Verified Web

பதற்றமான நிலையிலிருந்து பாதுகாப்பான சூழலை நோக்கி

T.M.Mufaris Rashadi

விரி­­வு­ரை­யா­ளர், பாதி­ஹ் கல்வி நிறு­வ­னம்

2018-04-11 03:51:30 T.M.Mufaris Rashadi

உலகில் மனி­தர்­க­ளுக்கு ஏற்­படும் நெருக்­க­டி­களை இரண்டு வித­மாகப் பிரித்து நோக்க முடியும். முத­லா­வது, மக்கள் பாவங்­களில் மூழ்கி அநி­யா­யங்­களும் அக்­கி­ர­மங்­களும் புரி­கின்ற போது அல்லாஹ் அவர்­களை சோத­னைக்­குள்­ளாக்கி தண்­டிக்க விரும்­பு­கிறான். இந்தத் தண்­ட­னையை பாவங்­களில் உழன்று வாழ்­ப­வர்­களை திருத்­து­வ­தற்கும் பிற மக்­க­ளுக்குப் படிப்­பி­னைக்­கு­ரி­ய­து­மாக ஆக்­கு­கிறான்.  

எந்த ஒரு கிரா­மத்­திற்கும் நாம் நபியை அனுப்­பி­னாலும் அதி­லுள்­ள­வர்கள் அடி­ப­ணியும் பொருட்டு அவர்­களை வறு­மை­யாலும் துன்­பத்­தாலும் நாம் பிடிக்­காது விட்­ட­தில்லை. அல்­குர்ஆன் (7:94) 
பின்னர் கெட்­டதின் இடத்­திற்கு நல்­லதை நாம் மாற்­றினோம். அவர்கள் (செழித்து பல்கி) பெரு­கியபோது எங்கள் மூதா­தை­யர்­க­ளுக்கும் துன்­பமும், இன்­பமும் ஏற்­பட்­டன என (தண்­ட­னையை மறந்து) கூறினர். எனவே அவர்கள் உண­ராத விதத்தில் திடீ­ரென நாம் அவர்­களைப் பிடித்துக் கொண்டோம். (7:95)

மேலுள்ள இரண்டு வச­னங்­களும் அல்­லாஹ்வை மறந்து வாழ்­ப­வர்­க­ளுக்கு அவன் வழங்­கு­கின்ற தண்­ட­னைகள் பற்றிப் பேசு­கின்­றன. இவை முத­லா­வது வகை நெருக்­கடி பற்றி விவ­ரிப்­பதை நம்மால் புரிந்துகொள்ள முடி­கி­றது. 

இரண்­டா­வது, முஸ்­லிம்­களின் ஈமானை பரீட்­சித்து அத­னூ­டாக ஈமானை பலப்­ப­டுத்­து­வ­தற்­கு­ரிய சோத­னை­யாக ஆக்­கு­கிறான். இதன்­போது பொறு­மையை கடைப்­பி­டித்து அல்­லாஹ்வும் அவ­னது தூதரும் எவ்­வாறு வழி­காட்­டி­னார்­களோ அந்த முறையில் இறை­வனை நெருங்­கு­கின்ற மக்­க­ளுக்கு உயர்ந்த நற்­கூ­லி­க­ளையும் சுவ­னத்­தையும் அவன் வழங்க காத்­தி­ருக்­கிறான். 

இரண்டாம் வகை நெருக்­க­டி­க­ளுக்கு இன்று நமது நாட்டில் நில­வி­வரும் அசா­தா­ரண சூழ்­நி­லையை உதா­ர­ண­மாக குறிப்­பிட முடியும்.
“நாங்கள் ஈமான் கொண்­டி­ருக்­கின்றோம்” என்று கூறு­வ­தனால் (மட்டும்) அவர்கள் சோதிக்­கப்­ப­டாமல் விட்டு விடப்­ப­டு­வார்கள் என்று மனி­தர்கள் எண்ணிக் கொண்­டார்­களா? நிச்­ச­ய­மாக அவர்­க­ளுக்கு முன்­னி­ருந்­தார்­களே அவர்­க­ளையும் நாம் சோதித்­தி­ருக்­கின்றோம். ஆகவே, உண்­மை­யு­ரைப்­ப­வர்­களை நிச்­ச­ய­மாக அல்லாஹ் அறிவான். இன்னும் பொய்­யர்­க­ளையும் அவன் நிச்­ச­ய­மாக அறிவான்.” (அல்­குர்ஆன் 29:2,3)

