Verified Web

அ.இ.ம.கா.வுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதியளித்தமை சட்டத்துக்கு முரண்

30 days ago ARA.Fareel

அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் பொதுச்­செ­ய­லாளர் எஸ்.சுபைர்­தீனின் நிய­ம­னத்­துக்கு எதி­ராக நீதி­மன்றில் வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டி­ருக்­கின்ற நிலையில் அவரை அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் உள்­ளூ­ராட்சி மன்ற சபை­க­ளுக்­கான வேட்­பு­மனு தாக்கல் செய்­வ­தற்கு தேர்­தல்கள் ஆணைக்­குழு அனு­மதி வழங்­கி­யுள்­ளமை சட்­டத்­துக்கு முர­ணா­னது என நேற்று உயர் நீதி­மன்றில் மனு­வொன்று தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் முன்னாள் பொதுச் செய­லாளர் சட்­டத்­த­ரணி வை.எல்.எஸ்.ஹமீட் இம்­ம­னு­வினைத் தாக்கல் செய்­துள்ளார். அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தற்­போ­தைய செய­லாளர் எஸ்.சுபைர்தீன் ஏற்­க­னவே தாக்கல் செய்­துள்ள உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான வேட்பு மனுக்­களை நிரா­க­ரிப்­ப­தற்கும், மேலும் வேட்­பு­ம­னுக்கள் தாக்கல் செய்­வ­தி­லி­ருந்தும் நீக்கி வைக்­கும்­ப­டியும் மனுவில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அத்­தோடு தேர்­தல்கள் ஆணைக்­குழு, செய­லாளர் சுபைர்தீன் வேட்பு மனுக்­களை தாக்கல் செய்­வ­தற்கு தேர்­தல்கள் ஆணைக்­கு­ழு­வினால் வழங்­கப்­பட்­டுள்ள அனு­ம­தியை இடை­நி­றுத்தி வைப்­ப­தற்கு உத்­த­ர­வி­டும்­ப­டியும் வேண்­டப்­பட்­டுள்­ளது.

உயர்­நீ­தி­மன்றில் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள 6/217 இலக்க மனுவில் பிர­தி­வா­தி­க­ளாக தேர்­தல்கள் ஆணைக்­குழு, தலைவர், அங்­கத்­த­வர்கள், அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரிசாத் பதி­யுதீன், பிர­தி­ய­மைச்சர் அமீர் அலி, எஸ்.சுபைர்தீன் ஆகியோர் பெயர் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­கி­றார்கள்.

பிர­தி­வா­தி­க­ளுக்கு சட்­டத்­த­ரணி ஊடாக உரிய அறி­வித்­தல்கள் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளன. தற்­போது நீதி­மன்றம் விடு­முறை என்­பதால் இந்த அறி­வித்­தல்கள் சட்­டத்­த­ரணி ஊடாக அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளன.

அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தான் செய­லா­ள­ராக பத­வியில் இருக்கும் போது சட்­டத்­துக்கு முர­ணாக உயர்­பீ­டத்தைக் கூட்டி புதிய செய­லா­ள­ராக எஸ்.சுபைர்­தீனை நிய­மித்­த­மைக்கு எதி­ராக வை.எல்.எஸ்.ஹமீட் மாவட்ட நீதி­மன்றில் வழக்­கொன்­றினை தாக்கல் செய்­தி­ருந்தார்.

இந்த நிய­ம­னத்­துக்கு இடைக்­கால தடை­யுத்­த­ரவு வழங்­கு­மாறு கோரி­யி­ருந்தார். ஆனால் மாவட்ட நீதி­மன்றம் இடைக்­கால தடை­யுத்­த­ரவை வழங்க மறுத்­தது.

இத­னை­ய­டுத்து அவர் இடைக்­கால தடை­யுத்­த­ரவு கோரி மேன்முறையீடு செய்திருந்தார். மேன்முறையீட்டு நீதிமன்றம் அவரது மனுவினை விசாரிக்க ஏற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த மனு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.