Verified Web

அசமந்தமென கூறுவது தவறு

2017-12-06 03:04:39 Administrator

சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல

காலி, கிந்­தோட்டை சம்­ப­வத்தின் போது விசேட அதி­ரடிப் படை­யினர் சம்­பவ இடத்தில் இருந்து முற்று முழு­தாக நீக்­கப்­ப­ட­வில்லை. அதி­ரடிப் படையை நீக்­கு­மாறு எவரும் உத்­த­ர­வி­டவும் இல்லை. பிரச்­சினை சாத­க­மான நிலை­மைக்கு வந்­த­மையின் கார­ண­மா­கவே விசேட அதி­ரடிப் படை­யி­னரின் எண்­ணிக்­கையை குறைத்தோம். எனினும் அதன்­பின்னர் சம்­பவம் உச்ச நிலைக்கு சென்­றதை அடுத்து மீண்டும் அதி­ரடிப் படை­யி­னரின் எண்­ணிக்­கையை அதி­க­ரித்தோம். எனினும் தற்­போதும் அப்­ப­கு­தியில் பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது என சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்­நா­யக்க சபையில் தெரி­வித்தார்.

 அத்­துடன் இந்த சம்­பவம் தொடர்­பாக பொலிஸார் அச­மந்த போக்கை காட்­டி­ய­தாக பொலிஸ் மா அதிபர் கூறிய கருத்­துக்கு நான் ஒரு­போதும் இணங்­க­மாட்டேன். பொலி­ஸாரின் அர்ப்­ப­ணிப்பின் கார­ண­மா­கவே பிரச்­சினை கட்­டுப்­பாட்­டுக்குள் வந்­தது. மேலும் தற்­போது அப்­ப­குதி புத்­தி­ஜீ­விகள் மற்றும் மத தலை­வர்கள் பங்­கேற்­புடன் குழு­வொன்று அமைக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

பாரா­ளு­மன்­றத்தில் 2017.11.24 ஆம் திகதி நிலை­யியற் கட்­டளை 23 இன் 2 கீழ் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலை­வரும் எதிர்க்­கட்­சியின் பிர­தம கொற­டா­வு­மான அநுர குமார திஸா­நா­யக்க எம்.பி எழுப்­பிய கேள்­விக்கு நேற்று செவ்­வாய்க்­கி­ழமை பதி­ல­ளிக்கும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில், காலி கிந்­தோட்டை சம்­பவம் தொடர்­பாக 134 பேரிடம் வாக்­கு­மூலம் பெற்­றுள்ளோம். தற்­போது இது குறித்து நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்டு வரு­கின்­றன. அத்­துடன் இந்த சம்­ப­வத்­தினால் சேத­ம­டைந்த வீடுகள் மற்றும் சொத்­து­ட­மை­களின் சேதம் இனங்­கா­ணப்­பட்டு நஷ்ட ஈடு வழங்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு வரு­கின்­றன.இது என்­னு­டைய அமைச்­சுடன் சம்­பந்­தப்­பட்­ட­தல்ல. என்­றாலும் நஷ்ட ஈடு வழங்க நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

அத்­துடன் அநு­ர­கு­மார எம்.பி தனது கேள்­வியில் சம்­பவ நேரத்தின் போது விசேட அதி­ரடிப் படை­யினர் அகற்­றப்­பட்­ட­தாக கூறினார். எனினும் அதனை நான் நிரா­க­ரிக்­கின்றேன். காலி கிந்­தோட்டை சம்­பவம் ஏற்­பட்ட முதல் நாள் அதி­க­ள­வி­லான விசேட அதி­ரடிப் படை­யினர் பாது­காப்­புக்கு கட­மைக்கு விடப்­பட்­டனர். எனினும் இரண்டாம் நாளன்று பிரச்­சினை தீர்­வுக்கு வரும் வகையில் சாத­க­மான நிலை­மைக்கு வந்­த­மை­யினால் விசேட அதி­ரடிப் படை­யி­னரின் எண்­ணிக்­கையை குறைத்தோம். அதற்குப் பதி­லாக அதி­ரடிப் படை­யினர் நீக்­கப்­ப­ட­வில்லை. அத்­துடன் அதி­ரடிப் படை­யி­னரை நீக்­கு­மாறு எவரும் உத்­த­ர­வி­டவும் இல்லை. எனினும் பின்னர் நிலைமை மோச­ம­டைந்­த­மை­யினால் அதி­ரடிப் படை­யி­னரின் எண்­ணிக்­கையை அதி­க­ரித்தோம். 

அத்­துடன் அப்­ப­கு­தியில் சிங்­க­ள­வர்­க­ளுக்கும் முஸ்­லிம்­க­ளுக்கும் இடையில் ஏற்­பட்ட முரண்­பா­டு­களை சமா­தான நிலை­மைக்கு கொண்டு வரு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­டு­கின்­றன. இதன்­படி அப்­ப­கு­தியின் 7 கிராம சேவகர் பிரி­வு­களை உள்­ள­டக்கி மத தலை­வர்கள், புத்­தி­ஜீ­விகள், சிவில் அமைப்­புகள் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்­ளனர். இதன்­படி தற்­போது சமா­தான நிலை­மைக்கு அப்­ப­குதி கொண்டு வரப்­பட்­டுள்­ளது. 

மேலும் மதத் தலை­வர்கள், புத்­தி­ஜீ­விகள் பிர­தி­நி­தித்­துவம் செய்யும் வகையில் குழு­வொன்றை நிய­மிக்க உத்­தே­சிக்­கப்­பட்­டது. எனினும் தற்­போது அதனை வெகு விரைவில் நிறு­வு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. மேலும் அப்­ப­கு­தியில் சிறிய பொலிஸ் தடுப்பு காவல் நிலை­ய­மொன்­றையும் ஸ்தாபித்­துள்ளோம். அத்­துடன் அப்­ப­கு­தியில் தொடர்ந்தும் பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது என­டறார். 

இதன்­போது அநுர குமார திஸா­நாக்க எம்.பி, பொலி­ஸாரின் அச­மந்த போக்கே காரணம் என பொலிஸ் மா அதிபர் கூறி­யுள்ளார். அப்­ப­டி­யாயின் அவர் பொலிஸ் அச­மந்தம் என்று யாரை கூறு­கின்றார். பொலிஸ் அச­மந்த போக்கிற்கு பொறுப்பு கூற கூடியவர் யார் என்றார்.
இதனையடுத்து பதிலளித்த அமைச்சர் சாகல ரத்நாயக்க, பொலிஸ் மா அதிபரின் கூற்றை நான் முற்று முழுதாக எதிர்க்கின்றேன். அதற்கு நான் ஒருபோதும் இணங்கமாட்டேன். மேலும் இந்த சம்பவம் நாடுபூராகவும் விஸ்தரிப்பதனை பொலிஸாரின் செயற்பாட்டின் ஊடாகவே தடுக்க முடிந்தது. இதன்போது பொலிஸார் பெரும் அர்ப்பணிப்பினை செய்துள்ளனர் என்றார்.