Verified Web

அர­சாங்­கத்தை வீழ்த்த தயார்

2017-12-25 23:08:52 Administrator

போராட்டத்திற்கு தலைமை தாங்­குவேன் என்­கிறார் மஹிந்த

ஜனா­தி­பதி தேர்­தலில் நான் தோற்­க­வில்லை, சர்­வ­தேச சக்­தி­களால் தோற்­க­டிக்­கப்­பட்டேன். இன்றும் எனக்கே மக்கள் செல்­வாக்கு உள்­ளது என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தெரி­வித்தார். அர­சியல் அமைப்பின் மூலம் நாட்­டினை துண்­டாடும் முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. அதற்கு எதிர்ப்பு தெரி­விக்கும் அனை­வரும் எம்­முடன் கைகோ­ருங்கள். இந்த அர­சாங்­கத்தை வீழ்த்தும் போராட்­டத்­திற்கு தலைமை தாங்க நான் தயார் எனவும் அவர் குறிப்­பிட்டார். 

ஸ்ரீ லங்கா பொது­ஜன முன்­ன­ணியின் மக்கள் சந்­திப்பு நேற்று ஹோமா­கமை பிர­தே­சத்தில் இடம்­பெற்­றது. இதில் கலந்து கொண்­ட­போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார்.  அவர் மேலும் கூறு­கையில், 

நாம் வென்று கொடுத்த சுதந்­தி­ரத்தை  இந்த மூன்று ஆண்­டு­களில் அர­சாங்கம் நாச­மாக்­கி­யுள்­ளது. நாம் முன்­னெ­டுத்த அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்கள் அனைத்­துமே இன்று கைவி­டப்­பட்­டுள்­ளன. சர்­வ­தேச நாடு­க­ளுக்கு நிலங்­களை விற்றும் சர்­வ­தேச நிறு­வ­னங்­க­ளுக்கு எமது வளங்­களை வழங்­கியும் அதில் வரும் பணத்­தி­லேயே அர­சாங்கம் தனது செல­வு­களை பார்த்­துக்­கொள்­கின்­றது. நாம் மோச­டி­களை செய்தோம், கள­வு­களை செய்தோம், மக்­களின் சொத்­துக்­களை சூறை­யா­டினோம் எனக் கூறி ஆட்­சிக்கு வந்த நபர்கள் எம்­மீது சுமத்­தப்­பட்ட குற்­றங்கள் தொடர்பில் எந்­த­வொரு ஆதா­ரத்­தையும் வெளிப்­ப­டுத்த முடி­யாது தடு­மாறி வரு­கின்­றனர். மாறாக இவர்கள் பட்­டப்­ப­கலில் கொள்­ளை­ய­டித்து வரு­கின்­றனர்.

இந்த அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்து ஒரு மாதத்தில் மத்­திய வங்­கியில் கொள்­ளை­ய­டித்­தனர். இன்­று­வ­ரையில் குற்­ற­வா­ளிக்கு தண்­டனை வழங்க முடி­யாது குற்­ற­வா­ளி­களை காப்­பாற்றி வரு­கின்­றனர். ஜனா­தி­பதி குற்­ற­வா­ளியை தண்­டிக்க விசா­ரணை நடத்­தினால் பிர­தமர் அதனை தடுக்­கின்றார். உண்­மை­யான குற்­ற­வா­ளிகள் யார் என்­பது இன்று மக்­க­ளுக்கு தெரிந்­துள்­ளது. எம்மை குற்­ற­வா­ளிகள் என கூறி எம்மை பழி­வாங்க நினைக்கும் நபர்­களே உண்­மை­யான குற்­ற­வா­ளிகள். ஆகவே இவர்­களை வீழ்த்தும் போராட்­டத்தை நாம் முன்­னெ­டுக்க வேண்டும். 

எமது ஆட்­சியில் இந்த நாடு தன்­னி­றைவு பொரு­ளா­தார வளர்ச்சி கண்ட நாடாக மாற்றம் பெற்­றது. விஷம் இல்­லாத உண­வு­களை நாம் உற்­பத்தி செய்தோம், விவ­சா­யி­க­ளுக்கு விஷம் இல்­லாத உரங்­களை வழங்­கினோம். எனினும் இன்று அனைத்­துமே மாற்றம் கண்­டுள்­ளது. அரிசி, பருப்பு என அனைத்­துமே சர்­வ­தேச நாடு­களில் இருந்து இறக்­கு­மதி செய்­யப்­பட்டு வரு­கின்­றது. அனைத்­தையும் சர்­வ­தேச நாடு­க­ளி­லி­ருந்து பெற்­றுக்­கொண்டு எமது விவ­சா­யி­களின் வயிற்றில் அடிக்கும் வகையில் இந்த அர­சாங்கம் செயற்­ப­டு­வது கண்­டிக்­கத்­தக்­கது. 

மறு­புறம் புதிய அர­சியல் அமைப்­பினை உரு­வாக்கி இந்த நாட்­டினை துண்­டாடும் சதித்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. வடக்கு கிழக்கு இணைப்பு, அவர்­க­ளுக்கு அதி­யுச்ச அதி­கா­ரங்கள் என அனைத்தும் வழங்கி இந்த நாட்­டினை பிள­வு­ப­டுத்தும் செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். ஆகவே இந்த நாடு பிள­வு­பட வேண்­டுமா அல்­லது இணைந்து செயற்­பட வேண்­டுமா என்­பதை இந்த நாட்டு மக்­களே தீர்­மா­னிக்க வேண்டும். ஆகவே இந்த நாடு பிள­வு­ப­டு­வதை விரும்­பாத சக­லரும் இம்­முறை தேர்­தலில் எம்­முடன் கைகோ­ருங்கள். 

ஸ்ரீ லங்கா பொது­ஜன முன்­னணி மக்­களின் ஆத­ரவைப் பெற்று வரு­கின்ற நிலையில் எமது மக்கள் எதனை விரும்­பு­கின்­ற­னரோ அதையே நாமும் செய்ய வேண்டும். மக்கள் விரும்­பாத எதையும் நாம் முன்­னெ­டுக்கத் தயா­ராக இல்லை. ஆகவே மக்­க­ளுக்­காக தலைமை தாங்க நாம் தயா­ரா­கவே உள்ளோம். நாம் கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் தோற்­க­வில்லை. சர்­வ­தேச சக்­தி­களின் மூல­மாக தோற்­க­டிக்­கப்­பட்டோம். ஆகவே இந்த நாட்­டினை நேசிக்கும் மக்கள் தொடர்ந்தும் எம்முடன் உள்ளனர் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகி வருகின்றது. எனவே இந்த அரசாங்கத்தை வீழ்த்தும் பயணத்தில் அனைவரும் ஒன்றிணைவோம். இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் ஆதரவை பெற்று எமது பலத்தினை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இருந்தே உறுதிப்படுத்துவோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.