Verified Web

பொலிஸாரின் அசமந்தத்திற்கு யார் பொறுப்பு?

11 days ago Administrator

ம.வி.மு. தலைவர் அநுர கேள்வி

காலி, கிந்­தோட்­டையில் சம்­பவம் உக்­கி­ர­ம­டைந்த தறு­வாயில் விசேட அதி­ரடி படை­யி­னரின் எண்­ணிக்­கையை குறைத்­தமை தவ­றாகும். அத்­துடன் இந்த சம்­ப­வத்­திற்கு பொலி­ஸாரின் அச­மந்த போக்கே காரணம் என பொலிஸ் மா அதிபர் கூறி­யுள்ளார். அப்­ப­டி­யாயின் பொலி­ஸாரின் அச­மந்த போக்­கிற்கு பொறுப்பு கூற கூடி­யவர் யார் என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலை­வரும் எதிர்க்­கட்­சியின் பிர­தம கொற­டா­வு­மான அநுர குமார திஸா­நா­யக்க சபையில் கேள்வி எழுப்­பினார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை நிலை­யியற் கட்­டளை 23 இன் 2 கீழ்  ஏற்­க­னவே எழுப்­ப­ப்பட்ட கேள்­விக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்­நா­யக்க பதி­ல­ளித்த பின்னர் கேள்வி எழுப்பும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் கூறு­கையில், காலி, கிந்­தோட்­டையில் விசேட அதி­ரடிப் படை­யினர் அகற்­றப்­ப­ட­வில்லை. அதற்கு மாறாக குறைக்­கப்­பட்­ட­தாக அமைச்சர் சபையில் கூறினார். அப்­ப­டி­யா­யினும் இனக் குழுக்­க­ளுக்கு இடையில் மோதல் உக்­கி­ர­ம­டைந்த தறு­வாயில் விசேட அதி­ரடிப் படை­யி­னரை குறைத்­தமை பெரும் தவ­றாகும். ஏனெனில் இவ்­வா­றான இன­வாத மோதல் நாடு பூரா­கவும் பரவும் அபாயம் உள்­ளது. இந் நிலையில் அதி­ரடிப் படையின் எண்­ணிக்­கையை குறைத்­தமை உகந்­த­தல்ல.

மேலும் இந்த சம்­பவம் உக்­கி­ர­ம­டை­வ­தற்கும் பொலி­ஸாரின் அச­மந்த போக்கே காரணம் என பொலிஸ் மா அதிபர் கூறி­யுள்ளார். தற்­போது அர­சியல் இலா­பத்­திற்­காக இன­வாதம் தூண்­டப்­படும் தறு­வாயில் பொலிஸ் மா அதி­பரின் கருத்து மிகவும் பார­தூ­ர­மா­னது. 
இந்­நி­லையில் பொலிஸ் மா அதி­ப­ராக இருந்து கொண்டு இவ்­வா­றான குற்­றச்­சாட்டை இவர் யார் மீது சுமத்­து­கின்றார்? இவர் தனது குற்­றச்­சாட்டை சம்­பவம் நடந்த பிர­தேச பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி மீது சுமத்­தி­னாரா? அல்­லது வேறு நபர் மீது சுமத்­தி­னரா என்­ப­தனை அமைச்சர் கூற வேண்டும். அவர் பொலிஸ் அச­மந்தம் என்று யாரை கூறு­கின்றார். பொலிஸ் அச­மந்த போக்­கிற்கு பொறுப்புக் கூறக் கூடி­யவர் யார் ? எனவே இது தொடர்பில் அமைச்­சரின் நிலைப்­பாடு என்ன? பொலிஸ் மா அதி­பரின் கூற்றை அடிப்­ப­டை­யாக கொண்டு ஏதும் விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளவா என்றார்.

இத­னை­ய­டுத்து பதி­ல­ளித்த அமைச்சர் சாகல ரத்­நா­யக்க, பொலிஸ் மா அதி­பரின் கூற்றை நான் முற்று முழு­தாக எதிர்க்­கின்றேன். அதற்கு நான் ஒரு­போதும் இணங்கமாட்டேன். மேலும் இந்த வன்முறை நாடு பூராகவும் விஸ்தரிக்கப்படுவதை பொலிஸாரின் செயற்பாட்டின் ஊடாகவே தடுக்க முடிந்தது. இதன்போது பொலிஸார் பெரும் அர்ப்பணிப்பினை செய்துள்ளனர் என்றார்.