Verified Web

அல்ஜீரியாவில் இராணுவ விமானம் விழுந்து நொறுங்கி 257 பேர் உயிரிழப்பு

9 days ago Administrator

வட ஆபி­ரிக்க நாடான அல்­ஜீ­ரி­யாவில் இரா­ணுவ விமானம் ஒன்று நேற்று காலை புறப்­பட்ட சிறிது நேரத்தில் தரையில் விழுந்து நொறுங்­கி­யது. இதில் 257 க்கும் மேற்­பட்டோர் பலி­யா­னார்கள் என்று அந்­நாட்டு அரசு தெரி­வித்­துள்­ளது.
அல்­ஜீ­ரியா நாட்டின் வட­ப­கு­தி­யி­லுள்ள தலை­நகர் அல்­ஜீ­யர்­ஸுக்கு அருகே இருக்கும் போபரிக் இரா­ணுவ விமானத் தளத்தில் இருந்து நேற்று காலை இராணு­வத்­துக்கு சொந்­த­மான ரஷி­யா­ வ­டி­வ­மைத்த ஐ.எல்.-76 என்ற விமானம் மேற்கு அல்­ஜீ­ரியா எல்­லை­யான, டின்டாப் நக­ருக்கு புறப்­பட்­டது. இந்த விமானத்தில் 200 க்கும் மேற்­பட்ட இரா­ணுவ வீரர்கள், போலி­சா­ரியோ முன்­னணி என்ற பிரி­வி­னை­வாத அமைப்பைச் சேர்ந்­த­வர்கள் 20 க்கும் மேற்­பட்டோர், விமானப் பணி­யா­ளர்கள் 10 பேர் என 250 க்கும் மேற்­பட்டோர் பய­ணித்­தனர்.
விமானம் போஃபரிக் விமானத் தளத்தில் இருந்து புறப்­பட்டு சிறிது நேரத்தில் 30 கி.மீ தொலைவில் திறந்­த­வெ­ளிப்­ப­கு­தியில் தரையில் விழுந்து நொறுங்­கி­யது. இந்த விபத்தில் விமா­னத்தில் பய­ணித்த 250-க்கும் மேற்­பட்­டோரும் இறந்­த­தாக அல்­ஜீ­ரிய நாட்டு அதி­கா­ரிகள் தெரி­விக்­கின்­றனர்.
இந்த விமான விபத்­துக்­கான காரணம் என்ன எனத் தெரி­ய­வில்லை. விமா­னத்தில் மொத்தம் எத்­தனை வீரர்கள், பய­ணிகள் பய­ணித்­தார்கள் என்ற உறு­தி­யான பட்­டி­ய­லையும் அல்­ஜீ­ரிய அரசு அதி­கா­ர­பூர்­வ­மாக அறி­விக்­க­வில்லை.
இது குறித்து அல்­ஜீ­ரி­யாவில் ஆளும் கட்­சி­யான எப்­எல்என் கட்சி உள்­நாட்டு தொலைக்­காட்­சி­யான என­ஹா­ருக்கு அளித்த பேட்­டியில், இந்த விமான விபத்தில் பொலி­சா­ரியோ அமைப்பைச் சேர்ந்த 26 பேரும் உயி­ரி­ழந்­தனர். இவர்கள் அனை­வரும் மொராக்­கோ­வுக்கு அருகே இருக்கும் மேற்கு சஹாரா பகு­தியில் சுதந்­திரம் வேண்­டி போராடும் குழுவைச் சேர்ந்­த­வர்கள்.
மேற்கு சஹாரா பகு­தியில் உள்ள அல்­ஜீ­ரி­யாவின் எல்லை ஓரப் பகு­தி­யான டின்டாப் பகு­தி­யில்தான் பொலி­சா­ரியோ அமைப்பைச் சேர்ந்­த­வர்கள், மொராக்கோ நாட்டை ஒட்­டிய பகு­தியில் சுயாட்சி கேட்டு போராடி வரு­கி­றார்கள். இவர்­க­ளுக்கு அல்­ஜீ­ரிய அரசு ஆத­ரவு தெரி­வித்து வரு­கி­றது.
விபத்­து நடந்த இடத்­துக்கு ஏரா­ள­மான அம்­பு­லன்ஸ்கள் வர­வ­ழைக்­கப்­பட்­டுள்­ளன. தீய­ணைப்பு படை­யினர், பேரிடர் மீட்பு குழு­வினர் வரவழைக்கப்பட்டு மீட்புப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விபத்தில் பலியானவர்கள் உடல்கள் வெள்ளைத்துணியில் சுற்றப்பட்டு நீண்ட வரிசையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.