Verified Web

தெல்தெனிய சம்பவம் என்ன சொல்கிறது?

Ash Sheikh SHM Faleel

பேருவளை ஜாமிஆ நளீமியா கலாபீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளான இவர் தேசிய சூறா சபையின் பிரதித் தலைவர்களுள் ஒருவராகவும் இலங்கையின் முன்னணி இஸ்லாமிய அறிஞராகவும் விளங்குகிறார்.

2018-04-11 23:23:54 Ash Sheikh SHM Faleel

தர்ஹா நகர், மியன்மார், கிந்­தோட்டை  என்ற சொற்கள் எமது பேசு பொருட்­க­ளாக அண்மைக் காலத்தில் இருந்­தன.அவற்றின் வடுக்கள் இன்னும் ஆறாமல் இருக்­கையில் தான் அம்­பா­றையில் தாக்­கு­தலாம் என்ற கவ­லை­யான செய்தி வந்­தது.அது பேசுப்­பட்டுக் கொண்­டி­ருக்­கையில் சிரி­யாவில் பச்­சிளம் பால­கர்கள் மீது கூட அட்­டூ­ழி­யங்கள் கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்­டன.அதனால் ஓடிய இரத்த ஆறு வற்ற முன்னர் தெல்­தெ­னி­யவில் அடா­வடித் தனமாம் என்ற மனதைக் குடையும் செய்தி வந்­தி­ருக்­கி­றது. ஒவ்­வொரு வாரமும் ஒவ்­வொரு செய்­தியா?

இந்த உம்­மத்தின் அவல நிலை இது.
தெல்­தெ­னிய சம்­பவம் நான்கு “முஸ்லிம்”? குடி­காரர்­களால் வித்­தி­டப்­பட்­டது என்ற விடயம் பார­தூ­ர­ம­ன­தாகும்.

தன் பக்­கத்தில் தவ­று­களைக் கொண்ட சமூகம் அல்­லது தன்­ன­ளவில் பல­வீ­ன­மான நிலையில் உள்ள சமூகம் பல­மான பிற சமூகங்கள் மீது கை வைக்கக் கூடாது என்­பது முஸ்­லிம்கள் மீதான தாக்­கு­தல்கள் தரும் செய்­தி­யாகும்.

கண்­ணாடி வீட்டில் இருப்­ப­வர்கள் தெருவில் போவோ­ருக்கு கல் எறியக் கூடாது.people who live in glass houses shouldn't throw stones என்­பார்­களே.அதனை இது ஒத்­தி­ருக்­கி­றது.

இலங்கை முஸ்­லிம்கள் ஈமான், கல்வி, பொரு­ளா­தாரம், சமூக உற­வுகள், பண்­பா­டுகள் போன்ற துறை­களில் மிகப் பல­வீ­ன­மான நிலையில் இருப்­பதால் அவர்­க­ளது சிறிய,பெரிய நட­வ­டிக்­கைகள் அனைத்­திலும் அவர்கள் மிக­வுமே ஜாக்­கி­ர­தை­யா­கவே நடந்­து­கொள்ள வேண்டும்.இதன் பொருள் நாம் பல­சா­லி­க­ளாக இருந்தால் கண்­மூக்குத் தெரி­யாமல் நடக்­கலாம் என்­ப­தல்ல.

’வேண்டாப் பொண்­டாட்டி கை பட்­டாலும் குற்றம் கால் பட்­டாலும் குற்றம்’ என்ற நிலையில் தான் இலங்­கை­யி­லுள்ள முஸ்லிம் விரோத சக்­திகள் தருணம் பார்த்துக் கொண்­டி­ருக்­கி­ன்றன. செம்­ப­டவன் மீன்­பி­டிக்கும் நோக்­கத்­துடன் இரை­யுடன் கூடிய தூண்­டிலை ஆற்­றுக்குள் எறிந்து விட்டு தூண்­டி­லுடன் சம்­பந்­தப்­பட்டு தண்ணீர் மேல் மிதந்து கொண்­டி­ருக்கும் மிதப்பின் மீது நுணுக்­க­மாகக் கண் வைத்­தி­ருப்­பது போல் தான் இனவாதிகள் முஸ்­லிம்கள் எங்கு எப்­போது தவறு செய்­கி­றார்கள், அவர்­களை முழு­மை­யாக அழித்து விடு­வ­தற்கு என்று பார்த்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

