Verified Web

பலஸ்தீனர்களுக்கு எதிரான இஸ்ரேலின் வன்முறைகளுக்கு சவூதி அரேபியா கண்டனம்

2018-04-11 23:08:23 Administrator

சவூதி அமைச்­ச­ரவை கடந்த செவ்­வாய்க்­கி­ழ­மை­யன்று அல்-­அக்ஸா பள்­ளி­வாசல், பலஸ்­தீ­னர்­க­ளுக்கு எதி­ரான இஸ்­ரேலின் வன்­மு­றை­க­ளுக்கு மீண்டும் தனது கண்­ட­னத்தைத் தெரி­வித்­துள்­ளது. 
2002 ஆம் ஆண்டின் அரபு சமா­தான முன்­னெ­டுப்­புக்­க­ளுக்கு அமை­வாக, பலஸ்­தீ­னர்கள் விட­யத்தில் அவர்­க­ளது சட்ட ரீதி­யான உரிமை, விஷே­ட­மாக கிழக்கு ஜெரூ­ச­லத்தை தலை­ந­க­ராகக் கொண்ட சுதந்­திர தேசத்தை உரு­வாக்­கு­வ­தற்­கான தனது உறு­தி­யான ஆத­ரவை சவூதி அரே­பியா மீள வலி­யு­றுத்­தி­யுள்­ளது. 
அல-­ய­மாமாஹ் அரண்­ம­னையில் மன்னர் சல்­மானின் தலை­மையில் இடம்­பெற்ற அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் அமெ­ரிக்­கா­வுக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்­தினை மேற்­கொண்­டி­ருந்த பட்­டத்­திற்­கு­ரிய இள­வ­ரசர் மொஹமட் பின் சல்­மானை அன்­புடன் வர­வேற்று சிறந்த முறையில் உப­ச­ரித்­த­மைக்­காக ட்ரம்ப் நிரு­வா­கத்­திற்கும் அமெ­ரிக்க மக்­க­ளுக்கும் அமைச்­ச­ரவை பாராட்­டுக்­களை தெரி­வித்­தது. 
ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அமெ­ரிக்­காவின் சிரேஷ்ட அதி­கா­ரி­க­ளு­ட­னான பேச்­சு­வார்த்­தை­களும் சினே­க­பூர்வ சந்­திப்­புக்­களும் வர­லாற்று முக்­கி­யத்­து­வம்­வாய்ந்­ததும், தந்­தி­ரோ­பாய ரீதி­யா­ன­து­மான இரு­த­ரப்பு உற­வு­க­ளையும் மேலும் பலப்­ப­டுத்­து­வ­தோடு, பல்­வேறு துறை­க­ளிலும் இரு­த­ரப்­பிற்கும் பரஸ்­பரம் நன்மை பயக்­கக்­கூ­டி­ய­தாக இருக்கும் எனவும் அமைச்­ச­ரவை தெரி­வித்­தது. 
முடிக்­கு­ரிய இள­வ­ர­சரின் பிரான்ஸ் விஜயம், இரு­த­ரப்பு உற­வு­களைப் பலப்­ப­டுத்­து­வ­தற்­காக ஜனா­தி­பதி, பிர­தமர் மற்றும் ஏனைய அதி­கா­ரி­க­ளு­ட­னான சந்­திப்­புக்கள் மற்றும் பொது­வாகக் காணப்­படும் பிரச்­சி­னைகள் தொடர்­பான கலந்­து­ரை­யா­டல்கள் ஆகி­ய­வற்றின் பெறு­பே­று­க­ளுக்­காகக் காத்­தி­ருப்­ப­தா­கவும் அமைச்­ச­ரவை தெரி­வித்­துள்­ளது. 
அண்­மைக்­கால பிராந்­திய மற்றும் சர்­வ­தேச நிகழ்­வுகள் தொடர்­பான அறிக்­கை­க­ளையும் அமைச்­ச­ரவை மீளாய்வு செய்­தது. சர்­வ­தேச கடற்­ப­ரப்பில் சவூதி அரே­பி­யாவின் எண்ணெய்த் தாங்கி மீது யெமனின் ஹெளதி கிளர்ச்­சி­யா­ளர்­களால் மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தலை கண்­டித்­தது. 
சர்­வ­தேச சட்­டத்­தினை மீறி­ய­மைக்­காக ஹெள­தி­களும் அவர்­களின் பின்­ன­ணியில் இருக்கும் ஈரானும் இதற்குப் பொறுப்புக் கூற­வேண்டும் எனவும்  சம்­பந்­தப்­பட்ட ஐக்­கிய நாடுகள் பாது­காப்புச் சபையின் தீர்­மானம் விரை­வா­கவும் பரந்­து­பட்ட அள­விலும் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­வதை உறு­திப்­ப­டுத்த வேண்டும் எனவும்  வலி­யு­றுத்­தி­யது.
சிரி­யாவின் டௌமா நகரில் மேற்­கொள்­ளப்­பட்ட இர­சா­யனத் தாக்­கு­தலைக் கண்­டித்த அமைச்­ச­ரவை, சிரிய மக்களால் எதிர்கொள்ளப்படும் பேரழிவுகளை கட்டுப்படுத்துவதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியது. 
சர்வதேச சமூகம் சிரிய மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற தனது பொறுப்பினை உணர வேண்டும் எனவும் முரண்பாடுகளுக்கு அமைதியான தீர்வினை முன்வைக்க வேண்டும் எனவும் அமைச்சரவை தெரிவித்தது.