“(முஃமின்­களே!) உங்கள் பொருள்­க­ளிலும், உங்கள் ஆத்­மாக்­க­ளிலும் திட­மாக நீங்கள் சோதிக்­கப்­ப­டு­வீர்கள். உங்­க­ளுக்கு முன் வேதம் கொடுக்­கப்­பட்­டோ­ரி­ட­மி­ருந்து, இணை வைத்து வணங்­கு­வோ­ரி­ட­மி­ருந்தும் நிந்­த­னைகள் பல­வற்­றையும் செவி­ம­டுப்­பீர்கள் ஆனால் நீங்கள் பொறு­மையை மேற்­கொண்டு, (இறை­வ­னிடம்) பய­பக்­தி­யோடு இருந்­தீர்­க­ளானால் நிச்­ச­ய­மாக அதுவே எல்லாக் காரி­யங்­க­ளிலும் (நன்­மையை தேடித் தரும்) தீர்­மா­னத்­துக்­கு­ரிய செய­லாகும்.” (அல்­குர்ஆன் 3:186)

மியன்மார், சிரியா, தர்ஹாநகர், அளுத்­கம, கிந்­தோட்டை போன்ற பெயர்­களை அண்­மைக்­கா­ல­மாக எமது உள்­ளங்­களும் நாவு­களும் நினைத்­தாலும் பேசி­னாலும் எம்­மை­ய­றி­யா­மலே எமக்குள் ஓர் இனம்­பு­ரி­யாத வலியை அவை உண்டுபண்ணிச் செல்­கின்­றன. அவற்றின் வடுக்கள் இன்னும் ஆறாமல் இருக்கும் இத்­த­ரு­ணத்தில் அம்­பாறை, தெல்­தெ­னிய என்ற பெயர்­களும் அத்­தோடு இன்னும் ஒரு சில ஊர்­களும் பள்­ளி­வா­சல்­களும் முஸ்­லிம்­களின் வீடு­களும் கடை­களும் சொத்­துக்­களும் செல்­வங்­களும் இனம்­தெ­ரி­யாத சில இன­வா­தி­களால் நாச­மாக்­கப்­பட்­டுள்ள செய்தி மிகவும் வருத்­தத்­தை­ய­ளிக்­கி­றது. 

அல்லாஹ் தனது அடி­யார்­களில் தான் நாடி­ய­வர்­களை உடல், உயிர், உடைமை, பொரு­ளா­தாரம் போன்ற விட­யங்­களில் சோதித்து அதன்­போது அவர்கள் எவ்­வாறு நடந்து கொள்­கி­றார்கள் என்­ப­தனைப் பொறுத்து உயர்ந்த கூலி­களை இம்­மை­யிலும் மறு­மை­யிலும் வழங்கக் காத்துக் கொண்­டி­ருக்­கிறான் என்­ப­தனை முதலில் நாம் எமது உள்­ளங்­களில் ஆழப்­ப­தித்துக் கொள்ள வேண்டும். 

அதே போன்று முஸ்­லிம்கள் தமது எதி­ரி­களால் வீணாகத் தாக்­கப்­படும் போதும் தகுந்த எவ்­வித கார­ணங்­களும் இன்றி இறை­யில்­லங்­களும் மத வழி­பாட்டுத் தலங்­களும் முஸ்­லிம்­களின் உயிர்கள், உடை­மைகள், சொத்து செல்­வங்கள் போன்­ற­வற்­றுக்கு சேதம் விளை­விக்­கின்ற போதும் அதனை சட்­ட­ரீ­தி­யாக எதிர்­கொள்­வதும் அதற்­காகப் போரா­டு­வதும் இறை­வனை நெருங்கும் மிகப்­பெரும் வணக்­க­மாக ஆக்கி வைத்­தி­ருக்­கின்றான். 

