை கலா­சார சீரு­டைகள் தான் இலங்கை என்­றதும் முன்­னி­லைப்­பட வேண்டும். விண்­வெளி வீரர் நீல் ஆம்ஸ்ரோங் சந்­தி­ரத்­த­ரையில் முதன்­முதல் கால் பதித்­த­வுடன் அவர் பூமியைப் பார்த்து கூறிய கூற்­றுதான் இப்­போது என் நினை­வுக்கு வரு­கி­றது. “எமது எழில்­மிகு தாயகம் தெரி­கி­றது” என்று தான் பூகோ­ளத்தைப் பொது­வாக விளித்துக் கூறினார். அவர் தன் தாயகம் அமெ­ரிக்­காவைக் காண்­கிறேன் என்று குறு­கிய எண்­ணத்­துடன் நோக்­க­வில்லை. அவர் பொதுப்­ப­டை­யாக பூமி என்று விளித்­தமை பரந்த எண்­ணக்­க­ருத்­துடன்தான் என்­பதை நாம் எண்ணிப் பார்க்­க­வேண்டும்.

தேவ­நம்­பி­ய­திஸ்ஸ மன்னன் மான் வேட்­டைக்குச் சென்­ற­போது மிஹிந்து மஹ­ர­ஹத்தன் தேரர் தரி­சனம் செய்த கதையை நாம் கேள்­விப்­பட்­டி­ருக்­கிறோம். மிஹிந்து தேரர் மன்­னனின் செயல்­கண்டு சொன்ன வார்த்தை தெரி­யுமா? “வானத்தில் பறக்கும் பட்­சி­க­ளுக்கும் பூமியில் சஞ்­ச­ரித்துக் கொண்­டி­ருக்கும் சகல ஜீவ­ரா­சி­க­ளுக்கும் உயிர்­வாழும் உரிமை உண்டு. அந்த உரி­மையை பொறுப்­பு­ணர்­வுள்ளோர் மாத்­தி­ரமே பேணிப் பாது­காக்­கின்­றனர். இத­னைத்தான் புத்­த­தர்மம் எடுத்­தோ­து­கின்­றது. மனித இனம் என்­பது ஒரே குடும்ப வாரி­சுகள். இதனை அனை­வரும் உணர வேண்டும். அவ்­வாறு எண்ணத் தவ­று­வோ­மானால் எங்­க­ளது எதிர்­கா­லத்­தைத்தான் இருள்­ம­ய­மாக்கிக் கொள்­கிறோம்.

சமூ­கத்­துக்குப் பொறுப்புக் கூற­வேண்­டிய மக்கள் அப்­பொ­றுப்பை ஏற்று நடக்­கி­றார்­களா?

