Verified Web

வில்பத்து காணியை பகிர ரிசாத்துக்கு அதிகாரமில்லை

24 days ago ARA.Fareel

அரச கணக்காய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டு 


வில்­பத்­துவில் காணிகள் பகிர்ந்­த­ளிப்­ப­தற்கு அமைச்சர் ரிசாத் பதி­யு­தீ­னுக்கு எந்த அதி­கா­ர­மு­மில்லை. அங்கு காணி­களில் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் மீள் குடி­யேற்­றப்­ப­ட­வில்லை. ஏனைய இடங்­களில் காணி­களைக் கொண்­டுள்­ள­வர்­க­ளுக்கே பெரும்­பா­லான காணிகள் வழங்­கப்­பட்­டுள்­ளன என விலத்­தி­குளம் வன­பா­து­காப்பு பிர­தேசம் சட்­டத்­துக்கு முர­ணாக உப­யோ­கப்­ப­டுத்தப்படு­வது தொடர்பில் நடத்­தப்­பட்ட கணக்காய்வு அறிக்கை தெரி­விக்­கி­றது.

விசேட அரச கணக்காய்வாளர்களால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
மீள் குடி­யேற்­றத்­துக்­காக வில்­பத்து வன பாது­காப்புப் பிர­தே­சத்தின் காணி­களை விடு­விக்­கு­மாறு வன பாது­காப்பு திணைக்­கள நாய­கத்­துக்கு உத்­த­ர­வி­டு­வ­தற்கு கைத்­தொழில் மற்றும் வர்த்­தக அமைச்சர் ரிசாத் பதி­யுதீனுக்கு எந்த அதி­கா­ர­மு­மில்லை எனவும் அவ்­வ­றிக்கை சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

விலத்­தி­குளம் வன பிர­தேசம் பாது­காப்பு பிர­தே­ச­மாக அறி­விக்­கப்­பட்­டுள்ள நிலையில் அவ்­வ­ன­பி­ர­தேத்தில் 
650 ஏக்கர் காணியை விடு­விப்­ப­தற்கு வன பாது­காப்பு திணைக்­கள நாய­கத்­துக்கும் எவ்­வித அதி­கா­ரமும் இல்லை எனவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது;

இந்தப் பிர­தே­சத்தில் காணிகள் பகிர்ந்­த­ளிக்­கப்­பட்­டி­ருப்­பது யுத்­தத்­தினால் குடி­பெ­யர்ந்த பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கல்ல. காணி­யற்­ற­வர்கள் எனத் தெரி­வித்து 1371 குடும்­பங்­க­ளுக்கு அரை ஏக்கர் காணி வீதம் இப் பிர­தே­சத்தில் பகிர்ந்­த­ளிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த 1371 குடும்­பங்­களில் 1030 குடும்­பங்கள் ஏனைய பிர­தே­சங்­களில் காணி­களைச் சொந்­த­மாகக் கொண்­டுள்­ளமை ஆய்­வி­லி­ருந்தும் தெரி­ய­வந்­துள்­ளது.

யுத்­தத்தின் கார­ண­மாக காணி­களை இழந்­த­வர்­க­ளுக்கு காணிகள் வழங்­கப்­பட வேண்டும். அவ்­வா­றான குடும்­பங்­களே மீள் குடி­யேற்­றப்­பட வேண்டும். ஆனால் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­ப­டாத குடும்­பங்­க­ளுக்கே காணிகள் பகிர்ந்­த­ளிக்­கப்­பட்­டுள்­ளது. மீள் குடி­யே­றி­யுள்­ள­வர்கள் காணி எமக்குச் சொந்­த­மா­னது என 2009 ஆம் ஆண்­டுக்கும் பின்பு வந்து குடி­யே­றி­யி­ருந்­தாலும் அவர்கள் முன்பு குடி­யே­றி­யி­ருந்­த­தற்­கான ஆவ­ணங்கள் எதுவும் சமர்ப்­பித்­தி­ருக்­க­வில்லை.

1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க தேசிய சுற்­றாடல் சட்­டத்­தின்­படி குறிப்­பிட்ட 650 ஏக்கர் பாது­காப்பு வன பிர­தே­சத்தை சுத்­தப்­ப­டுத்­து­வ­தற்கு முன்பு சுற்­றாடல் தொடர்­பான அறிக்­கை­யொன்­றினைப் பெற்றுக் கொண்­டி­ருக்க வேண்டும்.

யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்டு அநா­த­ர­வான மக்கள் மீள் குடி­யேற்­றப்­ப­டும்­போது காணி­களை இழந்­த­வர்கள் இனங்­கா­ணப்­பட்டு அவர்கள் தேசிய கொள்கை மற்றும் நடை­மு­றை­யி­லுள்ள சட்ட திட்­டங்­க­ளுக்கு அமை­வா­கவே மீள் குடி­யேற்­றப்­பட வேண்டும், காணிகள் வழங்கப்பட வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மீள் குடியேற்றப்படும்போது அரசு அந்த விடயங்களில் முழுமையாகக் கவனம் செலுத்த வேண்டும். வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் நிதி உதவியளிக்கும்போது தேசிய கொள்கைகளுக்கு இணங்க நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படவேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.