வெறு­மனே சட்­ட­ரீ­தி­யான நட­வ­டிக்­கைகள், உடைமை­களை பாது­காத்துக் கொள்­வ­தற்­கான தற்­காப்­பு­மு­றைகள் என்­ப­வற்­றுக்கு அப்பால் எமது சமூகம் இவ்­வா­றான நிலை­களில் கடைப்­பி­டிக்க வேண்­டிய முக்­கிய சில அம்­சங்­களும் உள்­ளன. அவற்றை மிகச்­சு­ருக்­க­மாக நாம் நோக்­குவோம்: 

1.- எமது ஈமானை வலுப்­ப­டுத்திக் கொள்­ளுதல் 

"எனவே, நீங்கள் தைரி­யத்தை இழக்­கா­தீர்கள்; கவ­லையும் கொள்­ளா­தீர்கள், நீங்கள் முஃமின்­க­ளாக இருந்தால் நீங்கள் தாம் உன்­ன­த­மா­ன­வர்­க­ளாக இருப்­பீர்கள்.” (அல்­குர்ஆன் 3:139)

ஆழ­மான ஈமான் இல்­லாத சமூ­கத்தால் ஒரு போதும் தலை­நி­மிர்ந்து வாழ முடி­யாது. கவ­லை­க­ளற்ற கோழைத்­த­ன­மற்ற வீர­மான வாழ்க்­கையின் அடிப்­ப­டையே ஆழ­மான இறை­வி­சு­வா­ச­மாகும், 

ஈமானை வலுப்­ப­டுத்­திக்­கொள்­வதன் மூலமே "வஹ்ன்" எனப்­படும் உலக மோகத்­தையும் மரணம் பற்­றிய வெறுப்­பையும் பயத்­தையும் போக்கி இறை­வனை மாத்­திரம் சார்ந்­தி­ருந்து அவ­னது மார்க்­கத்தின் மூல­மாக மாத்­தி­ரமே அவ­னி­டத்தில் கண்­ணி­யத்தை தேட முயற்­சிப்போம்.

2-. ஈமா­னிய பலத்­துடன் அறிவு கொண்டு உயர்ச்சி பெறுவோம் 

"அன்­றியும், உங்­களில் ஈமான் கொண்­ட­வர்­க­ளுக்கும் கல்வி ஞானம் அளிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கும் அல்லாஹ் பத­வி­களை உயர்த்­துவான். அல்­லாஹ்வோ நீங்கள் செய்­ப­வற்றை நன்கு அறிந்­த­வ­னாக இருக்­கின்றான்.” (அல்­குர்ஆன் 58:11)

அறி­வுள்­ள­வர்­களின் அந்­தஸ்தை அல்லாஹ் அதி­க­ரிக்கச் செய்­கிறான். அது போன்றே அறி­வற்­ற­வர்­களால் அறி­வுள்ள சமூ­கத்தை  ஒரு போதும் மிகைத்துவிட முடி­யாது.

உணர்ச்­சி­வ­சப்­பட்டு உணர்ச்­சி­களை முதன்­மைப்­ப­டுத்தி அறிவைப் புறம்­தள்ளிவிட்டு ஆவே­சப்­படும் சமூ­கத்தால் நீண்ட காலம் நிலைத்­தி­ருக்க முடி­யாது. அவர்கள் இழி­வா­ன­வர்­க­ளா­கவும் தாழ்ந்­த­வர்­க­ளா­கவும் மாற்­றப்­ப­டு­வார்கள் என்­ப­துவே நிதர்­ச­ன­மாகும்.
அதற்­காக அறிவை மாத்­திரம் சுமந்து அந்த அறி­வி­னூ­டாக செய­லாற்ற மறுக்கும் போராட்டக் குண­மற்ற, அறிவு சுமந்த கழு­தை­க­ளாகவும் இருக்க முடி­யாது. 

ஈமானை வலுப்­ப­டுத்தி ஈமா­னிய பலத்­து­டனும் ஆழ்ந்த அறி­வோடும் அந்த அறிவின் மூலம் செய­லாற்­று­கின்ற சமூ­க­மா­கவும் நாம் வாழ்­வதன் மூலமே நாம் சிறந்த சமூ­க­மாக உயர்ச்சி பெற் முடியும். 