இதற்கு பதி­லாக நான் உங்கள் மீதும் விரலை நீட்­டு­கிறேன். அதுதான் ஊட­கங்­க­ளுக்குத் தான். வர­லாற்று ரீதி­யாக அச்­சக, இலத்­தி­ர­னியல் ஊட­கங்­க­ளோடு சமூக வலைத்­த­ளங்கள் உள்­ளிட்ட அனைத்து ஊட­கங்­க­ளி­லு­முள்ள எல்­லோரும் இவ்­வி­ட­யத்தில் பொறுப்­பு­தா­ரி­கள்தான். இவர்கள் தம் கட­மையை சரி­வர நிறை­வேற்­றி­யுள்­ளார்­களா? இக்­கேள்வி எங்கள் மனதில் எழவே செய்­கி­றது. ஒரு­சில தமிழ்ப் பத்­தி­ரி­கை­களை எடுத்­துக்­கொண்டால் அவைகள் வேறோர் உலகில் சஞ்­ச­ரித்துக் கொண்­டி­ருக்­கின்­றன. சில சிங்­கள பத்­தி­ரி­கை­களை உற்று நோக்­கினால் அவையும் மேற்­சொன்­ன­தற்கு விதி­வி­லக்­கல்ல. அவர்­களால் மூட்­டப்­ப­டு­கின்ற தீயின் பயங்­கரம் குறித்து அவர்­க­ளுக்கே தெரி­வ­தில்லை. இதுதான் இன்று எழுந்­துள்ள துர­திஷ்­ட­மாகும். தம்மால் தூண்­டப்­படும் பாதக விளை­வுகள் குறித்து அவர்கள் புரிந்­து­கொள்ள வேண்டும். 2015 ஜன­வரி 8 ஆம் திகதி இந்­நாட்டில் அர­சியல் மாற்­ற­மொன்று நிகழ்ந்­தது. இந்த அர­சியல் மாற்­றத்­திற்கு பொரு­ளா­தார பிரச்­சி­னை­களை விட இன­வாத சிந்­த­னையைத் தோற்­க­டிக்க வேண்­டு­மென்ற கருத்தே மேலோங்­கி­யி­ருந்­தது. பிரிந்­தி­ருந்து சிந்­திப்­பதில் பய­னில்லை. -ஓரி­ன­மாக இருந்து பய­ணிப்போம் என்ற எண்ண வெளிப்­பாடே அந்த இடத்தில் வெளிப்­ப­டை­யாகத் தெரிந்­தது. அதற்­கா­கவே எல்­லோரும் அணி திரண்­டார்கள். இந்த நல்­லி­ணக்க செயற்­பாட்டை நாம் முன்­னெ­டுத்­தோமா? எமது பொறுப்­புக்­களை நிறை­வேற்­றி­னோமா? எம்மை நாமே இப்­படிக் கேள்வி எழுப்­பிக்­கொள்ள வேண்டும். இவ்­வாறு நாம் செய்­வது இது­வரை நாம் வாழ்ந்து வந்த துர­திஷ்ட சமூக நிலையை எமது வருங்­கால சந்­த­தி­களும் அனு­ப­விக்­கக்­கூ­டாது என்­ப­தற்­கே­யாகும்.

 

எல்லா விட­யங்­க­ளையும் அர­சி­யலே தீர்­மா­னிக்­கக்­கூ­டிய சமூ­க­மொன்றே உரு­வாக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. இந்­நி­லையில் ஏன் அதி­லுள்ள தகி­டு­தத்­தங்கள் வெளிக்­கொ­ண­ரப்­ப­டு­வ­தில்லை?

இது அர­சி­யலில் மட்­டு­மல்ல சமயத் தலை­வர்கள், ஊடக ஊரி­மை­யா­ளர்கள் உள்­ளிட்டோர் அனை­வரும் விடும் தவ­றாகும். நாச­கார வேலை­களில் ஈடு­படும் சிறு­ கூட்­டத்­தினர் புரியும் அட்­ட­கா­சங்­களைக் கண்­டித்து அதற்கு எதிர்ப்புக் காட்­டா­தி­ருப்பின் இத்­த­கை­யோரும் சமூ­கத்­துக்கு பார­தூ­ர­மான அநீ­தியே இழைத்து வரு­வோ­ரா­வார்கள். நாம் அர­சியல் ரீதி­யாக சரி­யான தீர்­மா­னங்கள் எடுத்­துள்ள சந்­தர்ப்­பங்­களில் எல்லாம் இந்­நாட்­டுக்கு நல்ல பயனும் நன்­மையும் கிடைத்­துள்­ளன. சுதந்­திரம் பெற்­றுக்­கொள்­ளப்­பட்ட விட­யத்தைப் பாருங்கள். ஏகா­தி­பத்­திய வெள்­ளைக்­காரன் எம்மைப் பார்த்துச் சொன்­னது “நீங்கள் பிரிந்­தி­ருக்கும் இன­மாகும். அதனால் சுதந்­திரம் தர­மு­டி­யாது. சுதந்­திரம் தந்தால் நீங்கள் அடித்­துக்­கொண்டு சாவீர்கள்…...” என்று கேவ­ல­மா­கவே எடை போட்டுக் கூறி­னார்கள். சில சிறு­பான்மைத் தலை­வர்கள் ஐம்­ப­துக்கு ஐம்­பது கோரிக்­கையை முன்­வைத்­தனர். இலங்­கையின் சுதந்­திர முன்­னோ­டி­யான டீ.எஸ்.சேனா­நா­யக்க போன்ற தலை­வர்­க­ளுக்கு இது பெரும் சவா­லாக அமைந்­தது. இந்­நி­லையில் தான் நாட்டு சுதந்­தி­ரத்­திற்­காக சிங்­கள மகா சங்கம், தமிழ் சங்கம், சோனகர் சங்கம், இந்து சங்கம், பேகர் லீக், மலாயர் என்ற அனைத்து இன, மதங்­க­ளையும் ஓரே கொடியின் கீழ்­கொண்டு வந்தார். இதே போன்­றுதான் அன்று ஐக்­கிய தேசியக் கட்­சியை தோற்­று­வித்த போதும் சிங்­க­ளவர், தமிழர், முஸ்­லிம்கள் அனை­வரும் நாட்டின் ஓரி­னமே என்ற தாரக மந்­தி­ரமே முன்­வைக்­கப்­பட்­டது. அனை­வரும் இலங்­கையர் என்ற உணர்வே அன்று மேலோங்கச் செய்­யப்­பட்­டது.

