Verified Web

உள். திருத்த சட்ட வாக்­க­ளிப்பு - முஸ்லிம் கட்­சிகள் புறக்­க­ணித்­தன

2017-12-11 01:48:21 Administrator

உள்ளூர் அதி­கா­ர­ச­பைகள்  தேர்­தல்கள் (திருத்தச்) சட்ட மூலம் கூட்டு எதிர்க்­கட்சி மற்றும் ஆளும் தரப்பின் பங்­கா­ளி­க­ளான  மு.கா., அ.இ.ம.கா ஆகிய கட்­சி­களின்  புறக்­க­ணிப்­புக்கு மத்­தி­யிலும் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்­டது. உள்ளூர் அதி­கா­ர­ச­பைகள்  தேர்­தல்கள் (திருத்தச்) சட்ட மூலத்­தினை நிறை­வேற்­று­வ­தற்­காக   சனிக்­கி­ழமை சபையில் மூன்று தட­வைகள் வாக்­கெ­டுப்­புகள் நடத்­தப்­பட்­டன.

முத­லா­வது வாக்­கெ­டுப்பில் திருத்தச் சட்­ட­மூலம் 88 மேல­திக வாக்­கு­களால் சபையில் திருத்­தங்­க­ளுடன் நிறை­வேற்­றப்­பட்­டது.
இதன்­போது ஆத­ர­வாக 144 வாக்­குகள் அளிக்­கப்­பட்­டன. இதற்கு எதி­ராக எவரும் வாக்­க­ளிக்­கா­த­போதும் 56 பேர் இந்த வாக்­க­ளிப்பில் சமூ­க­ம­ளித்­தி­ருக்­க­வில்லை.

அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலை­மை­யி­லான ஸ்ரீ  லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் மற்றும் அமைச்சர் றிசாட் பதி­யுதீன் தலை­மை­யி­லான அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் ஆகி­ய­வற்றின் உறுப்­பி­னர்கள் சபையில் இருந்­த­போதும் வாக்­க­ளிப்பில் கலந்து கொள்­ள­வில்லை.
இவற்­றுக்கு மேல­தி­க­மா­கவும் திருத்­தங்­களை மேற்­கொள்­வ­தற்­காக மேலும் இரண்டு தட­வைகள் வாக்­கெ­டுப்­புகள் நடத்­தப்­பட்­டன. இரண்­டா­வது வாக்­கெ­டுப்பில் சட்­ட­மூ­லத்­துக்கு ஆத­ர­வாக 143 வாக்­கு­களும் எதி­ராக 43 வாக்­கு­களும் அளிக்­கப்­பட்­டன. இதன்­போது 7 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் வாக்­க­ளிப்பில் கலந்து கொள்­ள­வில்லை.

மூன்­றா­வது வாக்­கெ­டுப்­பின்­போது சட்­ட­மூ­லத்­துக்கு ஆத­ர­வாக 137 வாக்­கு­களும் எதி­ராக 49 வாக்­கு­களும் அளிக்­கப்­பட்­டன. இதன்­போது எட்டுப் பேர் வாக்­கெ­டுப்பில் கலந்­து­கொள்­ள­வில்லை.

இந்தச் சட்­ட­மூ­லத்­திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கடு­மை­யான எதிர்ப்­பினை சபையில் தெரி­வித்­தி­ருந்தார். இந்­நி­லையில் வாக்­கெ­டுப்­புக்கள் நடத்­தப்­ப­டு­வ­தற்கு இடைப்­பட்ட தரு­ணங்­களில் அமைச்சர் ஹக்கீம், அமைச்சர் ரிஷாட் பதி­யுதீன் ஆகி­யோ­ருடன் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தனித்­த­னி­யாக சபை­யிலும் சபைக்கு வெளியில் அழைத்துச் சென்றும் உரையாடல்களை மேற்கொண்டிருந்தார்.  எனினும் தமது முடிவில் மாற்றமில்லை என்பதை உறுதியாக மு.கா , அ.இ.ம.கா ஆகியன தெரிவித்ததோடு எதிர்த்து வாக்களிக்கும் முடிவினை மாற்றி வாக்களிப்பை புறக்கணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.