3.- ஒன்­று­பட்டால் உண்டு உயர்ந்த வாழ்வு 

இன்னும் அல்­லாஹ்­வுக்கும், அவ­னு­டைய தூத­ருக்கும் கீழ்­ப்ப­டி­யுங்கள், நீங்கள் பிணங்கிக் கொள்­ளா­தீர்கள்; (அவ்­வாறு பிணங்கிக் கொண்டால்) கோழை­க­ளாகி விடு­வீர்கள்; உங்கள் பலம் குன்­றி­விடும். (துன்­பங்­களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறு­மை­யாக இருங்கள். நிச்­ச­ய­மாக அல்லாஹ் பொறு­மை­யு­டை­ய­வர்­க­ளுடன் இருக்­கின்றான். (அல் குர்ஆன் 8:46)

இறை­யச்­சத்­திலும் நல்ல விட­யங்­க­ளிலும் பரஸ்­பரம் நாம் ஒற்­று­மை­யாக வாழ்­வது மிகப்­பெரும் பல­மாகும். அந்தப் பலத்­தி­னூ­டாக நாம் எமது சக்­தியை உண­ர­மு­டியும், துணிச்சல் மிக்க சமூ­க­மா­கவும் மிளிர முடியும். 

4.- பிரார்த்­த­னைகள் மூலம் பலம்­பெ­றுவோம்.  

குறிப்­பாக பர்­ளான ஒவ்­வொரு தொழு­கை­க­ளிலும் விசே­ட­மாக "குனூதுந் நஸிலா" ஓதிப் பிரார்த்­திப்போம். 
நபி­ய­வர்கள் யாஅல்லாஹ்! அய்யாஷ் இப்னு அபீ ரபீ­ஆவைக் காப்­பாற்­று­வா­யாக, யாஅல்லாஹ்! வலீத் இப்னு வலீதைக் காப்­பாற்­று­வா­யாக, யாஅல்லாஹ்! ஸலமா இப்னு ஹிஷாமைக் காப்­பாற்­று­வா­யாக, யாஅல்லாஹ்! நம்­பிக்­கை­யா­ளர்­களில் உள்ள பல­வீ­னர்­களைக் காப்­பாற்­று­வா­யாக, முழர் குலத்தார் மீது உனது பிடியை இறுக்­கு­வா­யாக! யூசுப் நபி காலத்தில் ஏற்­பட்ட பஞ்­சத்தைப் போன்று இவர்­க­ளுக்கும் ஏற்­ப­டுத்­து­வா­யாக! என்று பிரார்த்­தித்­தார்கள்.” (புஹாரி: 6393)
இந்த ஹதீஸை இணை­வைப்­பா­ளர்­க­ளுக்கு எதி­ரான பிரார்த்­தனை என்ற தலைப்பின் கீழே இமாம் புஹாரி(ரஹ்) அவர்கள் பதிவு செய்­துள்­ளார்கள்.

தேவை­யான சந்­தர்ப்­பங்­களில் தனிப்­பட்­ட­வர்­க­ளுக்­கா­கவும் பொது­வாக முஸ்­லிம்­க­ளுக்­கா­கவும் பிரார்த்­தித்து இவ்­வாறு குனூத் ஓத முடியும் என்றும் முஸ்­லிம்­களின் எதி­ரி­க­ளுக்கு எதி­ராகப் பிரார்த்­திப்­பதும் அந்தப் பிரார்த்­த­னையை சத்­த­மாகச் செய்ய முடியும் போன்ற விட­யங்­களை மேற் குறிப்­ப­டப்­பட்­டுள்ள நபி மொழியின் மூல­மாக நம்மால் புரிந்துகொள்ள முடி­கி­றது. 

மேலும் நபித் தோழர் அபூ­ஹு­ரைரா (ரழி) அவர்கள் "ழுஹர், இஷா, சுபஹ் தொழு­கை­களில் கடைசி ரக்­அத்­துக்­களில் ஸமி­அல்­லாஹு லிமன் ஹமிதா என்று கூறிய பிறகு,முஃமின்­க­ளுக்கு சாத­க­மாகப் பிரார்த்திப் பதுடன் இறை மறுப்­பா­ளர்­களை சபிப்­பார்கள்.” (புஹாரி: 797, முஸ்லிம்: 1576, அஹ்மத்: 7454, 7464)