அன்று நாட்டின் முன்­னோடித் தலை­வர்­க­ளுடன் கை­கோர்த்து நின்ற முஸ்லிம் தலை­வ­ரான ரீ.பி.ஜாயாவின் நிலைப்­பாடு குறித்து முஸ்லிம் என்ற வகையில் நாம் பெரு­மைப்­ப­டு­கிறோம். வெள்­ளையர் எமது கருத்து வேற்­று­மைகள் குறித்து கேவ­ல­மாக வார்த்தைப் பிர­யோ­கங்­களை முன்­வைத்­த­போது ஜாயா சொன்ன பதில் என்ன தெரி­யுமா? “இந்­நாட்டில் முஸ்­லிம்­க­ளுக்கு பிரச்­சி­னைகள் இருக்­கத்தான் செய்­கின்­றன. இங்கு நாம் ஒரே குடும்ப சகோ­த­ரர்­க­ளாவோம். எனவே எமது தேவை­களை எமது மூத்த அண்­ண­னான சிங்­கள சகோ­த­ரர்­க­ளிடம் கேட்டு எமது பிரச்­சி­னை­களை தீர்த்துக் கொள்வோம். இன்று எமக்குத் தேவை நாட்டின் சுதந்­திரம் தான். நான் நாட்டின் நாலா புறங்­க­ளி­லு­முள்ள முஸ்லிம் அமைப்­புக்­க­ளை­யெல்லாம் நாடிச்­சென்­றுதான் இந்த முடிவை முன் வைக்­கிறேன். எம் அனை­வரும் எந்த நிபந்­த­னை­களும் முன்­வைக்­காது நாட்டின் சுதந்­தி­ரத்­தையே நாடி நிற்­கி­றார்கள். அத்­துடன் காலம் கடத்­தாது அவ­ச­ர­மாக சுதந்­தி­ரத்தை தரும்­ப­டியே முஸ்­லிம்கள் கோரு­கின்­றார்கள்” என்று ரீ.பி.ஜாயா ஆங்­கிலத் தலை­வர்­க­ளிடம் ஆணித்­த­ர­மாகக் கேட்டு நின்றார். சிறு­பான்­மை­யான நாம் இங்கு எப்­படிப் பய­ணிக்க வேண்டும் என்ற நேர்­பா­தையை அவர் மிகவும் துல்­லி­ய­மாக வழி­காட்டி வைத்தார். அன்று இங்­குள்ள இனங்கள் ஒன்­று­பட்டு குரல்­கொ­டுக்கத் தவ­றி­யி­ருந்தால் இன்று நாம் அனு­ப­வித்துக் கொண்­டி­ருக்கும் சுதந்­திரம் அன்று கிடைத்­தி­ருக்­காது. ஏகா­தி­பத்­தி­யத்­திற்கு அடிமைச் சேவ­கர்­க­ளா­கவே தொடர்ந்தும் இருந்­தி­ருப்போம்.