ஒரு சின்னத் தாக்­கு­த­லுக்குக் கூட முகம் கொடுக்க முடி­யாத நாம் வீராப்புப் பேசி நில­மையை மோச­மாக்கி விடக்­கூ­டாது.உணர்ச்­சி­க­ளுக்கு அடி­மை­யாகி தூர­நோக்­கற்­ற­வர்­க­ளாக மாறி­வி­ட­லா­காது.
முஸ்லிம் ஊர்கள் நிலத் தொடர்­பற்­ற­வை­க­ளாக உள்­ளன. அதே­வேளை, இந்­நாட்டில் முஸ்­லிம்கள் பெளத்­தர்கள் மீது அதிகம் தங்­கி­வா­ழ்கி­றார்கள். எனவே, அவர்­களை நாம் தாக்கிவிட்டு அவர்­க­ளது சமூ­கத்­த­வர்கள் எமது கடை­க­ளுக்கு பொருட்­களை வங்க வரவேண்டும் என எதிர்­பார்க்க முடி­யாது.கல­வ­ரங்­களில் சம்­பந்தப் பட்டு காயப்­படும் எம்­ம­வர்­களை நாம் முஸ்லிம் அல்­லா­த­வர்­களால் நிர்­வ­கிக்­கப்­படும் அரச வைத்­தி­ய­சா­லை­களில் சென்று தான் சிகிச்­சைக்­காகச் சேர்க்க வேண்டும்.அப்­போது அவர்கள் எம்மை எப்­படி நடாத்­து­வார்­களோ தெரி­யாது.உச்சம் தலை முதல் உள்ளம் கால்­வரை துவேசம் தலை­க்கே­றிய பலர் பல உயர் பத­வி­களில் அமர்ந்­தி­ருப்­பது நில­மையை மோச­மாக்கிக் கொண்­டி­ருக்­கி­றது.

தர்­ஹா­நகர், கிந்­தொட்டை, தெல்­தெ­னிய ஆகிய மூன்று இடங்­களில் இடம்­பெற்ற முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான வன்­மு­றை­க­ளுக்குப் பின்­ன­ணியில் ‘த்ரீ வீல்’தான் உள்­ளது. அதுவும் எமது சமூ­கத்தின் சாதா­ரண பொது­மக்கள் தான் அதில் சம்­பந்­தப்­பட்­டார்கள். நாம் பண்ணும் பயான்­களும் எழுதும் ஆய்வுக் கட்­டு­ரை­களும் அவர்­களைச் சென்­ற­டை­வ­தில்லை.அவர்கள் ஓர் உல­கத்­திலும் சமூ­கத்தின் உல­மாக்­களும் புத்­தி­ஜீ­வி­களும் வேறு ஓர் உல­கத்­திலும் வாழு­கி­றார்கள்.சமூ­கத்­தி­லுள்ள அடி­மட்­டத்­த­வர்­க­ளுக்கு சமா­தான சக­வாழ்வு பற்­றிய செய்தி போய்ச் சேர­வே­யில்லை.சிறு­பான்மை சமூ­க­மாக,மிக்க கவ­ன­மாக எப்­படி வாழ்­வது என்று அவர்­க­ளுக்குத் தெரி­யாது.குறைந்த அறிவு மட்டம்,முஸ்லிம் சமூத்தின் மேட்டுக் குடி­க­ளுடன் தொடர்­பற்ற வாழ்வு ஒழுங்கு இவை பெரும் துர­திஷ்­டங்­க­ளாகும்.

சமூ­கத்தில் வறுமை,போதை வஸ்துப் பாவனை,வியா­பாரக் கொடுக்கல் வாங்­கலில் மோச­டியும் தில்­லு­முல்லும் என எமது சமூ­கத்தின் இருண்ட பக்­கங்கள் தொடரும் வரை நிலைமை சீரா­கு­வது எப்­படி?