5-. அல்­லாஹ்­வா­கிய அவனை மாத்­திரம் சார்ந்­தி­ருப்போம் 

அல்லாஹ் தனது திரு­ம­றையில் கூறு­கிறான்: நிச்­ச­ய­மாக நாம் ஓர­ளவு பயத்­தாலும், பசி­யாலும், செல்­வங்கள், உயிர்கள் மற்றும் விளைச்­சல்கள் ஆகி­ய­வற்றில் ஏற்­படும் இழப்­பு­க­ளாலும் உங்­களைச் சோதிப்போம். பொறு­மை­யா­ளர்­க­ளுக்கு (நபியே!) நீர் நன்­மா­ராயம் கூறு­வீ­ராக. அவர்கள் யாரெனில், தமக்கு ஏதேனும் துன்பம் நேரி­டும்­போது “இன்னா லில்­லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்” நிச்­ச­ய­மாக நாம் அல்­லாஹ்­வுக்கே உரி­ய­வர்கள். மேலும் நாம் அவ­னி­டமே திரும்பச் செல்­ப­வர்கள் என்று கூறு­வார்கள்.

அத்­த­கை­யோ­ருக்கே அவர்­களின் இரட்­ச­க­னி­ட­மி­ருந்து அருள்­களும் கரு­ணையும் உண்­டாகும். அவர்­களே நேர்­வழி பெற்­ற­வர்கள். (அல்­குர்ஆன் 2: 155 – -157)

மக்­களில் சிலர் அவர்­க­ளிடம்; "திட­மாக மக்­களில் (பலர் உங்­க­ளுடன் போரி­டு­வ­தற்­காகத்) திரண்டு விட்­டார்கள், எனவே அப்­ப­டை­யைப்­பற்றி அஞ்சிக் கொள்­ளுங்கள்" என்று கூறி(அச்­சு­றுத்தி)னர். ஆனால் (இது) அவர்­களின் ஈமானைப் பெருக்கி வலுப்­படச் செய்­தது. "அல்­லாஹ்வே எங்­க­ளுக்குப் போது­மா­னவன். அவனே எங்­க­ளுக்குச் சிறந்த பாது­கா­வலன்" என்று அவர்கள் கூறி­னார்கள். (அல்­குர்ஆன் 3:173)
இதனால் அவர்கள் அல்­லாஹ்­வி­ட­மி­ருந்து நிஃமத்­தையும் (அருட்­கொ­டை­யையும்,) மேன்­மை­யையும் பெற்றுத் திரும்­பி­னார்கள். எத்­த­கைய தீங்கும் அவர்­களைத் தீண்­ட­வில்லை. (ஏனெனில்) அவர்கள் அல்­லாஹ்வின் விருப்­பத்தைப் பின்­பற்­றி­னார்கள், அல்லாஹ் மகத்­தான கொடை­யு­டை­ய­வ­னாக இருக்­கிறான். (அல்­குர்ஆன் 3:174)
எம்­மா­லான சிறு முயற்­சி­க­ளுக்கு அப்பால் எல்லா சூழ்­நி­லை­க­ளிலும் நமது அனைத்து பிரச்­ச­ினை­க­ளையும் அவன் வசம் ஒப்­ப­டைத்து விடு­வதும் முழு­மை­யாக அவனைச் சார்ந்­தி­ருப்­ப­துமே நமது இம்மை மறுமை விமோ­ச­னுத்­துக்கு மிகச்­சி­றந்த வழி­யாகும். 

6-. அதி­க­மாக இஸ்­திஃபார், தௌபா போன்­ற­வற்றில் ஈடு­பட்டு எமது அழுக்­கு­களை நாம் சுத்­தப்­ப­டுத்திக் கொள்வோம். 

ஆகவே, நீர் பொறு­மை­யுடன் இருப்­பீ­ராக. நிச்­ச­ய­மாக அல்­லாஹ்வின் வாக்­கு­றுதி உறு­தி­யு­டை­ய­தாகும். உம் பாவத்­திற்­காக மன்­னிப்புக் கோரு­வீ­ராக மாலை­யிலும் காலை­யிலும் உம் இறை­வனைப் புகழ்ந்து, தஸ்பீஹ் (துதி) செய்து கொண்டு இருப்­பீ­ராக! (அல்­குர்ஆன் 40:55) 

இஸ்­திஃபார், தௌபா என்­பது விடி­ய­லுக்­கான வழியாகும். இருள்­களைப் போக்கும் ஒளி­யாகும், அது பதற்­ற­மான சூழ்­நி­லை­யையும் பாது­காப்­பா­ன­தாக மாற்றும் வல்­லமை மிக்­கது. 
அதன் மூலம் எம்மை நாம் சுத்­தி­க­ரித்துக் கொண்டு அவன் பால் மீள்வோம். 

