Verified Web

முஸ்லிம் தனியார் சட்டம் : எட்டு வருடங்களின் பின்பு சிபாரிசு அறிக்கை பூர்த்தி

2018-01-02 01:08:08 ARA.Fareel

அனைத்து உறுப்பினர்களும் கையொப்பமிட்டனர்

இந்தவாரம் நீதியமைச்சரிடம் கையளிக்க திட்டம்

எட்டு வரு­ட­கா­ல­மாக மேற்­கொள்­ளப்­பட்ட தீவிர முயற்­சி­க­ளை­ய­டுத்து முஸ்லிம் தனியார் சட்­டத்தில் மேற்­கொள்ள வேண்­டிய திருத்­தங்கள் தொடர்­பான சிபா­ரி­சுகள் நிறை­வுக்கு வந்­துள்­ளன.

முஸ்லிம் தனியார் சட்­டத்தில் திருத்­தங்­களைச் சிபா­ரிசு செய்­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்ட ஓய்­வு­பெற்ற முன்னாள் உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­ரசர் சலீம் மர்­சூபின் தலை­மை­யி­லான குழு தனது சிபா­ரிசு அறிக்­கை­யினைப் பூர­ணப்­ப­டுத்தி அங்­கத்­த­வர்­களின் கையொப்­பங்­களைப் பெற்றுக் கொண்­டுள்­ளது.

முஸ்லிம் தனியார் சட்­டத்தில் திருத்­தங்­களைச் சிபா­ரிசு செய்­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்­டுள்ள குழு தனது பூர­ணப்­ப­டுத்­தப்­பட்ட அறிக்­கையை ஜன­வரி மாதம் முதல் வாரத்தில் நீதி மற்றும் வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு அமைச்சர் தலதா அத்­து­கோ­ர­ள­விடம் கைய­ளிக்­க­வுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது. இதற்­கென குழு அமைச்சர் தலதா அத்து கோர­ள­வுடன் சந்­திப்­பொன்­றை நடத்துவதற்கு கோரிக்கை விடுத்­துள்­ளது.

ஓய்­வு­பெற்ற முன்னாள் உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் தலை­மையில் நிய­மிக்­கப்­பட்ட குழு இறு­தி­யாக தனது அமர்­வினை கடந்த 20 ஆம் திகதி நீதி­ய­மைச்சின் கேட்­போர்­கூ­டத்தில் நடத்­தி­ய­போது குழுவின் அங்­கத்­த­வர்கள் பலர் சமு­க­ம­ளிக்­காதிருந்தும் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை­யினால் திருத்­தங்கள் தொடர்பில் மாற்றுக் கருத்­துகள் சில உள்­ள­டங்­கிய அறிக்­கை­யொன்­றினை சமர்ப்­பித்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

தற்­போது குழுவின் மத்­தியில் இருந்த கருத்து முரண்­பா­டுகள் தீர்க்­கப்­பட்­டு­விட்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­துடன் அமைச்சர் தலதா அத்­து­கோ­ர­ள­விடம் திருத்த சிபா­ரி­சுகள் அடங்­கிய ஒரு அறிக்­கையே சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. அமைச்­ச­ரிடம் குழு தனது அறிக்­கையைச் சமர்ப்­பித்­ததும் அறிக்கை ஏற்­க­னவே திருத்­தங்­களை துரி­தப்­ப­டுத்­து­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்­டுள்ள அமைச்­ச­ரவை உப குழு­விடம்  சமர்ப்­பிக்­கப்­படும்.

முஸ்லிம் விவ­கார அஞ்சல், அஞ்சல் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம்

இது தொடர்பில் அமைச்­ச­ரிடம் கருத்து வின­வி­ய­போது முஸ்லிம் தனியார் சட்­ட­தி­ருத்த சிபா­ரிசு அறிக்கை கிடைக்­கப்­பெற்­றதும் திருத்­தங்கள் தொடர்பில் ஆராய்ந்து விட்டு அறிக்கை சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­துக்கு அனுப்­பி­வைக்­கப்­பட்டு அனு­மதி கோரப்­படும். சட்­டமா அதிபர் திணைக்­களம் அறிக்கை அர­சி­ய­ல­மைப்­புக்கு முர­ணற்­ற­வ­கையில் என்றால் அனு­ம­தி­ய­ளிக்­கப்­படும். அதன்­பின்பே சட்­ட­மூலம்  அமைச்­ச­ர­வை­யினால் அங்­கீ­கா­ரத்­துடன் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­படும் என்றார். 

முஸ்லிம் தனியார் சட்­டத்தில் மேற்­கொள்ள வேண்­டிய  திருத்­தங்­களைச் சிபார்சு செய்­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்ட குழுவின் பணிகள் கால­தா­ம­த­மா­வதால் அதனைத் துரி­தப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே 2016 இல் முன்னாள்  நீதி­ய­மைச்சர் விஜே­தாச ராஜாபக் ஷவினால் அமைச்­ச­ரவை உப குழு ஒன்று நிய­மிக்­கப்­பட்­டது.

இந்த அமைச்­ச­ரவை உப குழுவில் அமைச்­சர்­க­ளான  கபீர் ஹாசிம், ரவூப் ஹக்கீம், ரிசாத் பதி­யுதீன், பைசர் முஸ்­தபா, எம்.எச்.ஏ.ஹலீம், சந்­தி­ராணி பண்­டாரா, சுதர்­ஷனி பெர்­னாண்டோ புள்ளே ஆகியோர் அங்கம் வகிக்­கின்­றனர்.  

சிபாரிசுகள் 

தனியார் சட்­ட­தி­ருத்த சிபார்­சு­களில் பெண்­களின் திரு­மண வய­தெல்லை, பல­தார மணம், தாப­ரிப்பு பணம் செலுத்தத் தவறும் பட்­சத்தில் நீதிவான் நீதி­மன்­றங்­க­ளுக்கும் அனுப்­படும். வலி­யு­றுத்தற் கட்­ட­ளை­களில் மாற்­றங்கள், காதி­நீ­தி­மன்­றங்­களின் அதி­கா­ரங்­களை அதி­க­ரித்து அவர்­க­ளுக்கு நீதிவான் நீதி­ப­தி­க­ளுக்கு சம­மான அதி­கா­ரங்­களை வழங்கல்,  அவர்­க­ளுக்­கான கொடுப்­ப­ன­வு­களை அதி­க­ரித்தல், உட்­பட பல சிபாரிசுகள் உள்ளடக்கப் பட்டுள்ளன என்று தெரிய வருகிறது.

சட்டதிருத்த சிபார்சு குழுவில் அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமாசபையின் தலைவர், செயலாளர், நீதிபதிகள், சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணிகள், பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் என சுமார் 18 பேர் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இக்குழுவினை 2009 ஆம் ஆண்டு அக்கால நீதியமைச்சராக இருந்த மிலிந்த மொரகொட நியமித்திருந்தார்.