Verified Web

நமது நெருக்கடிகளுக்கு கல்விதான் ஒரே தீர்வு

9 days ago Administrator

இலங்கை முஸ்­லிம்­க­ளா­கிய நாம் மிகவும் நெருக்­க­டி­யான கால­கட்­ட­த்திலி­ருக்­கிறோம். இந்த நாட்டில் வாழ்­வதா? நாட்டை விட்டும் வெளி­யே­று­வதா? இந்த நாட்டில் நமது சந்­த­திகள் வாழ முடி­யுமா? இன்றேல் இப்­ப­டியே காலா­கா­லமாக இன­வா­தத்­துக்கு நமது உயிர்­க­ளையும் உடை­மை­க­ளையும் பலி கொடுப்­பதா? என்­பதே இன்று எல்லா முஸ்­லிம்­களின் மன­திலும் எழும் பிர­தான கேள்­வி­யாக உள்­ளது.

இலங்கை முஸ்­லிம்கள் எப்­போ­துமே இந்த நாட்­டுக்கு துரோகம் செய்ய நினைத்­த­தில்லை. பயங்­க­ர­வா­தத்தை எதிர்­கொள்­வதில் இலங்கை அர­சாங்­கத்­துக்கும் பெரும்­பான்மை மக்­க­ளுக்கும் பக்­க­ப­ல­மா­கவே இருந்­தி­ருக்­கி­றார்கள். இவ்­வா­றான பாரம்­ப­ரி­யத்தைக் கொண்ட முஸ்­லிம்­களை சிங்­கள பெரும்­பான்மை சமூகம் இந்த நாட்டைச் சூறை­யாட வந்­த­வர்­க­ளாக நோக்­கு­வ­தற்­கான காரணம் என்ன? இது எங்­கி­ருந்து ஆரம்­பித்­தது? இந்த இனக்­கு­ரோத சிந்­த­னையை சிங்­கள மக்கள் மத்­தியில் விதைத்­தது யார்? இதில் முஸ்லிம் சமூகம் விட்ட தவ­றுகள் என்ன? என்ற கேள்­வி­க­ளுக்கு அவ­­சர­மா­கவும் அவ­சி­ய­மா­கவும் விடை காண வேண்­டிய கட்­டத்­துக்கு முஸ்லிம் சமூகம் வந்­துள்­ளது.

இன்று முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக ஏரா­ள­மான குற்­றச்­சாட்­டுக்கள் பெரும்­பான்மை சகோ­த­ரர்­க­ளாலும் இன­வா­தி­க­ளாலும் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. இவற்றில் மிகப் பெரும்­பா­லா­னவை இட்­டுக்­கட்­டப்­பட்­டவை. அடிப்­ப­டை­யற்­றவை. ஆனாலும் சில குற்­றச்­சாட்­டுக்­களில் நியா­யங்கள் இருக்­கின்­றன. அவ்­வா­றெனில் நியா­ய­மான குற்­றச்­சாட்­டுக்­களை ஏற்றுக் கொண்டு அவற்றைத் திருத்திக் கொள்ள முஸ்லிம் சமூகம் தயாரா? அப்­ப­டி­யானால் அதை எங்­கி­ருந்து தொடங்கப் போகிறோம்? இதை வழி­ந­டத்­து­வது யார்? என்ற கேள்­வி­க­ளுக்கும் நாம் இன்றே விடை காண வேண்­டி­யுள்­ளது.

 மறு­புறம் நாம் அல்­லாஹ்­வுக்கு அடுத்­தாக இந்த நாட்டின் அர­சாங்கம் மீதும் பாது­காப்புப் படை­யினர் மீதுமே நமது இருப்பை ஒப்­ப­டைத்­தி­ருக்­கிறோம். அவ்­வா­றான நிலையில் நம்மைப் பாது­காக்க அர­சாங்­கமும் படை­யி­னரும் தவ­றி­யி­ருக்­கின்­றனர். கண்­டியில் மாத்­தி­ர­மன்றி அளுத்­கம, கிந்­தோட்­டை­யிலும் இவ்­வா­றுதான் செய்­தனர். வன்­மு­றை­யா­ளர்கள் கல­வ­ரத்தை அரங்­கேற்ற பொலி­சாரும் விசேட அதி­ரடிப் படை­யி­னரும் அதை கைகட்டி வேடிக்கை பார்த்­தி­ருக்­கின்­றனர். சில இடங்­களில் தாக்­கு­த­லுக்கு துணை போயுள்­ளனர். படையினர் பலர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளமை அதனை உறுதிப்படுத்துகிறது.

இப்படி நமது எதிர்­காலம் குறித்து எழும் இந்த நியா­ய­மான கேள்­வி­க­ளுக்கு நாம் ஒவ்­வொ­ரு­வரும் விடை காணக் கட­மைப்­பட்­டுள்ளோம். நமக்­காக யாரும் வரு­வார்கள் என்ற எதிர்­பார்ப்­புகள் பொய்த்துப் போய்­விட்­டன. அல்­லாஹ்­வுக்கு அடுத்­த­தாக நமது எதிர்­கா­லத்தை நாமே திட்­ட­மிட வேண்­டி­யி­ருக்­கி­றது. அதற்­கி­ருக்கும் ஒரே வழி கல்­விதான்.

கல்­வியில் முஸ்லிம் சமூகம் மென் மேலும் அக்­கறை காட்ட வேண்டும். கல்­வியும் பண்­பா­டு­மற்ற நான்கு இளை­ஞர்கள் செய்த செயல்தான் இன்று இலங்கை முஸ்­லிம்­களை நடுத்­தெ­ரு­வுக்கு கொண்டு வந்து நிறுத்­தி­யி­ருக்­கி­றது. இன்னுமின்னும் இவ்வாறான இளைஞர்களைத்தான் நமது சமூகம் பிரசவிக்கப் போகிறதா?

இஸ்லாமிய விழுமியங்களைப் புறந்தள்ளிய போதைக்கு அடிமையானவர்கள்தான் நமது சமூகத்தின் எதிர்காலத்தை தீர்மானிப்பவர்களா? இல்லை கல்வி அறிவும் மார்க்க அறிவும் ஒரேசேரப் பொருந்திய பண்பாடும் ஒழுக்கமும் கொண்டவர்கள்தான் நமது சமூகத்தின் அடுத்த தலைமுறையினராக வர வேண்டுமா? என்ற கேள்விகளுக்கு விடை காண வாருங்கள். அதன் மூலமாக மாத்திரமே இந்த நாட்டில் எதிர்காலத்தில் எம்மால் தலை நிமிர்ந்து வாழ முடியும் என்பதை மனதில் கொள்ளுங்கள். அல்லாஹ் இலங்கை முஸ்லிம் சமூகத்தைப் பாதுகாப்பானாக.