குடித்துக் கொண்­டி­ருந்த நான்கு முஸ்லிம்?இளை­ய­வர்கள் போதை­யுடன் காட்­டிய சண்­டித்­தனம் எங்கு போய் முடிந்­தி­ருக்­கி­றது? ஒரு மூட்டை கடிக்க எல்லா மூட்­டை­களும் கசக்­கப்­ப­டு­கின்­றன.
ஸாலிஹ் (அலை)அவர்­க­ளது காலத்தில் இருந்த ஒட்­ட­கையை அறுக்க வேண்டாம் என்ற அல்­லாஹ்வின் கட்­ட­ளையை மீறி குதாத் என்ற ‘அஷ்கா’(தரித்­திரக்காரன்) தான் அதனை அறுத்தான்.ஆனால்,அவனைத் தடுக்­காத தமூது கூட்­டத்தார் அனை­வ­ருமே அதனால் தண்­ட­னையை அனு­ப­விக்க நேரிட்­டது.அல்லாஹ் பாது­காப்­பா­னாக!

தீமை செய்­வோரை தடுத்து நிறுத்­தாதபோது அனை­வரும் அதன் விளை­வு­களை அனு­ப­விக்க நேரி­டு­மல்­லவா?

இலங்கை முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒவ்­வொரு தனி மனி­தனும் தன் நிலையை உணர்ந்து நாட்டு நிலைக்கு ஏற்ப இஸ்­லா­மிய அடிப்­ப­டையில் தன்னை மாற்­றிக்­கொள்ளும் நிலை உரு­வா­காத வரை இனக்­க­ல­வ­ரங்­க­ளுக்கு முற்றுப் புள்ளி வைக்க முடி­யாது.
உதா­ர­ண­மாக:-

1. அரச வைத்­திய சாலையில் மாதாந்த ‘கிளி­னிக்’­இற்­காக வரி­சையில் நிற்கும் ஒரு முஸ்லிம் பெண்…

2. தனது சைக்­கிளில் பாட­சா­லைக்கு செல்லும் ஒரு முஸ்லிம் மாணவன் ….

3. இறைச்சிக் கடையில் இறைச்சி வெட்டும் முஸ்லிம்...
4. முஸ்லிம் அல்­லாத பய­ணி­களை ஏற்றிச் செல்லும் த்ரீ வீலில் முஸ்லிம் சாரதி..

5. முஸ்லிம் ஹோட்டல் ஒன்றில் வேலை செய்யும் ஒரு முஸ்லிம் சிப்­பந்தி…
ஆகி­யோரும் மற்­றோரும் ஏன் எல்­லோரும் உணர்வு பெற வேண்டும். 

இவை சில உதா­ர­ணங்கள் மட்­டுமே.

நிரந்­த­ர­மான பல பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணாமல் சீலைக்கு மேலால் சொறி­வது எப்­படி பயன் தரும்?.

ஈமா­னிய வெளிச்­சத்தை கூட்­டவும் அறி­வுள்ள சமூ­க­மாக மாற்­றவும்,எமக்கு மத்­தி­யி­லான உற­வு­க­ளிலும் பிற சமூ­கங்­க­ளு­ட­னான உற­வு­க­ளிலும் உயர் ஒழுக்க விழு­மி­யங்­களைக் கடைப்­பி­டிக்­கவும் ஆழ­மான காத்­தி­ர­மான முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும்.
எனவே, அடி மட்­டத்தை நோக்கி சமூ­கத்தின் பிர­மு­கர்­க­ளது கவனம் திரும்­பு­வது காலத்தின் தேவை­யாகும்.

1. குத்­பாக்கள், பயான்கள், விசே­ட­மான பயான்கள்.
2. பாட­சாலை மற்றும் அஹ­தி­யாக்­க­ளது காலைக் கூட்­டங்கள்.
3. பத்­தி­ரிகை ஆக்­கங்கள்.
4. சமூக வலைத் தலங்­க­ளான ஃபேஸ்புக்,வட்ஸ் அப் ஆகி­ய­வற்றில் பதி­வேற்­றப்­படும் துணுக்­கு­களும் ஆக்­கங்­களும்.
போன்ற ஊட­கங்கள் வாயி­லாக சமா­தான சக­வாழ்­வுக்­கான பிர­சாரம் தீவி­ரப்­ப­டுத்தப் பட வேண்டும்.

