Verified Web

குற்றவாளிக் கூண்டில் பேஸ் புக் நிறுவனம்

2018-04-16 00:46:44 Administrator

'பேஸ் புக்' நிறுவனம் 1300 மில்­லியன் பயன்­பாட்­டா­ளர்­களைக் கொண்ட உலகின் முன்­னணி சமூக வலைத்­த­ள­மான 'பேஸ் புக்' இன்று குற்­ற­வாளிக் கூண்டில் நிறுத்­தப்­பட்­டுள்­ளது. 

 

'கேம்­பிரிட்ஜ் அன­லி­டிகா' என்னும் அர­சியல் ஆலோ­சனை நிறு­வ­னத்தால், 87 மில்­லியன் பேஸ் புக் பயன்­பாட்­டா­ளர்­களின் தக­வல்கள் கடந்த அமெ­ரிக்க ஜனா­தி­பதித் தேர்தல் காலத்தின் போது முறை­கே­டாக பயன்­ப­டுத்­தப்­பட்­ட­தாக முன்­வைக்­கப்­பட்ட குற்­றச்­சாட்­டினை பேஸ்புக் நிறு­வனம் ஒப்பு கொண்­டுள்­ளது. இத­னை­ய­டுத்து பேஸ் புக் மீது பலத்த விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன.

 

இந் நிலையில் பேஸ் புக் நிறு­வ­னத்தின் நிறை­வேற்று அதி­காரி மார்க் ஸக்­கர்பர்க், கடந்த இரு தினங்­க­ளாக அமெ­ரிக்க செனட் சபை முன்­பாக சாட்­சி­ய­ம­ளித்தார். இதன் போது அமெ­ரிக்க செனட் உறுப்­பி­னர்கள் மார்க்கை கேள்­விக்­க­ணை­களால் துளைத்­தெ­டுத்­தனர். தமது நிறு­வ­னத்தின் செயற்­பா­டு­களில் பல குறை­பா­டுகள் இருப்­பதை ஒப்புக் கொண்ட மார்க் ஸக்­கர்பர்க், அவற்றைக் கண்­ட­றிந்து மேம்­ப­டுத்­து­வ­தற்­கான பணி­களை மும்­மு­ர­மாக முன்­னெ­டுக்­க­வுள்­ள­தாக உறு­தி­ய­ளித்­துள்ளார்.

 

''தக­வல்­களை வழங்கும் தளத்தை பேஸ்புக் வழங்­கு­கி­றது. அதை எவ்­வாறு பயன்­ப­டுத்­து­வது என்­பது பயன்­ப­டுத்­து­ப­வர்­களின் பொறுப்பு என்றே நாம் முன்னர் கரு­தி­யி­ருந்தோம். ஆனால் அத்­த­கைய குறு­கிய எண்ணம், தவ­றான ஒன்று என்­பதைப் புரிந்து கொண்­டுள்ளோம். இப்­போ­தைய நிகழ்­வுகள் நாங்கள் அதி­க­மான பொறுப்­பு­களை எடுக்க வேண்டும் என்­பதை உணர்த்­து­கி­றது'' என அவர் செனட்டின் முன் குறிப்­பிட்­டி­ருந்தார்.

 

பய­னா­ளர்­களின் தக­வல்கள் முறை­கே­டாக பயன்­ப­டுத்­தப்­பட்ட குற்­றச்­சாட்டு ஒரு­புறம் இருக்க, உல­க­ளா­விய ரீதியில் வெறுப்­பு­ணர்­வு­களைப் பரப்­பவும் வன்­மு­றை­களைத் தூண்­டவும் பேஸ் புக் பிர­தான பங்கு வகிப்­ப­தாக கடந்த பல வரு­டங்­க­ளாக முன்­வைக்­கப்­பட்ட கண்­ட­றி­தல்­களை அந் நிறு­வனம் புறந்­தள்ளி வந்­த­தா­கவும் விமர்­ச­னங்கள் எழுந்­துள்­ளன.

