Verified Web

புதிய அமைச்சரவை 14 ஆம் திகதி ஸ்தாபிப்பு

9 days ago ARA.Fareel

எதிர்­வரும் 14 ஆம் திக­திக்கு முன்பு புதிய அமைச்­ச­ர­வை­யொன்று நிய­மிக்­கப்­ப­ட­வுள்­ளது. அமைச்­சு­க­ளுக்­கான இலாகா ஒதுக்­கீ­டு­களை விஞ்­ஞான ரீதியில் வழங்­கு­வ­தற்கு தற்­போது ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் கலந்­து­ரை­யாடி வரு­கி­றார்கள். பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணைக்கு ஆத­ர­வ­ளித்து வாக்­க­ளித்த 6 ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி அமைச்­சர்கள் தமது பத­வி­யினை இரா­ஜி­னாமா செய்­ய­வுள்­ள­தாக தெரி­வித்­துள்­ளதால் அந்த வெற்­றி­டங்­க­ளுக்கு ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியைச் சேர்ந்­த­வர்­களே அமைச்­சர்­க­ளாக நிய­மிக்­கப்­ப­டு­வார்கள் என அமைச்­ச­ர­வையின் இணைப்­பேச்­சா­ளரும் சுகா­தாரம் போசணை மற்றும் சுதேச மருத்­துவ அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார்.

நேற்று தகவல் திணைக்­க­ளத்தின் கேட்போர் கூடத்தில் நடை­பெற்ற அமைச்­ச­ரவைத் தீர்­மா­னங்­களை அறி­விக்கும் ஊடக மாநாட்டில் கலந்­து­கொண்டு ஊட­க­வி­ய­லா­ளர்­களின் கேள்­வி­க­ளுக்குப் பதி­ல­ளிக்­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் பதி­ல­ளிக்­கையில் தெரி­வித்­த­தா­வது, புதிய அமைச்­சர்கள் எண்­ணிக்­கையில் மாற்­றங்கள் ஏற்­ப­ட­மாட்­டாது. தற்­போது உள்ள அமைச்­சர்­களின் எண்­ணிக்­கையே தொடர்ந்தும் இருக்கும். தேசிய அர­சாங்­கமும் தொடர்ந்து பத­வியில் இருக்கும். ஒரு அரசு, ஒரு தலைவர், ஒரே குறிக்­கோ­ளுடன் தொடர்ந்தும் ஆட்சி தொடரும்.

ஒரு தேசிய அர­சாங்­கத்­தி­னாலே நாட்டை முன்­னேற்ற முடியும். இரு பெரும்­பான்மைக் கட்­சி­களும் ஒன்­றி­ணைந்­தாலே நாட்டின் பிரச்­சி­னை­களைத் தீர்க்க முடியும் என்ற நோக்­கு­டனே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பொதுத்­தேர்­தலின் பின்பு தேசிய அர­சாங்­கத்தை அமைக்கும் முயற்­சியில் ஈடு­பட்டு வெற்­றியும் பெற்றார். இரு கட்­சி­களும் சேர்ந்து ஆட்­சி­ய­மைத்து தேசிய பிரச்­சி­னை­களைத் தீர்ப்போம் என்ற தீர்­மா­னத்­திலே நாம் இருந்தோம்.

தேசிய அர­சாங்கம் நாட்­டுக்குப் பொருத்­த­மா­ன­தாக இருக்­கி­றது. ஆனால் அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு தேசிய அர­சாங்கம் பொருத்­த­மா­ன­தாக இல்லை. பிர­த­மரை எதிர்த்து வாக்­க­ளித்த ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி அமைச்­சர்கள் மீண்டும் எப்­படி அமைச்­ச­ர­வையில் அமர முடியும் என்­பது தான் பிரச்­சினை.

நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணைக்கு ஆத­ர­வ­ளித்து வாக்­க­ளித்த அமைச்­சர்­களும் தமது பத­வி­களை இரா­ஜி­னாமா செய்­யா­விட்டால் அவர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டுமா? என்ற ஊட­க­வி­ய­லா­ளரின் கேள்­விக்கு அவர் பதி­ல­ளிக்­கையில் அவ்­வாறு சட்ட நடவடிக்கை எடுக்கப்படாது என்றார்.

தற்போது ஜனாதிபதியின் கீழிருக்கும் நல்லிணக்க அமைச்சு அமைச்சர் மனோ கணேசனுக்கு வழங்கப்படமாட்டாது. ஏனென்றால் நல்லிணக்க அமைச்சு நாட்டின் தலைவரிடம் இருப்பதே சிறந்தது. இதற்கு சர்வதேசத்தின் நற்பெயரும் கிடைத்துள்ளது என்றார்.