Verified Web

முஜிபுர் சமித்த தேரர் வைத்தீஸ்வர குருக்கள் பலஸ்தீன் செல்ல இஸ்ரேல் அனுமதி மறுப்பு

5 days ago Administrator

பலஸ்­தீனில் நடை­பெறும் சர்­வ­தேச குத்ஸ் மாநாட்டில் பங்­கேற்­ப­தற்­காக அழைக்­கப்­பட்­டி­ருந்த பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் றஹ்மான், முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத்­தே­கம சமித தேரர், வைத்­தீஸ்­வர குருக்கள் ஆகி­யோ­ருக்­கான வீசா அனு­ம­தியை வழங்க மறுத்­துள்ள இஸ்­ரே­லிய அர­சாங்கம், குறித்த மாநாட்டில் பங்­கேற்­ப­தற்­காக இலங்­கை­யி­லி­ருந்து ஜோர்தான் சென்ற கிறிஸ்­தவ மத­கு­ரு­வான பெனடிக்ட் சரத் பாதி­ரி­யா­ரையும் திருப்பி அனுப்­பி­யுள்­ளது.

 

மேற்­படி மாநாட்டில் பங்­கேற்­ப­தற்­காக முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் ஹலீம் தலை­மை­யி­லான குழு ஒன்­றுக்கு அழைப்­பு­வி­டுக்­கப்­பட்­டி­ருந்­தது. இதற்­க­மைய இலங்­கை­யி­லுள்ள பலஸ்­தீன தூத­ரகம் இவர்­க­ளுக்­கான வீசா அனு­ம­தியை வழங்­கு­மாறு இஸ்ரேல் அர­சாங்­கத்­திடம் வேண்­டு­கோள்­வி­டுத்­தி­ருந்­தது.

 

எனினும் இறுதி நேரத்தில் பலஸ்­தீ­னத்­திற்­கான இந்த பய­ணத்­திற்கு முஜிபுர் றஹ்மான், முன்னாள் மாகாண சபை உறுப்­பினர் பத்­தே­கம சமித தேரர், இந்து மத குரு வைத்­தீஸ்­வர குருக்கள் ஆகி­யோ­ருக்கு பய­ணத்­திற்­கான வீசா அனு­ம­தியை வழங்க இஸ்­ரே­லிய அரசு மறுப்பு தெரி­வித்­துள்­ளது. இதன் கார­ண­மாக மேற்­படி தூதுக்­கு­ழுவின் பயணம் இரத்துச் செய்­யப்­பட்­ட­தாக கொழும்­பி­லுள்ள பலஸ்­தீன தூத­ரகம் அறி­வித்­துள்­ளது.

 

இதற்­கி­டையில் மேற்­படி தூதுக்­கு­ழுவில் இடம்­பெற்­றி­ருந்த கிறிஸ்­தவ மத­கு­ரு­வான பெனடிக்ட் சரத் பாதி­ரி­யா­ருக்கு ஜோர்தான் எல்­லையில் வீசா அனு­மதி வழங்­கப்­படும் என முன்னர் அறி­விக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் அவர் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை ஜோர்­தா­னுக்குப் பய­ணித்தார். எனினும் சுமார் 5 மணி நேரம் பலஸ்­தீ­னுக்­கான ஜோர்தான் எல்­லையில் அவர் காத்திருந்த போதிலும் இஸ்ரேல் அவருக்கும் அனுமதி வழங்க மறுத்துள்ளது. இதனையடுத்து பாதிரியார் பெனடிக்ட் சரத் நேற்று முன்தினம் இலங்கையை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.