7-. வன்­மு­றை­களை கையில் எடுக்­காது அவன் உத­வியின் மூலம் எம்மை நாமே தற்­காத்­துக்­கொள்ள முயற்­சிப்போம் 

அல்லாஹ் உங்­க­ளுக்கு உத­வி­செய்தால் உங்­களை மிகைப்­பவர் யாரு­மில்லை. (அல்­குர்ஆன் 3:160)

"உங்­களால் முடிந்தளவு அதி­க­மான வலி­மை­யையும் தயார்­நி­லை­யி­லுள்ள குதிரைப் படை­யையும் திரட்டி வையுங்கள்! இவற்றின் மூலம் அல்­லாஹ்­வுக்கும், உங்­க­ளுக்கும் பகை­வர்­களாய் உள்­ள­வர்­க­ளையும் இவர்கள் அல்­லாத வேறு பகை­வர்­க­ளையும் நீங்கள் திகி­ல­டையச் செய்­திட வேண்டும். அந்தப் பகை­வர்­களை நீங்கள் அறிய மாட்­டீர்கள். 

ஆனால் அல்லாஹ் அவர்­களை அறிவான். மேலும், அல்­லாஹ்வின் பாதையில் நீங்கள் எதனைச் செலவு செய்­தாலும் அதற்­கு­ரிய முழு­மை­யான கூலி உங்­க­ளுக்கு வழங்­கப்­படும். மேலும், நீங்கள் ஒரு­போதும் அநீதி இழைக்­கப்­ப­ட­மாட்­டீர்கள்" (அல்­குர்ஆன் – 8:60)
இலங்கை வாழ் முஸ்லிம்களாகிய நாம் எமது ரப்போடு தொடர்பாகி எம்மால் முடியுமான வரை சட்டரீதியாக அனைத்து விடயங்களையும் எதிர் கொண்டு தகுந்த தற்காப்புடனும் பாதுகாப்புடனும் முன் ஏற்பாடுகளுடனும் தூரநோக்குடனும் திட்டமிடலுடனும் செயற்படுகின்ற அதே வேளை எமது முஸ்லிம் உறவுகளுக்காக எம்மால் முடியுமான உதவிகளை தேசிய, மாவட்ட, ஊர் முஸ்லிம் தலைமைகளின் உதவியோடு ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் செய்ய முன்வருவதும் பிரார்த்தனைகளிலும்  குறிப்பாக ஒவ்வொரு தொழுகையிலும் குனூத் ஓதி அவர்களினதும் எங்களினதும் துயர் நீங்குவதற்காகப் பிரார்த்தனை செய்வதும் குத்பாக்களில் பாதிக்கப்பட்டவர்களின் துயர்களைப் பற்றி சமூகத்துக்கு தெளிவு படுத்தி அவர்களுக்காக எமது இலங்கை சமூகத்தை அல்லாஹ்விடம் இரு கரம் ஏந்தி பிரார்த்திக்கச் செய்வதும் அவர்களது துயரில் முடியுமான அளவு பங்கெடுக்க ஆர்வமூட்டுவதும் காலத்தின் கட்டாயக் கடமையாகும் என்பதனை விடிவெள்ளி மிம்பர் கண்ணியமிக்க கதீப்மார்களிடம் வினயமாய் வேண்டிக் கொள்கின்றது. 

கருணைமிக்க அந்த ரப்புல் ஆலமீனாகிய அல்லாஹ் அனைத்து முஸ்லிம்களினதும் துன்பங்களையும் நீக்கியருள்வானாக! ஐக்கியமும் ஒற்றுமையும் அமைதியும் மறுமலர்ச்சியும் நிறைந்த தேசமாக இந்நாட்டை ஆக்கியருள்வானாக!