Verified Web

கண்டி இனவாத வன்முறைகள்: கைதான கோப்ரல்கள் இருவர் குறித்தும் இராணுவ பொலிஸார் சிறப்பு விசாரணை

9 days ago MFM.Fazeer

கண்டி மாவட்­ட­மெங்கும் இடம்­பெற்ற இன ரீதி­யி­லான வன்­மு­றை­க­ளின்­போது முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்கள், பள்­ளி­வா­சல்­கள்­மீது தாக்­குதல் நடத்தி தீ வைத்­தமை தொடர்பில் சேவையில் உள்ள இரு இரா­ணுவ கோப்­ரல்கள் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வி­னரின் சிறப்புக் குழு­வி­னரால் கைது­செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள நிலையில், அவர்கள் தொடர்பில் இரா­ணுவ பொலிஸார் சிறப்பு விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளனர்.

 அவ்­வி­ரு­வரும் கைது செய்­யப்­பட்­ட­தை­ய­டுத்து இந்த விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­ட­தா­கவும், நீதி­மன்றில் குற்றம் நிரூ­பிக்­கப்­ப­டு­மானால் அவ்­வி­ரு­வரும் இரா­ணுவ சேவையில் இருந்தே நீக்­கப்­ப­டுவர் என இரா­ணுவ ஊடகப் பேச்­சாளர் பிரி­கே­டியர் சுமித் அத்­த­பத்து தெரி­வித்தார்.

இந் நிலையில், குறித்த இரா­ணுவ வீரர்கள் இரு­வரும் நான்கு நாட்­க­ளுக்கு மேல் விளக்­க­ம­றி­யலில் இருந்தால் அவ்­வி­ரு­வ­ரி­னதும் சம்­ப­ளங்கள் நிறுத்­தப்­படும் எனவும், அவர்கள் நிர­ப­ரா­திகள் என நிரூ­ப­ண­மாகும் வரையில் அவை மீள செலுத்­தப்­ப­ட­மாட்­டாது எனவும் அவர் மேலும் கூறினார்.

கண்டி- பூஜாப்­பிட்­டிய பொலிஸ் பிரிவில் அம்­ப­தென்ன பகு­தியில் முஸ்லிம் பள்­ளி­வா­சல்கள் மற்றும் வர்த்­தக நிலை­யங்கள் மீதான தாக்­கு­தல்கள் மற்றும் தீ வைப்பு தொடர்பில் இவ்­விரு கோப்­ரல்­களும் கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி கைது செய்­யப்­பட்­டி­ருந்­தனர்.

 கஹ­வத்த, அம்­ப­தென்ன பகு­தியை வசிப்­பி­ட­மாக கொண்ட இரா­ணுவ கோப்ரல் தர வீரர்­க­ளான, 34 வய­து­டைய புத்­தளம், சிங்­ஹ­வில்­லு­வத்­தவில் உள்ள 143 ஆவது படை­யணி தலை­மை­ய­கத்தில் சேவை­யாற்றும் 475030 எனும் இரா­ணுவ இலக்­கத்தை உடைய சுப­சிங்க முதி­யன்­ச­லாகே அனுர பண்­டார விஜே­சிங்க என்­பவர் கைதா­ன­வரில் ஒரு­வ­ராவார்.

கைதான மற்­றை­யவர் 38 வய­து­டைய, கெக்­கி­ராவ - தம்­பு­லு­ஹல்­மில்­ல­வி­லுள்ள இயந்­திர மற்றும் காலாட்­படை ரெஜி­மென்ட்டின் பயிற்சிப் பாட­சா­லையில் சேவை­யாற்­றிய மல்­வானே கெதர ஹசித்த விஜே­ரத்ன ஆவார்.


2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில், அர­சியல் உரி­மைகள் தொடர்­பி­லான சர்­வ­தேச இணக்­கப்­பாட்டு சட்­டத்தின் விதிகள், தண்­டனை சட்­டக்­கோ­வையின் கீழ் கைதா­கி­யுள்ள சந்­தேக நபர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. அதன்­படி இது­வரை பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வினர் முன்­னெ­டுக்கும் பிர­தான விசா­ர­ணை­களில் கைதான சந்­தேக நபர்கள் 15 பேர் ஆவர்.

அதில் ஒரு முன்னாள் இரா­ணுவ வீரரும் உள்­ள­டங்­கு­கிறார். இந் நிலை­யி­லேயே நேற்று பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவின் சிறப்புக் குழு தற்­போது சேவையில் உள்ள இரு இராணுவ வீரர்களைக் கைது செய்துள்ளது. கண்டி இனவாத வன்முறைகள் தொடர்பில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் பிரதானி பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா, அதன் பதில் பணிப்பாளர் ஜகத் விஷாந்த தலைமையில் விஷேட மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.