Verified Web

கண்டி நகரை தலைநிமிரச் செய்த முஸ்லிம் முன்னோர்கள்

2018-04-11 03:31:09 Administrator

இத்­தேசம் எமக்கு ஏன் இவ்­வாறு  செய்து கொண்­டி­ருக்­கின்­றது?....  என்று  நாம் ஏங்­கிக்­கொண்­டி­ருக்கும் வேளையில் இத்­தே­சத்­திற்கு எம்­முன்னோர் எவ்­வா­றான சேவை­களைச் செய்து தம்­மையும் தம் சமூ­கத்­தையும் பாது­காத்­தி­ருக்­கின்­றார்கள் என்­ப­தற்கு இப்­ப­திவு   சிறந்த உதா­ரணம்.

கண்டி,  இலங்கை வர­லாற்றில் மிக முக்­கி­ய­மான நகரம் ,  உலகில் உள்ள  மர­பு­ரீ­தி­யான நக­ரங்­களில் கண்டி நகரும் உள்­ள­டக்­கப்­பட்டு பாது­காக்கப் பட்டு வரு­கின்­றது.

தூரப் பிர­தே­சங்­களில் இருந்து கண்­டிக்கு  வரும்  எல்­லோ­ருக்கும் தெரிந்த ஒன்று "கண்டி முஸ்லிம் ஹோட்டல்" ஆனால் அதற்கு முன்னால் வானு­யர உயர்ந்து இருக்கும் மணிக்­கூட்­டுக்­கோ­பு­ரத்­திற்கும், இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கும் இடை­யே­யான தொடர்புகள் பற்றி  எத்­தனை பேர் அறிந்­தி­ருக்­கிறோம்-?

இம்­ம­ணிக்­கூட்­டுக்­கோ­புரம் ஹாஜி முஹம்­மது  இஸ்­மாயில் அவர்­களால்  1947 ஆகஸ்ட் 14 இல் இவ்வுலகை விட்­டுப்­பி­ரிந்த  மொஹமட் சக்கி இஸ்­மாயில் என்ற தனது அன்பு மகனின் நினை­வாக, 23 டிசம்பர், 1950 இல் கண்டி மாநகர மக்­க­ளுக்­காக அன்­ப­ளிப்புச் செய்­யப்­பட்­டது, இதன் திறப்பு விழா­வுக்கு அன்­றைய இலங்­கையின் முதல்  பிர­தம மந்­திரி டீ.எஸ்.சேனா­நா­யக்க வருகை தந்­துள்ளார்..

இலங்கை  சுதந்­திரமடைந்து  இரண்டு வரு­டங்­க­ளுக்குள் இவ்­வா­றான ஒரு பாரிய பணியை ஒரு முஸ்லிம் தன­வந்தர் செய்­தி­ருப்­பது இந் நாட்டின் தேசிய நீரோட்­டத்தில் முஸ்­லிம்கள் எந்­த­ளவு நெருக்­க­மாக இருந்­துள்­ளார்கள் என்­ப­தற்­கான  ஆதா­ரங்­களில் ஒன்­றாகும். அதனை அன்­றைய. விழாவில் பிர­த­மரும் இதனைச் சுட்டிக் காட்­டி­ய­தா­கவும் கூறப்­ப­டு­கின்­றது.

அன்று  ஹாஜி முஹம்­மது இஸ்­மாயில்  செய்த சேவை இன்று முழு முஸ்லிம் சமூகம் மட்­டு­மல்ல, முழு நாடும் பெரு­மைப்­படும் விட­ய­மா­கவும்,  கண்டி நகரின் மரபு அடை­யா­ள­மா­க­வும் மாறி இருக்­கின்­றது. பௌத்­தர்­களின் இத­யமாகக் கரு­தப்­படும் தலதா மாளி­கையில் இருந்து சுமார் 200 மீற்றர் தூரத்தில் இருக்கும் இந்த  மணிக்கூட்டு கோபுரம்,  கண்டி நகரின் வர்த்­த­கத்­திலும் , வாழ்­வி­ய­லிலும் முஸ்­லிம்கள் பல­மான நிலையில் இருந்­தி­ருக்­கின்­றார்கள் என்­ப­தற்­கான ஒரு வர­லாற்றுச் சான்­றாகும்.