 

குறிப்­பாக மியன்­மாரில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இன­வாத வன்­மு­றைகள் வெடிப்­ப­தற்கு பேஸ்புக் பெரு­ம­ளவில் கள­மாக அமைந்­தி­ருந்­த­தாக அண்­மையில் மியன்­மாரைச் சேர்ந்த 6 மனித உரிமை அமைப்­புகள் பேஸ் புக் நிறு­வ­னத்­திற்கு அனுப்­பிய அவ­சர கடி­தத்தில் குறிப்­பிட்­டி­ருந்­தன. தாம் 4 வரு­டங்­க­ளுக்கு முன்னர் இது பற்றிச் சுட்­டிக்­காட்­டியும் பேஸ் புக் எந்த நட­வ­டிக்­கை­க­ளையும் எடுக்­க­வில்லை என்றும் அதில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டி­ருந்­தது. அதே­போன்று அங்கு முஸ்லிம் பத்­தி­ரி­கை­யாளர் ஒருவர் கொடூ­ர­மாக கொல்­லப்­பட்­ட­தற்கும் பேஸ்புக் செய்­தி­களே காரணம் என ஐ.நா. ஆய்­வுக்­குழு அறிக்­கையில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டி­ருந்­தது. இந்த விவ­காரம் தொடர்­பிலும் மார்க்­கிடம் அமெ­ரிக்க செனட் சபையில் கேள்வி எழுப்­பப்­பட்­டது. இதற்குப் பதி­ல­ளித்த அவர் , இதன் பிற்­பாடு அவ்­வா­றான வெறுப்புப் பேச்­சுக்கள் பகி­ரப்­பட்டால் 24 மணித்­தி­யா­லத்­திற்குள் கட்­டுப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுப்போம் என உறு­தி­ய­ளித்­துள்ளார். இது வர­வேற்­கத்­தக்­க­தாகும்.

 

துர­திஷ்­ட­வ­ச­மாக இலங்­கை­யிலும் கடந்த பல வரு­டங்­க­ளாக பேஸ் புக் மூல­மா­கவே முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வெறுப்பு பேச்­சுக்கள் பரப்­பப்­பட்டு, இறு­தி­யாக கடந்த மார்ச் மாதம் கண்­டியில் வன்­மு­றை­களும் பேஸ் புக் மூல­மா­கவே ஒருங்­கி­ணைக்­கப்­பட்­டன. எனினும் அவற்றைக் கட்­டுப்­ப­டுத்த பேஸ் புக் எத­னையும் செய்­ய­வில்லை. இலங்கை அர­சாங்கம் பேஸ் புக்­கினை  ஒரு வார காலத்­திற்கு தடை செய்­ததைத் தொடர்ந்தே அந் நிறு­வன அதி­கா­ரிகள் இலங்கை வந்து இது தொடர்பில் ஆராய்ந்­தனர்.

 

அதே­போன்று சில தினங்­க­ளுக்கு முன்னர் இலங்­கையில் உள்ள சிவில் செயற்­பாட்­டா­ளர்கள் பேஸ் புக் நிறு­வ­னத்­திற்கு இது தொடர்பில் கடிதம் ஒன்­றையும் அனுப்­பி­யி­ருந்­தனர். இதற்கும் பேஸ் புக் நேற்று முன்­தினம் பதி­ல­ளித்­துள்­ளது. இந்த விடயம் தொடர்பில் தாம் கவனம் செலுத்தி நட­வ­டிக்கை எடுப்­ப­தாக அதில் உறு­தி­ய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. எனினும் இந்த பதில் தமக்கு திருப்­தி­ய­ளிக்­க­வில்லை என குறித்த சிவில் சமூ­கத்தின் தெரி­வித்­துள்­ளனர்.

 

இவ்­வாறு உலக மக்­களை ஒரு வலை­ய­மைப்­பாக இணைக்கும் நோக்கில் உரு­வாக்­கப்­பட்ட பேஸ் புக் இன்று பிரச்சினைகளுக்கான களமாக மாறியுள்ளது. பேஸ் புக் மூலமாக ஏராளமான நன்மைகள் இருக்கின்ற அதேநேரம் சில விரும்பத்தகாத செயற்பாடுகளுக்கும் அது களமாக அமைந்துள்ளது. இந்தக் குறைபாடுகளை உடன் கண்டறிந்து அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான பொறிமுறைகளை  உடனடியாக முன்னெடுக்க வேண்டும். இன்றேல் அணு குண்டைப் போல பேஸ் புக்கும் அழிவுக்கு வித்திடும் ஒரு கருவியாக வரலாற்றில் முத்திரை குத்தப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை.