Verified Web

கிண்ணியாவில் யானை - மரம் கூட்டு: நகரசபையில் ஐ.தே.க. தலைவர் பி. சபையில் மு.கா. தவிசாளர்

9 days ago Administrator

கிண்­ணி­யா­வி­லுள்ள இரு சபை­க­ளிலும் ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸும் கூட்டு ஆட்­சியை நிறு­வி­யுள்­ளன.

 கிண்­ணியா நகர சபையின் புதிய தலை­வ­ராக ஐக்­கிய தேசிய கட்சி உறுப்­பினர் எஸ்.எச். நளீம் தெரிவு செய்­யப்­பட்டார். கிண்­ணியா நகர சபையின் தலைவர் மற்றும் உப­த­லைவர் ஆகி­யோரைத் தெரிவு செய்­வ­தற்­கான முத­லா­வது அமர்வு கிண்­ணியா நகர சபை சபா மண்­ட­பத்தில் கிழக்கு மாகாண உள்­ளூ­ராட்சி ஆணை­யாளர் எம்.வை.எம். சலீம் தலை­மையில் நேற்­று­முன்­தினம் இடம்­பெற்­ற­தோடு, பிர­தேச சபையின் முதல் அமர்வு நேற்று காலை இடம்­பெற்­றது.

 நகர சபை அமர்­வின்­போது, ஆணை­யா­ள­ரினால் தலை­வரைத் தெரிவு செய்­யு­மாறு கோரப்­பட்­டது. இதன் போது ஐக்­கிய தேசிய கட்சி சார்பில் போட்­டி­யிட்ட எஸ்.எச். நளீம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் சார்பில் புஹாரி ஹாரீஸ் ஆகி­யோரின் பெயர்கள் பிரே­ரிக்­கப்­பட்­டன.

இரு­வரின் பெயர்கள் பிரே­ரிக்­கப்­பட்­ட­மை­யினால் வாக்­கெ­டுப்பு நடாத்­தப்­பட வேண்டும் என ஆணை­யாளர் தெரி­வித்தார். இர­க­சிய வாக்­கெ­டுப்பா பகி­ரங்க வாக்­கெ­டுப்பா தேவை­யென கோரப்­பட்ட நிலையில் பகி­ரங்க வாக்­கெ­டுப்பே தேவை என அதிக உறுப்­பி­னர்கள் தெரி­வித்­தனர். இதனால் ஒவ்­வொரு உறுப்­பி­னர்­களின் பெயர் கூறி வாக்­கெ­டுப்பு நடாத்­தப்­பட்­டது.

முடிவில் ஐ.தே.க. உறுப்­பினர் எஸ்.எச். நளீம் 9 வாக்­கு­க­ளையும் அ.இ.ம.கா. உறுப்­பினர் புஹாரி ஹாரிஸ் 3 வாக்­கு­க­ளையும் பெற்­றனர். இதனை அடுத்து கிண்­ணியா நகர சபையின் தலை­வ­ராக எஸ்.எச். நளீம் தெரிவு செய்­யப்­பட்­ட­தாக கிழக்கு மாகாண உள்­ளூராட்சி ஆணையார் அறி­வித்தார்.

பின்னர் உப தலைவர் தெரிவு இடம்­பெற்­றது. முஸ்லிம் காங்­கிராஸ் சார்பில் ஐயூப் சப்ரின் , சுதந்திரக் கட்சி சார்பில் எம்.எச். எம்.றாபி ஆகி­யோரின் பெயர்கள் பிரே­ரிக்­கப்­பட்­டன. இவர்­களின் தெரிவும் பகி­ரங்க வாக்­கெ­டுப்­புக்கு விடப்பட்டது.

இதில் ஐயூப் சப்ரின் 9 வாக்­கு­க­ளையும் எம்.எச்.எம். றாஃபி 3 வாக்­கு­க­ளையும் பெற்­றனர். இத­னை­ய­டுத்து உப­த­லை­வ­ராக ஐயூப் சப்ரின் தெரிவு செய்­யப்­பட்டார்.

இந்த இரு வாக்­கெ­டுப்­பிலும் நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­னணி உறுப்­பினர் வாக்­கெ­டுப்பில் கலந்து கொள்­ளாது நடு­நிலை வகித்­த­தோடு தமி­ழ­ரசு கட்சி உறுப்­பினர் ஐக்­கிய தேசிய கட்­சிக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்தார்.

அத்­துடன், கிண்­ணியா பிர­தேச சபையின் புதிய தலை­வ­ராக முஸ்லிம் காங்­கிரஸ் சார்பில் போட்­டி­யிட்ட கே.எம். நிஹார் தெரிவு செய்­யப்­பட்டார்.

தலைவர் தெரி­வின்­போது முஸ்லிம் காங்­கிரஸ் சார்பில் கே.எம். நிஹார், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் கட்சி சார்பில் போட்­டி­யிட்ட ஏ.ஆர்.எம். அஸ்மி ஆகி­யோரின் பெயர்கள் பிரே­ரிக்­கப்­பட்­டன. இரு­வரின் பெயர்கள் பிரே­ரிக்­கப்­பட்­ட­மை­யினால் பகி­ரங்க வாக்­கெ­டுப்­புக்கு விடப்­பட்­டது.

 இதன்­படி கே.எம்.நிஹார் 12 வாக்­கு­க­ளையும் ஏ.ஆர்.எம். அஸ்மி 3 வாக்­கு­க­ளையும் பெற்­றனர். இதனை அடுத்து கிண்­ணியா பிர­தேச சபையின் தலை­வ­ராக கே.எம்.நிஹார் தெரிவு செய்­யப்­பட்­ட­தாக கிழக்கு மாகாண உள்­ளூ­ராட்சி ஆணையார் அறி­வித்தார்.

 பின்னர் உப தலைவர் தெரிவு இடம்­பெற்­றது. இதில் ஏக­மன­தாக ஐக்­கிய தேசிய கட்சி சார்பில் போட்­டி­யிட்ட எச்.பாஸித் தெரிவு செய்­யப்­பட்டார் தலைவர் தெரி­வுக்­கான வாக்­கெ­டுப்பில் நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­னணி உறுப்­பினர் கலந்து கொள்ளாது நடுநிலை வகித்தமை குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறிருக்க குச்சவெளி பிரதேச சபையை முஸ்லிம் காங்கிரசும் சேருவில பிரதேச சபையை ஐக்கிய தேசியக் கட்சியும் திருகோணமலை நகர சபையை தமிழ் தேசியக் கூட்டமைப்பும் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.