Verified Web

பொது மக்களை கஷ்டத்தில் தள்ளும் பணிப் பகிஷ்கரிப்புகள்

2017-12-11 01:58:00 Administrator

ரயில்வே தொழிற்­சங்­கங்­களின் பணிப்­ப­கிஷ்­க­ரிப்புப் போராட்டம் கார­ண­மாக நாட்டின் பெரும்­பா­லான பகு­தி­க­ளுக்­கான ரயில் சேவைகள் கடு­மை­யான பாதிப்­பு­களை எதிர்­கொண்­டுள்­ளன.  சேவை­யி­லுள்ள சுமார் 350 ரயில்­களில் 12 ரயில்கள் மாத்­தி­ரமே நேற்று சேவையில் ஈடு­பட்­ட­தாக ரயில்வே கட்­டுப்­பாட்டு நிலை­யத்தின் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

சம்­பளப் பிரச்­சி­னையை அடிப்­ப­டை­யாக வைத்து வெள்­ளிக்­கி­ழமை அதி­காலை முதல் ரயில் சார­திகள் உள்­ளிட்ட 8 தொழிற்­சங்­கங்கள் பணிப்­ப­கிஷ்­க­ரிப்பில் ஈடு­பட்­டுள்­ளன. இத­னை­ய­டுத்தே ரயில் சேவைகள் பாதிக்­கப்­பட்­டுள்­ளன.

குறித்த தொழிற்­சங்­கங்­களின் கோரிக்­கைகள் தொடர்பில் இடம்­பெற்ற பேச்­சு­வார்த்­தை­களும் வெற்­றி­ய­ளிக்­க­வில்லை என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. 

பணிப்­ப­கிஷ்­க­ரிப்பில் ஈடு­பட்­டுள்ள ரயில் என்ஜின் சார­தி­க­ளுக்கும் ஜனா­தி­ப­தியின் செய­லா­ள­ருக்கு இடையில் நடை­பெற்ற கலந்­து­ரை­யாடல் தீர்­வொன்று எட்­டப்­ப­டாத நிலையில் முடி­வ­டைந்­துள்­ளது.  ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நடை­பெற்ற இந்த கலந்­து­ரை­யா­டலில் போக்­கு­வ­ரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செய­லாளர் ஜீ.எஸ். விதா­னகே, ரயில்வே பொது முகா­மை­யாளர் எஸ்.எம். அபே­விக்­ரம உள்­ளிட்ட பலர் கலந்து கொண்­டி­ருந்­தனர். 

இத­னை­ய­டுத்து ரயில் சேவையை உட­ன­டி­யாக அமு­லுக்கு வரும் வகையில் அத்­தி­யா­வ­சிய சேவை­யாக அறி­விக்கும் வகை­யி­லான வர்த்­த­மானி அறி­வித்­தலில் ஜனா­தி­பதி கையொப்­ப­மிட்டார். அத்­துடன் பணிப்­ப­கிஷ்­க­ரிப்பில் ஈடு­பட்­டுள்ள ரயில்வே ஊழி­யர்கள் அனை­வ­ரையும் உடன் பணிக்குத் திரும்­பு­மாறும் இன்றேல் அவர்­க­ளது பத­விகள் பறிக்­கப்­படும் எனவும் அர­சாங்கம் அறி­வித்­தி­ருந்­தது.
இருந்­த­போ­திலும் நேற்­றி­ரவு வரை ஊழி­யர்கள் கட­மைக்கு சமு­க­ம­ளிக்­காத நிலையில் ரயில் நிலை­யங்கள் வெறிச்­சோடிக் காணப்­பட்­டன. 

எது­எவ்­வா­றி­ருப்­பினும் பொது மக்­களின் பிர­தான போக்­கு­வ­ரத்து மார்க்­க­மான ரயில் சேவையில் அடிக்­கடி இவ்­வா­றான பணிப்­ப­கிஷ்­க­ரிப்­புகள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தா­னது மக்­களை மிகக் கடு­மை­யாகப் பாதிப்­ப­துடன் தேவை­யற்ற அசெ­ள­க­ரி­யங்­க­ளுக்கும் இட்டுச் செல்­கின்­றது.

இலங்­கையைப் பொறுத்­த­வரை தலை­ந­க­ருக்கும் ஏனைய நக­ரங்­க­ளுக்­கு­மி­டை­யி­லான பிர­தான போக்­கு­வ­ரத்து மார்க்­க­மாக ரயில் சேவை பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­கி­றது. சாதா­ரண பொது மக்கள் மிகவும் குறைந்த கட்­ட­ணத்தில் தமது பய­ணத்தை மேற்­கொள்ள ரயில் சேவை­யையே நம்­பி­யி­ருக்­கின்­றனர். அதே­போன்று தூரப் பிர­தே­சங்­க­ளி­லி­ருந்து தலை­ந­க­ருக்கு பல்­வேறு தேவை­களின் அடிப்­ப­டையில் பய­ணிப்­போரும் ரயில் சேவை­யி­லேயே பெரிதும் தங்­கி­யுள்­ளனர்.

என­வேதான் இது விட­யத்தில் ரயில்வே ஊழியர்களும் அரசாங்கமும் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். ஊழியர்களின் சம்பளப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான பொறிமுறையை அரசாங்கம் வகுப்பதுடன் ஊழியர்களும் பொது மக்களின் இயல்புவாழ்க்கையைப் பாதிக்காத வகையில் தமது போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.