 

தீவி­ர­வா­தி­களின் நட­வ­டிக்­கை­களைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காக சட்டம் சரி­யாக செயற்­ப­டுத்­தப்­ப­டு­கி­றதா?

 இதற்கு விடை காண மிகவும் அண்­மையில் இடம்­பெற்ற திகன அசம்­பா­வி­தங்­களை எடுத்து நோக்­குங்கள். பலி­யான அந்த வாலி­பனின் குடும்­பத்­தி­னரோ அல்­லது ஊர் மக்­களோ அந்த மோதலை உரு­வாக்க வில்லை. வெளி­யி­டங்­களில் இருந்து வந்­த­வர்கள் தான், இதனைத் தூண்­டியும் வழி­ந­டத்­தியும் இருப்­பது விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து வெளிச்­சத்­திற்கு வந்­தி­ருக்­கி­றது. இத்­த­கைய அடா­வ­டித்­த­னங்­க­ளுக்கு சமூக வலைத்­த­ளங்கள் ஊடா­கவே தக­வல்கள் பரி­மாறிக் கொள்­ளப்­ப­டு­கின்­றன. உரிய நேரத்தில் குறித்த இடத்தில் திர­ளும்­படி சமிக்ஞைகள் வழங்­கப்­ப­டு­கின்­றன. சமூக இணையத்­த­ளங்கள் மூல­மாக விச­மி­களால் 365 நாட்­களும் விச­மக்­க­ருத்­துக்கள் பரப்­பப்­பட்டே வந்­துள்­ளன. முஸ்­லிம்கள் மீது வெறுப்­பூட்டச் செய்­வதே இவர்­களின் இலக்­காக இருந்­துள்­ளன. இதனைத் தடுத்து நிறுத்த நாம் எடுத்த நட­வ­டிக்கை என்ன? இதற்கு முன்னர் 2014 இல் தர்ஹா நகரில் நடந்த வன்­மு­றை­களைப் பாருங்கள். கூட்டம் ஒன்று நடத்­தப்­பட்­டது. கூட்­டத்தைத் தொடர்ந்து ஊர்­வலம் செல்­வ­தற்கு முஸ்­தீபு நடந்­த­போது அதற்கு இட­ம­ளிக்­க­வேண்டாம் என்று அர­சியல் தலை­வர்கள் கூறினர். அதே­போன்று மதத் தலை­வர்­களும் எச்­ச­ரித்­தனர். இவை யாவும் செவிடன் காதில் ஊதிய சங்­கா­கவே அமைந்­தன. அதன் விளைவை அன்று கண்­டு­கொண்டோம்.

 

மேற்­படி சாபக்­கே­டுகள் யாவும் 2015 ஜன­வரி 8 ஆம் திக­தி­யுடன் சமா­தி­யா­கி­விடும். என்றே மக்கள் நம்­பிக்கை வைத்­தனர். ஆனால் அதற்கு அர­சாங்கம் செய்­த­தென்ன?

 சட்டம் முறை­யாகப் பேணக்­கூ­டிய சமூக அமைப்­பொன்றை நிலை­நாட்டும் நன்­நோக்­கு­டனே தான் ஆட்சி மாற்றம் ஏற்­ப­டுத்­தப்­பட்­டது. இதற்கு நாட்டின் அனைத்துத் துறை­யி­னரும் பங்­கு­தா­ரி­கள்தான். அர­சியல் தலை­வர்கள், சமயத் தலை­வர்கள், ஊட­கங்­களின் தலை­வர்கள், சிவில் சமூ­கத்தின் அனைத்து தரப்­பி­னர்கள் ஆகிய அனைத்துத் துறை­யி­னரும் தமது குறிக்கோள் நிறை­வேற்­றப்­பட்­டதா என்று தமக்­குத்­தாமே வின­விக்­கொள்ள வேண்டும். உண்­மை­யி­லேயே நிலைமை துர­திஷ்­ட­மா­கத்தான் உள்­ளது.

