Verified Web

ஜெரூசலம் விவ­காரம்: வெள்­ளிக்­கி­ழமை எதிர்ப்புப் பேரணி

2017-12-20 00:50:48 Administrator

இஸ்­ரேலின் தலை­ந­க­ராக ஜெரூ­ஸ­லத்தை பிர­க­ட­னப்­ப­டுத்தி அமெ­ரிக்க ஜனா­தி­பதி வெளி­யிட்ட அறி­விப்­புக்கு எதிர்ப்பு தெரி­விக்கும் வகையில் எதிர்­வரும் வெள்­ளிக்­கி­ழமை கொழும்பில் பாரிய எதிர்ப்பு பேர­ணி­யொன்று ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. 

அனைத்து பலஸ்­தீன நட்­பு­றவு அமைப்­புகள், அனைத்து மத தலை­வர்கள், வெளி­நாட்டு தூது­வர்கள், அர­சியல் காட்­சிகள், பல்­க­லைக்­க­ழக விரி­வு­ரை­யா­ளர்கள் சங்கம், கலை­ஞர்கள், சட்­டத்­த­ர­ணிகள் சங்கம் போன்ற அமைப்­புகள் ஒன்­றி­ணைந்து ஏற்­பாடு செய்­துள்ள இந்தப் பேரணி எதிர்­வரும் 22ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை மாலை 3:30 மணிக்கு இடம்­பெ­ற­வுள்­ளது. 

கொழும்பு புதிய நகர மண்­ட­பத்தில் நடை­பெறும் இப்­பே­ரணி "உலக அபிப்பி­ரா­யத்தை மதிப்போம்! கிழக்கு ஜெரூ­ஸ­லத்தை பலஸ்­தீ­னத்தின் தலை­ந­க­ராக ஏற்­றுக்கொள்"  எனும் தொனிப்­பொ­ருளில் நடை­பெ­ற­வுள்­ளது. 

இதே­வேளை, இந்த பேர­ணி­யை­ய­டுத்து மேற்­கு­றித்த அனைத்து பங்­கா­ளர்­களும் இணைந்து கையொப்­ப­மிட்டு தீர்­மா­ன­மொன்றும் நிறை­வேற்­றப்­ப­ட­வுள்­ளது. இந்த தீர்­மானம் எதிர்­வரும் 12.01.2018 ‍அன்று ஐக்­கிய அமெ­ரிக்க 
தூது­ர­கத்தில் கைய­ளிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 

ஐக்­கிய தேசிய கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்­திர கட்சி, மக்கள் விடு­தலை முன்­னணி, ஸ்ரீ லங்கா பொது­ஜன பெர­முண, தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ், ஜாதிக ஹெல உறு­மய, அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ், இலங்கை கம்­யூனிஸ்ட் கட்சி, லங்கா சம­ச­மாஜ கட்சி ஆகிய பாரா­ளு­மன்­றத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் கட்­சிகள் இந்த எதிர்ப்பு பேர­ணியில் ஒன்­றி­ணைந்­துள்­ளன. ஒரு பொது நோக்­கத்­துக்­காக இலங்­கையில் உள்ள அர­சியல் கட்­சிகள் ஒன்­றி­ணையும் முதல் சந்­தர்ப்­பமும் இது­வாகும். 

 குறித்த எதிர்ப்பு பேர­ணியை ஏற்­பாடு செய்­வது தொடர்­பான கலந்­து­ரை­யா­ட­லொன்று நேற்­று­முன்­தினம்  கொழும்பு ஹெவ்லொக் சிட்டி கிளப் ஹவுஸில் இடம்­பெற்­றது. இக்­க­லந்­து­ரை­யா­டலில் அமைச்சர் ராஜித சேனா­ரத்ன, பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பிமல் ரத்­நா­யக்க, பலஸ்தீன தூதுவர் ஸுஹைர் ஹம்தல்லா ஸைத், தேசிய ஊடக மத்­திய நிலைய தலைவர் இம்­தியாஸ் பாக்கீர் மாக்கார், முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீ லங்­காவின் தலைவர் என்.எம். அமீன் உள்­ளிட்ட பலரும் கலந்­து­கொண்­டனர். 

இதே­வேளை, இஸ்­ரே­லுக்­கான இலங்கை தூத­ர­கத்தை ஜெரூ­ஸலம் நக­ருக்கு மாற்­று­வ­தில்லை எனவும், ஜெரூ­ஸ­லத்தை இஸ்­ரேலின் தலை­ந­க­ராக இலங்கை ஏற்­றுக்­கொள்­வ­தில்லை எனவும் கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின் போது அமைச்சரவை இணை  ஊடகப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.