பொது­மைப்­ப­டுத்தல் (generalization) பெரும் தவ­றாகும்

பெளத்த சமூ­கத்­தி­லுள்ள துவே­ஷிகள் தொடர்ந்தும் பெரும் தவ­றொன்றைச் செய்து வரு­கி­றார்கள்.முஸ்லிம் சமூ­கத்தைச் சேர்ந்த ஒரு­வரோ சிலரோ ஒரு தவறைச் செய்யும் போது அதனை வைத்து முழு முஸ்லிம் சமூ­கத்­தையும் எடை போட்டு விடு­கி­றார்கள். தெல்­தெ­னி­யவில் குடி­காரன் செய்த தவ­றுக்கு முஸ்லிம் சமூ­கத்தில் உள்ள அனை­வரும் பொறுப்­பல்ல என்ற சாதா­ரண உண்­மையைக் கூட புரிய முடி­யாத நிலைக்கு அவர்­க­ளது மூளைகள் சலவை செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றன என்­பதை நினைக்­கையில் கவ­லை­யாக உள்­ளது.

அந்த சம்­ப­வத்தில் ‘சில­ம­னி­தர்கள்’, ‘ஒரு மனி­தனை’க் கொன்­றார்கள் என்று ஏன் பார்த்­தி­ருக்கக் கூடாது? இலங்­கையில் இடம்­பெறும் கொலை­களை முஸ்­லிம்கள் மட்­டுமா செய்­கி­றார்கள்?லசந்­த­வையும் வசீ­மையும் கொன்­ற­வர்கள் முஸ்­லிம்­களா? ஏன் இப்­படி யாக மன நிலை தரம் குன்றி விட்­டது?

‘மர­க்களயா, தம்­பியா’ என்று அவர்­களிற் சிலர் மிக­வுமே கொச்­சை­யாகப் பேசு­வார்கள்.ஒரு­முஸ்லிம் போதை வஸ்து கடத்தி வந்து அகப்­பட்டால் சிங்­கள பத்­தி­ரி­கைகளில் ‘முஸ்லிம் ஜாதி­க­யெக்’­என்று எழு­தி­வி­டு­வார்கள்.படித்­த­வர்­க­ளான பத்­தி­ரி­கை­யா­ளர்­க­ளது நிலையே இது­வாயின் பொது­மக்­க­ளது நிலையைப் பற்றி கேட்­கவே தேவை யில்லை.

என்ன செய்­யலாம்?

1. அல்­லாஹ்­வு­ட­னான தொடர்பை வலுப்­ப­டுத்­து­வது.அல்­லாஹ்வின் உதவியின்றி எத­னையும் சாதிக்க முடி­யாது.

2. முஸ்லிம் சமூ­கத்தை முன்­மா­தி­ரி­யான ஒரு சமூ­க­மாக மாற்­றி­ய­மைக்கும் நீண்டகால வேலைத் திட்­டங்கள், அதுவும் அடி மட்­டத்தை நோக்­கிய வேலைத்­திட்­டங்கள் அவ­சியம்.

3. முஸ்­லிம்கள் பற்­றிய நல்­ல­பிப்­பி­ராயம் கொண்ட சிங்­கள சமூ­கத்தில் உள்ள உயர் பத­வி­க­ளிலும் பொறுப்­புக்­க­ளிலும் உள்­ள­வர்­க­ளையும் மீடியாத்துறை சார்ந்­த­வர்­க­ளையும்(அபூ­தா­லிப்கள்) அணுகி அவர்­க­ளது உத­வி­யுடன் சமா­தான வேலைத் திட்­டங்­களை அமுலாக்குவது.

4. முஸ்லிம் சமூகத்தின் அரசியல்வாதிகள் ஊடாக அரசின் மீதும் உயர் அதிகாரிகள் மீதும் அழுத்தம் கொண்டுவந்து மேற்கொண்டு கலவரங்கள் நடக்காதிருப்பதற்கும் நஷ்ட ஈட்டைப் பெற்றுக் கொடுப்பதற்கும் முயற்சிகளைச் செய்வது.

5. உடனடியாக நிவாரணங்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவது.

6. பள்ளிகள், பாடசாலைகள்,இஸ்லாமிய இயக்கங்கள்,சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் வாயிலாக வேலைத் திட்டங்களை அமுலாக்குவது.

7. ஒவ்வொரு தனி மனிதனும் - முஸ்லிமும் தான் பொறுப்புதாரி என்பதை நுணுக்கமாக உணர்ந்து செயல்படுவது.அதாவது விழிப்பு நிலையில் இருப்பது.

எமது முயற்சி, துஆ, அல்லாஹ்வின் உதவி, அவனது நாட்டம் எல்லாம் சேரும் போது நிகழ்வுகள் திசை மாறலாம். அல்லாஹ் எம்மையும் நாட்டு மக்கள் அனைவரையும் பாதுகாப்பானாக!