 

சமா­தானம், சக­வாழ்வு, நல்­லி­ணக்­கத்­துக்­காக தனி­யான அமைச்­சொன்று அமர்த்­தப்­பட்­டி­ருக்­கி­றது. ஆனாலும் தேசிய பிரச்­சி­னை­களைத் தீர்க்­க­மு­டி­யாது அரசு திண்­டாடிக் கொண்­டி­ருக்­கி­றது. அர­சியல் மாற்­றத்தின் பிர­தி­பலன் எங்கே?

நல்­லி­ணக்க செயற்­பா­டுகள் சரி­யான முறையில் அமு­லாக்­கப்­பட்­டி­ருந்தால் நாம் இன்­றுள்ள துர­திஷ்ட நிலைக்கு முகம் கொடுத்­தி­ருக்­க­மாட்டோம். இந்­நி­லையில் அர­சியல் தலை­வர்கள், சமயத் தலை­வர்கள், சமூக தலை­வர்கள், ஊடக நிறு­வன உரி­மை­யா­ளர்கள் ஆகிய அனை­வரும் ஓரி­டத்­திற்கு வர­வேண்டும். வார்த்தை ஜாலங்­க­ளா­லன்றி செயல்­ரீ­தி­யாக எல்­லோரும் ஒரு முகப்­ப­ட­வேண்டும். எல்­லோ­ராலும் விதந்­து­ரைக்­கப்­ப­டு­கின்ற சிங்­கப்­பூரை எடுத்­துக்­கொள்­ளுங்கள். அங்கு சரியான தலைமைத்துவம் கிடைத்தது. அதேபோன்று சீனர்களும் மலாயர்களும் முட்டிமோதிக்கொண்ட நாடு. அங்கு சரியான தலைவராக லீக்குவான்யூ நாட்டைப் பொறுப்பேற்றார். ஒரே நாடு, ஒரே இனம் என்ற நிலைப்பாட்டில் அவர் இருந்தார். அதனால் அந்நாடு உன்னத நிலையடைந்துள்ளது.

சிங்கப்பூர் நாட்டுக்குச் சென்ற எனது நண்பர் ஒருவர் அங்கு கண்டு கொண்ட ஓர் அனுபவம் குறித்து என்னிடம் முறையிட்டார் அதில் எங்கள் எல்லோருக்கும் நல்லதொரு முன்மாதிரி உள்ளது. அதாவது அவர் சிங்கப்பூர் விமான நிலையத்தில் இறங்கி ஒரு வாடகை வண்டியில் ஏறியிருக்கிறார். அங்கு ஓடும் டக்ஸிகளில் அதன் சாரதி குறித்தும் சாதாரணமாக சிறு குறிப்பொன்றும் எழுதி ஒட்டப்பட்டுள்ளது. அந்தக் குறிப்பின் கீழே சாரதியின் பெயர் அகமட் என்றும் குறிக்கப்பட்டிருந்ததாம். அப்பெயரைக் கண்ட எனது நண்பர் நீங்கள் முஸ்லிமா? என்று வினவியிருக்கிறார். அதற்கு அச்சாரதி இல்லை, இல்லை நான் சிங்கப்பூர் பிரஜை என்றுதான் பதிலளித்திருக்கிறார். எனவே சிங்கப்பூர் பிரஜை எவரிடம் வினவினாலும் அவர் எந்த இனம், மதத்தைச் சேர்ந்தவராயினும் சரி, தன்னை சிங்கப்பூர் பிரஜை என்று சொல்வதைத்தான் அங்கு கேட்க முடிகிறது. நாமும் இந்த இடத்திற்குத்தான் செல்ல வேண்டும். வர்த்தக இலாபம், அரசியல் இலாபத்திற்காக நாம் எவரதும் வார்த்தைஜாலங்களுக்கும் மயங்கக்கூடாது. இந்த விடயத்தில் நாம் தாமதித்துவிட்டோம். எமது வருங்கால குழந்தைகளுக்கு இப்படி குறுகிய எண்ணம் கொண்ட சமூக நிலையொன்றை ஒப்படைக்கக்கூடாது.