Verified Web

சாய்ந்­த­ம­ருதில் மு.கா. வேட்­பா­ளர்கள் இரு­வரின் வீடுகள் மீது தாக்­குதல்

2017-12-25 23:21:07 Administrator

கல்­முனை மாந­கர சபைக்­குட்­பட்ட சாய்ந்­த­ம­ருது பிர­தே­சத்தில் நேற்று முன்­தினம் பதற்­ற­மான சூழ்­நிலை ஏற்­பட்­ட­துடன்  முஸ்லிம் காங்­கிரஸ் வேட்­பா­ளர்­களின் வீடு­க­ளுக்கும் இனந்­தெ­ரி­யா­தோரால் தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது.

சாய்ந்­த­ம­ருது பிர­தே­சத்தில் அமைந்­தி­ருக்கும் கடற்­கரை தோணா பிர­தே­சத்­திற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான றவூப் ஹக்கீம் வருகை தர­வுள்­ள­தாக கிடைத்த தக­வலை அடுத்தே சாய்ந்­த­ம­ருது பிர­தேச இளை­ஞர்கள், பொது­மக்கள் அமைச்­சரை வர­வி­டாது தடுப்­ப­தற்­காக முயற்சி செய்­த­துடன், பட்­டா­சு­களை கொளுத்தி வீதி­களில் வீசி­ய­தனால் பதற்­ற­மான சூழ்­நிலை ஏற்­பட்­டது. அங்கு குழு­மிய பொது­மக்கள் சாய்ந்­த­ம­ருது பிர­க­ட­னத்தை மீறி நடை­பெற ஏற்­பா­டாகும் குறித்த நிகழ்­வு­களை தடுத்து நிறுத்த வேண்­டு­மெ­னக்­கூறி மிகுந்த ஆக்­ரோ­ஷத்­துடன் செயற்­பட்­டனர். சாய்ந்­த­ம­ரு­துக்கு துரோகம் செய்த அர­சி­யல்­வா­திகள் சாய்ந்­த­ம­ரு­துக்குள் நுழையக் கூடாது என உரத்த குரலில் கோஷ­மிட்­டனர். இதன்­போது பாது­காப்பு கட­மையில் ஈடு­பட்­டி­ருந்த பொலி­சா­ருக்கும் பொது­மக்­க­ளுக்கும் இடையே சிறு முறுகல் நிலையும் ஏற்­பட்­டது.

மேற்­படி பதற்ற நிலையை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வ­ரவும் நிலை­மையை சுமு­க­மா­ன­தாக ஆக்­கவும் பல ஊர்  பிர­மு­கர்கள் தலை­யீடு செய்­த­போதும் பொது­மக்­களின் எதிர்ப்பை கட்­டுப்­ப­டுத்த முடி­யாது போனது. பொது மக்கள் பட்­டா­சு­களை கொளுத்தி வீதி­களில் போட்­ட­துடன் கறுப்புக் கொடி­க­ளையும் ஏந்­தி­ய­வண்ணம் தமது எதிர்ப்­பினை வெளி­யிட்­டனர்.

இதே­வேளை முன்னாள் பிரதி மேயரும் சாய்ந்­த­ம­ருது வட்­டா­ரத்தில்  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரசை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி யானைச் சின்­னத்தில் போட்­டி­யிடும் வேட்­பா­ள­ரு­மான பிர்தௌஸ் மற்றும்  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின்  அம்­பாரை மாவட்ட பொரு­ளா­ளரும் வேட்­பா­ள­ரு­மான ஏ.சீ.யஹ்யா கான் ஆகி­யோ­ரது வீடுகள் மீது இனந்­தெ­ரி­யா­தோரால் தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது.
இச்­சம்­பவம் தொடர்­பாக ஏ.சீ.யஹ்­யா­கானை தொடர்பு கொண்டு கேட்­ட­போது,  '' நாங்கள் ஜன­நா­யக ரீதி­யாக தேர்­தலில் கள­மி­றங்­கி­யுள்ளோம். அதற்கு எதி­ரான முறையில் இனந்­தெ­ரி­யாத காடை­யர்­களை உள்­ள­டக்­கிய குழு­வினர் சாய்ந்­த­ம­ரு­தி­லுள்ள எனது வீடு உட்­பட என்­னுடன் இணைந்து வேட்­பா­ளர்­க­ளாக கள­மி­றங்­கி­யுள்ள வேட்­பா­ளர்­களின் வீடு­கள்­மீதும் தாக்­குதல் நடாத்தி சேதப்­ப­டுத்­தி­யுள்­ளனர். இதனை நாம் வன்­மை­யாக கண்­டிக்­கின்றோம். இவ்­வா­றான தாக்­கு­தல்கள் மூலம் அவர்கள் எதிர்­பார்ப்­பது நிறை­வே­றப்­போ­வ­தில்லை. இத்­தாக்­குதல் நடத்­தி­ய­வர்கள் தொடர்பில் கல்­முனை பொலிசில் முறைப்­பாடு செய்­துள்ளேன். குற்­ற­வா­ளிகள் சட்­டத்தின் முன் நிறுத்­தப்­பட வேண்டும். அத்­துடன் ஜன­நா­ய­க­மான தேர்­தலை எதிர்­கொள்­ளக்­கூ­டிய சூழலை பொலிசார் ஏற்­ப­டுத்தித் தர­வேண்டும்'' என்றும் குறிப்­பிட்டார்.

இதே­வேளை மற்­று­மொரு வேட்­பாளர் ஏ.எம்.பிர்தௌஸ் குறிப்­பி­டும்­போது, நேற்று முன்தினம் (24) மதியம் 1.30 மணி­ய­ளவில் நான் வீட்டில் இல்­லா­த­வே­ளையில் எனது வீட்­டினை  இப் பிரதேசத்தில் போட்­டி­யிடும் சுயேட்சை குழுவின் ஆத­ர­வா­ளர்கள், குண்­டர்கள் சேர்ந்து உடைத்­துள்­ளார்கள். அதுபோல் வீட்டில் நிறுத்­தப்­பட்­டி­ருந்த கார் சேதப்படுத்தப்பட்டுள்ளது. அதுபோல் வீட்டிற்குள் இருந்த 30 பவுண் தங்க நகைகளும் கொள்ளையிடப்பட்டுள்ளன. இது தொடர்பாக கல்முனை பொலிசில் நான் முறைப்பாடு செய்துள்ளேன் என்றார்.

இச்சம்பவங்கள் தொடர்பாக  கல்முனை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், பிரதேசமெங்கும் பாதுகாப்பு கடமைகளிலும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.