Verified Web

2017 ஹஜ் விவகாரம் பொலிஸில் முறைப்பாடு

13 days ago ARA.Fareel

மூன்று ஹஜ் முக­வர்­களின் கவ­ன­யீ­னத்தால்  இவ்­வ­ருடம் ஹஜ் கட­மையை நிறை­வேற்ற முடி­யா­மற்­போன ஹஜ் விண்­ணப்­ப­தா­ரி­களில் 25 பேர் ஹஜ் முக­வர்­க­ளுக்கு செலுத்­திய கட்­டணம் மீள கைய­ளிக்­கப்­ப­டா­ததால் பொலிஸ் குற்றப் புல­னாய்வு பிரிவில் முறைப்­பா­டு­களை செய்­துள்­ளனர். 

இவ்­வ­ருடம் ஹஜ் முக­வர்­களின் கவ­ன­யீ­னத்தால் ஹஜ் கட­மையை நிறை­வேற்ற முடி­யா­மற்­போன 32 ஹஜ்  விண்­ணப்­ப­தா­ரி­களில் 25 பேர் செலுத்­திய கட்­டணம்  ஒரு முகவர் நிலை­யத்­தினால் இது­வரை திருப்பிச் செலுத்­தப்­ப­ட­வில்லை.

ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் செலுத்­திய கட்­ட­ணங்­களை மீள செலுத்­து­வ­தற்கு ஒரு முகவர் நிலைய  உரி­மை­யா­ளர்­க­ளுக்கு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் கடந்த நவம்பர் மாதம் 14 ஆம் திகதி வரை காலக்­கேடு வழங்­கி­யி­ருந்­தது. எனினும்  கால எல்­லைக்குள்  அவர்­க­ளது கட்­டணம் திருப்பிச் செலுத்தப்பட­வில்லை.

இந்­நி­லையில், ஹஜ் முறைப்­பா­டு­களை விசா­ரணை  செய்யும் குழுவின் முன்­னி­லையில் அழைக்­கப்­பட்ட குறிப்­பிட்ட முகவர் நிலைய உரி­மை­யாளர்  விசா­ரிக்­கப்­பட்டார். தொடர்ந்தும் விசா­ரணை இடம் பெற்று வரு­கி­றது.

குறிப்­பிட்ட ஹஜ் முகவர் நிலைய உரி­மை­யாளர் ஹஜ் விண்­ணப்­ப­தா­ரி­களின் பணத்தை திருப்பிச் செலுத்­தாது விடின் ஹஜ் விசா­ர­ணைக்­கு­ழுவின்  சிபா­ரி­சு­க­ளுக்கு அமைய நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என அரச ஹஜ் குழு உறுப்­பி­னரும் அஞ்சல், அஞ்சல் சேவைகள்  மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்­சரின் பிரத்­தி­யேக செய­லா­ள­ரு­மான எம்.எச்.எம்.பாஹிம் தெரி­வித்தார்.

ஹஜ் விசா­ர­ணைக்­கு­ழு­வுக்கு சம்பந்தப்பட்ட ஹஜ் முகவர் தொடர்பான அறிக்கையொன்றினை முஸ்லிம்  சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.