இக் கோபு­ரத்தின் அழ­கியல் வேலைப்­பா­டுகள் கண்­டிய கட்­டிட கலை அமைப்பைப்  பிர­தி­ப­லிப்­ப­துடன், அதில்­கா­ணப்­படும் மலர்­க­ளு­ட­னான யானைகள் அறி­வுக்­கான அவ­சி­யத்­தையும், "புன்­க­லசம்" நாட்டின்  செழிப்­பையும் குறிக்­கின்­றது , இதனை ஒத்த யானை வடிவம் பேரா­தனை பல்­க­லைக்­க­ழ­கத்தின் 'கலை மண்­ட­பத்­திலும் காணப்­ப­டு­கின்­றது . ஸக்கி இஸ்­மா­யிலின் சிறிய புகைப்­ப­டமும், இதில் காணப்­படும் மலர்­வ­டி­வி­லான கலை வேலைப்­பா­டு­களும் முஸ்லிம் சாயலைப் பிரதிபலிக்­கின்­றது.

இன்று கண்டி நகரின் மத்­தியில் இவ்­வா­றான ஒரு  கோபு­ரத்தை  நிர்­மா­ணிப்பது என்­பது நினைத்தும் பார்க்க முடி­யாத ஒன்­றாகும்.

ஒரு தேசத்து  மக்கள் அத்­தே­சத்­திற்­கான பங்­க­ளிப்­பினைப் பல வழி­களில் செய்து தம்­மையும் தம் இருப்­பையும் எவ்­வாறு  அடை­யா­ளப்­ப­டுத்திக் கொள்­ளலாம் என்­ப­தற்கு  இக் கோபு­ரமும், ஹாஜி இஸ்­மாயிலின் அணுகு முறையும் சிறந்த ஒரு முன் உதா­ர­ண­மாகும்.

இலங்­கையில் ஒரு வர்த்­தக சமூ­க­மாகக்   கரு­தப்­படும்  முஸ்­லிம்­களின் "ஸதக்கா" நன்­கொ­டைகள் ஒரு சமூ­கத்­திற்கு உள்­ளேயே புழங்க  வேண்­டி­ய­தில்லை. அது பொதுச்­ச­மூகத்­திற்­கான பயன்­பாட்டில் கட்­டாயம் கலந்­தி­ருக்க வேண்டும் என்­பதில் எம் முன்னோர் பல்­வேறு உதா­ர­ணங்­களை  செய்து காட்­டி­யுள்­ளனர். அதே போல் ஏனைய சமூகத்தைச் சேர்ந்­த­வர்­களும் செய்­துள்­ளனர்

உதா­ரணம்: அண்­மையில் திஹா­ரிய முஸ்லிம்   பாட­சா­லைக்கு ஒரு பௌத்த பிக்கு தனது சொந்தச் செலவில் ஒரு பாட­சாலைக் கட்­டி­டத்தை  நிர்­மா­ணித்து கொடுத்­தி­ருந்தார்.

எனவே தான் ஒரு மனிதர் செய்த நன்­கொடை இன்று கண்டி நகரின் அடை­யாளமாக மட்­டு­மல்ல உலக மரபுக் கட்­டி­ட­மா­கவும் மாறி இருக்­கின்­றது,

முஸ்­லிம்கள் தமது செல்­வத்தை தமது பள்ளி வாசல், மத­்ரஸா   என்­ப­ன­வற்­றிற்கு  மட்­டுமே  பயன்­ப­டுத்தும் ஒரு "மூடிய சமூகம்" என்ற குற்­றச்­சாட்­டு­களில் இருந்து மீள, இவ்­வா­றான பொதுச்சேவைகளை செய்வதும்  மார்க்கத்தில் நன்மையை    வழங்கும் செயல்  என்பதோடு, அவை தம் எதிர்கால இருப்பிற்கான அம்சங்களில் ஒன்றாகவும் அமைந்துவிடும்.

இனியாவது கண்டிக்கு  வருவோர் எம்முன்னோரின் சேவைகளால் தலை நிமிரட்டும்.